Thursday 20 September 2012

THUYARAR SARITHAI-1

கால் யூங்கின் உளவியல் பகுப்பாய்வு முறைமையை  ஹோமியோபதியில் துயரர் சரிதை கேட்டலில் பயன் படுத்தியவர் எட்மான்ட் விட்மான்ட் ;  அவருடைய மாணவர்களில் ஒருவரான ஜேன் சிக்கெட்டியின் குறிப்புகளில் ஒரு துயரர் சரிதையைக்  கீழே தருகிறோம் .

 60 வயது நிரம்பிய திருமதி எம் ஒரு மதிநுட்பமிகுந்தபடைப்பாளி.  துரதிர்ஷ்ட்ட வசமாக அவருக்கு, அடிக்கடி மனச்சிதைவு நோயின் தாக்குதல் ஏற்படும் .தன்னை யாரும்
 புரிந்துகொள்ளவில்லை என்பதேமிகப்பெரும் குறையாக இருந்த்தது. 40 வயதில் முதன் முறையாக பரிசோதனை செய்துகொள்ளும்போது  கண்
மருத்துவர் சொன்னது "உங்கள் கண்களுக்கு 85 வயதுக்கு மேல்ஆகிவிட்டது போல் தோற்றமளிக்கிறது .திருமதி எம் கூறுகிறார் :
நான் ப லமுறை கணிணியிலும்,மைக்ராஸ்கோப்பிலும் , வீ டியோ காமிரக்களிலும் வேலை செய்திருக்கிறேன் . முதன்முதல் மைக்ராஸ்கோப்பில் பார்த்தபோது, ஒரு துளித்திசுவில் எனக்கு பிரபஞ்சமே தெரிந்தது.என் பெயர்  மினர்வா என்று
 நினைக்க ஆரம்பித்தேன். ஞானத்துக்கும் , கைத்தொழிலுக்கும். பொறுப்பானதேவதை அவள். சிறப்பான பின்னல் வேலைக்கும் கலை நேர்த்திகொண்ட நெசவுக்கும்பெயர்
பெற்றவள் . நான் எடுத்த முதல் படமே நெசவையும் பின்னலையும் பற்றியதுதான் .
         எனக்கு 31 வயது நிரம்பியிருந்தது - மன அழுத்தத்தில் கஷ்டப்பட்டேன். ஒரு குழு சிகிச்சையில் சேர்ந்தேன் .என் கண்மணி வெகுவாக விரிவடைந்த்தது.
உளவியல்  நிபுணர் எனக்கு தொராசைன் மருந்துகளை ப் பரிந்துரைத்தார்.
 
நான் பேசியபோதெல்லாம் என்னை யாரும்  பொருட்படுத்தவில்லை என்று எனக்குப்பட்டது.
எனவே தகவல் தொடர்பு படிப்பை ஆரம்பித்தேன். பின்னால் திரைப்படக்கல்வியும் கற்றேன்.
ஒரு சில வருடங்களுக்குள் என் இரண்டாவது கணவரை சந்தித்தேன்.நாங்கள் சேர்ந்து
வேலை செய்தோம்.ஆனால். புறக்கணிப்பை என்னால் தாங்க முடியவில்லை
உறவைத் தொடர முடியாமல் போனது. திருமணம் முறிந்தது . மறுபடியும் மன நோய். மனநலக் காப்பகமே என் போக்கிடமானது.மறுபடியும் தொராசைன் .முன்றாவது திருமணமும் முறிவு தான்.  என்னை யாரும் பிரிந்து கொள்ளவில்லை.  அதற்கான பொறுமையும் அக்கறையும் அவர்களுக்குக்  கிடையாது

அன்றிலிருந்து தொராசைன் எடுத்துக் காலத்தை கழிக்கிறேன்

சிலந்தி, தொடர்ச்சியாய் நெய்தல், தன்னை மினர்வா  என நினைத்தல் சிலந்திகள் பற்றி திரைப்படம் தயாரித்தல் இவை எல்லாம் 
  இவருக்கு சிலந்திக் குடும்ப மருந்துதான் எனக் காட்டித் தந்தது. கிரேக்க புராணத்தில் இரு தேவதை களுக்குள்  போட்டி நடந்தது.  யார் அழகில் சிறந்த துணியை நெய்கிறார் களோ அவளே  மிகச் சிறந்த அழகியாவாள் .போட்டியில் ஆரானியா வெற்றி பெறுகிறாள். 

இக்கதை ஆரானியா டையாடிமா மருந்தைத் தெரிவு செய்ய   உதவி செய்தது.  3 மதங்களில் அவரிடம் மன மாற்றம் தோன்றியது.  சார்புத்தன்மை காணப்பட்டது.  உறவுகளில் அந்நியோன்யமும் பரஸ்பர நம்பிக்கைகளும் ஏற்பட்டிருப்பதாய் துயரர் மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.     

Monday 17 September 2012

naveena homeopathy

ஹோமியோபதி மருத்துவ அறிவியலின் உன்னதங்களைப் பொது மக்களிடம் பரப்புவதே எங்கள் நோக்கம் .
 ஹானேமன் பதித்தத்  தடத்தில் இதற்கு முன்னால் விரைவாகவும், வழி  பிசகாமலும் , தெளிவான இலக்கும், திசை நோக்கும் கொண்டு பயணித்தவர் பலர்.  அவர்களது   பட்டறிவே எமது கைவிளக்கு .
         
 உலகளாவிய   தளத்தில்,  கடந்த முப்பது ஆண்டுகளில் , ஹோமியோபதி அறிவியலில் பலப்பல  வளர்ச்சி மாற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன .

 ஜே .டி .கெண்டின் துயரர்
சரிதை கேட்கும் முறைமை பின்னகர்ந்துள்ளது.  உளவியலின் பல்வேறு கூறுகளும் , புதுக் கருத்தாக்கங்களும் ஹோமியோ நாற்றங்காலில் பதியன் கண்டுள்ளன .

ஜார்ஜ் வித்தல்காசின் உளவியல் பகுப்பாய்வு முறைமை செழுமையாக,  விழுதுகள் இறக்கியுள்ளது . அவரது மாணவர்கள் பலர் , திரை கடலோடியும் ,புதிய அப்போஸ்தலர்களாய் புதிய விழுமியங்களோடு அறிவுகொளுத்தியுள்ளனர் .

மருந்துகளின் செயல்பாட்டு எல்லைகள் குறித்தப் புரிதல் பல் மடங்கு அதிகரித்துள்ளது . புதுக் கருக்கள், துருவப்படுத்தல் கொள்கையினால் ,  சாத்தியப்பாடு கண்டு , ஆவணப்படுத்தப்பட்டுள்ளன .

தனிம அட்டவணை அடிப்படையில் , தொகுப்பாய்வு கணங்கள் தோறும முகிழ்க்கின்றன.. f பாரிங்க்டனில் தொடங்கிய தொகுப்பாய்வு, ஆட்டோலீசரில் செழித்து, ஸ்கால்டனில் மலர்ச்சிகண்டுள்ளது .

ஆண்டு தோறும் புதுப்புது மருந்துகள் மெய்ப்பிக்கப்பட்டுள்ளன .பறவையினத்தில்
 மட்டும் இருபதுக்கும் மேல் ; விலங்கினத்தில் , பால் மருந்துகள் ,-ஒநாய்ப் பால்,சிங்கப்பால் , குதிரைப்பால், டால்பின்பால்,ஆப்பிரிக்க யானைப்பால் , பூனைப்பால்,கழுதைப்பால் என சொல்லிக்கொண்டேப்போகலாம்.

 பூர ணமாய், தனிம அட்டவணையின் ஆக்டினைத் தொட ர் ,மற்றும் லாந்த்தனைத் தொடர் மெய்ப்பிக்கப்பட்டு, மெட்டிரியா-மெடிக்கா கட்டமைக்கப்பட்டிருக்கிறது .

நன்றி சொல்வோம் ஆனந்தா சரினுக்கு ! அவரது செய்நேர்த்த்தியான செயல்பாட்டால் மகப்பேறு மருத்துவம் ஹோ மியோபதியில்  வசப்பட்டிருக்கிறது.

அமி லான்ஸ்கி மற்றும் டைனஸ் ஸ்மிட்ஸ் இருவரது முயற்ச்சியால் ,குழந்தைகளின் வளர்ச்சியைத் தாக்கும் ஆட்டிசம்நோயை வெல்ல முடியும் எனும் தகவல் பரப்பல் மேலோங்கியுள்ளது.

நவீன வாழ்வில் பெரிதும் வியாபகம் கொண்டுள்ள பதட்டம், அச்சம்,கடும் சினம்,அடையாளச்சிக்கல், மன அழுத்தம், உளச்சிதைவு, ஆகிய மனோநிலைகள் ,  சிகிச்சையில் குவிமையம் கண்டுள்ளன .                       ,                      தொடரும் !