Monday 19 October 2015

பீ.கே . சர்க்காரின் பிட்யூட்டரி ஆளுமை

2000 வருடங்களுக்கு மேல் , ஹ்யூமர் கோட்பாடு மருத்துவ அறிவியலில், புழக்கத்தில் இருந்தது. ஹிப்போக்ரட்டீஸும், காலெனும் நம்பிக்கை வைத்திருந்த கோட்பாடு.
ஆரம்பகால உளவியலைக் கட்டமைத்த கோட்பாடு.
ஸாங்வின், ஃப்ளெமாடிக் கோலெரிக், மற்றும் மெலாங்கலிக் மனோ நிலைகள், ஹானெமன் காலத்தில் , பிரபலமாய் இருந்தபோதும், கோட்பாட்டு ரீதியாய், ஆர்கனான் வெளிக்குள், ஒரு அழகிய மாடம், இக்கோட்பட்டுக்கு அளிக்கப்படவில்லை. ஒரு மருந்தின் குணபாட நூலில் இச் சொற்கள் பயன்படுத்தப் பட்டிருப்பதை ஆங்காங்கே காண முடியும்.
இருபதாம் நூற்றாண்டில் ஹார்மோன்கள் கண்டுபிடிக்கப்பட்டதும், ஹுயூ்மர் கோட்பாடு தன் செல்வாக்கை மெல்ல இழந்தது.
அதன்பின் ந்யூரோ ட்ரான்ஸ்மிட்டர்களின் ஆட்சி வந்தது.
உலகப் புகழ்பெற்ற ஹோமியோபதியர்கள், நாற்பதுகளிலிருந்து தொடர்ச்சியாக, ஹார்மோன்களோடு, ஹோமியோ மருந்துகளைத் தொடர்புபடுத்தி விளக்கினர்.
ஒருபுறம் , பலனோக்கு நிவாரணிகளை, நேரடியாக ஹார்மோன்களோடுத் தொடர்புபடுத்தி விளக்கும் எதிர்வினையைக் காண முடிந்தது.
மறுபுறம், பிறிதொரு எதிர்வினையாய், அட்ரினல், தைய்ராய்ட், பிட்யூட்டரி சுரப்பிகள் உமிழும் திரவங்களிலிருந்து, முறையே, அட்ரினலினம்,, தைராய்டினம், பிட்யூட்டரினம் போன்ற ஸார்க்கொடுகள் மருந்துகளாய் மெய்ப்பிக்கப்பட்டு, மெட்டீரியா மெடிக்காவும் பதியப்பட்டன.
இம்மருந்துகளின் பயன்பாடும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கின்றன.
1954ல், புகழ்பெற்ற இந்திய ஹோமியோபதியர், பீ.கே. சர்க்கார், The study of Homeopathic drugs from the standpoint of Endocrinology எனும் கட்டுரையை, தொலை நோக்குப் பார்வையுடன், ஒரு அறிவார்ந்த தளத்தில் எழுதியிருக்கிறார்.
சார்ல்ஸ் வீலரும், வில்லியம் கட்மனும் ஆர்ம்பித்துவைத்த, ஹார்மோன்கள்--ஹோமியோ மருந்துகள் ஒப்பீட்டாய்வு,
திசை காட்டும், உதிரி வாக்கியங்கள், பத்திகள் எனும் நிலையிலிருந்து, ஒரு புதிய விவாதத்தைத் தொடங்கிவைக்கும் முழுமையான கட்டுரையாய் மாறி, மலர்ந்திருந்தது.
இப்போக்கின் இன்றைய அவசியம் என்ன என்று, வேறு யாரும் முற்றிலும் புதிய கோணத்தில் கேள்விகளை எழுப்பக்கூடும்.
அறிவியலின் அடிப்படை பண்பு ஒரு கருத்து தவறென்று நிரூபிப்பதற்கு இடமளிப்பதுதானே !.
மதிப்பிற்குரிய, சர்க்கார், பிட்ட்யூட்டரி ஆளுமைகள், தைராய்ட் ஆளுமைகள், அட்ரினல் ஆளுமைகள், பாலுணர்வு சுரப்பிகள் ஆளுமைகள் எனும் கருத்தாக்கங்களை முன்வைக்கிறார்.
ப்ளாட்டினாவையும், பல்சட்டிலாவையும் பிட்யூட்டரி ஆளுமைக்குள் விளக்குகிறார்.
“ pituitary consists of two lobes, anterior and posterior lobes with developmental, structural and functional diffrences. Anterior lobe exerts influence over the skeletal growth , development of brain, and sexual characters whwew it acts synergistically with thyroid, adrenal and sex glands.
The posterior lobe is concerned with metabolism, vegetative function and circulatory sysem.
The anterior pituitary is the Masculine secretion producing the successful, persevering, forceful personality;
The posterior, when dominant, imparts to its possessor, the more gentle and artistic attributes.
The posterior personality will be retiring, shy, gentle and artistic.
Unbalanced secretion of anterior, lobe makes, a person PROUD, HAUGHTY AND SEXUALLY HYPERACTIVE.
In PLATINA we get an image of this type, while PULSATILLA rightly indicates posterior lobe type.
மூன்று நாட்களாய், ப்ளாட்டினாவின் ஆளுமை குறித்தும், பொருத்தமான , ஏற்கனவே ஹோமியோ மேதைகள் பதிந்திருக்கிற, துயரர் சரிதைகளை, மீள் வாசிப்புக்கு உட்படுத்தவும் செய்திருக்கிறோம்.
சர்க்காரின் பதிவுகளின் மீது, கவனக்குவிப்பை ஏற்படுத்தல் தகுமா?
தோழமை ஹோமியோ மருத்துவர்கள் ஒட்டியும், அல்லது வெட்டியும், தங்களது ஒளியைப் பாய்ச்சலாம்1
இசைவதும், மறுப்பதும் தங்களின் நிலைபாட்டை மெய்ப்பிப்பதும் அறிவியலின் எல்லைக்குட்பட்டதே!

Friday 16 October 2015

எனது வகுப்பறை.......சினா மாரிட்டிமா

இன்று எனது வகுப்பறை --2
சினா மாரிட்டிமா!
வழமையாக, வயிற்றுப்புழுக் கொல்லி மருந்தாகவே , பழைய மருத்துவத்தில் பயன்பட்டு வந்திருக்கிறது
...
ஹோமியோபதியிலும், சில மேதைகள், இப்பயன்பாடு குறித்து அதிகமாய் பதிகின்றனர்
எப்போதும் மூக்கை நோண்டுதல்
தூக்கத்தில் பற்களை நறநறவென்று கடித்தல்.
ஆசனவாய் அரிப்பு
சினா குழந்தைகளுக்கு இனிப்பு அதகம்பிடிக்கும்
மிகு பசி
நிறைவாய் சாப்பிட்டு முடித்த கையோடு, மீண்டும் உண்ணுதல்
ஆனாலும் ஐயோடியம் போலவே உடல் மெலியும்.
அதிகமாய் சாப்பட்டதும் வயிற்று உபாதைகள் ஆரம்பித்துவிடும்.

மண்,சாம்பல்,சாக் பீஸ், கரி எல்லாவற்றையும் வாயில் போட்டுக் குதப்பும்
Picca of infancy
குப்புறப்படுத்துத் தூங்கவே விரும்பும்
இரவில் தூக்கத்தில் அலறி அடித்துக் கொண்டு எழும், பேய் பிசாசு உருக்கண்டு உடல் நடுக்குறும்
என்பதும் ஒரு சிடுசிடுப்பு, அழுகை
தோளில் போட்டுக்கொள்ளக் கோரும்
போட்டுக்கொண்டாலும் சமனமடையாது.
சுற்றியுள்ளவர்களை அடிக்கும
பார்த்ததையெல்லாம் தனக்குவேண்டுமென அழும்.
கொடுத்தால் தூக்கி எறியும்
எப்போதும் என்னைக் கவனி!
கேட்ட மாத்திரத்தில் தா!
பால் பிடிக்காது
தாய்ப்பால் குடிக்காது.
கொட்டாவி விட்டுக் கொண்டே இருக்கும்.
தொட்டால்பிடிக்காது
தலை சீவிவிட முடியாது
பல் சுத்தம் செய்துவிட இயலாது
சலூனுக்கு அழைத்துச் சென்று முடிதிருத்துவதற்குள் போதும் போதுமென்றாகிவிடும்!
விட்டு விட்டு வரும் சுரம்.
சுரம் வருமுன் பசி மிகுந்து நிறைய உண்ணும்.
வறட்டு இருமல், விட்டு விட்டு, தும்மலோடு
காலையில் தொண்டையை அடைக்கும்
இபிகாக் போல நாக்கு படிவம்ஏதுமின்றி சுத்தமாய் இருக்கும
சிறுநீர் கலங்கலாய்க் காணப்படும்.
கொஞ்சநேரத்தில் வெள்ளையாய் நுரைத்துக் கொண்டு பால்போல் தோற்றம் தரும்.
சிஞாபகம் வந்தது குறித்த புரிதலில், ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்த்துள்ளார் தீதியர் க்ராண்ட் ஜார்ஜ்
க்ளோ, 8 வயது சிறுமி.இரண்டு வயதிலிருந்து கடுமையான ஆஸ்த்மா தொந்தரவு
பல முறை அல்லோபதி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சகிச்சை பெற வேண்டியிருந்த்து. பல ஹோமியோபதி மருந்துகள் கொடுத்தும் நலமாக்கல் நிகழவில்லை.
ஒருநாள்,அவள், ஆஸ்த்மாவில் மூச்சுத்திணறலில் அவஸ்தைப்படும்போது உடனிருந்து கவனித்தேன்.
சிணுங்கிக் கொண்டேயிருந்தாள் யாரும் கிட்ட வர அனுமதிக்கவில்லை.ஒரு ஆறுதலுக்காய் பக்கத்தில் செல்லவும் விடவில்லை.
எனக்கு சினா ஞாபகம் வந்த்து. விசாரித்ததில் , முறையாக புழுக்கொல்லி மருந்துகள் க்ளோ எடுத்துக்கொண்டிருப்பதாய் அவள் தாய் கூறினாள்.
சினா, லம்பார் பங்க்சரையொட்டி வரும் என்கெஃபலைட்டீஸ நோய்க்கான மருந்து என நான் கூறியதும், க்ளோவின் தாய் கூறினாள்
" நான் பிரசவத்தின் போது மயக்கமடைந்துவிட்டேன் எப்பிட்யூரல் ஊசி போட்டதும். . ஃபோர்ஸெப்ஸ் போட்டுத்தான் குழந்தையை எடுத்தார்கள்."
நீங்கள் எப்போதாவது லம்பார் பங்க்சர் செய்துகொண்டதுண்டா?
ஏழு வயதில் எனக்கு மெனிஞ்சைட்டீஸ் சுரம் கண்டது. அப்போது அல்லோபதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டேன்"
எனக்குப் பொறிதட்டியது போலிருந்த்து.
சினா 200 ,க்ளோவுக்குக் கொடுத்தேன்
அதற்குப்பின் அவளுக்கு ஆஸ்த்மா தாக்குதல் வரவேயில்லை!

எனது வகுப்பறை...........லில்லியம் டிக்ரினம்

எனது வகுப்பறை .......லில்லியம் டிக்ரினம்
90 களின் மத்தியில், மரு. ஈஷ்வர்தாஸ் தாரகாஸும், அஜித் குல்கர்னியும் ஒரு புதிய சாரளத்தைத் திறந்தனர்----புதிய கருது கோளாக!
"" A materia medica has a past, present and a future too.
Past is represented in provings
----- 'present' in the therapeutics and clinical verifications
"Future" in the suggestions for new directions in which
The remedies can be turned to use
This aspect is necessary to keep our remedies abreast of the times and needs
So that our system will not lag behind and fight shy of then challenges.""
கரோல் டன்ஹாம்
ஈ. ஏ. ஃபாரிங்டன்
கெண்ட்
மூவருடைய விளக்க உரைகளும் லில்லியம் டிக்ரினம் மருந்தின் மிக முக்கிய குறிகளை
தெளிவாக விளக்கியிருக்கின்றனர.
கருப்பை சார்ந்த குறிகள்
கருப்பையின் பின் சாய்வு
முன் சாய்வு
கீழிறக்கம்
வெளித்தள்ளுதல்
அடிக்கடி சிறு நீர் கழித்தல்
வெள்ளைப்பாடு
இருதயம் சார் குறிகள்
வேகமாய் துடித்தல்
படபடப்பு
கிடுக்கியில் நசுக்குதல் உணர்வு
அடைப்பு
அவசரமாய் நடத்தல் ,பேசுதல்
பேச்சில் தவறிழைத்தல்
கொச்சையாய்,அசிங்கமாய் பேசுதல்
அனகார்டியம் போல, அடிக்கடி சபித்தல்.
காம விழைவு
குற்ற உணர்வு
தீர்க்கமுடியாத நோய் வந்துவிட்டதாய்க் கவலை
தனது விமோசனம் குறித்த கவலை.
அதீத பயபக்தி
மெய்ப்பித்தலின் குறிகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.
க்ளினிக்கலாக, யோசிக்கையில்
Constriction in chest
Angina
Tachycardia
Retroverted, or
Anteverted or
Prolapsed uterus
Cervicitis
Endometritis
Ovaritis
Leucohrria
Hysteria
Manic depressive disorder
Sexual suppression and
Guilt complex
மந்தப் பார்வை
அஸ்டிக்மாட்டிஸம்
இறைச்சி விருப்பம்
வயிற்றோட்டம்.
எம்எல் டெயலர் ஒரு அருமையான
அல்சரேட்டிவ் கொலைட்டிஸ்
துயர ர் சரிதை சொல்லுவார்

நாளுக்கு நாள்
லில்லியத்தின் பயன்பாடு காட்டும்
நோய்ம்மைப் பட்டியலும்
அதிகரித்துக் கொண்டுவந்த்து.: ஃபாரிங்டன் ஸெபியாவை, லில்லியத்தோடு தொடர்பு படுத்தி கருப்பை நழுவுவதை நன்கு விளக்குவார்
கெண்ட்டில், லில்லியத்தின் மூல நோய் விவரமாக இருக்கும்
கெண்ட்டின் மாணவி எம்எல் டெய்லர் , கருப்பை நழுவும் உணர்வை இன்னும் துல்லியமாகப் பதிவார்
It will be remembered that
LILLIUM And SEPIA cannot stand,
Must sit down
Or cross the legs, or support the parts
In order to prevent protrution.
But the BELLADONNA bearing down is better standing
While the PULSATILLA bearing down is worse lying
கெண்ட்டின் substance தேடுதலை அடியொற்றி,
Essence தேடுதலை முன் மொழிந்த
வித்தல்காஸ் , லில்லியம் மெட்டீரியா மெடிக்கா புரிதலில்
ஒரு பாய்ச்சலை நிகழ்த்தினார்
வித்தல்காஸிடம், க்ரீஸில், ஹோமியோபதி கற்ற,
அமெரிக்க ஹோமியோபதியர், ரோஜர் மாரிஸன், தனது லெக்சர்களில், வித்தல்காஸ தோற்றுவித்த படிமத்தை விளக்குவார்
பூவுக்குள் பூகம்பம் நம் கவிஞன் வைரமுத்து வின் கவிதைப் படிம்ம்
"பூவுக்குள் புலி" வித்தல்காஸ எனும் ஹோமியோ கவிஞன் படைத்த படிம்ம்.
லில்லியத்தின் டெலூஷன் ருப்ரிக்
Body, divided
In two parts.
வித்தல்காஸ் விளக்கினாராம்
அல்லி ஒரு பகுதி
உள்ளே பதுங்கியிருக்கும் புலி
இன்னொரு பகுதி.
தன் விமோசனத்தை
பக்திமார்க்கத்தில் தேடும் லில்லி!
அவசரவசரமாய் இயங்கிக்கொண்டிருக்கும்!
உள்ளே, கிளர்ந்தெழும் காம்ம்.புலியாய் சீற்றத்தோடு!
ஆளுமை, குற்ற உணர்வில்,
இரண்டுபட பிளவுண்டு.

தமிழின் விழுமிய படைப்பாளி
தி. ஜா. தனது அம்மா வந்தாள் நாவலில
அலங்காரத்தம்மாள் பாத்திரத்தை நமக்கு அடையாளம் காட்டியிருந்தார். லில்லியம் உணர்வுகளோடு! ரோஜர் மாரிஸன் 93ல் மேற்கோள் காட்டுகிறார்
From the materia medica we find "Religious despair alternates with sexual excitement"
Lasciviousness alternating with anger.
Also, with the suppression of sexual energy comes a type of frantic state with a crazy or a wild feeling in the head.
The patient can be tremendously hurried.
97ல், மரு. ராஜன் சங்கரனும் வழி மொழிகிறார்.
I understand the remedy to have two parts .
A plant part, and an animal part
While the plant part of the remedy to do with chastity, purity and religiousness
The animal part has to do with sexuality, with passion.
A main theme of lillium tigrinum is religious fervour alternating with an increased sexual desire.
Funnily enough, its name also seems to have two components. The plant lily, and the animal , tiger.
2002ல் தாவரவியல் குடும்பம் குடும்பமாக, உணர்வுத்தளத்தில் தொகுப்பாய்வை பதிவு செய்த மரு. ராஜன் சங்கரன்
லில்லிஃபோரே குடும்பத்தினுணர்வுத்தளத்தை விளக்குகிறார்..
Forced out and squeezed, extruded
Oppressed, constrained
Constricted
Excluded, left out
In the mind the sensation will be "excluded" in the physical plane extruded.
லில்லியம் டிக்ரினத்தின் குறிமொழிகள்.
Constrictive pain in the heart
Pain pressing as load from
Opening and shutting pains
Clutching sensation
Must keep busy to repress sexual desire
Hurry
Must walk
அடுத்து லில்லியத்தை, ஸைகாட்டிக் மியாஸமாக அறிமுகப்படுத்தியிருக்கிறார்
ஒரு தாவர மருந்தை, தொகுப்பாய்வில், ஒரு மியாஸத்தில் அடையாளப்படுத்துவதுதான் சங்கரன் ஸ்கீமா.
"Wants to talk , yet dreads saying anything, lest she should say something wrong.
Boerick and Schmidt have mentioned sycosis under lillium tig.
ராஜன் இரண்டையும் தொகுக்கிறார்
" should not do anything considered to be wrong( eg. Saying something wrong ,bor being sexual) I must be careful and cautious in order not to be excluded".
: 2004ல் மரு. ராஜன் சங்கரன் , தனது the sensation in homeopathy நூலின் அட்டைப்படமாக, "புலியின் உருவத்தின் கீழ் லில்லி மலர்" வெளியிடுகிறார்
வித்தல்காஸின் விளக்கம், கவிதைப்படிம்ம், விஸ்தாரமாககப் பட்டிருக்கிறது.
்அடுத்து்அடுத்து லிஸ்லேலர் காலத்து தெளிவுரைகள்
Lillium gig has one significant mind delusion--- everything is depending on them
This delusion of grandeur elevates lillium gig into a position of importance which allows them to feel entitled to adoration as well as sexual adoration.
Lillium feels as if he could fly
Flying in the air, floating
Lillium has the ability to split from their self and their body and allow one part of themselves to indulge in sexual desire.
It has the mind rubric
Confusion of mind, muscles refuse to obey the will
When the attention is turned away.
Their failure and sin, which has become a delusion, is that they have abandoned their family.
Delusion rubric--- cannot get along with her family,
Does not belong to her own family.
லில்லியத்தின் , விலகலும், குடும்பத்திலிருந்து அந்நியமாதலும் விளக்கப்படுகிறது.
Delusion rubric. Forsaken, is
Care for her, no one would
Does not belong to her family
Cannot get along with her
Unless get out of her body, one will become insane
Being doomed
Unreal, everything seems unreal
Delusion rubric. One was about to die
Incurable disease he has
Body is divided
பிளவுண்டு, குடும்பத்திலிருந்து அந்நியப்பட்டு,
தன்னிலிருந்து அந்நியப்பட்டு
தன் உடலிலிருந்து வெளியேறி
பித்துப்பிடிப்பதாய் எண்ணி
பறப்பதாய் கற்பித்த்தில்......
பிறழ் நம்பிக்கைகள் முற்றிய நிலையில்
அவள் அப்படித்தான், "என்கிறார் லிஸ்லேலர்.
: மரு. ஏ.யூ.ராமகிருஷ்ணனின் , லில்லியம்டிக்ரினம் துயர்ர் சரிதை.
பெண்மணி,41 வயது
Presented with a malignant ulcer on the cervix and a mass on right ovary.
She had leucorrhea, bleeding and burning in uterus.
Examination and tests reported a metastatic lesion from the cervix, stage 3.
The woman was experiencing a bearing down sensation in uterus and increased sexual desire, she was also oversensitive and extremely high strung.
Prescription
Week 1. Lillium tigrinum 200, daily plussing method
Week 2, carcinosin200, daily, plussing method
Week 3--8. Same as weeks 1--2
Physical palpation indicated that the ovarian mass had completely disappeared.
This was confirmed by CT Scan
Months 3--4::same as weeks 1---2
Symptoms of bleeding, burning and bearing down sensation were all better.
Ulcer looked better.
Months 5---6
Same as weeks 1--2, but in the 1M potency.
No symptoms whatsoever.
Ulcer had shrunk to 75%
Months 7--12
Same as months 5--6
Ulcer had shrunk even further and was down to 30%
Monthsv13---18
Same as months 5---6
Ulcer had not changed
Months19---24
Same two remedies, but in the 10M potency, alternating semimonthly, split dose method.
Ulcer not changed.
Thereafter, although semiyearly gynecological examination showed that ulcer had never completely healed, the condition remains stable andvthevpatient healthy and asymptomatic
ஆரம் மெட்டாலிக்கம் தலைமைப் பண்புகள் கொண்ட ஆளுமை. வித்தல்காஸ் சொல்லுவார். நேர்மைக்கும், கடின உழைப்புக்கும்,தலைமைப் பண்புக்கும், பொறுப்புணர்வுக்கும், கடமையுணர்வுக்கும் ஆரம் சாலச் சிறந்தது. பெரும் நிதி சார் பொறுப்புக்கள் கொண்ட வங்கி மேலாளர் போல என்பார்.
இலக்கு குறித்த கவனம் எப்போதும். அடுத்தவர் இல்லை. அடுத்தவர் விமர்சனம் சகிக்க முடியாதது. அப்படியே தன் இருதயத்துக்குக் கொண்டு போய் விடுவர், அதன் உண்மையான பொருளில்..
இலக்கு எய்த முடியாத பொழுது, தலைமைபீடத்தையும் இழந்து, தான் தொட்ட... காரியம் துலங்காது என்றாகி, மனமுடைந்து, தற்கொலைக்கு முயற்சிப்பார்.
எல்லாம் முடிந்து போய்விட்டது , எப்போதும் துக்கம், சோகம்” என்று ஒற்றைப் பரிமாணத்தை மட்டுமே காட்டிஉள்ளதாகக் கூற்கிறார், ஜேன் ஸ்கால்ட்டன்
இதன் எதிர் நிலையான, தலைமை, கடமை, பொறுப்புகள் ஆகியவற்றை ஆரம் மெட்டில் காட்டியவர் மரு. ராஜன் சங்கரன் ஸ்கால்ட்டன்.
ஸ்கால்ட்டனின் அரசியலையும், குறுக்கல் வாதத்தையும் விட்டுவிடுவோம்.
ஹோமியோபதியில் போலாரிட்டிக் கருத்தாக்கம் பற்றிக் கொஞம் பேசுவோம்.
ஒரு உண்மை அல்லது னிலைபாடு , இரு துருவ எதிர்னிலைகளில் வெளிப்படலாம்
நேட்ரம் மூரில் உப்பை அதீதமாய் விரும்பும் நிலையும் உண்மை
உப்பே பிடிக்காத நிலையும் உண்மை.
மெய்ப்பித்தலில்போது, இரண்டு குணங்களும் வெளிப்பட்டிருக்கும்.
இரு துருவ நிலைகளும் ரெப்பர்டரியில் இடம்பெறும்
என்ன, மதிப்பெண் வழங்கலில் மட்டும் வேறுபடும்.(grading of rubrics)
இந்த இரு எதிர் துருவ நிலைகளையும் ஆரம் மெட்டில் ஸ்கால்ட்டன் விள்க்குவார்
தலைமை, கடமை உணர்வுகள் ஒரு புறம்,
இதன் எதிர் நிலை, மனம் உடைந்து சோகத்தில் மூழ்கு, உயரத்திலிருந்து ஒரே குதி எல்லாம் முடிந்து விடும்… தற்கொலை உணர்வு.
இறுதியாய் சொல்வார். மொத்தத்தில் ஆரம் மெட் தன் குழாமில் செயல்படுபவர்களையும், தன்னிடம் விடப்பட்ட பொறுப்புக்களையும் எப்போதும் கைவிடமாட்டார். கடைசிவரை, தன் இழப்புக்களை பொருட்படுத்தாமல் காப்பாற்றுவார்..
ஸ்கால்ட்டனின் அரசியலைவிட, ஸ்கால்ட்டன் ஆரம் மெட்டில் காட்டும் எதிர் துருவ நிலைகள் அருமையான விளக்கம்.
ஒருவேளை, அப்படி போலாரிட்டியை விலக்குவதற்காகக் கூட வித்தல்காஸில் ஒரு பகுதியைக் குறுக்கியிருக்கலாம்.
கருத்தாக்கம் நன்றாக விளக்கப்பட்டிருக்கிறது 1.
பாராட்டுவோம்.

Saturday 2 May 2015

களவாடப்பட்ட என் தொட்டில்

எப்போதும் நான் ஆட, துள்ள
உறங்க, கிறங்க,வீறிட்டழ
சிணுங்க எனக்கிருந்தது
தொட்டிலொன்று

இரு வேறு முணைகளுக்கு
இடையில் தொங்கியபடி
எந்நாளும் கிடக்க
தரையைத் தொடாமலே

 முன்னும் பின்னுமாய்
அளந்த வீச்சில் பயணம்
சில சமயம் குலுக்கலோடும்!

ஆடியதைவிட, துள்ளியதைவிட
முடங்கிக் கிடந்ததே சுகம்
கைகளை நெஞ்சில் கட்டி
காலை குறுக்கிச் சேர்த்து!

எப்போதும் காற்றில்
மிதந்தபடி தொட்டிலில்
கூரையைத் தாண்டிய
கனவுகளோடு

என் தொட்டிலை ஏனோ
யாரோ களவாடிப்போக
இன்று தரையில்
தொட்டிலின் நினைவோடு
MASSACRE OF THE INNOCENTS
மனித சிந்தனையில், அப்பாவி மக்களைக் கொல்லுதலுக்கெதிரான கலைஞர்களின் ஓவியப் பதிவுகள் பல நூற்றாண்டுகளாக எழுச்சி பெற்று வந்திருக்கிறது.
யேசு கிறிஸ்துவின் பிறப்போடு நடந்ததாகச் சொல்லப்படும் கொலைகளில் ஆரம்பித்து இக்கருத்தானது , வெவ்வேறு நூற்றாண்டுகளில் பல ஓவியர்களால் பதியப்பட்டிருக்கிறது.
...
நான் ஆறிந்தவரையில் ஜியாட்டோ டீ பாண்டன், பீடர் ப்ரூகல் தெ எல்டர் 1567, பீட்டர் பால் ரூபென்ஸ் 1608, கைடோ ரெனி 1611,குஸெப்பே மாரியா க்ரெஸ்பி, ஃப்ரான்காய்ஸ்ஜோசெஃப் நாவெஸ் 1817, என பலரது ஓவியங்கள் இணைய தளத்தில் காணக் கிடைக்கின்றன.
இவைகளை மட்டும் தெரிவு செய்து அப்பாவி மக்களைக் கொல்லுதலுக்கெதிரான கலைஞர்களின் கண்டனமாக உலகெங்கும் ஓவியக் கண்காட்சிகள் நடைபெறுவது அறச்செயல்பாடாக இருக்குமெனத் தோன்றுகிறது.
மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், மொழியின் பெயரால், அரசியல் காரணங்களால் நாளும் நடைபெறும் எண்ணற்ற படுகொலைகளுக்கு எதிரான முழக்கங்களின் ஆரம்பமாக இருக்கும்.
See More

எந்தப் பெயரும் இல்லையென்றால் எப்படி?

சின்ன வயசில் நீங்கள் குண்டாயிருந்தீர்கள்
விரைவாய் ஓட முடியாதபோதும்
மேல் மூச்சிரைக்க ஓட முஸ்தீபுகள்!
முந்நூறு ஓட்டு வீடுகளும்...
இருபது நாய்களும் இருக்கும் தெரு!
உங்களை செல்லமாய் விளித்தது
தொந்தியென! உங்கள் சம்மதம் இன்றியும்!

உண்டு தானே? உண்மையாய் சொல்லனும்
ஒருவேளை ஒப்புக்கொள்ள மறுத்தால்?
யார் விட்டார்கள் உங்களை?
நீங்கள் ஒல்லியாய் இருந்தீர்கள்!
உயரமாய் இருந்தீர்கள்! சரியா?
சோனியென்றோ நெட்டைக்கொக்கு என்றோ
தெருவே உங்களை அழைத்தது!
தெரு நாய்களும் கூப்பிட்டன
வாலாட்டிக்கொண்டே!
எந்தப் பெயரும் இல்லையென்றால் எப்படி?
அந்தத் தெருவில் நீங்கள் வாழவே இல்லை!
அல்லது முந்நூறு வீடுகளும் ப்ளஸ்
இருபது நாய்களும் இருந்திருக்க வில்லை!!!
அல்லது இப்படியும் யோசிக்கலாம்
ஜனித்தபோதே நீங்கள் பெரியவாளாய் இருந்தீர்கள்!
வாஸ்தவமா இல்லையா?
வாஸ்தவம்! வாஸ்தவம்!
என்ன உடனேயே ஒப்புக்கொண்டுவிட்டீர்கள்?
இப்படியா சின்னப்பிள்ளையாய் இருப்பது?
இந்த வயசிலும்?