Wednesday 28 May 2014

அஷ்டாவக்கிரன் கோணல் நிமிர்த்த

  1. வாராது போன இறைத்தூதுவன்
    மாட்டுக் கொட்டில் தேடுகிறான்
    பிரசவித்து அற்புதம் நிகழ்த்திட
    குடையாய் விரிந்து காத்த பாம்பு
    சட்டையுரிக்கும் அவசரத்தில்
    சுருங்கி நின்றதாம் மழை மறந்து
    அஷ்டாவக்கிர கோணல் நிமிர்த்த
    அணிவகுக்குது மனிதச் சங்கிலி!

இறுகி சொரசொரக்கும் மனப் பாறை

  1. இறுகிய சொர சொரக்கும் மனப்பாறை
    அதனடியில் புதையுண்டு யுகங்களாய்
    பதுங்கிக் கிடக்குது அழுக்குத் தேரை
    அருவருப்பை அசை போட்டபடி
    சரும ரேகையில் எல்லோர் முகமும்
    நசுங்கிப் பிதுங்கி நரம்புகள் புடைத்து
    சார்பியல் கொம்புகள் பக்கவாட்டில்
    மரபியல் தாடி சிலந்தி வலைபின்னி
    ஃப்ராய்டிசக்குறி ப்ரியாபிஸத்தில்
    ஷோக்காய் பின் நவீனத்துவ கண்ணாடி...
    தேரை எதன் குறி? பாறை எதன் குறி
    அதிர்வு கேட்டால் ஜந்து விஷ நீர் பீச்சும்
    இதுவரை ஜந்து ஜந்து தான் உருவில்
    நம் பரினாமப் பூரான் கால்கள் அதில் அடக்கம்.

பெட்டிக்கடை நாராயணனைத் தேடிப்போனேன்

  1. பெட்டிக்கடை
    நாராயணணை
    விட்ட இடத்தில்
    தேடிப்போனேன்
    குறு நடையாய்
    நீளக் கால் போட்டு
    ஓட்டமும் நடையுமாய்
    சந்து பொந்துகளில்
    எங்கும் தேடினேன்
    அவன் அகப்படவில்லை...
    கால தூரத்தில் அவனுக்கு
    தாடி நரைத்திருக்கலாம்
    மச்சம் முகத்தில் புதிதாய்
    உன்மையைச் சொன்னால்
    எதிர் வந்தவர் பலர்
    அவன் போலவே தான்
    ஆனால் அசல் வேறு
    நகல் வேறெனப் புரிதல்
    கொஞ்ச நாளில் கூடிற்று
    இனியாவது நாராயணணைக்
    காணக் கிடைக்குமா?
    பெட்டிகடை நாராயணனை
    எத்தனை பேருக்குத் தெரியும்?

அதிர்ச்சிக்கும் ஹோமியோ சிகிச்சை

  1. எனது நெருங்கிய நண்பர் ராஜாஜி. க்ரிக்கெட்டர். அலுவலகம் சேர்ந்த நாளிலிருந்து இன்று வரை நான் எடுக்கும் எனது குடும்ப சம்பந்தப்பட்ட அனைத்து முடிவுகளிலும் அவரது ஆலோசனை இருக்கும். அவ்வளவு நெருக்கமானவர். 80 களில் அடூரின் எலிப்பத்தாயம் திரைப்படம் பார்த்துவிட்டு டீக்கடையில் உட்கார்ந்து கொண்டு கார சாரமாக விமர்சித்ததும் விவாதித்ததும் பசுமையாக நினைவிலிருக்கிறது. நான் பரீக்ஷாவில் பங்கேற்றபோது அவரும் மற்ற நண்பர...்களும் நவீன நாடகம் பார்ப்பார்கள் விமர்சிப்பார்கள் கூத்துப் பட்டரையின் எல்லா தயாரிப்புக்களுக்கும் அவர்கள் ஆதரவு உண்டு. அலுவலகத்தில் நான் நாடகம் போட்டால் ராஜாஜி தான் முன்னனி நடிகர் .

    1996 ல் நான் ஹோமியோபதி சிகிச்சை செய்ய ஆரம்பிக்க வேண்டும் என விரும்பிய போது, ராயப் பேட்டையில் எங்கள் இருவரது பொது நண்பரான கோபியின் வீட்டின் முன்னறை எனக்காகத் தத்தம் செய்யப்பட்டது. ஒரு நல்ல நாள் பார்த்துத் துவங்கினோம். வெற்றிவேலும், சந்திர சேகரும் (பழைய பரீக்ஷா நடிகர்) நான் பரிந்துரைக்கும் மருந்துகளை முறைப்படி தயார் செய்து வினியோகிப்பார்கள் .கோபியின் அப்பா, அம்மா, மனைவி, மகன்கள் இருவர் என எல்லோரது பங்களிப்போடும் சிகிச்சை துவங்கியது.

    ராஜாஜி தான் முதல் துயரர். அவரது இடப்புற இடுப்புப் பகுதியில் வலி. மருந்து தரப் பட்டதும் தட்சினை வைத்து ஆசீர்வாதம். இரண்டாவது துயரர் ஷண்முகம்; அவரும் பரீக்ஷா நடிகர். அவரது ஆசீர்வாதம். இப்படியாக நாங்கள் நமக்கு நாமே என வளர்வதற்கு ஹோமியோபதியைப் பயன் படுத்திக் கொண்டோம்.

    ஒருமுறை ராஜாஜி தனது, மாமனார் வீட்டிற்குக் குடும்ப சகிதம் சென்றார். அவர் பஹூ குடும்பி. அண்ணண் குடும்பம் எல்லாம் சேர்த்து பெரிய யூனிட். கும்பகோணத்திற்கு வேனில் போனார்கள். மறு நாள் காலையில் 8 மணிக்கு ராஜாஜியிடமிருந்து போன். ஒரே பதட்டம் “காலை 4 மணி வாக்கில் வான் அணைக்கரைப் பாலம் கடந்தபோது இருட்டில் பாலச் சுவற்றில் முட்டி மோதியது எல்லோரும் தூக்கக் கலக்கம் நல்ல வேளையாக வேன் நின்றுவிட்டது; கரணம் தப்பினால் கொள்ளிடத்திற்குள் விழுந்திருக்கும். எல்லோருக்கும் அடி காயம், குறைந்த பட்சம் சிராய்ப்பு. எப்படியோ சமாளித்துக்கொண்டு வேறு வாகனம் பிடித்துக் கும்பகோணம் போய் அரசு மருத்துவமனையில் முதலுதவி. ஓரிருவருக்குத் தையல் போட வேண்டியிருந்தது. எதோ ஒருவழியாய் எல்லா இடர்பாடுகளையும் சமாளித்துவிட்டேன். ஆனால் என் மனைவி இதுவரை வாய் திறந்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை இங்கே மருத்துவர் ஏகப்பட்ட டெஸ்ட் எழுதிக் கொடுக்கிறார் ஒருவர் ஸ்கான் சொன்னால் இன்னொருவர் எம் ஆர் ஐ என்கிறார். நான் என்ன செய்யனும் இப்போ? ” இதுதான் ராஜாஜியின் பதட்டம்.

    “எல்லோரையும் கூட்டிக்கொண்டு சென்னைக்கு வந்து சேர். நான் பார்த்துக் கொள்கிறேன். உன் மனைவிக்கு அதிர்ச்சிதான். அவர்களைப் பேச வைப்பது எனது பொறுப்பு” என்றும் உறுதி சொன்னேன்.

    அடுத்த நாள் மாலை குடும்பம் சென்னை வந்தது. தாம்பரம் சானடோரியத்திலுள்ள ராஜாஜியின் வீட்டுக்குப் போய், சரிதைப் பதிவை ஆரம்பித்தேன். நரம்பியல் சம்பந்தப்பட்ட குறிகள் எல்லாவற்றையும் பரிசோதனை செய்து ஸ்கான் எம் ஆர் ஐ அவசியமில்லை என்பதையும் உறுதி செய்து கொண்டேன்.
    ஓபியம் 200 9 டோஸஸ் எழுதிக்கொடுத்தேன் 2மணிக்கொரு முறை ஒரு பொட்டலம் அப்படியே வாயில் போட்டு சுவைத்துச் சாப்பிடச் சொன்னேன்.

    மறு நாள் மாலை போனில் ராஜாஜியிடமிருந்து அழைப்பு வந்தது. அவர் மனைவியே பேசினார். குரலில் பிசிறு இல்லை பயம் போய்விட்டது. ஷாக்கிலிருந்து விடுபட ஓபியம் உதவி செய்து அவரது குரல் நாண்களை பழுது பார்த்துச் சரி செய்திருக்கிறது.

    பாப்பாவரேசியே தாவரக் குடும்பத்தைச் சார்ந்த ஒபியத்திற்கு இந்த அற்புதக் குணம் உண்டு எனப் படித்திருக்கிறோம். ஆனால் நேரில் அற்புதம் நிகழ்வதைக் காண என் நண்பர் ராஜாஜியே துணை புரிந்தார்.

    மே மாத இறுதியில் அக்கௌண்டண்ட் ஜெனரல் தணிக்கை அலுவலகப் பணியிலிருந்து ராஜாஜி ஓய்வு பெறுகிறார். அவரும் அவரது குடும்பத்தாரும், உடல் நலத்தோடும், உல்லாசத்தோடும் வாழ வாழ்த்துக்கள்.

கருப்பைக் கட்டி-ஹோமியோபதி சிகிச்சை

  1. எனக்கு மனவளக்கலை தவ மையங்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தவர் திரு நந்தகுமார். அனேகமாக, சென்னை நகரில் செயல்படும் 6 அல்லது 7 செண்டர்களில் ஹோமியோபதி வகுப்புகள் எடுத்திருக்கிறேன். சைதாப்பேட்டை செண்டரில் வகுப்பு எடுக்கும்போது நிறைய துயரர்கள் என்னிடம் மருத்துவ ஆலோசனைக்கு வந்தார்கள்.

    திருமதி ராஜேஸ்வரி வயது 45. தன் உபாதைகளை எனக்கு ஒவ்வொன்றாகக் கூறினார். வீட்டு வேலைகளில் நாட்டமில்லை. இரண்டு பெண் குழந்...தைகள். மூத்தவர் எம்பீபீஎஸ் படிக்கிறார். அடுத்தவர் பள்ளிப் படிப்பின் இறுதிக் கட்டம் அவரும் அல்லோபதி மருத்துவக் கல்வி கற்பதிலே நாட்டம். குழந்தைகளைக், கணவரை சரியாகக் கவனிக்க முடியவில்லை. விட்டேத்தியாக இருக்கத் தோன்றுகிறது. தன் கணவரின் சகோதர் குடும்பமும் சேர்ந்து ஜாகை. பெரிய வீடு. மாமனார் மாமியார் எல்லோரும் ஒன்றாக.. தன்னால் சுறுசுறுப்பாய் வேலை செய்ய முடிவதில்லை. கெட்ட பெயர்தான் மிச்சம்.

    கைகளைக் காண்பிக்கிறார். விரல்கள் எங்கும் வெடிப்பு. பாளம் பாளமாக. கால்களிலும் வெடிப்பு. பாதம் முழுதும். காலை ஊன்றவே சிரமம். அதும் காலையில் எழுந்ததும் நடக்கவே முடியாதபடிக்குக் குதிகால் வலி. ஃபைலைக் கொடுக்கிறார். மாத விடாய் மூன்று அல்லது நான்கு மாதத்திற்கு ஒரு தடவை தான் ரத்தப் பெருக்கு பெரும்பாடு. வலியும் அதிகம். அல்ட்ரா சௌண்ட் ஸ்கான் ரிப்போர்ட் கருப்பைக் கட்டி 4 செ.மீ அளவு, பல்க்கீ யூடிரஸ். நல்ல வேளையாகக் கருப்பையின் கழுத்துப் பகுதியில் seedling fibroid இரண்டு. ஆனால் புண்ணோ, அடைபடும் அளவுக்கோ இல்லை. இருந்தாலும், கைனக்காலஜிஸ்ட் கருப்பையை அகற்றிவிடலாம் எனப் பரிந்துரைக்கின்றனர். எளிமையான ஆலோசனை. முதல் மகள் எம்பீபீஎஸ் படிக்கிறவர். மருத்துவ விழிப்புணர்வு உள்ளவர். கருப்பை அகற்றும் முடிவுக்கு அவர் ஒத்துக் கொள்ளவில்லை.
    கருப்பைக் கட்டியைக் கரைக்க முடியுமா? ரொம்ப ஸிம்பிளாகக் கேட்கிறார்? முயற்சிப்போம். அறுவை சிகிச்சைக் கடைசி ஆப்ஷன்.
    துயரர் சரிதையைப் பதிவு செய்தேன். ஸெபியா 30 4 உருண்டைகள் இரண்டு வேளை தினமும் முதல் வாரம் பின்னர் மூன்று நாளைக்கொருமுறை.

    ஆறு வாரங்கள் கழித்து வந்தார். கை கால் விரல் வெடிப்புகள் கணிசமாகக் குறைந்திருந்தன. மாத விலக்கும் வந்திருக்கிறது அவ்வளவாக பெரும்பாடு இல்லை வலி சுத்தமாக இல்லை
    இம்முறை ஆரம் ம்யூரியாட்டிக்கம் நேட்ரோனேட்டம் 6x வீரியத்தில் மாத்திரைகள். மூன்று வேளை. தினமும் 2 மாதங்கள்
    தூஜா 1எம் மாதம் ஒரு டோஸ்.

    நல்ல முன்னேற்றம். இன்னும் இரண்டு மாதங்கள் செபியா 200. 15 நாளைக்கொருமுறை ஒரு டோஸ்
    6 மாதங்கள் கழித்து ஸ்கான் மீண்டும். ரிப்போர்ட் முன்னேற்றத்தைக் காட்டுகிறது, seedling fibroids கரைந்துவிட்டன. பெரிய ஸைஸ் கட்டி ஒரு செ.மீ அளவிற்கு சுருங்கிவிட்டது. பல்க்கி யூட்ரஸ் அப்படியே இருக்கிறது.

    ஃராக்ஸீனஸ் அமெரிக்கானா தாய்த் திரவம் இரு வேளை 10 சொட்டுக்கள் தினமும். இரண்டு மாதம் எடுக்கச் சொல்லி அறிவுறுத்தினேன்.

    அதன் பின் அவருக்குப் ப்ரச்சினைகள் இல்லை. மனக் குறிகளில் நல்ல முன்னேற்றம், சுறுசுறுப்பாகக் குடும்ப வேலைகளில் ஈடுபட முடிகிறது. விரல் வெடிப்புக்கள் போய்விட்டன. குதிகால் வலி இல்லை செபியா ஆளுமையே மாற்றும் பலம் கொண்டது. ஆழ்ந்து வேலை செய்யும். சர்ஜரி தேவையற்றும் போனது

    இரண்டாவது மகளும் எம்பீபீஎஸ் படிக்கிறார் இப்போது. இந்த ஐந்து வருடங்களில் குடும்ப நண்பர்களாகி விட்டனர். புது வீடு கட்டி, ஜூன் 2 ஆம் தேதி காலை கிரகப் பிரவேசம். அழைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள் தம்பதி சமேதராக வந்து.
    மனதில் நிறைவு புலப்படுகிறது.

அடர்வனத்தில் பலத்து வீசியது காற்று

  1. அடர்வனத்தில் பலத்து வீசியது காற்று
    இலைக்குள் நுழைந்தன பல நிறங்கள்
    உல்லாசத்தின் கனவில் மிதந்தது இலை
    வானவில்லைப் பின்னி ஒளிரவைப்பேன்!
    சோகைப் பூவே! நீ சிவப்பை பூசிக்கொள்!
    ஏ சிறகுதிர்த்த மயிலே! நீலம் எடுத்துக்கொள்!
    மரமல்லியே நீ ஏன் வெள்ளையாய் இருக்கனும்?
    குயிலே! காகத்தின் கறுப்பில் மஞ்சள் கலந்திடு!
    அலுப்பூட்டும் கறுப்பு உனக்கு வேண்டாம்!
    ஆணைக்கு யாரும் ஆமோதிக்கவில்லை...
    பாவம்,இலைக்கு நல்ல மனசென நம்பினர்
    நிறம் மருவி இலக்கற்று துள்ளித் திரிந்த
    வெட்டுக்கிளியின் கோபத்தில் மூளியானது இலை
    துளிர்க்காத இலைக் குறைக்காய் அழுது புலம்பி
    நிறக் குறை ஒரு குறையே இல்லை என்றது.இலை
    அதனதன் நிறத்தில் நிரந்தரம் கண்டனர் யாவரும் !

பித்தப்பை கற்களைக் கரைப்பதெப்படி?

  1. திரு. பால சுப்ரமணியம்- எனது நண்பர் ஒருவர் அனுப்பிய துயரர். வயது 54 . மருத்துவ ஆலோசனைக்காக என்னிடம் வந்தார். ஃபைல் ஒன்றும் கொண்டு வந்தார். நீங்கள் உங்களுடைய உபாதையை சொல்லுங்கள் குறித்துக்கொள்கிறேன் பின்னர் ஃபைல் பார்க்கிறேன் என்றேன்
    அவருக்கு இரண்டு வாரத்திற்கு முன்னால் இரவு 10 மணிபோல் மேல் வயிற்றில் வலி கொஞ்சம் கடுமையான வலி. குமட்டிகொண்டே இருந்து அரை மணி நேரத்தில் இரு முரை மஞ்சளாய் வாந்தி .செரிமா...னம் ஆகாதது எல்லாம் வந்திருக்கிறது. வாந்தி எடுத்தும் வலி குறையவில்லை அருகிலிருந்த மருத்துவ மணையில் அனுமதிக்கப்பட்டார்.

    ஸைக்ளோபாம், பனாப்ரஸோல் மாத்திரை, ஊசியோடு பொழுது விடிந்தது. மாத்திரை சாப்பிட்டால் வலி குறைகிறது. ஊசி போட்டால் 3 அல்லது 4 மணி நேரம் வலி இல்லை. பின்னர் வரத்தான் செய்கிறது. வாந்தி நின்றுவிட்டது. மறு நாள் முறையாக அல்ட்ராசௌண்ட் ஸ்கான் படம் எடுத்திருக்கிறார்கள். பித்தப்பையில் இரு கற்கள் ஒன்று 5 எமெம் இன்னொன்று 7 எமெம்.

    மாத்திரை 2 வாரத்திற்கு எழுதிக்கொடுத்து சாப்பிட்டு வாருங்கள் வலி அதிகமாயிருந்தால் வந்து அட்மிட் ஆகிவிடுங்கள். வலி மட்டுப்பட்டால் மாத்திரை முடிந்ததும் மறு பரிசீலனைக்கு வாருங்கள் என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

    அவரது நண்பர் என்னைப் பார்க்கச் சொன்னாராம் ஃபைலோடு வந்துவிட்டார். கோப்பை வாங்கிப் பார்த்தேன். ரத்தப் பரிசோதனை அளவுகள் குறித்துக்கொண்டேன். அவருக்கு ரத்த அழுத்த நோய் இருக்கிறது அல்லோபதி மருந்து எடுக்கிறார். நல்ல வேளையாக சர்க்கரை நோய் இல்லை.அவ்வப்போது மேல் வயிற்றிலும் நேர் பின்னால் முதுகிலும் வலி வருவதும் போவதுமாக இருக்கிறது.
    அவரது, பசி, ருசி, தாகம், வேர்வை, மலச்சிக்கல் கேள்விகளுக்கு பதில் சேகரித்தேன்.

    இனிப்பில் நாட்டம் அதிகம் பால் பிடிக்காது
    பயந்த சுபாவம். கொஞ்சம் சுமாராய் பூசின மாதிரி உடலமைப்பு. வேர்வைப் பிசிபிசுப்பு எப்போதும். தலையில் ரொம்பவே ஜாஸ்தி. அடிக்கடி ஜலதோஷம். நெஞ்சில் இரங்கிக்கொண்டு ப்ராங்கைட்டீஸ் உபத்திரவம் அதிகம். வயிற்றில் எப்போதும் வாயுத்தொல்லை; உப்புசம்.

    இரண்டு மருந்துகள் எழுதிக் கொடுத்தேன். கல்காரியா கார்ப் 200 தினமும் முன்று வேளை 4 உருண்டைகள் சாப்பிடுமுன். 15 நாட்கள்.
    பின்னால் முதல் மருந்தை நிறுத்திவிட்டு இரண்டாம் மருந்தை ஆரம்பிக்கணும். கொலெஸ்டெரினம் 200 காலை , இரவு இரு வேளை 4 உருண்டைகள் 15 நாட்கள் 1 மாதம் கழித்து மறு பரிசீலனை. ஒரு வேளை வலி அதிகமாய் வந்தால் கல்காரியா கார்ப் 1 எம் 4 உருண்டைகள் 15 நிமிடத்திற்கு ஒருமுறை. 3 அல்லது 4 தடவை போட்டுக்கொள்ளுங்கள் என்று எஸ்.ஓ.எஸ் மருந்தும் சொல்லி அனுப்பி வைத்தேன்.

    ஒரு வாரம் கழித்து வந்தார் வலி உபத்திரவம் ஏதும் இல்லை. வாந்தி, குமட்டல் இல்லை. வாயுப்பொருமல். பிரிவது அதிகம் வாயில் புளிப்பு சுவை இருக்கிறது என்றார். லைக்கோபோடியம் 200 தினமும் இரண்டு வேளை 4 உருண்டைகள். 15 நாட்கள். பின்னர் கொலெஸ்டெரினம்200 மீண்டும் இருவேளை தினமும்.

    மீண்டும் 1 மாதம் கழித்து வந்தார். இந்த முறை கல்காரியா கார்ப் 1 எம் 4 டோஸஸ் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை ஒரு டோஸ் காலையில் மட்டிலும். அடுத்த மாதம் வரும்போது அல்ட்ரா சௌண்ட் ஸ்கான் எடுத்துக்கொண்டு வரச் சொன்னேன்.

    ஸ்கான் ரிசல்ட் வந்ததும் சந்தோஷத்தோடு வந்தார். அவர் சேர்த்து வைத்திருந்த இரண்டு புஷ்பராகங்களையும் காணவில்லை.
    செரிமானக் கோளாறுகள் இல்லை. வாயுத்தொந்தரவுகள் நன்கு குறைந்துவிட்டன. வலி இல்லை.

    மேற்கொண்டு மருந்து தேவையில்லை என்று அனுப்பி வைத்தேன் நன்றிப் பெருக்கோடு சென்றார்.

ஹெர்ப்பீஸ் சிகிச்சை

  1. எங்களுக்கு ஹோமியோபதியிம் மீதிருந்த ஆர்வத்தில் குடும்பங்கள் எல்லோருக்குமே பகிர்தல் இருந்தது அடுத்த தலைமுறையினரை ஹோமியோபதி அறிவியல் படிக்க வைக்க வேண்டும் என்கிற வெளிச்சமும் புலப்பட்டது. சென்னையில் இரண்டு ஹோமியோபதிக் கல்லூரிகள் இருப்பது மிகப் பெரிய வசதி. எங்கள் நண்பர்களில் இதுவரை, நடராஜன், ராஜேந்திரன், ஜெயராமன், அறவாழி, நடராஜன், வெற்றிவேல், சிவக்குமார், பாலகிருஷ்ணன், முத்துராஜ் எனப் பலரும் தங்களின...் வாரீசுகளை ஹோமியோபதி படிக்க வைத்துள்ளனர். அடுத்த தலைமுறை தயாராகிவிட்டது.

    ஒரு நண்பரின் மகள் 4 ஆம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தார். முகத்திலும் தோள் பட்டையிலும் அக்கி என்று சொல்லுகிற ஹெர்ப்பீஸ் தாக்கியிருந்தது. எரிச்சல், வலி, துணி உராய்ந்தால் தாங்க முடியாத உறுத்தல்.

    பழைய நாட்களில் அக்கிக்குக், குயவர் வீட்டுக்குப்போய் செங்காவி எழுதிக் கொண்டு வருவது வழக்கம். இரண்டொரு நாட்களில் காய்ந்துவிடும். சருமத்தில் கொப்புளங்கள் உண்டாகி ரணமானாலும், ஹெர்ப்பீஸ் ஒரு சரும நோய் அல்ல. அது ஒரு நரம்பியல் சம்பந்தப்பட்டது. எழுச்சிகளும் அருகிலுள்ள நரம்புத்தொகுதியை நோக்கிப் பரவும் தாக்கும் .காய்ந்து ரணம் ஆறின பிறகும் கூட இரண்டொரு மாதங்களுக்குக் கடுமையான வலி கொடுக்கும் கொட்டும் அல்லது பாயும் வலி. ஹெர்பெடிக் ந்யூரால்ஜியா எனச் சொல்வது வழக்கம்.

    நண்பர் மருத்துவம் அறிந்தவர் என்பதால் அவரே ஹோமியோ மருந்துகள் , குறிகளுக்கேற்பக் கொடுத்திருக்கிறார். மூன்று நாட்களாகியும் கொப்புளங்கள் காயவில்லை, பச்சை ரணம், வலி எரிச்சல். போனில் என்னைத் தொடர்பு கொண்டார். நேரே வரும்படி அறிவுறுத்தினேன். தான் படிக்கும் மருத்துவக் கல்வி தனக்கு ஒரு இன்னல் வருகிறபோது மாயம் போல் தீர்த்துவிடுவதை நண்பரின் மகள் தன் அனுபவமாக உணர்ந்து விட்டால் வாழ் நாள் முழுக்க அர்ப்பணிப்பு ஹோமியோபதி அறிவியலின் பால் அதிகமாகும்.
    நேரில் வந்ததும் சரிதைப் பதிவைத் தொடங்கினேன் ஏற்கனவே என்னென்ன மருந்துகள் என்னென்ன வீர்யத்தில் கொடுக்கப்பட்டன என்பதையும் குறித்துக் கொண்டேன்.

    குளிர் காற்றுப் பட்டாலோ, அல்லது வெளிக் காற்றில் சென்றாலோ, வலியும் அரிப்பும் எரிச்சலும் கூடுவதைப் பதிவு செய்து கொண்டேன். தோள்பட்டை எலும்புக்குக் கீழே சதைப் பகுதியில் மிகுதியான வலியிருப்பதையும் சொல்லக் கேட்டேன்

    ரெபர்டரியில் மருந்தைத் தேடினேன். மெட்டீரியா மெடிக்காவில் உறுதிப் படுத்திக் கொண்டேன். குறிகள் கூடுதல் குறிகள் சமன மடைதல் மருந்தின் தெரிவுக்கு மிக மிக அவசியம். இறுதிப் பரிசீலனையில் ஒரே மருந்து அமிர்தம் போல் மேலெழும்பி வந்தது.

    ரணண்குலஸ் பல்போஸஸ் 200 6 டோஸஸ் எழுதிக் கொடுத்தேன். ஒரு நாளைக்கு மூன்று பொட்டலங்கள் இரண்டு நாட்கள்.
    அவ்வளவே. மிகப் பொருத்தமான ஒற்றை மருந்து அற்புதம் செய்தது. எல்லா ரணங்களும் ஆறிக் கருத்தது. வலி இல்லை மிகப் பெரிய திருப்தி நண்பருக்கு. எரிச்சல் அரிப்பு எல்லாம் படிப் படியாகக் குறைந்தது.

    6 பொட்டலங்களின் அற்புதம் நண்பருக்கும், அவரது மகளுக்கும் ஒரு புதிய சாரளத்தைத் திறக்கச் செய்தது என்றால் அது மிகையாகாது.
    இன்று நன்பரின் மகள் தனது சொந்த க்ளினிக்கை மடிப்பாக்கத்தில் ஆரம்பித்து தன்னை முழுக்க முழுக்க ஹோமியோபதி மருத்துவ சேவைக்கு அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார். அப்பகுதி வாழ் மக்களுக்கு மிகப் பெரிய வரம். பக்கவிளைவுகள் இல்லாத மருத்துவம் அவர்கள் குடியிருப்புப் பகுதியில் முகிழ்த்திருக்கிறது.

இரு வெவ்வேறு நோய்கள்-மருந்தொன்றுதான்

  1. திருவொற்றியூர்-கைலாஷ் செக்டார்-மனவளக்கலை-தவமையம், பிரதி மாதம் முதல் ஞாயிறு காலை 9.30க்கு திருமதி ஆனந்தி நந்தகுமார் சுறுசுறுப்பாக செயல் பட்டுக் கொண்டிருப்பார். அங்கே இருப்பில் இருக்கும் 300க்கும் மேலான ஹோமியோ மருந்துகளை அகர வரிசையில் அடுக்கி வைத்து, க்ளோப்யூல்ஸ் பாட்டில்களில் போட்டு ஸ்டிக்கரும் ஒட்டி தயாராக வைத்துவிடுவார். நானும் நண்பர் பாலாவும் 10 மணிக்கு சிகிச்சை முகாமை ஆரம்பிப்போம். குடும்பம் ...குடும்பமாக மருத்துவ ஆலோசனைக்காக துயரர்கள் வருவார்கள்.

    திருமதி லக்ஷ்மி வயது 36 ஒரு பெண் குழந்தை. மணலியிலிருந்து வருவார். கொஞ்சம் தெலுங்கு கொஞ்சம் ஆங்கிலம் எனக் கலந்துதான் உரையாடுவார், தமிழ் இன்னும் பேச வரவில்லை. ஆந்த்ராவிலிருந்து புலம் பெயர்ந்து சென்னை வந்து 3 மாதங்களே ஆகிறது. தனது மகளின் சைனஸ் தொந்தரவுகளுக்கு மருந்து கேட்டு முதல் மாதம் வந்தவர் , இந்தமுறை தனக்காக ஆலோசனை கேட்கிறார்.

    அவருக்கு 35 வயதைக் கடந்த நிலையில் , அடி நாக்கின் இரு பக்கங்களிலும் டான்ஸில் திசுக்கள் பெருத்து வீங்கிக் காணப்படுகின்றன. கடந்த 6 மாத காலமாக மாதம் ஒருமுறையாவது ஜுரம் வந்துவிடுகிறது. தொண்டை வலியோடு. தண்னீர் குடிக்க முடியவில்லை, உணவு மென்று விழுங்க முடிய வில்லை.தலையில் உச்சிக்கும் சற்று இடப்புறமாக ஒரு இரண்டு ரூபாய் நாணயம் அளவுக்கு சொட்டை. முடியே இல்லை பளபளவென்று மண்டைத்தோல் தெரிகிறது. வேர்க்கும்போது அரிப்பு. சொரிந்தால் லேசாக வெள்ளைப் பவுடராய் உதிர்கிறது. பரவுமோ எனக் கவலை.
    தமிழில் உரையாட முடியாதது ஒரு ப்ரச்சினையாக இருந்தாலும் அருகிலிருக்கும் நண்பர்களின் உதவியோடு அவரது சரிதையைப் பதிவு செய்துகொள்கிறேன்
    .
    குளிர் தாங்குவதில்லை. மிகுந்த கூச்ச சுபாவம். சிறுவயதிலிருந்தே இண்ட்ரோவெர்ட்; வெளிப் பழக்கம் கிடையாது, உறவினர்களிடம் கூட அதிகம் பேசிப் பழகியதில்லை. கேள்விகளுக்கு சொற்ப வார்த்தைகளிலேயே பதில்.

    இனிப்பு அதிகம் பிடிக்கும்

    சிறுவயதில் டான்ஸில் வீக்கம் இல்லை.

    குழந்தையாய் நடக்கக் கற்றுக் கொண்டது இரண்டரை வயது கடந்து தானாம்.

    பரீட்டா கார்ப் இரு உபாதைகளுக்கும் ஒரே மருந்தாய் அமைகிறது. 30 ஆவது வீரியம்; தினமும் இரு வேளை

    ஒரு வாரம் பிறகு மூன்று நாளைக்கொருமுறை காலையில் மட்டும் 4 உருண்டைகள். இரண்டு மாதங்கள்

    கோள வீக்கம் குறைந்து விட்டது அடுத்த மாதம் வரும் போது ,

    தலையில் சொட்டைக் காணப்பட்ட இடத்தில் கேசம் வளர ஆரம்பித்திருக்கிறது. இந்த முறை மருந்தை வாரம் ஒரு டோஸ் என்ற அளவில் பரிந்துரைக்கிறேன்.

    மருந்தை மாற்ற வேண்டிய அவசியமே இல்லை. வீரியத்தையும் கூட்டவில்லை

    இரண்டு மாதங்களில் முற்றிலுமாக நலம். மாதாந்திர சுரம் வரவில்லை. விழுங்கும்போது வலி இல்லை, அடைக்கவும் இல்லை. தொண்டையின் இருபுறமும் புடைப்பும் இல்லை. முடி சீராக வளர்ந்திருக்கிறது. சொட்டையைக் காணவில்லை. வெள்ளைப் பொடி உதிர்தலும் இல்லை

    அடுத்த மாதங்களில் தமிழ் சீராகப் பேச வராத தெலுங்கு மட்டுமே பேச முடிந்த துயரர்கள் மணலியிலிருந்து வர ஆரம்பித்தார்கள் திருமதி லக்ஷ்மியின் பரிந்துரையில்.

நான் விட்டு வந்த செம்மண் பூமி

  1. விட்டெறிந்த தவிட்டு ரொட்டியில்
    காளான் வர்ணம் பூசும் தன் படத்தை

    காற்று தன் போக்கில் நகர்த்தும்
    வெடித்த கோழிப்பூப் பஞ்சை

    மரக் கிளையில் ஊஞ்சலாடும்
    வைக்கோல் போர்த்திய நஞ்சுக்கொடி

    புறா மலம் இலவசமாய் வாங்க...
    அணிவகுப்பர் கிராமத்து வைத்தியர்

    இடுப்பில் அரைஞாண் கயிற்றில்
    புங்கக் கொட்டை கோர்த்து திரியும்
    காத்துக் கறுப்பு அண்டா சிறிசுகள்

    நெருஞ்சி இலை நீரில் கரைத்து
    கெட்டியாய் நீரை அள்ளியெடுத்து
    மாயம் செய்வார் பள்ளி ஆசிரியர்

    பராக்குப் பார்த்தே பொழுது போனது
    நான் விட்டு வந்த செம்மண் பூமியில்

    காசு பணம் கேளிக்கை வரி ஏதுமின்றி!

தலை சுற்றலின் வித்தியாசமானக் குறிமொழி

  1. ஐந்து வருடங்களுக்கு முன், ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை கரூரிலோ அல்லது திருச்சியிலோ நண்பரின் வீட்டில் தங்கி துயரர் சரிதைகள் கேட்டு ம்ருத்துவ ஆலோசனை வழங்குவது ஏற்பாடாகியிருந்தது. சனிக்கிழமை இரவு ரயிலில் திரும்பிவிடுவேன்.
    ஒரு சமயம் எனது உயர் அதிகாரி- நண்பரின் உறவினர் திருச்சியில் சிகிச்சைக்காக வந்தார்

    வயது 29 சட்ட ஆலோசகர். ஒருமுறை வாதாடிக் கொண்டிருக்கும்போது தலை சுற்றி இடர்பாடு ஏற்பட்டதாம...். அடிக்கடி தலை சுற்றல் வரவும் வக்கீல் தொழிலைத் தொடரும் அளவிற்கு நம்பிக்கையில்லை. சீ டீ ஸ்கான் உள் அவயவங்கள் நன்றாய் இருப்பதாகக் கூறியது. அலோபதி மருந்துகள் வெர்ட்டின் க்ரவால் எதுவும் பயனளிக்கவில்லை. திருமணம் இதனாலேயே தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தார்.

    மெலிந்த தேகம். பயந்த சுபாவம்
    .
    அடிக்கடி சளித் தொந்தரவு. குளிர்ச்சி ஒத்துக்கொள்வதில்லை. வாயில் எப்போதும் உப்பு ருசி. குதிகாலில் வலி. திடீர் திடீரென்று தலை சுற்றல். வீடே சுற்றும்.

    கொஞ்சம் எளிதாகச் சரிதை தோன்றியது. ஸைக்ளாமென் 30 மூன்று வேளை 4 உருண்டைகள் 15 நாட்கள் மருந்து எழுதிக் கொடுத்தேன்

    15 நாட்கள் கழித்து பேசினார். ஒன்றும் மாற்றமில்லை இந்த இருவார காலத்தில் ஐந்து முறை தலை சுற்றல் வந்துவிட்டது.

    சென்னை வரச் சொன்னேன் மீண்டும் துயரர் சரிதை கேட்டேன். காதைப் பரிசோதித்தேன் ஒரு குறையும் தென்படவில்லை.
    தலை சுற்றலுக்கு நரம்பியல் ரீதியாக எவ்விதக் காரணமும் புலப்படவில்லை.

    கொஞ்சம் ஆழமாக துயரர் சரிதை பதிவு செய்தேன். ஐந்து வருடங்களுக்கு முன் மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்திருக்கிறார். ஆனால் தலையில் அடிபடவில்லை. வெறும் தோல் சிராய்ப்புக்களோடு தப்பியிருக்கிறார்.

    மீள் கேட்டலில் ஒரே ஒரு துப்பு கிடைத்தது. அவரது இடது தோள்பட்டைக்குக் கீழே ஸ்காபுலாவின் அடியில் சில சமயங்களில் வலி அதிகம் தெரிகிறது. ஆனால் அதற்காக அவர் மருதுவ உதவியை இதுவரை நாடியதில்லை. வெறும் வலி நிவாரணி தெளிப்பான்கள் தேவைப்படும்போது போட்டுக்கொள்வது வழக்கம். வலியும் குறைந்து விடும்.

    இதை சென்ற முறை என்னிடம் குறிப்பிடாதது ஏன் எனக் கேட்டேன். அது அந்த அளவிற்கு முக்கியமாகப் படவில்லை என்று பதில் சொன்னார்
    .
    ஹோமியோபதி அறிவியல், முக்கிய நலக் குறைக்கு எவ்வித காரண காரியத் தொடர்புமின்றி, பிறிதொரு அவயத்தில் தென்படும் நலக்குறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. நலக் குறைவை பூரணத்துவமாகப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறது. இந்த உடன் நிகழ் குறிகள் கன்காமிட்டண்ட் என அழைக்கப்படும் இவை மருந்தை தெரிவு செய்ய மிகவும் உதவி செய்யும்

    இரு நோய்களையும் ஒரு சேரப் பார்த்ததில் செனப்போடியம் ஒரே மருந்தாக வந்தது. 30 ஆவது வீரியத்தில் 10 நாட்கள் மூன்று வேளையும் சாப்பிடச் சொன்னேன்.

    தலை சுற்றல் போன இடம் தெரியவில்லை. எல்லாம் மாயம் போல். இன்று மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவருக்கு தலை சுற்றலும் இல்லை. இடது ஸ்காப்புலா வலியும் இல்லை

    ஹோமியோ ஆசான் கார்ல் வான் போயனிங்காசன் உடன் நிகழ் குறிகளுக்கு அதிக முக்கியத்துவம் தருபவர். எனக்குப் பட்டறிவாக இந்த துயரர் சரிதை அமைந்தது.
    See More

காணாமல் போன மண்டையோடு புடைப்பு

  1. எங்கள் அலுவலக சட்டப்பிரிவில் தகவல் உரிமைச் சட்ட வேலைகளைக் கவனித்து வரும் என் நண்பர் தனது மனைவியின் உடல் நலம் குறித்து ஆலோசனை பெற அழைத்து வந்தார்.

    நண்பரின் மனைவிக்கு நாற்பது வயது. ஒற்றை நாடி உடல் வாகு. ஒரே பெண் குழந்தை. அதிகக் களைப்புடன் காணப்பட்டார். மனதில் குழப்பமும் பயமும் மலர்ச்சியின்மையும் தென்பட்டது.

    துயரர் சரிதை பதிவு செய்தேன்.

    முக்கிய நலக் குறை:

    அவரது தலையில் சரியாகச் சொன்னால் இடது ...பரைட்டல் பகுதியில் துருத்திக்கொண்டு ஒரு நெல்லிக்காய் பருமனுக்கு மண்டையோடு புடைத்துக் காணப்பட்டது. அந்தப் பகுதியில் முடி அடர்த்தி மிகக் குறைவு. பார்த்தால் புடைப்பு தெரியும் அளவிற்கு. .சாதாரணமாக வலியில்லை. தலை சீவும் போது மட்டும் சீப்புப் பட்டால் வலி ரொம்ப நேரம் இருக்கும் லேசான எரிச்சலோடு.

    மாநில அரசில் உதவியாளராகப் பணி. ரத்த சோகை. வலது காலில் ஆணித் தொந்தரவும் இருந்தது. மண்டையோடு புடைப்புக்கு அல்லோபதி மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சையே பரிந்துரைத்தனர். என்ன மாதிரி கட்டியென்று சர்ஜரிக்குப் பிரகு திசு பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் என்று இன்னும் பயத்தைக் கூட்டிவிட்டது தான் மிச்சம்.

    கோபம் கணவரிடத்திலும், குழந்தையிடமும் வெளிப்படுத்துவார். பசிக் குரைவு. சீரண உபாதைகள் அடிக்கடி.சீக்கிரம் எரிச்சல் படுவார்.
    குளிர்ச்சியும் தாங்காது, வெப்பமும் ஒத்துக் கொள்ளாது மாதவிடாய் தள்ளிப்போகும். சீராக இல்லை. தோல் வறட்சி தென்பட்டது

    ஆண்டிமனி க்ரூடம் 6 தினமும் இருவேளை. சாப்பிடு முன். 1 மாதம் தினமும் பரிந்துரைத்தேன். மேலும் தூஜா 200 15 நாட்களுக்கு ஒரு முறை. மொத்தம் 4 டோஸ் எழுதிக் கொடுத்தேன்.

    15 நாட்களிலேயே நண்பரிடமிருந்து ஃபீட்பாக் வந்தது. நன்கு குனமடைந்து வருகிறது. அளவு சிறுத்து விட்டது ஒரு சிறு பட்டாணி சைஸ் தான் இப்போது இருக்கிறது. மருந்தை நிறுத்திவிட அறிவுறுத்தினேன்.
    இரண்டு மாதங்களுக்குப் பின் ஆலோசனைக்காக வந்தார். மருந்து எதுவும் இனி தேவைப்படவில்லை புடைப்பு முற்ரிலுமாகக் கரைந்து விட்டது. ஏதோ மாயம் செய்தது போல் கட்டியைக் கானவில்லை. அது இருந்த இடத்தில் கேசம் வளர ஆரம்பித்திருந்தது கால் ஆணியிலும் எவ்வித உபாதையும் இல்லை. நண்பருக்கு முழு திருப்தி. அலுவலகத் தோழமை சர்ஜரியை தவிர்த்துவிட்டது. அவர் பேசும் போது, பிறரிடம் சிகிச்சை பற்றிக் கூறும் போது கண்களில் நன்றிப் பெருக்கோடு ஒரு மலர்ச்சி தென்படுவதை நான் பார்த்திருக்கிறேன்
    .
    அடுத்தடுத்து, தனது தாயின் சர்க்கரை நோய், மகளுக்கு வருகிற பெரிய வேனல் கட்டிகள், சகோதரியின் தலைவலி, கழுத்துவலி என ஒவ்வொன்றாக ஆலோசனைக்கு அழைத்து வந்தார். இப்போதும் கூட வீட்டில் யாருக்கு என்ன சுகவீனம் என்றாலும் முதல் அழைப்பு ஹோமியோபதிக்காகவே இருக்கிறது.
    See More

Saturday 24 May 2014

இரட்டைச் சகோதரர்களின் எபிஸ்டாக்ஸிஸ் நோய்

  1. என் அலுவலகத் தோழி பேபியின் குழந்தைகள்: ஆண்கள்: இருவரும் இரட்டையர்கள். பதினொண்று அல்லது பன்னிரண்டு வயதிருக்கலாம் முதல் நாள் ஒருவருக்கு சளி பிடித்தால் மறு நாள் நிச்சயமாய் அடுத்தவருக்கு. இப்படியே இருமல்.ஜுரம் எல்லாம். சிறுவயதிலிருந்தே இதே மாதிரித் தாக்குதல். பெற்றோருக்கு பயமும் அலுப்பும் தரும் அளவுக்கு தடுப்பாற்றல் குறைவு.

    திடீரென இருவருக்கும் முதன் முதலாக மூக்கில் ரத்தம் கசிய ஆரம்பித்தது. ரத்தம்... ஒழுக ஆரம்பித்ததும் பார்த்தாலே எல்லோருக்கும் பயம் வரும் உடனடியாக் ஐஸ் பாக் வைத்து நிறுத்தப் பார்ப்பார்கள் ஓராண்டுக்கு மேல் அல்லோபதி குழந்தை வைத்தியர்கள் தொடர்ச்சியாக சிகிச்சை அளித்தார்கள். பலனில்லை. இருவருக்கும் எபிஸ்டாக்ஸிஸ் உடல்வாகு என்று விளக்கிச் சொன்னார்கள் காயம் படாமல் பார்த்துக் கொள்லுங்கள் என்று எச்சரிக்கை தந்தார்கள். பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் பழக்கம் கைவிடப்பட்டது. தனியாக எங்கும் செல்லவோ அல்லது வீட்டுக்கு வெளியில் விளையாடவோ தடை.

    தொண்டையில் இருவருக்கும் டான்ஸில் அழற்சி குறைபாடும் இருந்தது. ஆனால் என்னிடம் வரும்போது வீக்கமோ அழற்சியோ இல்லை. மூக்கில் ரத்தம் வரும்போது எரிச்சல் இருந்தது

    . இருவருக்கும் குளிர்ச்சியான பானங்கள் அருந்துவதில் மிகவும் விருப்பம். ஆனால் ஒத்துக்கொள்ளாது. மூக்கில் எரிச்சலோடு ஜலதீஷம் ஆரம்பித்து ஓரிண்டு நாட்களிலேயே நெஞ்சுக்கு இறங்கிவிடும். பிறகு, தவிர்க்க இயலாமல் ஆண்டி-பையாடிக் கொடுத்துத்தான் உபத்திரவத்தைக் குறைப்பார்களாம்.

    சாப்பாட்டு மேஜையில் வைக்கப்பட்டிருக்கும் உப்பை இருவரும் அம்மாவுக்குத் தெரியாமல் ரகசியமாய், போட்டி போட்டுக்கொண்டு ருசிப்பது வழக்கம். இருவரும் நல்ல உயரம் ஆனால் ஒல்லியான உடல்வாகு என்று சொல்வதற்கில்லை.

    கேட்ட கேள்விக்கு உடனடியான பதில் சரளமான தங்கு தடையற்ற பேச்சு.

    இனிப்பு புளிப்பு ருசிகளில் எது மிகவும் விருப்பம்?

    இனிப்பு பிடிக்கும், இருந்தால் சாப்பிடுவோம் அனால் காரம் அதிகம் பிடிக்கும். அப்பா வெளியூர் போனால் வாங்கி வரச் சொல்வது காரம் தான்.
    இருவரும் கீ போர்ட் வாசிப்பார்கள் பொழுது போக்காக ஓய்வு நேரத்தில்.

    அப்பா வழித் தாத்தாவுக்கு நடுவயதில் காச நோய் இருந்ததாம்.

    வீட்டிலிருப்பதைவிட வெளியில் பயணிப்பது ஊர் சுற்றுவது மிகவும் பிடிக்கும்.

    பாஸ்பரஸ் 30 காலை, மாலை இருவேளை முதல் மூன்று நாட்கள்

    பின் வாரம் ஒரு டோஸ்.

    பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை ட்யூபர்குலினம் காலையில் ஒரு டோஸ்.

    இன்று இருவரும் எஞ்ஞினீயர்கள். எபிஸ்டாக்ஸிஸ் இருவருக்கும் முற்றிலும் குணமாகிவிட்டது.

கனவின் முகத்தில் அவன் காரி உமிழ்ந்தான்

  1. கனவின் முகத்தில் அவன் காரி உமிழ்ந்தான்
    நெடு நாளைய கனவு அது மீள மீள உபத்திரவம்

    எப்போதும் இப்படித்தான் ஆரம்பிக்கும் அந்தக்
    கனவின் காப்பிரைட் உரிமை யாருடையதோ?
    பனி பொழியும் இரவில் காமிராவின் முன்
    புகை மூட்டம் போல் கவிந்திருக்கும் நீர்த்திவலை

    சிறுவன் ஒருவன் தலை கீழாய் நடக்கிறான்
    யார் இவன் ? ஏன் இப்படி? எதைப் பகடி செய்ய?...
    கால்கள் கோணலாய் விரிந்து நிற்க கைகளால்
    மண்ணை அளைந்தபடி அசைகிறான் காற்றைக் கீறி

    தன் வயது நாற்பதினாயிரம் என ஊளையிடுவான்
    சிக்கி முக்கிக் கல்தோல் உரித்து உள்ளிருந்து
    தீ பிசாசைக் கொணர்ந்தது நான் தான் என பிதற்றுவான்
    ஆடும் மாடும் குதிரையும் மானும் புலியும் தன் அடிமைகள்
    அனைத்தையும் எரித்துக் கரியாக்கி தன் வேக அசைவில்
    அண்டத்தை ஆளும் திட்டம் உண்டாம் அவனிடாம் கைவசம்
    எப்போதும் தலை கீழாய் பூமியில் சுமையாய் நிற்கும்
    ப்ரக்ஞையற்று அலையும் அவன் கோணல் பார்வையால்
    திசைகள் மறுக்கிறான், சென்றடையும் இலக்குமில்லையாம்

    இப்படியொரு துர்க்கனா மீள மீள வர அவன் கிலி கொண்டு
    எச்சிலைக் கூட்டி கனவின் முகத்தில் காரி உமிழ்ந்தான்

வேப்பிலை கறிவேப்பிலைக்கு முகஸ்துதி

  1. கறிவேப்பிலையை வேப்பிலை முகஸ்துதி
    செய்த நாளிலிருந்து மழை பெய்யாதொழிந்ததாய்
    கிராமத்துப் பூனைகள் வரலாறு பாடம் படித்தன
    கறுப்புப் பூனைகள் குறுக்காய் எதிர்பட்டதால்தான்
    சாகுபடி பொய்த்ததென கிளிப்பிள்ளைபோல்
    கணக்குச் சொன்னார் அரசுக்கு மணியக்காரர்
    கிளிப்பிள்ளை பாடத்திட்டம் அறிவித்து
    ட்யூஷன் நடத்தினார்கள் ஆசிரியக் குமாஸ்தாக்கள்
    ட்யூஷனே ப்ளேட்டோவின் அகடெமியாச்ச்சாம்
    இந்த நாள் அரிஸ்டாட்டிலின் லைஸியமாச்சாம்...
    பல்கலைக் கழக மூடுவிழாவும் அமைச்சர் தலைமையில்
    அகடெமிக்கள் திறப்பு விழாவும் அமைச்சர் தலைமையில்
    ட்யூஷன் படித்தால் தான் மடிக்கணிணி இலவசமென
    அவசர அவசரமாய் அறிவிக்கை செய்தார் மந்திரி
    வேப்பிலை கறிவேப்பிலைக்கு முகஸ்துதி
    கறிவேப்பிலை வேப்பிலைக்கு முகஸ்துதி
    கிளிப்பிள்ளைகள் பாடத்திட்டம் செழித்தோங்க
    வலிப்பு கூடி சொன்னதையே திருப்பிச் சொல்ல
    கறுப்புப் பூனைகள் அடைந்து கிடந்தன எதிர்படாமல்
    நல்ல மகசூலுக்காய் வீட்டிலேயே பூனைகள் தவம்
    பூனைகள் வாழ்கவென அமைச்சர் சொன்னார்
    விண்ணதிர எக்காளமிட்டன கிளிப்பிள்ளைகள்
    அமைச்சர் கிளிப்பிள்ளைகள் பரஸ்பரம் முகஸ்துதி
    அசல் அரிஸ்டாட்டில் ப்ளேட்டோ நாடுகடத்தல்
    நல்லது நடந்ததால் நாடே சுபிட்ஷம் கிளிகள் நாட்டில்

Wednesday 21 May 2014

விரிசல் கிடைமட்டமாய்

விரிசல்கள் கிடை மட்டமாய்
 ஒருங்கற்று கோணல் மாணலாய்
 நீண்டு மெலிந்து, பக்கவாட்டில்
 கிளை பரப்பி அமளி காட்டும்

 மேலிருந்து பார்க்கும் தொடுவான்
அழகு காட்டும் கன்னத்தில் நாக்கையிட்டு
 கானக இருள் மேகம் திரளும் கணத்தில்
 மின்னல் காட்டும் முக விரிசல் மறந்து
  1. ...

பைசாச தந்திரம்

  1. பைசாச தந்திரம்

    அடுத்தவன் வீட்டு ஜன்னலை
    பந்தடித்து சேதப்படுத்தி
    கண்டதும் மறையும்
    க்ரிக்கெட் பாலக்ருஷ்ணன்

    வங்கி லாக்கர் அரிதாய்ப் போகவும்
    குண்டுமணி மிச்சமின்றி அத்தனை
    நகையையும் வங்கியில் அடகுவைத்து...
    பத்திரப் படுத்திய சமர்த்து சிங்காரம்

    நாலு பேரை சேர்த்து சீட்டுப்பிடித்து
    தன் பங்கைக் கட்டாமல் சேமிக்கும்
    உன் பங்கு எவ்வளவு எனக்கேட்டால்
    நமுட்டுச் சிரிப்பே நமச்சிவாய உபாயம்

    தான் நடக்க தன்முன் மோப்பம் பிடிக்க
    வீட்டு பைரவரை காண்ட்ராக்ட் போட்ட
    பன்னாட்டு நிறுவன பகாசுர அதிகாரி
    பைசாச தந்திரம் பதஞ்சலி சூத்திரம்.

அனுமன் மன்னிக்கவும்

  1. நெடுகிலும் விதவை மரங்கள்
    மனிதக் கோடரியின் கூர் நாவில்
    வெட்டுண்டு வீழ்ந்து கிடந்தன
    ஊரெங்கும் பாலையாய் பசுமையற!

    அனுமன் மன்னிக்கவும் என்னை
    நீயே உன் எஜமானனைக் காக்க
    அவர்தம் பெண்டாட்டியைக் காக்க
    வேரோடு மலையையும் பெயர்த்தாய்
    அசோக வனமும் கொளுத்தினாய்!...

    நீ குரங்கென்றே வைத்துக்கொள்வோம்!
    கதை மாற்றம் அறிந்திலையோ?
    மனிதன் குல்லாயைக் கழற்றி வீச
    குரங்குகளும் வீசினது நேற்றையது
    நீ பெயர்த்துப் போட்டதும் வனத்தை
    வெட்டி வெட்டி சாய்க்கிறான் மனிதன்

    அனுமனுக்கும் நமக்கும் உறவு சொன்ன
    டார்வினும் எம்மை மன்னிக்கவும்!

குண்டு தர்மம் அதன் பண்டு தர்மம்

  1. ...
    Photo: ”குண்டு தர்மம் அதன் பண்டு தர்மம்”

சிறுவதிலிருந்தே பங்குனி நாட்களில்
கெருட சேவை தரிசித்தவனுக்கு
கல்லூரிப் பருவத்தில் கழுகு சேவை
ஒவ்வாமை கண்டது குமட்டலோடே!

ப்ரோமீதஸ் ஈரலைக்  ரணமாய்க் கொத்தின
கழுகுகள் ஹெர்குலிஸ் அம்பு  விடும் வரை
ஈரல் மீள மனிதமாய்த் துளிர்க்கக்
கழுகுகள்  மீண்டும் கொத்திக் குதறும்

எப்போதும் மேல் மிதந்தபடி அலையும்
இரையைக் கவ்விக் கொல்லும் வெறியில்
க்ளேர்வாயண்ட் நான் சொன்னால்   நடக்குமென
செருக்கில் வலம் வரும் மார் தட்டி

சூரியனுக்குப் போட்டியாய் தகித்தபடி
போலி சூரியன் படைத்திடும் கழுகு
கல்லூரிப் பருவத்தே கழுகு சேவை
ஒவ்வாமை கண்டது குமட்டலோடே!

ரெட்டைப் பார்வையதன் குருட்டுப் பார்வை
ரெண்டு தர்மம், தனக்கொன்றை நிறுவும்
பிறத்தியானுக்கு வேறு வேதம் படிக்கும்
குண்டு தர்மமே அதன் பண்டு தர்மம் !

பட்சி தீர்த்தக் கழுகுகள் வாராது போயின
பாரத வர்ஷம் கழுகரசனிடன் சிக்கிய நாளில்

    ”குண்டு தர்மம் அதன் பண்டு தர்மம்”

    சிறுவதிலிருந்தே பங்குனி நாட்களில்
     கெருட சேவை தரிசித்தவனுக்கு
     கல்லூரிப் பருவத்தில் கழுகு சேவை
     ஒவ்வாமை கண்டது குமட்டலோடே!

    ப்ரோமீதஸ் ஈரலைக் ரணமாய்க் கொத்தின
     கழுகுகள் ஹெர்குலிஸ் அம்பு விடும் வரை
     ஈரல் மீள மனிதமாய்த் துளிர்க்கக்
     கழுகுகள் மீண்டும் கொத்திக் குதறும்

     எப்போதும் மேல் மிதந்தபடி அலையும்
     இரையைக் கவ்விக் கொல்லும் வெறியில்
     க்ளேர்வாயண்ட் நான் சொன்னால் நடக்குமென
     செருக்கில் வலம் வரும் மார் தட்டி

     சூரியனுக்குப் போட்டியாய் தகித்தபடி
     போலி சூரியன் படைத்திடும் கழுகு
     கல்லூரிப் பருவத்தே கழுகு சேவை
     ஒவ்வாமை கண்டது குமட்டலோடே!

    ரெட்டைப் பார்வையதன் குருட்டுப் பார்வை
     ரெண்டு தர்மம், தனக்கொன்றை நிறுவும்
     பிறத்தியானுக்கு வேறு வேதம் படிக்கும்
     குண்டு தர்மமே அதன் பண்டு தர்மம் !

    பட்சி தீர்த்தக் கழுகுகள் வாராது போயின
     பாரத வர்ஷம் கழுகரசனிடன் சிக்கிய நாளில்
     

Monday 19 May 2014

ஆள் மாறலாம் -மாறாது அதிகாரத் தங்கப்பல்

அதிகாரத்தில் வலம் வருகையில்
உள்ளிருந்து வெளியாய் எக்கணமும்
மின் பாய்ச்சல், தலையிடி, இறுக்கம்
கண் அழுத்தம், நெரிப்பு, எரிச்சல்
குழப்பம், கொள்கை, கொலை மிரட்டல்
அடிக்கடி கனவில் மீளத் தடைபடும்
விமானப் பயணம் காலம் துறந்த
அலைக்கழிப்பில் தாமத வருகையால்
இதயம் துள்ளும் முந்நூறு முறை
நிமிஷக் கணக்கில் அடுத்தடுத்து...
படபடக்கும் துரிதமாய் நிலை மறுத்து
உடைந்த பற்கள் வரிசை ஈசிஜீ வரைபடம்
மூன்று வார தாடி கோரையாய்முகம் மூட
குர்த்தா சால்வை போர்த்திய ரெட்டை நாடி
சந்தேகமில்லா சாசுவத அதிகார அமளி
சரீரம் இருக்கும் சாய்வு நாற்காலியில்
மோகிக்கும் பதவி ஆளாய் உருக்கொள்ள
உடல் துறந்து வெளிப்போந்து எளிதாய்
நடந்தே தூரம் கடந்து கண் இமைப்பில்
மீண்டும் உள் நுழையும் லகுவாய்

 இவனே எஜமானன் எனினும் இவனுக்குமுண்டு
எதிர்வரா உருவிலா அதிகாரத்துவ எஜமானன்
எல்லாம் ஒரே ரகம் ஒரே இனம் ஒரே ரத்தம்
ஆள் மாறலாம் மாறாது அதிகாரத் தங்கப்பல்

சீழ் வடியுது கங்கை நெடுக

காதில் ஈயம் காய்ச்சி
அட்சரம் மாறா அரசியல் கூட்டி
ஊற்றிவிட்டார் திருவுரு!

காதில் இரைச்சல் எப்போதும்
ஒரே சமயம் இளவல்களின் அலறல்
பெரிசுகளின் அறைகூவல்!

சவ்வு கிழிந்த நேரம் சதா
சீழ் வடியுது கங்கை நெடுக!...
சிவன் சீவனற்றுப் போக

கடவுளையும் விசாரணை நடத்திய
தாடிக்காரர் பூமியெங்கும்
சுய மரியாதை பட்டங்கள்
பறக்குது வால் அறுந்து
தலை கீழாய் இலக்கற்று.

Sunday 18 May 2014

மறதி

ஞாபக மறதி கடுமையாம்
முனகினார் வந்தவர் கவலையோடு
எதையெல்லாம் மறந்தாய் ?
நாக்கை நீட்டிக் கேட்டார் மற்றவர்

வீட்டிலக்கம் சொல்ல இயலாதா?
சம்பள பில்லில் ஸ்டாம்ப் ஒட்டுமிடம்?
வங்கிக் கணக்கு, பாஸ் புக் மீதம்?காதலியின் பழைய வாழ்விடம்?...

எல்லாம் சுவற்றில் விறட்டி ஒட்டி
பசுமையாய் ஞாபகத்தில் பதிவோடு
மூப்பு உண்மைதான் ஆனாலும்
நினைக்க விரும்பியது இருக்கிறது
அல்லது மறக்கிறது முழுசாய்

நேற்றுக் காலை தூங்கி எழுகையில்
யார் முகத்தில் விழித்தேன்?
நேற்று இரவு படித்ததின் சாராம்சம்
காலை உண்ட உணவின் ருசி
எப்போதோ நண்பனுக்கிட்ட ஷ்யூரிட்டி
மின்வாரிய அட்டை வைத்த இடம்

ஆச்சரியம் என்ன? மறத்தல் இயல்பே
என்றார் மீளவும் தெளிவாய் அடுத்தவர்!
எல்லோரும் கலைந்தனர் விரைவாய்
சின்னத்திரை தொடர் நேரம் நெருங்கியதால்!

Wednesday 14 May 2014

கார்ப்பரேட் க்ருஷ்னா தோழமை அறியார்

கணுக்காலில் கொலுசு பூட்டியது
 குழி விழும் அமிழும் தசை வீக்கம்
 மூத்திரம் பிரிய முக்கால் மணி
 கனத்துக் கிடக்குது கண் இமைகள்

 மனம் மட்டிலும் சோர்வற்று
 பற்றுக்கம்பிகள் நீட்டிப் படரும்
 உதயத்தில் நாலு அஜெண்டா நச்சென
 மாலைக்குள் பூக்க வேணும் நாலும்

மகிழம்பூ விருப்பத்தில் மரமல்லி ஒவ்வாது
 மூச்சிரைக்கஓடி கோட்டைத்தொடனும்
 முந்திரியும் மாம்பழமும் ஒரே இனம்
 கருத்தரங்கு கூட்டி காட்சிப் படுத்தனும்

 எல்லாம் உதய அஸ்தமன தொடருக்குள்
 குருதி முடுக்கம் தலைவலி இடிக்கும்
 அபிமன்யூ சாகவும் அஸ்வத்தாமன் அலையவும்
 அனைத்தும் முன்னமே அறிந்திடும் பரமன்

 கருடனாய்ப் பறந்து இரை குவிமையம் தேடி
 காலில் இடுக்கி காத தூரம் ஏகும் கழுகு
 அன்பு நட்பு உறவுகள் சாத்தியம் கடந்த
 கார்ப்பரேட் கிருஷ்ணா தோழமை அறியார்

கொல் அல்லது கொல்லப்படுவாய்

உன் வெள்ளை அணுக்களுக்கு
 நன்றி சொல் இது நாள் வரை
 உன்னைக் கவசமாய் காத்ததற்கு

 குரல் வளைப்பெட்டியின் ஸ்ருதி
 கக்குவானில் அடைபடக் கணைக்கிறாய்
 உன் ஆரவாரத்தின் சீவாளியை
 துருத்தியாய் மாற்றி ஒலிக்கிறாய்

 என்ன மந்திர உச்சாடனம் தினமும்
சாப அகழியில் யாரைத் தள்ளிவிட
 குருட்டு நிறங்கள் வாரி இறைத்து
 தப்பிக்கலாமென தந்திரம் போடுகிறாய்

 இஸ்திரி மடிப்பின் ஒழுங்கில்
 உடல் நுழைத்து உருப்பெருக்கும்
 உன் ஆன்மா அரை ஜீபி தரவுகள்
 தருமா தந்திரங்கள் கழித்தால்?

இட பிங்கள மூச்சடக்கலில்
 தைமஸ் பான்ஸாய் துளிர்த்ததா?
யோக யாக வாணவெடிகள்
 டெஸிபல் வலுவில் சிதைந்ததோ?

அகங்கார ஒடுக்கலை உபதேசித்தே
 ஆக்கிரமிப்பின் விஸதாரம் நாளும்
 கொல் அல்லது கொல்லப்படுவாய்
 உன் மந்திர அஸ்திரம் இவைதாமே?

மெல்லிய காற்றின் வீச்சில்

மெல்லிய காற்றின் வீச்சில்
 நூலேணி எதிர்த்திசையில்
 பயணிக்கத் தவிக்கிறது
 இலைப்புழு, இயல்பு குலைய.
இலக்கு மாற்றம் சகியாமல்!
தட்டிவிடுகிறேன் நூலேணியை
 என் மீது ஊராமலிருக்க!
காற்று என்னை அசைக்காதெனும்
 அல்ப சந்தோஷத்தில்

சாவை மறுத்து சூப்பர்சானிக் அலைதலில்

பரவித் திரியும்
 தும்பிப் பூச்சிகளின்
 வானவில் விரியும்
 சிறகைப் பிய்க்கும்
 மனம் உனது?
அறிவாயா நீ?

வீங்கிய உதடுகள்
 கிழியக் கத்தல் ஏன்?
எவர் மீது கோபம்
 சிரைகளில் புழு நெளிய
சபித்தல் ஏன்?

முதல் தகவல் அறிக்கை
 மையழிந்து போக
 கையூட்டுத் தரவும்
 படுக்கையை விற்றபின்
 களவு போனதாய்க்
 கதைக்கவும் சமர்த்து நீ!

சுய மோக சஞ்சரிப்பில்
 மிதந்தபடி எப்போதும்!
மற்றவன் உனக்குக்
 காளான் குடைதான்!

வேக வலம் வரும்
 ந்யூட்ரான் அனுப்பி
 எரியுமிழ்ந்து சாய்த்துவிட
 எதிர்படுபவனைக் கொல்ல
 சதா மனதில் இரைச்சல்!

சாவை மறுத்து
 சூப்பர்சானிக் அலைதலில்
 அசுவத்தாமனை மிஞ்சிவிட
 ஆசைகள் உனக்கு!

நேற்ரைய கனவில்
 முளைத்த கொம்புடன்
 முட்டி முட்டிச் சாய்க்கிறாய்
 இல்லாத எதிரியை

 நீண்டு மெலிந்த
 டாலி ஓவியக் காலோடு
 துரத்துகிறாய் அவனை

 நீ ஓடித் தொடத் துடிக்கும்
 மாயக் கம்பம் மேலும் நகர
 ஓட்ட முடிவின்
 விசிலொலிகள் கேட்காமல்
 துவண்டு போகிறாய்!

உனக்கு பயம்
 உன்னைக் கண்டுதான்!

காய் நகர்த்தும் சதுரங்க வெளி




காய் நகர்த்தும்
 சதுரங்க வெளி
 விரல்களின் நீட்சி
 இழைகளாய் திரண்டு
 ராஜா, ராணி,கோட்டை
 மந்திரி,மத குருவென
அதிகார வலையை
 தன் கைப் பிடிக்குள்
 ஆட்டுவிக்கும் ஆணவம்

 கறுப்பு வெள்ளை
 சதுரங்கள் நீண்டு
 பியானோக் கட்டைகளாய்
 உருமாறும் அற்புதம்
 அதிகாரம் இசைவைக்
 கட்டமைக்கும் குறியீடோ
 அங்கும் மாயக் கை
 காட்சிப் புலத்தில்

 பீத்தோவன் தன்
 இசைக்கோர்வையை
 நெப்போலியனனுக்கு
 சமர்ப்பணம் செய்தது
 நினைவில் எழும்

 ஆணவம் கூடி
 சர்வாதிகாரம் முடி சூட
 இசைக்கோர்வையை
 திரும்பப் பெற்றதும்
 வரலாறு காட்டும்

 மாயக் கைகளை
 அடையாளம் கான்பது
 எங்ஙனம் நிகழும்?

மிஹைல் க்ரிஸ்டியின் ஓவியம்


ஆழாக்குக்கும் மரக்காலுக்கும்

  1. ஆழாக்குக்கும் மரக்காலுக்கும்
    வீங்கிய அகந்தைப்போட்டி
    சேட்டிடம் விவசாயி அடகு வைத்தால்
    பணம் யாரால் அதிகம் வருமென!
    சேட்டின் மனம் கெக்கலித்தது
    அறிவீனங்கள் உழவன்
    இரண்டையும் மீட்கமாட்டானென!

PLINI OTTO'S PAINTING "SLAVE MARKET"

PLINI OTTO'S PAINTING "SLAVE MARKET"

விஜய் தெண்டுல்கரின் கமலா நாடகம் இந்த ஓவியம் நினைவூட்டுகிறது அடிமைச் சந்தையில் ஏலம் எடுக்கப்படும் கமலா பத்திரிகைகளில் அடிமை வணிகம் அம்பலப்படுத்தப்பட சாட்சியாய் இருக்கிறாள். இச்சம்பவத்தை முன்னிறுத்தி, பெண்ணடிமைத்தனம், ஆண் ஆதிக்கம் பத்திரிக உலகம், என விரிகிறது.
அடிமைத்தனத்தின் வடிவம் மாறிக்கொண்டிருக்கும் வேளையில்
 இதுபோல் நாடகங்கள் இனி வராதா என மனம் ஏங்குகிறது.

ராட்டைக்கு அதிக விலை

போதிமரக் கிளைகள் வெட்டி
 அணு உலைக்கு எரியூட்ட
 அமைச்சரவை ஆய்வின் முடிவு

 ஈபீகோ உமிழ ரவைகள்
 சாஞ்சித் தூண் உருக்கி
 உற்பத்திக்கும் யுகம்

 ரிப்பன் வெட்டி மணியடித்து
 ஏலம் ஆரம்பிக்கிறது
 ராட்டைக்கு அதிக விலை
 அந்நியன் கேட்கிறான்

உள்ளூர் முகவர்கள்
 கரவொலி கோஷங்களோடு
 அம்பாணிஅந்தாதி,
பில்கேட்ஸ் உலா பாடி
 இன்புறும் தருணங்கள்.

கொலஸ்ட்ராலில் நல்லதும் கெட்டதும்

  1. கொலஸ்ட்ராலில் நல்லதும் கெட்டதும்
    எடுத்துச் சொன்னார் மருத்துவர்
    கொண்டைக் கடலையில் ப்ரோட்டீனும்
    வாயுவும் பிரித்துச் சொன்னார்
    சிரிப்பிலும் இரண்டுமுண்டோவெனக் கேள்வி
    சிந்தித்துச் சொல்வதாய்ச் சொல்லி நழுவினார்

  2. கிருஷ்ணர், நாரதர் சினிமாச் சிரிப்புகள்
    புரிதல் எளிது கோணார் உரையின்றியே!
    போலி செய்தல் தகுமோ இருவரின் சிரிப்பையும்
    காப்பிரைட் வழக்குச் சிக்கல்கள் எழுமோ?

குடியரசு அவருக்கில்லை

  1. கையால் தடவித்தடவி புலம் உணர்ந்து
    குழந்தை போல் காற்றில் துழாவி
    குறுக்கும் நெடுக்குமாய்
    வயர் நுழைத்து இறுக்கி
    நாற்காலிக்கு பீடம் போடும்
    அவரது கைகள் கலையறியும்

  2. பார்வை மட்டும் இல்லை
    பின்னப்படாமல் தொழில்
    சுத்தம் பாராட்டுக்கள் குவியும்
    அரசுக்கு நஷ்டம் வராதிருக்க...
    அறிவிக்கை அவருக்கு இனி
    வேலையில்லை அலுவலகத்தில்
  3. பட்ஜெட் பொறுப்பாய் அதிகாரிகள்

  4. ஏறி இறங்கினார் நீதி மன்றங்கள்
    எங்கும் இல்லை அவருக்கு நீதி
    அப்போதும் அவர் அமைதியாய்
    பெருமூச்சோடு நின்றது எதிர்ப்பு
    கொஞ்சம் வெகுண்டிருந்தால்
    பொருத்தமாய் இருந்திருக்கும்

  5. குடியரசு அவருக்கில்லை
    பார்லிமெண்ட் அவருக்கில்லை
    எந்த சிலையையும் பார்த்ததுமில்லை
    காத்திருக்கிறார் பல காலம்

  6. என்றாவது ஒரு நாள் காற்று வீசும்
    அவருக்காக எனும் நம்பிக்கையில்

அரிது அரிது எறும்பாயிருத்தலரிது




சிவப்பெறும்பொன்று விரைத்துக்கிடந்தது
 வரிசை வரிசையாய் நூற்றெறும்புகள்
 வந்தன, பார்த்தன , முகர்ந்தன முகமொட்டி
 சங்கிலி கோர்த்தார்போல் ஓரிழையில்
 தோழமையின் அணிவகுப்பில் ஊர்ந்தன
 ஒலியறியோம், மொழியறியோம்
விரைத்தவனை விட்டொழியாது
 கடமையாய்க் கொண்டுசெல்லும்
 காட்சி நம் முன்னர் கண்ணிமைப்பில்
 அரிது அரிது எறும்பாயிருத்தலரிது

பூரான் வேகமும் அட்டையின் மெத்தனமும்

  1. தரையெங்கும் உதிர்ந்து கிடக்கிறது முடி
    மெழுகும் போது ஈரத்தில் ஒட்டிக்கொண்டு
    நகர மறுத்தலில் உறவின் பிடிப்பு பலமாய்
    வழித்தெறியத்தான் செய்கிறான் பலவந்தமாய்
    துடைப்பமும் கையுமாய் வரும் வேலையாள்
    கால நகர்வில் உதிர்தல் இயல்பென்கிறான்
    பூரான் வேகமும் அட்டையின் மெத்தனமும்
    சுபாவம் ஆனாலும் காலத்தில் கரையுமாம்!!
    அடுக்கி வைத்த சீட்டுக்கட்டில் அழகில்லையாம்
    கலைத்துப் போடனுமாம் விளையாட்டுக்காவது!
    வேளையாள் ஞானவான் விவேகமாய்ப் பேச்சு!

சில்லரை மனிதர்கள்

  1. சில்லரை மனிதர்கள்
    கெக்கெலிக்கும் கணங்கள்
    பூரண நிலவோ
    பூசியா ஈயமோ
    புன்னகைக்க இயலாது

    பிலாக்கணம் தவிர்த்த
    பின் பொழுதில்
    புடலைக்குக் கல்கட்டி
    நேராக்கும் உபாயம்
    புலப்படவும் கூடும்

Saturday 3 May 2014

நத்தைகளின் அணிவகுப்பை ஆதரிக்கலாம்

  1. முந்திரிப் பழம் வேணும்
    சப்பாத்திக் கள்ளிப் பழம் வேணும்
    கிராமத்து ருசியின் துணிகரம்
    தேவையின் கழுத்து நெரிப்பில்
    பீறிட்டெழும் சத்தம் கேட்குதா?

    வெள்ளைச்சத்தமோ கறுப்புச்சத்தமோ
    சிவப்புச்சத்தமோ நீலச்சத்தமோ
    சத்தத்தின் அதிர்வுகள் எங்களுக்கு ஒவ்வாமை
    எதிர்ப்பின் குரலொலிப்பை அடக்குவோம்...

    முந்திரிப்பழம் அயலான் புசிப்பதற்கே
    டாலர் தேவதையைத் தொழுவோம்
    சட்டம் துப்பாகி ரவைகளை கவர்ச்சியாய்
    கழுத்தில் அணிவோம் சிவனைப்போல

    எதிர்த்தவனைக் கொன்றுபோடு! துணிச்!!சலோடு!!
    எதிர்ப்பே இல்லையென்று கூச்சல்போடு!!
    சத்தத்தின் நிறம் வெள்ளையா,சிவப்பா
    நீலமா,பச்சையா என ஆராய்ச்சி நடக்கும்

    கழுத்துப் பட்டைகட்டிய கங்காணிகள்
    கண்டுபிடிப்பார்கள் கூச்சலின் அடர்த்தியை!
    வண்ணங்களில் குழையும் சத்தம்
    நேற்றைய நவீனத்துவம் கடந்தது என!
    அவனுக்குப் பரிசு வேணும் டாலரில்
    நம் சத்தம் நமக்கொவ்வாமை இல்லை
    நத்தைகளின் அணிவகுப்பை ஆதரிக்கலாம்
    அதிராமல் நீர் சிந்தாமல் செல்லட்டும்!!

அவள் சூரிய வம்சம் இல்லைதான்

  1. அவள் சூரிய வம்சம் இல்லைதான்
    சுட்டெரிக்கும் சூரிய தகிப்பில்
    தலை முக்காடின்றி
    மொட்டை மாடியில்
    ஒளியை, சூட்டை
    சேமிக்கிறாள் கூழ் வடகத்தில்
    வருஷ முழுமைக்கும்
    ஆயத்தமாகிறது வடகம்
    தரையில் ப்ளாஸ்டிக் தாள் பரப்பி
    பறக்காமலிருக்க மூலைகளில் ...
    கவனமாய் கனமாய் கல்வைத்து
    தாளின் உடலெங்கும் அடர்த்தியாய்
    வடகக் கோலம் போடுகிறாள்
    சேமிப்புக் கணக்கில் புலி
    எத்தனை மாதம் வருமென்று
    அத்துப்படியான அனுபவக்கணக்கு
    கூழாய் அழுத்திப் பிழிவதை
    குழந்தைகள் பார்க்காவிட்டால் நல்லது

    வடக வங்கி பழமையானதுதான்
    ஊறுகாய், உப்புக்கண்டம் போலத்தான்
    ஆனால் அதற்கும் போட்டியாய் வந்திறங்கும்
    கன்கட்டு வித்தை செப்பிடு வித்தை காட்டும்
    அயல் நாட்டுக் கம்பெனிகள் முதல்போட்டு
    வண்ணங்கள் சேர்த்து புற்று நோய் பெருக்கி
    வளர்ச்சி செழிக்குதாம்தேர்தல் உபதேசங்களில்

    முதல் போட்டவன், மெஷின் தருவித்தவன்
    சூரிய வம்சமாம்,ஆளப்பிறந்தவனாம்
    குளிரூட்டிய அங்காடிகளில் இனி
    வடக வியாபாரம் அமோகமாய் அபாரமாய்
    நாம் வாங்கப் பிறந்தவர்கள் ,வரும் நாட்களில்
    வடகம் வாங்குவோம் வால்மார்ட் கடைகளில்!

அம்மாவின் வடிகட்டி

  1. அம்மா டீ வடிகட்டுவதைப் பார்த்திருக்கிறேன்
    சதுரமாய் வெட்டிய துணியே வடிகட்டி
    சாரமிழந்த சக்கைத்தூள் அனைத்தையும்
    சாமர்த்தியமாய் தேக்கி வைத்து ஒருசேர
    வெளித்தள்ள அம்மாவுக்கு உதவி செய்யும்

    புழக்கத்தில் அதிகம் கருப்பேறி அழகிழக்கும்
    இருந்தாலும் அவள் அதை மாற்றுவதில்லை
    பத்திரமாய் அடுக்களையில் உலர்த்தி
    தனியிடம் தந்து பாதுகாப்பாய் வைத்திருப்பாள்...

    விருந்தினர் வந்தால் ஒரே நாளில் பலமுறை
    பயன்படும் வடிகட்டி குஷியாய் இருக்கும்
    அம்மாவுக்கு மட்டும் தே நீரைவிட முக்கியம்
    தினமும் புழங்கும் வடிகட்டியே எப்போதும்

    சக்கைகளை வெளியேற்றக் கையாளும் தந்திரம்
    அவளிடமிருந்து நாங்கள் கற்கவே இல்லை
    எங்கும் வியாபித்து சேகரமாகி தொற்று வியாதியாய்
    சக்கைகள் வலம் வர, வடிகட்டித் தேடல் தொடரும்
    பொருத்தமான அளவில், வடிவில், கறைபடாமல்.