Saturday 29 March 2014

யார்? யார்? யாரிவர் யாரோ?

  1. யார்?யார்? யாரிவர் யாரோ?


    இலைக்கொத்தின் நடுவில்
    வன்ணப்பூக்களைச் செருகி
    தினம் தினம் அலங்கரித்தவர் யார்?

    புல்லின் நுனியில் ஈரம் காட்டி
    பனிப்பொழிவெனச் சொன்னது யார்?
    ...
    காட்டு மரங்களைக் காற்றால் உரசி
    தீயொளி எழுப்பி தீ மிதித்தது யார்?

    ஐஸ்க்ரீம் குளிர்ச்சியில் தன்னிலை மறக்க
    அழகையும் ருசியையும் சேர்த்தது யார்?

    யார் யாரெனக் கேட்கச் சொன்னது யார்?
    அவர் இவரெனப் பதில் தந்ததும் யார்?

    அரசு இலை நுனியை உற்றுப்பார்த்தேன்!
    பரியையும் நரியையும் தொட்டுப் பார்த்தேன்!
    அரளியின் விஷம் அறிந்து கொண்டேன்!
    அடுக்களைப் பூனையாய் அடங்கியது மனம்!

    பாம்பைக் கவ்வ துரத்தும் கீரியாய்
    பதில்களைத் துரத்தும் கேள்விகள் சதா!

    கண் இமைக்குள் உலக ஜாலம்!
    ஜால வெளியில் நீந்துது காலம்!

    கால வெளியில் முகம் மறையும் மாயம்
    வரவேற்பறைச் சுவர் உருட்டும் தாயம்

    புத்தனோ, க்றிஸ்துவோ காந்தியோ
    அலங்காரச் சட்டகத்தில் ஒளியுமிழ்வர் மாறி மாறி!

    கேள்வி கேட்பவர் ஒளி வேண்டுபவர்
    பதில் கண்டவர் ஒளியுமிழ்பவர்!

கரகாட்டக்காரிக்கில்லை ஸ்பாண்டிலோஸிஸ்

  1. ...
    Photo: கறுப்புத் தாரும் கானல் நீரும்
பரவிக் கிடக்கும்
நகர்ப்புற சாலயில்
ப்ளஸ் டூவிலிருந்து
கனவுகள் சுமக்கும்
கல்லூரி நாட்கள் வரை
இரு சக்கர வாகனம்
வேகப் பயணம்
கட் அடித்தும் 
கட் அடிக்காமலும்
சாமி புறப்பாடு
விரிவாய் அடிக்கடி

மூன்றே வருடம்
இடது கை மரமரப்பு
கழுத்தில் கொட்டு வலி
சீ5 சீ 6 தேய்மானம்
காலர் , யோகாசனம்
இத்தியாதி இத்தியாதி
அப்பாவின் மெடிக்கல்
இன்ஷ்யூரஸ் கார்டும் தேய்ந்தது

எங்கள் இல்லத்தின்
சமயலறை பணிப்பெண்
நளபாகம் , வேலை சுறுசுறுப்பு
செவ்வாய், வெள்ளி விரதம்
தஞ்சாவூர்ப் பெண்
அம்மனுக்குக் கர்கம் எடுப்பாள்
அடிக்கடி நேர்ந்துகொண்டு
எனக்கு உடம்புக்கு ஏதேனும்
அதற்கும் கரகம் சுமப்பாள்

தலையில் கலசத்தோடு
ஆட்டம் போடுவாள்
குனிந்து  உடலை
வில்லாய் வளைத்து
ஆண்கள் விசிறி எறிந்த
ரூபாய் தாள் எடுப்பாள்
இவ்வளவு சுமந்தும்
வில்லாய் வளைந்தும்
அவளுக்கில்லை 

ஸ்பாண்டிலோஸிஸ்
நாட்கள் கழிக்கிறாள்
கலசம் சுமந்து ஆடி!
நான் என்ன செய்யனும்
கரகம் ஆட?தேய்வு போக?

சிற்பி மூக்கையா படைத்தது



    கறுப்புத் தாரும் கானல் நீரும்
     பரவிக் கிடக்கும்
     நகர்ப்புற சாலயில்
     ப்ளஸ் டூவிலிருந்து
     கனவுகள் சுமக்கும்
     கல்லூரி நாட்கள் வரை
    இரு சக்கர வாகனம்
     வேகப் பயணம்
     கட் அடித்தும் 
     கட் அடிக்காமலும்
     சாமி புறப்பாடு
     விரிவாய் அடிக்கடி

     மூன்றே வருடம்
     இடது கை மரமரப்பு
     கழுத்தில் கொட்டு வலி
     சீ5 சீ 6 தேய்மானம்
     காலர் , யோகாசனம்
     இத்தியாதி இத்தியாதி
     அப்பாவின் மெடிக்கல்
     இன்ஷ்யூரஸ் கார்டும் தேய்ந்தது

     எங்கள் இல்லத்தின்
     சமயலறை பணிப்பெண்
     நளபாகம் , வேலை சுறுசுறுப்பு
     செவ்வாய், வெள்ளி விரதம்
     தஞ்சாவூர்ப் பெண்
     அம்மனுக்குக் கர்கம் எடுப்பாள்
     அடிக்கடி நேர்ந்துகொண்டு
     எனக்கு உடம்புக்கு ஏதேனும்
     அதற்கும் கரகம் சுமப்பாள்

     தலையில் கலசத்தோடு
     ஆட்டம் போடுவாள்
     குனிந்து உடலை
     வில்லாய் வளைத்து
     ஆண்கள் விசிறி எறிந்த
     ரூபாய் தாள் எடுப்பாள்
     இவ்வளவு சுமந்தும்
     வில்லாய் வளைந்தும்
     அவளுக்கில்லை 

     ஸ்பாண்டிலோஸிஸ்
     நாட்கள் கழிக்கிறாள்
     கலசம் சுமந்து ஆடி!
    நான் என்ன செய்யனும்
     கரகம் ஆட?தேய்வு போக?


பறத்தலும் வீழ்தலும்

ராட்சஸ சிறகுகளில் தொங்கியபடி
புள்ளியென சிறுத்த மனிதர்கள்......

எல்லா பறத்தல்களிலும்
இதுவே இலக்கணம் போலும்

பறத்தல் உள்ளடக்கியிருக்கிறது
விண்ணிலிருந்து தலைகுப்புற வீழ்தலை-...

எனினும், மனம் ஒப்புவதில்லை
பறத்தலை நிறுத்தி சயனிக்க

 பறத்தலும் வீழ்தலும் அடையாளமோ
இருத்தலும், இறத்தலும்!
 

முக்காலத்தும் முடிவிலா வழக்குகள்

இரை நிரப்பிக்கொண்டு
காத்திருக்கிறது பாம்பு
இப்பொழுதும் தன் வாலை
தான் சுவைக்க முஸ்தீபுகள்

 முன்னால் மண் சரியும்
குவியலில் ஈரம் கசிய
கால் விரித்தும் மடக்கியும்
பாய்ச்சலிடும் தவளை!

தப்பித்தலொன்றே இலக்காய்
யுகம் யுகமானப் போட்டி...

விழுங்குபனுக்கும் இரைக்கும்
இடைத்தூரம், வெளி, காலம்
எப்போதும் நிச்சயமற்றதாய்! பாம்பு
மெல்ல மண்ணூர்ந்து, கண் பிதுக்கி
தந்திர வேகமாய் நெருங்கும் இரையை

 சிறியவனின் சிக்கிக் கொள்ளல்
விழுங்குபவன் உரிமையென விதி!
தன் வாலைத் தான் சுவைக்கும் பாம்பும்
வீழ்ந்துபடல் விதிக்கப்பட்ட தவளை
சரியும் மண்ணும் வெளியும் இன்னபிறவும்
முக்காலத்தும் முடிவிலா வழக்குகள்

சீதன அசேதனம்

  1. நீளக் கண்ணாடியின் முதுகில்
  2. சிவப்பாய் ரஸமேற்றி
    படுக்கையறையில்
    தடியனாட்டம் நிற்கிறது…..
    கெட்டி மரச் சட்டத்துக்குள்!

    சீதன அசேதனம் தானே
    வெற்றுச் சிவப்புச் சாயம் தானே
    என அலட்சியம் காட்டினேன்
    நிற்க, போக, வர கிடக்க...
    எல்லாவற்ரையும் ரகசியமாய்
    படம்பிடித்து அப்பட்டம்
    மாறாமல் அசத்துகிறான்!

    மறைவாய் காமிரா ஏதேனும்?
    அடிக்கடி சோதித்தும் பார்த்தேன்
    அதெல்லாம் ஒன்றுமில்லை
    பின்னெப்படி துல்லியமாய்?
    குவிமையம் சதையூடுருவி
    எலும்பூடுருவி, மனமூடுருவி!!

    நான் ஏமாற்றியதும் ஏமாறியதும்
    அகந்தை வீங்கியதும் குழைவதும்
    நாயாய்ப் பணிவதும்,
    நத்தையாய் சுருங்குவதும்
    பாம்பெனப் படமெடுப்பதும்,
    பஞ்சாரக் கோழியாய்
    உறைவதும், அடைகாப்பதும்
    அடுக்குமாடிகள் வீசிஎறிந்த
    குப்பையாய் வீழ்வதும்
    எல்லாம் பிசகின்றி தெரிகிறது!!!

    கெட்டிக்காரன் புளுகு
    அடுத்த கணத்தில் இவன்
    முன் வந்தால். ஆஹா ஆபத்து
    அப்புறப் படுத்த வேண்டும்
    திருப்பித் தந்துவிடலாம்
    வாஸ் கோட காமாவுக்கே!
    காத்திருக்கிறேன் மின்னஞ்சல்
    அனுப்பிவிட்டு…………..