Friday 26 December 2014

முடிவிலாப் பெருவெளி

Ravichandran Arumugam's photo.சாலையின் முடிவு கற்பிதம்
                                                                                  சாலையின் முடிவு கற்பிதம்
                                                                                  தொடுவானும் கற்பிதம்
                                                                                 மேகச் சிதறல்கள் கற்பிதம்
                                                                                 எது தான் நிஜம்?
                                                                                 கிளை பரப்பி நிற்கும் அந்த மரமா?
                                                                                  மரம்
                                                                                  மறைக்கும் அப்
                                                                                  பெருவெளியா? 
                                                                                  எது நிஜம்?   
                                                                                  ப்                                                                                                                                                                                                                                           
 

Thursday 25 December 2014

ஹோமியோபதி பட்டறைச் சாத்தியப்பாடு-2

ஹோமியோபதி பட்டறைச் சாத்தியப்பாடு 2
பின் எழுபதுகளில் வெளிவந்த தீவிர அரசியல் இலக்கிய இதழின் பங்கேற்பாளர்கள் மூவர் ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் கழித்து ஓர் மாலையில் முன் கூட்டித் திட்டமிட்டபடி ஓர் ரெஸ்டாரண்ட்டில் சந்திக்கின்றனர். இருவர் சென்னை வாசியாகவும் ஒருவர் அமெரிக்காவில் சிகாகோவிலும் வாசம். மூவரிலும் முதுமை கூடித் தோல் தடிப்பும் சுருக்கங்களும் தெரிகின்றன. எழுபதைத் தொட்டுவிட்ட கட்டம். வாழ்வின் வெற்றி அறுவடைகளை அசைபோட்ட காலம் போய் மூப்பில் சரிகிற பருவம். இருப்பதைக் கையில் பிடித்திக் கொள்ள வேண்டும் எனும் ஆசை மட்டிலும் உயிர்ப்புடன். அமெரிக்க வாழ் தமிழர் தனது மகனின் கல்லூரிப்படிப்பிற்குத் தேவையான ஒரு சான்றிதழ் பெற தன் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்.

தங்களது கடந்தகால தீவிர அரசியல் தத்துவ, கலை இலக்கிய லட்சிய வேகங்கள் குறித்து நினைவூட்டிக் கொள்கின்றனர். அந்தக் காலத்தில் அவர்களது ஈடுப்பாடு சிப்கோ இயக்கத்திலிருந்து, அயனெஸ்கோவரை, மாசேதுங்கிலிருந்து,சர்ரியலிஸ, க்யூபிஸ ஓவியங்கள்வரை, குரோசோவாவிலிருந்து ஃப்ரான்ஸ் ஃபேனான் வரை வியாபகம் கொண்டிருந்தது. தெரு நாடகங்களில் தங்களது நேரத்தை செலவழித்துக் கொண்டிருந்தனர். இலக்கிய இதழியலில் ஆர்வம்..

இன்று மூவரும் அந்நியமாகிப் போயிருக்கிறார்கள். இப்போது விஜய் தெண்டுல்கரோ, மஹாஸ்வேதாதேவியோ, சுந்தர்லால் பஹுகுனாவோ வெறும் மங்கலான நினைவு மட்டுமே. யாரோ நடந்த தொலை தூரக் காலடிச் சுவடுகள். தினசரி பத்திரிகை வாசிப்பைத் தாண்டாத சராசரித்தனம்.

பதினெட்டுத் திருப்படிகளில் மூச்சிரைக்க பத்தில் ஏறி ஆசுவாசப்படுத்திக்கொள்ள இயலாமல் பதினேழு வரை சரிந்தும் தளர்ந்தும் தொய்ந்தும் அடிவைக்கிற கையறு நிலை.
கடந்தகால ஆழமான இறையிலிக் கொள்கை பின்னகர்ந்து போயிருக்கிறது. மூவரும் கடவுளின் ஜீவித நியாயத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். வாழ்க்கைக்கு, அற நியதி ஒன்று அவசியம் தேவை என்பதில் மூவரிலும் உறுதி தெரிகிறது.

முதலாமவர் அரசுப்பணியில் உயர் பதவி வகித்து ஓய்வு பெற்றவர். தலைக்குச் சாயம் பூசி பழுப்பேறி இருக்கிறது. ”என் கனவுகளில் கடவுளின் அமானுஷ்ய வடிவம் தோன்றுகிறது . அவரது ஆக்ஞைக்கு நான் கட்டுப்படுகிறேன். அவர் என்னோடு பேசுகிறார். அவரது கட்டளைப்படி அடுத்தவாரம் குடும்பத்தோடு குல தெய்வ பூஜைக்குச் செல்கிறேன் காலிலிருந்து அடிக்கடி மேலேறி வரும் இழுப்பு வலிக்கும் மரத்துச் சுரணையற்றுப் போதல் நிவர்த்திக்கான வேண்டுதல்”. கழுத்தில் இடப்புறம் பெரிதாக ஒரு சதை வளர்ச்சியும் கோள வீக்கமும் தவிர்க்க இயலாத படிக்குக் கண்ணில் படுகிறது.
”நீங்கள் அனேகமாக கோனியம் ஆளுமைக்கு ஒத்திகையாட்டம்“ என்கிறார் இரண்டாமவர்.. சற்று நேர அமைதிக்குப் பின் தொடர்கிறார். என்னால் லட்சியங்கள் எவை குறித்தும் சிந்திக்க இயலவில்லை..என் மகன் தன்னை நிறுவிக்கொள்ள வெளி நாடு செல்கிறான். அவனது மலர்ச்சி மட்டுமே என் முன்னால் தெரிகிறது. மனைவி போனபின் நான் ஒண்டிக்கட்டை. எப்போதும் ஒரு அறைக்குள் இருக்கவே பயமாக இருக்கிறது. மகன் லண்டன் போனதும் என் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். எல்லாவற்றிலும் பயம். தெருவைக் கடக்க பயம் டையபடிக் நோய் வேறு- தினமும் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். ஆனால் இனிப்பு எப்போதும் தேவைப்படுகிறது கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. தனிமை, கவலை எதற்கெடுத்தாலும் பயம் மகன் நேரங்கழித்து வந்தாலே பதட்டம் மரண பயம் அகலாது கூடவே. வயிற்றில் உப்புசம் எரிச்சல் அல்சருக்கு முந்திய கட்டமாம் போட்டோ பிடித்துக் காண்பிக்கிறான் ஸ்பெஷலிஸ்ட். எந்தப் புத்தகத்தைத் தொட்டாலும் கொஞ்ச நேரம் தான். எதையும் முழுமையாக வாசிக்க இயலவில்லை.இடது கண்ணுள் எப்போதும் ஒரு வேதனை. வாங்கி வைத்த அஞ்ஞாடியும் கொற்கையும் அப்படியே இருக்கிறது படிக்க இயலவில்லை. கழிவிரக்கம், சுயமதிப்பில் இறக்கம், அவரது பேச்சில்.
உங்கல் தலையில் அர்ஜெண்டம் தலையை யாரோ மாற்றிப் பொருத்திவிட்டிருக்கிறார்கள் நீங்கள் மிகவும் இனிப்பானவர் என்று கொஞ்சம் தூக்கலான எள்லலோடு பேசுகிறார் முதலாமவர் இதுவரை அதிகம் பேசாமல் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்த மூன்றாமவர் தொண்டையைக் கணைத்துக் கொள்கிறார். பார்வை எங்கோ தொலைவில் நிலைகுத்தியிருக்கிறது.

முதலாமவர்: குமார் நீங்கள் எப்போதும் சுற்றுப்புற சூழலில் ஆய்வு நடத்திக் கொண்டிருப்பீர்களே இப்போது ஏதேனும் நூல் வெளியிட்டிருக்கிறீர்களா? கோ ஆதரிங் அட்லீஸ்ட்?

மூன்றாமவர்: தன் நரைத்து வெளுத்த தலையைக் கோதிக்கொண்டே” ”இல்லை அப்படி எதுவும் செய்ய இயலவில்லை. 80களுக்கு மேல் என்னில் ஆர்வம் தங்கவில்லை. நான் மிகவும் மாறியிருக்கிறேன். என் வாழ்க்கை எப்போதும் விரைவை வேண்டுகிறது. அதனுள் லட்சிய வேட்கை எல்லாம் தோற்றுப் போய்விட்டன. வீடு , ஆஃபீஸ், கார், பாங்க் பாலன்ஸ் இவை தவிர நாட்டம் என்பது எதிலுமில்லை பிள்ளைகள் இருவரும் நன்கு படித்துவிட்டு உத்யோகத்தில் இருக்கின்றனர். இன்னும் நானும் வேலை பார்க்கிறேன். மூன்றாவது மகனின் கல்லூரி அட்மிஷன் சம்பந்தமாகத்தான் சென்னை வந்திருக்கிறேன்.

இரண்டாமவர்: நீங்கள் தோரோவின் வால்டென் மீது தீராத மோகம் கொண்டவராயிற்றே! போய்ப் பார்த்தீர்களா அதன் மிச்ச சொச்சங்களை?

மூன்றாமவர்: இல்லை இல்லை! அமெரிக்கா சென்றபின் அந்த ஆர்வமெல்லாம் என்னில் வற்றிப்போய் விட்டது தனது வெளிறிய ஜீன்ஸை சற்றே தளர்த்திவிட்டுக் கொள்கிறார் இறுக்கம் குறைய. . நெஞ்சு வேகமாக ஏறி இறங்குகிறது

முதலாமவர்: நான் யூ ட்யூபில் ஒரு வீடியோ பார்த்தேன். மத்தியப் பிரதேசத்திலிருந்து ஒரு ஹோமியோ மருத்துவர் அமெரிக்கா செல்கிறார். முன் கூட்டித் திட்டமிட்டபடி ஸாண்ஃப்ரான்ஸிஸ்கோவிற்கு அருகில் ஒரு கிராமத்தில் அறுபது வயதைக் கடந்த பெண்மணியை சந்திக்கிறார். இருவரும் காரில் புறப்பட்டு அப்பெண்மணியின் குடும்ப கல்லறையைக் காணச் செல்கின்றனர். கல்லறை வாசலில் டாக்டர் ஜேம்ஸ் டெய்லர் கெண்ட் என்ற வாசகம் பொறித்திருக்கிறது. மிகவும் எளிமையான முறையில் மலர்க்கொத்துக்கள் வைக்கிறார் இந்திய மருத்துவர். ஓரிரு நிமிடங்கள் கல்லறையின் முன் மண்டியிட்டு கண்மூடி நிற்கிறார். அந்தப் பெண்மணி திரு கெண்ட்டின் பேத்தியாம்!
மூன்றாமவர்: அந்த இந்திய மருத்துவரின் அர்ப்பணிப்பு பாராட்டுதலுக்குரியது. அவர் தனது நம்பிக்கயைத் தொடர்கிறார். அவரது லட்சியம் நீர்த்துப் போகவில்லை.

மூவரும் தங்களை சுதாரித்துக் கொள்கின்றனர். சற்றே தேநீர் குடித்தாலென்ன எனும் யோசனை வருகிறது. மூவரும் கொஞ்சம் தே நீர் அருந்துகின்றனர். தங்கள் குரலில் படிந்திருக்கும் கிலேசத்தை மறைத்துக்கொண்டு, பேசிக்கொள்கின்றனர். ஒரு கோரஸ் போல் அவர்களிடம் வெளிப்படுகிறது. ”” நாம் நம்மால் முடிந்ததைச் செய்திருக்கிறோம்! வருந்துவதெற்கெல்லாம் ஒன்றுமில்லை””. அடுத்த முறை சந்திக்கலாம்.

LETTING GO OF ART
LETTING GO OF IDEAS
LETING GO OF CULTURE
……………
எப்போதோ வாசித்த அயோடியத்தின் ஆளுமைப் பண்புகள் நிணைவுக்கு வருகின்றன. கலை, கருத்தியல், கலாச்சாரம் இவற்றை விட்டுவிடும் மனிதர்களில் அயோடியம் தங்கியிருக்கிறது. இவர்களது பதட்டத்தையும் படபடப்பையும் இவர்களால் இனி தாங்கிக் கொள்ள இயலாது.
  
பழைய நாட்கள் என்றால் நமக்கெல்லாம் மிகவும் பிடித்தமான, ஓடுகாலிகள், பிழைப்பு வாதிகள், ஃபிலிஸ்டைன்ஸ் என்ற சொற்களால் வசைபாடி இருக்கலாம். அவையெல்லாம் இப்போது புழக்கத்தில் இல்லை நாம் மிகவும் முன்னேறிவிட்டோம் என்பது ஆசுவாசம் தருகிறது..

பென்ஸீனம்

பென்ஸீனம்
கல்லூரி நாட்களில் யாரும் சரியாக வேதியல் பாடங்களை ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அறிமுகப்படுத்தவேயில்லை என எண்ணத் தோன்றுகிறது.
ஆகஸ்ட் கெக்குலுக்குக் கனவில் ஒரு பாம்பு தன் வாலைத் தின்று கொண்டிருக்கும் வடிவம் தோன்ற, அதுவே பென்ஸீனின் வடிவமாகக் கட்டமைக்கப் படுகிறது. பூமியின் வெவ்வேறு நிலப் பரப்புகளில் வாழ்ந்த எல்லா ஆதி மனித இனத்தின் நம்பிக்கையான தன்னையே தின்று மீளவும் புனர்ஜென்மம் எடுத்துவரும் மாந்தனின் தொன்மமே பென்ஸீனின் வேதியல்வடிவம்.
...
ஆறு கார்பன் அணுக்களும் ஆறு ஹைட்ரஜன் அணுக்களும் அறுமுக வடிவில் கோர்க்கப்பட்டுள்ளன. கோர்க்கும் ஒற்றை இணைப்பும் இரட்டை இணைப்பும் அரை நிமிடம் ஒன்றாகவும் மறு அரை நிமிடம் பிறிதொன்றாகவும் மாறும் தன்மை கொண்டவை.
பென்ஸீன் நச்சு, எலும்பு மஜ்ஜையைத் தாக்கி அழிக்கும்..
ஹோமியோபதியில் பென்ஸீன் மருந்தாக மெய்ப்பிக்கப் பட்டுள்ளது. ரத்தப் புற்று நோயின் அனைத்து வகைகளுக்கும் மருந்தாகப் பயன் படுகிறது. இன்னும் சொல்லப் போனால் , லிம்போமா, ஹாட்கின்ஸ் நோய், மல்டிப்ள் மைலோமா போன்ற நோய்களிலும் இதன் பயன்பாடு பேசப்படுகிறது
ஐஸ் ட்ரின்க்ஸ் அடிக்கடி பருகும் ஆசை ப்ரதானமாக உண்டு பென்ஸீனில்.
இருளிலிருந்து ஒரு வெள்ளை நிறக் கை, மாயக் கை தன்னை நோக்கி வரும் காட்சிப் பிறழ்வு அடிக்கடி தோன்றி மறையும் இம்மருந்தில்.
தான் படுத்திருக்கும் படுக்கை பூமிக்குள் அமிழ்வதாகவும் அல்லது தானே படுக்கைக்குள் அமிழ்வதாவும் கூறுணர்வு காணப்படும்.
ரத்தப் புற்றுக்கு ஹோமியோபதி பரிந்துரைக்கும் முக்கிய மருந்துகளில் ஒன்று பென்ஸீன்..
See More

மாலை நேரத்து சிறுகதை வாசிப்புக்கள்

மாலை நேரத்து சிறுகதை வாசிப்புக்கள்
இன்று மாலை தி. நகர் பனகல் பார்க்கின் வடவாயில் சிமெண்ட் பென்ச் புண்ணியம் கட்டிக்கொண்டது. இதுவரை அதில் யார் யாரேனும் உட்கார்ந்திருக்கக் கூடும். ஆனால், ஒரு மாலை நேரத்தில், தொடர்ச்சியாக மூன்று சிறு கதைகள் வாசிக்கக் கேட்கும் பாக்கியம் அதற்குக் கிடைத்திருக்கிறது. காற்றில் ஈரம் இருந்த நேரம். சுற்றிலும் அடர் வனம் போல் மரம் செடி கொடிகள். ரம்மியமான சூழல் கூட்டமும் அதிகமில்லை. நானும் நண்பர் சண்முகம் மட்டிலுமே வடவாயில் பென்ச்சில்.
தெரிவு செய்த கதைகள் ந...ீல பத்மனாபனின் ”சமூக ஜீவி”, பால் சக்காரியாவின் “ஜோசப் நல்லவனின் பாவ மன்னிப்பு” மற்றும் குமார செல்வாவின் “ ஈஸ்தர் கோழி” . கால் மணி நேர இடை வெளி விட்டு ஒவ்வொன்றாய் வாசித்தோம். ஒரு கதை முடிந்ததும் நண்பர் சண்முகம் தன் மீது ஏற்பட்ட தாக்கத்தை விளக்கமாகச் சொல்லுவார். பின் நான் என் அபிப்பிராயத்தைச் சொல்லுவேன். அபிப்பிராயம் தான் எந்த இலக்கிய கோட்பாட்டின் அடிப்படையிலும் அது வராது. எங்களது மாலை நேரம் எங்களது வாசிப்பு அனுபவம் அவ்வளவே.
குமார செல்வா நல்ல கதை சொல்லி. தான் மிகவும் ஆசையோடு வளர்த்துவந்த கோழி- மிகவும் வாத்சல்யத்தோடு, இறந்துபோன தனது தங்கை எலிசபெத்தின் நினைவில் அவள் பெயரையே இட்டு அழைத்து வந்த செல்லக் கோழி, -க்றிஸ்துமஸ் நாளன்று விருந்துக்காக சமைக்கப் படுகிறது. கதையை நகர்த்திச் செல்லும் தம்பியின் மனம் நோகடிக்கப்படுகிறது. கதையின் முடிவில் அப்பா அவனை சாப்பிட அழைக்கையில் எலிசபெத் என ஓவென்று அலறி அழுகிறான்.
ஏனோ, குமரி வட்டார வழக்கு, வாசிக்கையில் ஒரு நெருடலை உண்டாக்கவே செய்கிறது. வரிகளின் பிடிபடல் உடனடியாய் நிகழ்வதில் தடை ஏற்படுகிறது. பூரணமாய் பாராட்ட முடியாமல் ஒரு அவஸ்தை.
நீல பத்ம நாபனின் “சமூக ஜீவி” ஒரு கையறு நிலையின் பதிவு. தன் வீட்டைச் சுற்றி மூன்று அத்து மீறல்கள். தெரு வாசலிலிருந்து சாலைவரை தான் போட்டு வைத்திருந்த மணலை போக்கிரிகள் அனுமதியின்றி அள்ளிச் செல்கிறார்கள். எதிர்ப்பைத்தான் காட்ட முடிகிறதே தவிர தடுக்க முடியவில்லை. பக்கத்து வீட்டை வாங்கிய கள்ள நோட்டு சாமியார் மாடி எழுப்புகிறான் இவன் வீட்டுக் குளியலறை பார்த்து ஜன்னல் திறக்கிறான்; அதையும் தடுக்க இயலவில்லை. பின் வீட்டுத் தோட்டத்தில் தன் மைத்துனனே, அதுவும் ஒரு மருத்துவன் ,முடை நாற்றமடிக்கும் குப்பைக் கூளங்களைக் கொட்டி அந்தப் பிரதேசத்தையே அசுத்தப்படுத்துகிறான் தடுக்க முடியவில்லை. கெட்ட வார்த்தைகளாய் வசவு வாங்குவது தான் மிச்சம்.எதிர்ப்பு எந்த பிரதிபலனையும் தராத அவலம் சித்திரப்படுத்தப்பட்டிருக்கிறது ஆனாலும் ஏதொ ஒரு வழக்குரைக்கான ஆவணம் போன்ற அனுபவமே மிஞ்சுகிறது.. சிறுகதை இலக்கிய தாக்கம் கிட்டவில்லை.
பால் சக்காரியாவின்“ ஜோசப் நல்லவனின் பாவ மன்னிப்பு “ கே.வீ ஜெய ஷ்ரீயின் மொழிபெயர்ப்பில். இதுவும் ஒரு க்றிஸ்துமஸ் நாளன்று நடைபெறும் சம்பவமெழுப்பும் உள்மனத் தாக்கம் தாம் . எழுத்து தான் இலக்கியம் எனும் அனுபவம் வாசிக்கையில் கிடைக்கிறது. தூக்கலான எள்லலோடு எழுதப்பட்ட கதை. கிறித்துவனாய் இருப்பதன் பொருள் குறித்த சுய விசாரணை தோரணையில் சரியான பகடியோடு திட்டமிட்டு கட்டமைக்கப் பட்டிருக்கிறது. கண்ணியமான எழுத்து. எல்லோரையும் இழுத்து தன்னை வாசிக்கச் சொல்லும் நடை.
மூன்றிலும் எங்கள் இருவரின் மனதிற்கு இதமாய் இருந்தது “ஜோசப் நல்லவனின் பாவ மன்னிப்பு. பக்குவமான இலக்கியப் பதிவாய் மிளிர்கிறது.
மொழிபெயர்த்த கே வீ ஜெயஷ்ரீக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம்.

கார்லோ மாரட்டியின்” யூரோப்பாவும் காளையும் ஓவியம்“ 1680-85

யூரோப்பா என்றால் ஒரு கண்டம், பல நாடுகளை உள்ளடக்கிய பெரும் நிலப்பரப்பு என்று மட்டும் பூகோளப் பாடப் புத்தகம் அறிமுகப் படுத்தியிருந்தது. அட்லாஸ் படங்களில் யூரோப்பாவை அடையாளம் காண சிறு வயதில் எளிதாக இருந்தது.

பின்னால் இத்தாலிய ஓவியங்களில் ஆர்வம் ஏற்பட்டதும், யூரோப்பாவின் பொருள் விஸ்தாரம் கண்டது.  ஃபோயனீஷிய அரசனின் மகள் பெயர் யூரோப்பா;  அவளைக் காதலித்த ஜூபிடர் அவளை வசீகரிக்க அழகிய வெள்ளைக் காளை வடிவமெடுத்தான்.  மலர் கொய்ய வரும் யூரோப்பாவுக்காக நந்தவனத்தில் காத்துக் கிடந்தான். காளையின் வெள்ளை நிறமும் மென்மையான குணமும் அவளை வசீகரித்தன.  கொம்புகளுக்கு மலர்க்கிரீடம் சூட்டி மகிழ்வித்தாள் . தன் முதுகில் ஏறி அமர வசதியாக அவள் முன் மண்டியிட்டது காளை.   யூரோப்பா ஏறி அமர்ந்தது தான் சமயம் என சிட்டாய்ப் பறந்தது காளை, கடலில் நீந்தி க்ரீட் நாட்டை அடைந்தது.  அங்கு வந்த பின்னரே தான் யார் என்பதை வெளிப்படுத்தியது ஜூபிடர்.  அவர்களுக்கு மூன்று மகன்கள் பிறந்தனர்.  இது இத்தாலியப் புராணிகம் ஜூபிடருக்குப் பதிலாக ஒலிம்பிக் கடவுளான ஸீயஸின் பெயர் தரித்து வருகிறது கிரேக்கப் புராணிகம்.

நான் பார்க்கக் கிடைத்த  முதல் “யூரோப்பாவும் காளையும் ஓவியம்” கார்லோ மாரட்டியால் 1680-85 களில் வரையப்பட்டிருக்கலாம் என யூகிக்கப் படுகிறது.

 அசையாமல் சுவாதீனமாக மண்டியிட்டுப் படுத்திருக்கிறது காளை  அதன் மேல் மென்மையான முகத்துடன் அமர்ந்திருக்கிறாள் யூரோப்பா. அவள் கைகள் கொம்பில் சூட்டியிருக்கும் மலர்ச்சரங்களைப் பற்றியிருக்கின்றன. பயமேதும் முகத்தில் தென்படவில்லை.  பாதுகாப்பிற்காய் கொம்புகளை இறுகப் பற்றியதாகவும் இல்லை. கவனம் ஈர்க்கும் மிக அழகான வண்ன ஓவியம்

ஹோமியோபதி அறிவியலில் க்ரோகஸ் சட்டைவா (குங்குமப்பூ) மருத்துவ குணங்கள் படிக்கிறபோது ஒரு சிறு குறிப்பு என் பார்வையில் பட்டது.  ஜூபிடர் காளை தனது வாயிலிருந்து க்ரோக்கஸ் சட்டிவா தூளை யூரோப்பாவின் முகத்தில் ஊதித்தான் கவர்ந்து சென்றதாம்.
 
கிரீட் மொழியில் யூரோப்பாவுக்கு பசு என்றொரு  பொருளும் உண்டாம்.  பின்னர் ஜூபிடர் தனது காளை உருவை நட்சத்திரக் கூட்டங்களாகி வானில் ரிஷபமாகத் திரிய விட்டதாகவும் புராணிகம் கூறுகிறது.

மனித வளர்ச்சிப் பரிணாமத்தில் காளையும் பசுக்களும் பிரிக்க முடியாதபடி இணைந்துள்ளதின் வெளிப்பாடுதான் யூரோப்பா கதை. நமது புராணம் காட்டும் ரிஷபங்களும் பசுக்களும் ருத்ரனும் மனதில் வருவது தவிர்க்க முடியாததாகிறது.
யூரோப்பா என்றால் ஒரு கண்டம், பல நாடுகளை உள்ளடக்கிய பெரும் நிலப்பரப்பு என்று மட்டும் பூகோளப் பாடப் புத்தகம் அறிமுகப் படுத்தியிருந்தது. அட்லாஸ் படங்களில் யூரோப்பாவை அடையாளம் காண சிறு வயதில் எளிதாக இருந்தது.
பின்னால் இத்தாலிய ஓவியங்களில் ஆர்வம் ஏற்பட்டதும், யூரோப்பாவின் பொருள் விஸ்தாரம் கண்டது. ஃபோயனீஷிய அரசனின் மகள் பெயர் யூரோப்பா; அவளைக் காதலித்த ஜூபிடர் அவளை வசீகரிக்க அழகிய வெள்ளைக் காளை வடிவமெடுத்தான். மலர் கொய்ய வரும் யூரோப்பாவுக்காக நந்தவனத்தில் காத்துக் கிடந்தான். காளை...யின் வெள்ளை நிறமும் மென்மையான குணமும் அவளை வசீகரித்தன. கொம்புகளுக்கு மலர்க்கிரீடம் சூட்டி மகிழ்வித்தாள் . தன் முதுகில் ஏறி அமர வசதியாக அவள் முன் மண்டியிட்டது காளை. யூரோப்பா ஏறி அமர்ந்தது தான் சமயம் என சிட்டாய்ப் பறந்தது காளை, கடலில் நீந்தி க்ரீட் நாட்டை அடைந்தது. அங்கு வந்த பின்னரே தான் யார் என்பதை வெளிப்படுத்தியது ஜூபிடர். அவர்களுக்கு மூன்று மகன்கள் பிறந்தனர். இது இத்தாலியப் புராணிகம் ஜூபிடருக்குப் பதிலாக ஒலிம்பிக் கடவுளான ஸீயஸின் பெயர் தரித்து வருகிறது கிரேக்கப் புராணிகம்.
நான் பார்க்கக் கிடைத்த முதல் “யூரோப்பாவும் காளையும் ஓவியம்” கார்லோ மாரட்டியால் 1680-85 களில் வரையப்பட்டிருக்கலாம் என யூகிக்கப் படுகிறது.
அசையாமல் சுவாதீனமாக மண்டியிட்டுப் படுத்திருக்கிறது காளை அதன் மேல் மென்மையான முகத்துடன் அமர்ந்திருக்கிறாள் யூரோப்பா. அவள் கைகள் கொம்பில் சூட்டியிருக்கும் மலர்ச்சரங்களைப் பற்றியிருக்கின்றன. பயமேதும் முகத்தில் தென்படவில்லை. பாதுகாப்பிற்காய் கொம்புகளை இறுகப் பற்றியதாகவும் இல்லை. கவனம் ஈர்க்கும் மிக அழகான வண்ன ஓவியம்
ஹோமியோபதி அறிவியலில் க்ரோகஸ் சட்டைவா (குங்குமப்பூ) மருத்துவ குணங்கள் படிக்கிறபோது ஒரு சிறு குறிப்பு என் பார்வையில் பட்டது. ஜூபிடர் காளை தனது வாயிலிருந்து க்ரோக்கஸ் சட்டிவா தூளை யூரோப்பாவின் முகத்தில் ஊதித்தான் கவர்ந்து சென்றதாம்.
கிரீட் மொழியில் யூரோப்பாவுக்கு பசு என்றொரு பொருளும் உண்டாம். பின்னர் ஜூபிடர் தனது காளை உருவை நட்சத்திரக் கூட்டங்களாகி வானில் ரிஷபமாகத் திரிய விட்டதாகவும் புராணிகம் கூறுகிறது.
மனித வளர்ச்சிப் பரிணாமத்தில் காளையும் பசுக்களும் பிரிக்க முடியாதபடி இணைந்துள்ளதின் வெளிப்பாடுதான் யூரோப்பா கதை. நமது புராணம் காட்டும் ரிஷபங்களும் பசுக்களும் ருத்ரனும் மனதில் வருவது தவிர்க்க முடியாததாகிறது.

Wednesday 24 December 2014

காலம் காலமாய் வடக்குப் பார்த்து நின்றது வீடு!

காலம் காலமாய் வடக்குப் பார்த்து நின்றது வீடு!
சுலபமாய் எண்ண இயலாது
உள் வசித்த மனிதர்களை
ஒருவனுக்கு பத்து நிழல்கள்...
வேர் விட்டிருந்தன கால்கள்
நகரும் சாத்தியமற்று
அமாவாசையும் பௌர்ணமியும்
வித்தியாசமற்றுப் போனது
அவர்களின் மங்கிய பார்வையில்

கண்கள் இருந்தன கண் மணியும் இருந்தது!
மனிதக் குரல் கேட்டறியாக் காதுகள்
தலை சுற்றலை அறிவிக்க மட்டும்
பற்றாக்குறை நாட்களில் பவனி வருகையில்!
நீரறியாது, நிலமறியாது
வான் அறியாது வளியறியாது
ஒளியறியாது தீயறியாது சூடறியாது
வாழ்தலும் அறியாது
அந்த வடக்குப் பார்த்து நின்ற வீட்டில்
அத்துணை ஜீவன்களும் அவர்கள் நிழல்களும்

ஆறாம் வரிசைப் பொடி எழுத்தை

ஆறாம் வரிசைப் பொடி எழுத்தை
அனுமானத்தில் படித்திட அவஸ்தை
விதம் விதமாய் மாற்றி மாற்றி
மாட்டிப் பார்க்கிறான் கண்ணாடிக்காரன்
...
அண்மையோ சேய்மையோ
துல்லியம் தப்பும் கணங்கள்
திரைகள் மட்டும் நடுவில்
ஒளிபுகா மாய வண்ணத் திரைகள்!
நகர்தலின்றி நானும்
நழுவும் பொழுதுகளில்
கற்பித உண்மைகள் தூரத்திலுமாய்!

கண்முன் அலையும்

கண் முன் அலையும்
சங்கிலிப் பூரான்
கறுப்புப் புள்ளிகள்!
கவ்விப் பிடிக்க...
விழையும் மனம்

இரை கண்டதும்
ஏனோ அதிர்கிறது
இடது கண்.!
முன் தாவி
விரைவாய்அசைந்து
பக்கவாட்டில் சிதறி
மீளவும் உருக்கொண்டு!
தப்பித்தல் குறியென
நழுவும் இரை
எதிரியாதல் இயல்பே!
சுவடுகள் ஏதுமின்றி
பலி கொள்ள
தன் நாவு நீட்டும்
குள்ள மனம்!
பிடி! பிடி!
ஓடு! ஓடு!
பேச்சரவம்
கேட்கிறது
கண்ணுக்கும்
நழுவும் புள்ளிக்கும்
இடையில்!

கொடுக்கொன்று இருந்து கொட்டினால் தேள்!

கொடுக்கொன்று இருந்து
கொட்டினால் தேள்!
இருப்பில் கொட்டுதல்
தவிர்த்தால்...
அதை அடையாளப்படுத்துவது
என்ன பெயரிட்டு?

கேள் நண்பா!
மறைவாய் கொடுக்கும்
தேக்கி வைத்த விஷமும்
கூர் நுனியும்
பதுங்குதலும் கொண்டு
நான் திரிய........
எவர் திரிந்தாலும்
“தேள் நண்பா”
என முன்னொட்டு
இட்டு விளிக்க
இன்னும் தயக்கம் உனக்கேன்?

கல்லிலும் கலை வண்ணம் கண்டான்!

Ravichandran Arumugam's photo.

ஆழி சூழ் ......

Ravichandran Arumugam's photo.

பெல்லடோன்னா சிறிசுகளும் பெரிசுகளும்!

கோபம் வரும் போதெலாம்
சுவற்றில் முட்டிக்கொள்ளும்
சின்னஞ்சிறுவனாய் இன்னும் எப்படி?
பக்கத்து இருக்கைக் காரனை
தொடையில் கிள்ளித் திரும்புவது...
அடிப்பது கடிப்பது உமிழ்வது
ஒளி காண இயலாமல்
கண்சுருக்கி தலை கவிழும்
நாகரிகம் அறியா பாலகனாய்
ஏனோ பெரியவர்கள் வீழ்ச்சி?

இந்தப் பார்வை ஒன்றே போதுமே!

Ravichandran Arumugam's photo.

லட்சியம் தகர்ந்த நிலையில்.......

வாழ்வின் விழுமியங்களைக் கட்டமைப்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்து , சமூக மாற்றத்திற்கான பாதைகளை செப்பனிடுவதில் அதீத லட்சிய நோக்கோடு செயல்படுபவர்கள் பின்னாட்களில் லட்சியக் கோட்பாடுகள் சிதைந்து, தளர்ந்து, ஏமாற்றமடைந்து விரக்தியில் மூழ்குவதை நாளும் எதிர்கொள்கிறோம்.
லட்சியங்களை முழுமையாய் அடைந்துவிடும் நம்பிக்கையில், வாழ் நாள் முழுதும் செலவிட்டவர்கள் லட்சியக் கோட்டைகள் தகரும்போது, தோழமை இழந்து, தனித்து, அவ நம்பிக்கையும் சோர்வும் கொண்டு, மிகவும் வீழ்ச்சியுற்ற நிலையில் எல்லாவற்றிலு...ம் குற்றம் காண்பவராகவும், வலிந்து குறை சொல்வராகவும் கடும் சினமும் தோல்வியின் விரக்தியும் மனத்தில் தேக்கியவராய் வலம் வருகின்றனர்.
இனி இவர்களுக்கு செய்வதற்கு ஒன்றுமில்லை. எல்லாவற்றிலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது இவர்களுக்கு.தாங்கள் கனவு கண்டு வந்த புனிதப் பெரும் வீடு இல்லாமல் போய் விட்டதால் இதயம் வலுவிழந்து, மூச்சுத்திணறும் நோய்ம்மையிலேயே சதா உழல்கின்றனர்.
அம்மோனியம் , பொதுவாக லட்சியங்கள் தகர்ந்த நிலையைக் குறிக்கும். அம்மோனியம் கார்ப் இந்த ஆளுமைகளுக்குக் கொடுக்க வேண்டிய மருந்தாகவும்..

ஏனோ சபிக்கிறேன்?

நேற்றிரவு சபித்தலும் பின்
இன்றைய வருத்தமும்
சுவற்றில் கழன்ற
உலர் வறட்டியாய்
என்னில் பதித்த தடங்கள்...
இன்னும் பசுமையாய்!

ஏனோ சபிக்கிறேன்!
சபித்தல் என் இயல்பு
சதா எச்சிலை உமிழ்வதாய்
சதா சபிக்கிறேன்
அவனை இவனை உவனை!
நான் சொன்னால் நடந்திடுமென
மிரட்டலும் கூட்டி
கடக்கிறது என்காலம்
கை நிறைய
பை நிறைய
உறுத்தும் உமியோடு!

ஹோமியோபதிப் பட்டறைச் சாத்தியப்பாடில்...1

ஹோமியோபதிப் பட்டறைச் சாத்தியப்பாட்டில்.......
ஹோமியோபதி அறிவியலில் மருந்துகளுக்கிடையேயான பொருத்தப்பாடுகள் மீதான ஆய்வு தொடர்ந்து நடைபெறுகிறது. மேதை ஆர்.பீ படேல் தான் இது குறித்த பயணத்தைத் தொடங்கியவர். அவரது லைக்கோபோடியம்(ஆண்) பல்சட்டில்லா(பெண்) பொருத்தப்பாடு ஏதோ ஜாதகக் கணிப்போ என்று கூறும் அளவிற்கு இந்தியத்தன்மை கொண்டதாக விளங்கியது. பின்னாட்களில் , குறிப்பாகக் கடந்த பத்தாண்டுகளில் இவ்வாய்வு நிறைய நூல் வடிவங்கொண்டது. கடைசியாக வந்தது லிஸ் லேலரின் நூல்.
இலக்கியப் பரிச்சயமும், ஹோமியோ அறிவியல்-மருத்துவக் களஞ்சிய நுண்ணுணர்வும், சமகால வாழ்வின் கட்டுப்பாடுகள் தளர்ந்த சமூகவியல் புரிதலும் கொண்ட ஐவர் கூடுகின்றனர். ரேமண்ட் கார்வரைப்போல் அத்து மீறல்கள் கொண்ட ஆண் பெண் உறவுகளை ஹோமியோ மருத்துவக் களஞ்சியப் பின்னனியில் எழுத முற்படுகின்றனர். சமகால வாழ்வின் அமளி குறித்த புரிதல் ஐவரிடமும் இருக்கிறது. ஒருவர் நீதிபதியாகிறார். பிறிதொருவர் சமூக ஆர்வலராகிறார். இருவரில் ஒருவர் ஆணாகவும் மற்றொருவர் பெண்ணாகவும் தங்களை (அதுவும் திருமணமான) பாத்திரங்களாகக் கட்டமைத்துக் கொள்கின்றனர்.. ஐந்தாவது மனிதர் கதையை சுறுறுப்பாய் நடத்திச் செல்லும் பார்வையாளர் அவரது குறுக்கீடு அடிக்கடி இடையில் நிகழ்கிறது.
கதை தொடங்குகிறது. ஃப்ளூரிக் ஆசிட் ஆணும் ஹையோஸியாமஸ் பெண்ணும் இரவில் நள்ளிரவுக்குப்பின், உணர்வுகளின் உச்சத்தில் முக நூலின் உரையாடல் தளத்தில் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். கானொளிக் காட்சியும் இடம்பெறலாம் எனும் கருத்தை பார்வைவையாளர் குறுக்கிட்டுச் சொல்ல கானொளியும் தொடர்கிறது. உரையாடலின் உயிர்ப்பில் இருவரின் குடும்ப சூழல் மனப் பாதுகாப்பின்மையில் தொடங்கி, முக நூல் தரும் தொழில் நுட்ப சாத்தியப்பாடுகளை அலசி, பின் பாலியல் வழுவல்களில் சரிந்து, முழுமையான அத்துமீறலை நிறைவேற்றுகிறது.
பார்வையாளர் குறுக்கிட, தளம் வேறு மடைமாற்றம் கொள்கிறது. இருவருக்கும் தண்டணை ப்ரஸ்தாபிக்கப்படுகிறது.
தண்டணை நிறைவேற்றல் ஒரு நாடக ஒத்திகை போல் எழுதப்படுகிறது.
முடிவில், மன இறுக்கத்திற்கு ஆளான பெண்ணாக அவளும், ஸ்ட்ரோக் நோய்ம்மையில் அவஸ்தையுறும் ஆணாக அவனும் காட்சி தருகின்றனர். பார்வையாளர் கை தட்டி ஆர்ப்பரிக்கிறார். அவள் ஸெபியாகவும், அவன் ஓபியமாகவும் உரையாடலைக் கட்டமைக்கின்றனர்.
நீதிபதி குறுக்கிடுகிரார். இல்லை இல்லை! இத்தண்டணை போதாது என உறக்க உரைக்கிறார். எனவே தண்டணை கூட்டப்படுகிறது அடுத்த காட்சியிலொரு குட்ட ரோக ஆணும் மனச் சிதைவுக்காளான பெண்னும் உயிர் பெறுகின்றனர். ஹ்யூரா மருந்தின் ஆளுமையில் ஆணும் வெராட்ரம் ஆல்ப பெண்ணும் உரையாடலைத்தொடர்கின்றனர்.
இல்லை! இல்லை ! இப்படியான சபித்தல் வேண்டாம். தண்டனையைக் குறையுங்கள் என சமூக ஆர்வலர் இருவருக்காகவும் வாதிடுகிறார். சிறுகதையின் முடிவை மாற்றி தங்கள் அத்து மீறலுக்காய் வருந்தும் தங்கள் சரிவை எண்ணி எண்னிக் குமுறும் காலி ப்ரோமேட்டம் ஆண் , இக்னேஷியா பெண்ணின் உரையாடல் தொடர்கிறது முடிவில் சிறுகதை இன்னும் சிறப்பாகச் செய்ய இயலவில்லை எனும் அலுப்பு மேலீட்டில் எல்லோரும் கலைகின்றனர்.
இச்சிறுகதையின் சாத்தியப்பாடு, மேம்பட்டிருக்கும் தொழில் நுட்ப வளர்ச்சியும்,மருத்துவக் களஞ்சிய குணபாடுகளின் நிபுணத்துவமும், சரிவுகளும் அத்து மீறல்களும் பின் குற்ற உணர்வும், தி.ஜாவின் பாத்திரங்களின் அல்லது ரேமண்ட் கார்வரின் பாத்திரங்களின் இருப்பு சார் ப்ரச்சினைகளை அவதானிக்கும் ஒரு படைப்பாளிக்கு சாத்தியப்படலாம்.
உண்மையாகவே, ஏதோ ஒரு சிறுகதைப் பட்டறையில் எழுதித் தயாரித்து இச் சிறுகதையை ஏதேனும் ஒரு இலக்கியப் பத்திரிகையில் வெளியிட முடியுமானால் எப்படிப்பட்ட எதிர்வினைகள் உருவாகும் என்ற யோசனையும் கூட எழத்தான் செய்கிறது.
ஹோமியோபதி மருந்துகளின் ஆளுமை பின்னனி, சிறுகதையின் அபத்த தளத்திற்கு வலுவூட்டும் எனவும் தோன்றுகிறது.

Letting go of art,ideas and culture

ஹோமியோபதி பட்டறைச் சாத்தியப்பாடு 2
பின் எழுபதுகளில் வெளிவந்த தீவிர அரசியல் இலக்கிய இதழின் பங்கேற்பாளர்கள் மூவர் ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் கழித்து ஓர் மாலையில் முன் கூட்டித் திட்டமிட்டபடி ஓர் ரெஸ்டாரண்ட்டில் சந்திக்கின்றனர். இருவர் சென்னை வாசியாகவும் ஒருவர் அமெரிக்காவில் சிகாகோவிலும் வாசம். மூவரிலும் முதுமை கூடித் தோல் தடிப்பும் சுருக்கங்களும் தெரிகின்றன. எழுபதைத் தொட்டுவிட்ட கட்டம். வாழ்வின் வெற்றி அறுவடைகளை அசைபோட்ட காலம் போய் மூப்பில் சரிகிற பருவம். இருப்பதைக் கையில் பிடித்திக் கொள்ள வேண்டும் எனும் ஆசை மட்டிலும் உயிர்ப்புடன். அமெரிக்க வாழ் தமிழர் தனது மகனின் கல்லூரிப்படிப்பிற்குத் தேவையான ஒரு சான்றிதழ் பெற தன் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்
தங்களது கடந்தகால தீவிர அரசியல் தத்துவ, கலை இலக்கிய லட்சிய வேகங்கள் குறித்து நினைவூட்டிக் கொள்கின்றனர். அந்தக் காலத்தில் அவர்களது ஈடுப்பாடு சிப்கோ இயக்கத்திலிருந்து, அயனெஸ்கோவரை, மாசேதுங்கிலிருந்து,சர்ரியலிஸ, க்யூபிஸ ஓவியங்கள்வரை, குரோசோவாவிலிருந்து ஃப்ரான்ஸ் ஃபேனான் வரை வியாபகம் கொண்டிருந்தது. தெரு நாடகங்களில் தங்களது நேரத்தை செலவழித்துக் கொண்டிருந்தனர். இலக்கிய இதழியலில் ஆர்வம்..
இன்று மூவரும் அந்நியமாகிப் போயிருக்கிறார்கள். இப்போது விஜய் தெண்டுல்கரோ, மஹாஸ்வேதாதேவியோ, சுந்தர்லால் பஹுகுனாவோ வெறும் மங்கலான நினைவு மட்டுமே. யாரோ நடந்த தொலை தூரக் காலடிச் சுவடுகள். தினசரி பத்திரிகை வாசிப்பைத் தாண்டாத சராசரித்தனம்.
பதினெட்டுத் திருப்படிகளில் மூச்சிரைக்க பத்தில் ஏறி ஆசுவாசப்படுத்திக்கொள்ள இயலாமல் பதினேழு வரை சரிந்தும் தளர்ந்தும் தொய்ந்தும் அடிவைக்கிற கையறு நிலை.
கடந்தகால ஆழமான இறையிலிக் கொள்கை பின்னகர்ந்து போயிருக்கிறது. மூவரும் கடவுளின் ஜீவித நியாயத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். வாழ்க்கைக்கு, அற நியதி ஒன்று அவசியம் தேவை என்பதில் மூவரிலும் உறுதி தெரிகிறது.
முதலாமவர் அரசுப்பணியில் உயர் பதவி வகித்து ஓய்வு பெற்றவர். தலைக்குச் சாயம் பூசி பழுப்பேறி இருக்கிறது. ”என் கனவுகளில் கடவுளின் அமானுஷ்ய வடிவம் தோன்றுகிறது . அவரது ஆக்ஞைக்கு நான் கட்டுப்படுகிறேன். அவர் என்னோடு பேசுகிறார். அவரது கட்டளைப்படி அடுத்தவாரம் குடும்பத்தோடு குல தெய்வ பூஜைக்குச் செல்கிறேன் காலிலிருந்து அடிக்கடி மேலேறி வரும் இழுப்பு வலிக்கும் மரத்துச் சுரணையற்றுப் போதல் நிவர்த்திக்கான வேண்டுதல்”. கழுத்தில் இடப்புறம் பெரிதாக ஒரு சதை வளர்ச்சியும் கோள வீக்கமும் தவிர்க்க இயலாத படிக்குக் கண்ணில் படுகிறது.
”நீங்கள் அனேகமாக கோனியம் ஆளுமைக்கு ஒத்திகையாட்டம்“ என்கிறார் இரண்டாமவர்.. சற்று நேர அமைதிக்குப் பின் தொடர்கிறார். என்னால் லட்சியங்கள் எவை குறித்தும் சிந்திக்க இயலவில்லை..என் மகன் தன்னை நிறுவிக்கொள்ள வெளி நாடு செல்கிறான். அவனது மலர்ச்சி மட்டுமே என் முன்னால் தெரிகிறது. மனைவி போனபின் நான் ஒண்டிக்கட்டை. எப்போதும் ஒரு அறைக்குள் இருக்கவே பயமாக இருக்கிறது. மகன் லண்டன் போனதும் என் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். எல்லாவற்றிலும் பயம். தெருவைக் கடக்க பயம் டையபடிக் நோய் வேறு- தினமும் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். ஆனால் இனிப்பு எப்போதும் தேவைப்படுகிறது கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. தனிமை, கவலை எதற்கெடுத்தாலும் பயம் மகன் நேரங்கழித்து வந்தாலே பதட்டம் மரண பயம் அகலாது கூடவே. வயிற்றில் உப்புசம் எரிச்சல் அல்சருக்கு முந்திய கட்டமாம் போட்டோ பிடித்துக் காண்பிக்கிறான் ஸ்பெஷலிஸ்ட். எந்தப் புத்தகத்தைத் தொட்டாலும் கொஞ்ச நேரம் தான். எதையும் முழுமையாக வாசிக்க இயலவில்லை.இடது கண்ணுள் எப்போதும் ஒரு வேதனை. வாங்கி வைத்த அஞ்ஞாடியும் கொற்கையும் அப்படியே இருக்கிறது படிக்க இயலவில்லை. கழிவிரக்கம், சுயமதிப்பில் இறக்கம், அவரது பேச்சில்.
உங்கல் தலையில் அர்ஜெண்டம் தலையை யாரோ மாற்றிப் பொருத்திவிட்டிருக்கிறார்கள் நீங்கள் மிகவும் இனிப்பானவர் என்று கொஞ்சம் தூக்கலான எள்லலோடு பேசுகிறார் முதலாமவர் இதுவரை அதிகம் பேசாமல் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்த மூன்றாமவர் தொண்டையைக் கணைத்துக் கொள்கிறார். பார்வை எங்கோ தொலைவில் நிலைகுத்தியிருக்கிறது.
முதலாமவர்: குமார் நீங்கள் எப்போதும் சுற்றுப்புற சூழலில் ஆய்வு நடத்திக் கொண்டிருப்பீர்களே இப்போது ஏதேனும் நூல் வெளியிட்டிருக்கிறீர்களா? கோ ஆதரிங் அட்லீஸ்ட்?
மூன்றாமவர்: தன் நரைத்து வெளுத்த தலையைக் கோதிக்கொண்டே” ”இல்லை அப்படி எதுவும் செய்ய இயலவில்லை. 80களுக்கு மேல் என்னில் ஆர்வம் தங்கவில்லை. நான் மிகவும் மாறியிருக்கிறேன். என் வாழ்க்கை எப்போதும் விரைவை வேண்டுகிறது. அதனுள் லட்சிய வேட்கை எல்லாம் தோற்றுப் போய்விட்டன. வீடு , ஆஃபீஸ், கார், பாங்க் பாலன்ஸ் இவை தவிர நாட்டம் என்பது எதிலுமில்லை பிள்ளைகள் இருவரும் நன்கு படித்துவிட்டு உத்யோகத்தில் இருக்கின்றனர். இன்னும் நானும் வேலை பார்க்கிறேன். மூன்றாவது மகனின் கல்லூரி அட்மிஷன் சம்பந்தமாகத்தான் சென்னை வந்திருக்கிறேன்.
இரண்டாமவர்: நீங்கள் தோரோவின் வால்டென் மீது தீராத மோகம் கொண்டவராயிற்றே! போய்ப் பார்த்தீர்களா அதன் மிச்ச சொச்சங்களை?
மூன்றாமவர்: இல்லை இல்லை! அமெரிக்கா சென்றபின் அந்த ஆர்வமெல்லாம் என்னில் வற்றிப்போய் விட்டது தனது வெளிறிய ஜீன்ஸை சற்றே தளர்த்திவிட்டுக் கொள்கிறார் இறுக்கம் குறைய. . நெஞ்சு வேகமாக ஏறி இறங்குகிறது
முதலாமவர்: நான் யூ ட்யூபில் ஒரு வீடியோ பார்த்தேன். மத்தியப் பிரதேசத்திலிருந்து ஒரு ஹோமியோ மருத்துவர் அமெரிக்கா செல்கிறார். முன் கூட்டித் திட்டமிட்டபடி ஸாண்ஃப்ரான்ஸிஸ்கோவிற்கு அருகில் ஒரு கிராமத்தில் அறுபது வயதைக் கடந்த பெண்மணியை சந்திக்கிறார். இருவரும் காரில் புறப்பட்டு அப்பெண்மணியின் குடும்ப கல்லறையைக் காணச் செல்கின்றனர். கல்லறை வாசலில் டாக்டர் ஜேம்ஸ் டெய்லர் கெண்ட் என்ற வாசகம் பொறித்திருக்கிறது. மிகவும் எளிமையான முறையில் மலர்க்கொத்துக்கள் வைக்கிறார் இந்திய மருத்துவர். ஓரிரு நிமிடங்கள் கல்லறையின் முன் மண்டியிட்டு கண்மூடி நிற்கிறார். அந்தப் பெண்மணி திரு கெண்ட்டின் பேத்தியாம்!
மூன்றாமவர்: அந்த இந்திய மருத்துவரின் அர்ப்பணிப்பு பாராட்டுதலுக்குரியது. அவர் தனது நம்பிக்கயைத் தொடர்கிறார். அவரது லட்சியம் நீர்த்துப் போகவில்லை.
மூவரும் தங்களை சுதாரித்துக் கொள்கின்றனர். சற்றே தேநீர் குடித்தாலென்ன எனும் யோசனை வருகிறது. மூவரும் கொஞ்சம் தே நீர் அருந்துகின்றனர். தங்கள் குரலில் படிந்திருக்கும் கிலேசத்தை மறைத்துக்கொண்டு, பேசிக்கொள்கின்றனர். ஒரு கோரஸ் போல் அவர்களிடம் வெளிப்படுகிறது. ”” நாம் நம்மால் முடிந்ததைச் செய்திருக்கிறோம்! வருந்துவதெற்கெல்லாம் ஒன்றுமில்லை””. அடுத்த முறை சந்திக்கலாம்.
LETTING GO OF ART
LETTING GO OF IDEAS
LETING GO OF CULTURE
……………
எப்போதோ வாசித்த அயோடியத்தின் ஆளுமைப் பண்புகள் நிணைவுக்கு வருகின்றன. கலை, கருத்தியல், கலாச்சாரம் இவற்றை விட்டுவிடும் மனிதர்களில் அயோடியம் தங்கியிருக்கிறது. இவர்களது பதட்டத்தையும் படபடப்பையும் இவர்களால் இனி தாங்கிக் கொள்ள இயலாது.
பழைய நாட்கள் என்றால் நமக்கெல்லாம் மிகவும் பிடித்தமான, ஓடுகாலிகள், பிழைப்பு வாதிகள், ஃபிலிஸ்டைன்ஸ் என்ற சொற்களால் வசைபாடி இருக்கலாம். அவையெல்லாம் இப்போது புழக்கத்தில் இல்லை நாம் மிகவும் முன்னேறிவிட்டோம் என்பது ஆசுவாசம் தருகிறது..

Saturday 29 November 2014

என் பிரிய தாமிரமே!

என் பிரிய தாமிரமே! நாகரிக மோஸ்தரில் கட்டப் பெற்ற தனிம அட்டவணை மாளிகையில், 4ஆம் அவென்யூவில், 11 ஆம் குறுக்குத்தெரு விலாசம், உனது நவீன இருப்பிடம். எத்தனை மெடல்கள், பதக்கங்கள் உன்னை அலங்கரிக்கின்றன.! உன்னைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஏனோ சிலி நாட்டின் ராணுவ ஜெனரல் பினோஷெ நினைவு தவிர்க்க இயலாமல் வருகிறது. ஆளப்பிறந்தவனாகவே உன்னை எண்ணிக்கொண்டிருக்கிராய் நீ! கிஞ்சித்தும் பிறத்தியானை, அவன் சுதந்திரத்தை மதியாமல் உன் கனத்த பூட்சுக்களின் கீழ் போட்டு மிதிப்பவன் நீ!
சிறார் பருவத்தைத் தாண்டாத நாளிலிருந்தே உன்னை நான் அறிவேன்.
சொல் ! உன் இடுப்பில் சுற்றியிருக்கும் கயிற்றில் செப்புத் தாயத்தைக் கட்டிவிட்டது யார்?
பிறிதொரு நண்பணான சிறிய புங்கக் கொட்டைக்கு அருகில் ஊஞ்சலாடியபடி செப்பு மினுங்கிக் கொண்டிருந்தது. இருவரும் சேர்ந்து ஒரு பாதுகாப்பு வளையம் அமைத்து, எந்த நோய் அரக்கனையும் அண்டவிடாது காத்துவிடுவீர்கள் என்பதாக ஐதீகம்.
இருக்கலாம். சரியாய் இருக்கலாம். இருமல் என்றால் சாதாரண இருமலா அது? பிசாசு பிடித்தது போலத்தான். இருமி இருமி, கேவிக் கேவி, நடு நிசியில் மூச்சடைத்து, கண்கள் செருகி, நாடி மெலிந்து மூச்சற்று பேச்சற்று…… வாந்தி எடுத்து, முகம் நீலம் பாரித்து…….குளிர்ந்த நீர் பருகி உன் இருமல் தணிக்க நீ பட்ட அவஸ்தைகள் சொல்லிலடங்கா!
ஐதீகம் அன்றைக்கு , கேவும் இருமல் அமளிக்கு நடுவே ஒரு நம்பிக்கையைக் கொடுத்தது.
நீ வளர்ந்து விட்டாய்! பெரியவனாய், ஆகிருதியோடு, கட்டு மஸ்த்தாய்! உன்னைப் பார்க்க சந்தோஷமாய் இருக்கிறது. என்ன ஜோலி? எங்கே?
டெல்லியில், மிகப் பெரிய முக்கியஸ்தன். உன் அலுவலகத்தில் நீயே முக்கிய முடிவுகள் எடுக்கிறாய். சும்மாவா? உன் தேர்வை இதுவரை எந்த அமைச்சரும் மாற்றியதில்லை.
நீ எப்போதும் தளகர்த்தன்!. கமாண்டர்,! ஜெனரல்!. நீ தும்மினால் ஆயிரம் பேர் உன் கீழ் பணியாளர்கள் தும்மிக் கொண்டிருப்பர் என ஒரு வேடிக்கைக்கு விளையாட்டாய்ச் சொன்னால் தப்பில்லை
.
எங்கு சென்றாலும் என்ன முடிவெடுத்தாலும் நீயே வெற்றியாளன். வெற்றிபெற என்ன வேண்டுமானாலும் நீ செய்யக் கூடியவன். வெற்றி நோக்கம், வெறியாய்…. பேராசையோடு….. உன் கண்கள் மிளிறும் நீ சுய மோகி! நீ வெல்வதற்காய் அடுத்தவனைக் கால் வாரத் தயங்காதவன். உன்னோடு போட்டி போட எவனும் புலப்படக்கூடாது. அப்படி வந்தால் உனக்கு இரண்டு கண்கள் போனாலும் பரவாயில்லை. அவனுக்கு ஒரு கண்னாவது போகவேண்டும். அவன் –உன் போட்டியாளன், வீழ்ச்சியடைய, அதைக்கண்டு உள்ளம் பூரிப்பவன் நீ!
வெற்றி வெறிகொண்டு, சுய மோகியாய், சமூகக் காரியங்களில் உலா வருகிறாய், ஆபத்தான தாக்குதல் நீ எதிர்பார்த்துக் காத்திருக்கிராய்! வளர்கிறபோதே ஜூடோ, கராத்தே என தற்காப்பு வித்தைகள் பயின்றவனாச்சே! உன்னைத் தயார் நிலையில் வைத்திருக்கிறாய், எல்லா முஸ்தீபுகளும் உன்னிடத்தில் ஆயத்த நிலையில்
. ஒன்று! இரண்டு! மூன்று! எதிர்த்துத் தாக்கு! தாக்கு! வியூகங்கள் அறியாத அபிமன்யுவல்ல நீ! வெற்றியாளன் நீ!
உன் அண்ணணேயாயினும், மாம்பழம் அவனுக்கு போகக் கூடாது. தாயானால் என்ன? தந்தையானால் என்ன! தூக்கியெறிவாய்! உன் செயல் வலிப்பான செயல்பாடுதான் எப்போதும். உன் அகந்தைக்குத் தீனி வேண்டும். அடுத்தவன் பாதிக்கப் படுவது குறித்தெல்லாம் நீ அக்கறைப் பட முடியாதவன். நீ ! நீதான் எங்கும்! எதிலும்!
சுத்த சுயம்புத் தாமிரம் நீ! உன் பளபளப்பில் உனக்குப் பெருமிதம் உன் அகந்தை! சிறப்பான வெப்பக் கடத்தி!
நன்றாக வளர்ந்துவிட்டாய். உன்னைச் சிறப்பாக பொருளாதார ரீதியில் கட்டமைத்துக்கொண்டிருக்கிறாய்! தன்னிறைவு எதிலும்..... குறையொன்றுமில்லை. சேகரத்தை இழந்துவிடக் கூடாதவன் நீ!. எளிதாக ஏறிவந்த வெற்றிப் படிக்கட்டில் சரியக் கூடாதவன் நீ! அசாதாரண தைரியத்துடன் , நம்பிக்கையுடன் பக்க பலங்களோடு உலா வருகிறாய். இப்போதும் உன் எண்னமெல்லாம் வெற்றி ஈட்டுவதில் மென்மேலும். !
வலிப்புகளோடு தான் வளர்ந்தாய். சிசு வயிற்ரோட்டத்தில், காலராவில், சுண்டி இழுக்கும் வலியோடுவதும் களைப்பில் சோர்வில் மயங்கி வீழ்ந்ததையும் நினைத்துப்பார்க்கிறேன்
என் பிரிய தாமிரமே! உன் உலோக ருசி நானறிவேன்.!

எங்கள் பரீட்டா கார்ப் நண்பர்கள்!

எங்கள் பரீட்டா கார்ப் நண்பர்கள்!
நீங்கள் இவர்களைப் பார்த்திருக்கக்கூடும் உங்கள் கவனம் வசீகரிக்கும் ஆளுமையாய் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நிச்சயம் இவர்களைப் பார்த்திருப்பீர்கள். .
அவர்கள் எல்லோரது உயரமும் சராசரிக்குக் குறைவுதான். உடலளவில் மட்டுமல்ல; மனதிலும் தான். புறத்தே உரையாடலும் குறைவுதான். பல கனமான விஷயங்களைக் கிரகிக்க முடியாமலும் விழுங்கி தம் வயப்படுத்திக்கொள்ள முடியாமலும் எப்போதும் ஒரு அவஸ்தைத் திணறல். ஏதோ தொண்டை அடைப்பான் நோய் தாக்குண்டவர்களைப் போல் அவர்களது காட்சித் தோற்றம். வியாபகக் குறைவால், தன் வெளி குறுகி, அதன் நான்கு எல்லையிலும் தடித்த சுவரெழுப்பி அதற்குள்ளேயே பத்திரமாய் வாசம். பிறத்தியானின் பிரவேசம் அத்துமீறலாகவே புரிந்துகொள்ளப்படும்.
அவர்களது ரத்தக்குழாய்களும், வலிப்பு கண்டு, வயதை மீறிய, தடிமனும், கனமும், குறுக்கமும் கண்டு, ரத்த சுழற்சி குறித்த சந்தேகங்களையும், குழப்பங்களையும் எழுப்பும். தேக்கம் பிதுக்கத்திலும், பெயர்தலிலும், கசிவிலுமாக முடியும். அவர்களை மீறிக் கட்டுப்பாடிழந்த நிலையில் ஏதோ வெற்றிக் களிப்பில் பித்தம் தலைக்கேறியர்களைப்போல் தங்கள் நடத்தைகள் குறித்த அவதானிப்பு ஏதுமின்றி அலைவர்.
எல்லோரும் ஒரே பிரதேசத்திலிருந்து வந்தவர்களைப்போல் ஒருவரையொருவர் அண்ணே அண்ணே என விளிப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. விசேஷ அர்த்தமற்ற மிகச் சாதாரண விளிதான். தான் குள்ளமாயும் பருத்தும் இருப்பதால் பிறத்தியான் அண்ணணாகிவிடுகிறான். மற்ற ஊர்களில் பிள்ளைகள் நான்கு மாதங்களில் குப்புறத் திரும்பினால் இங்கே கதையே வேறு. எட்டு மாதம் பிடிக்கும்; நடக்க ரெண்டு வருஷம்; வாய் திறந்து மழலைப் பேச மூன்று வருடம். தலை பெருத்த தலைப் பிரட்டைகள் போல்; வயிறும் சூணா வயிறுதான். உள்ளங்கையிலும் பாதத்திலும் எப்போதும் வியர்த்தபடி. ஓடியாடி விளையாடாமல் உட்கார்ந்தபடியே தேங்கிக் கிடப்பர் சோம்பி. புதிதோ,புதியவரோ, விஷய கனமோ, எதையும் எதிர்கொள்ள முடியாமல், மனதிற்குப் பரிச்சயமான முகத்திற்குப் பின்னால் ஒளிந்துகொள்ளலே அடிக்கடி நிகழும். புதியதின் நிழல் கூட அச்சுறுத்தும்.
விழித்தெழுந்தேன் முழங்காலொன்று காணலை” எனும் கூத்தனின் கவிதை வரிகள் நினைவுக்கு வரும் இவர்களைக் கண்டால். அடிக்கடி காட்சிப் பிறழ்வு இவர்கள் மனத்தில்- தாங்கள் முழங்காலுக்குக் கீழாய் ஊனமுற்று முட்டிகளால் நடப்பதுபோல். விநோத ஊனமுற்ற சிந்தனைகள். மன முதிர்ச்சியின்மைக்குக் கையும் காலும் நட்டுவைத்தது போல் தான் எல்லாம். விளையாட்டையே இழந்த குழந்தைமை. புதிதில் ஆர்வமின்மை, மாற்றத்தைக் கண்டுகொள்வதில் ஆர்வமின்மை.
தேவையை மீறிய உரத்த குரல் பேச்சும், கூச்சமும், குழப்பமும் சூழலோடு பொருத்திக்கொள்வதில் சிரமமுமே தினசரிப் பாடு. மூப்பு கூட இரண்டாம் குழந்தைமையே. மறதி எல்லையற்று; தன் வீட்டு கதவிலக்கம் தொடங்கி எல்லாமே மறதி. பொருட்படுத்த வேண்டாத விஷயங்களில் சந்தேகம், கவலை, முடிவெடுக்க இயலாமை. தங்கள் செயல்களுக்கு பொறுப்பேற்கும் சாமர்த்தியமின்மை. இந்த இரண்டாம் குழந்தைமை ஆறாம் ஜார்ஜின் நீதிமன்றம்” சிறுகதை மடத்திராமனை நினைவூட்டுகிறது. அவன் குழந்தையாய் இருந்து, பெரியவனாகி, வளர்ந்து, மூப்பெய்தி, மீண்டும், பல் விழுந்து, முடிகொட்டி தவழ ஆரம்பித்து, குழந்தையாகி பாதுகாப்பாய் கருவறைக்குள் பிரவேசிப்பதுபோல்.
சதா தன்னம்பிக்கையிழந்து பேசிக்கொண்டிருக்கும் சிறார்களை, வளர்ந்தும் குழந்தைகளை, வளரவே, முதிரவே இயலாதவர்களின் இந்தப் பேச்சை செவி மடுத்திருக்கிறீர்களா?
தனது ஆருயிர் நண்பன் இறந்துகொண்டிருக்கிறான்; மற்றவர்களும் தன்னைத் தனியே விட்டுவிட்டு போய்விடக்கூடும். அச்சம்.
தன்னையே எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், கிண்டல் செய்கிறார்கள், விமர்சிக்கிறார்கள்.
தன்னிடம் மிச்சம் இருப்பதெல்லாம் கொள்ளை போகப் போகிறது
நான் எல்லா கஷ்டங்களையும் அனுபவித்து விட்டேன்.
என்னுடல் பார்க்க அருவருப்பய் இருக்கிறது. மூலத் தீவினையாக இருக்குமோ?
தான் தொட்ட காரியங்களெல்லாம் தவறாகவே முடிகிறது. தன்னால் வெற்றிகொள்ள முடியாது.
என் மரணம் சமீபத்துவிட்டது. கால்கள் வெட்டப்பட்டுவிட்டன.
தீயின் பேச்சரவம் கேட்டு நடுங்குகிறேன் சிறு சத்தமும் எனக்குத் தாளவில்லை
என்னால் படிக்க இயலவில்லை. வாய் குளறாமல் பேசவும் முடியவில்லை
சிரமமிருக்காது உங்களுக்கு இனி இவர்கள் யாரெனப் புரிந்துகொள்ள! செல்லமாய் நாங்கள் பரீட்டா கார்ப் என அழைக்கிறோம் இந்த நண்பர்களை. இவர்களைப் புரிந்துகொண்டு நட்பு பாராட்டுவதில் பெரும் உற்சாகம் இருக்கத்தான் செய்கிறது.

Tuesday 18 November 2014

பல்சட்டில்லா ! என் இன்னுயிர் தோழி!

நீ இதிகாச நாயகி பாத்திரங்களில் எதிலும் நிச்சயமாய் உன் பிம்பத்தை வடித்துக் கொள்ளவில்லை. வானவில்லின் எந்த ஒரு வண்ணத்திலும் உன்னை ஒளியூட்டிக்கொள்ளவில்லை. இயல்பாகவே உன்னில் நீலம் அதிகம் என்றாலும் நீ அதிகம் சொல்லிக்கொண்டதில்லை. உன்னிலிருந்து பரவும் வாசம்-பாசம்-என்னவென்று சொல்வது?
இதுவரை, துல்லியத்தின் விழுமியங்களோடு எந்த சைத்ரிகனின் தூரிகையும் உன்னை வடிக்கவில்லை. அலை அலையாய் கரு நீல நிறத்தில் உன் கேசமும், சற்றே பூசியதுபோல் சதைத் திரட்சியும், சற்றும் வெப்பத்தைத் தாங்க இயலாது எப்போதும் ஜன்னல் திறந்து மெல்லிய குளிர்ந்த காற்றின் இன்பத்தை நீ நுகர்வதும்- அதற்காய் ஏங்குவதையும் நான் அறிவேன். இப்படி அழைக்கலாமா? என் மதிப்பிற்குரிய மென்மையான பெண்மணியே ! எளிதில் துணுக்குறுவதும், கண் கலங்கிவிடுவதும் உன் சுபாவெமென இரு நூறு வருடங்களாய் நீ குழவியாய் தவழ்ந்த காலந்தொட்டே சரியான புரிதலுண்டு எனக்கு.
புத்தெழுச்சிக்காலக் கலைஞர்கள் உன்னைப் புரிந்துகொள்ளவில்லை. ஏதோ குழந்தைகளின் மரப்பாச்சி பொம்மையைப் போல் உன்னைக் கொஞ்ச காலம் ஒளித்துவைத்துவிட்டார்கள். அவர்களின் அக்கறை அவ்வளவே! அதுவும் நல்லது தான். சரித்திர அதிர்வுகளில் எழும்பிய எந்த தூசியும் உன் மீது படியவில்லை.
பின் நவீனத்துவ புத்திசாலிகளின் கிட்டப்பார்வை தடுமாற்றத்தில் உன் இருப்பு அவர்களது பதிவுகளில், சொல்லாடல்களில், அவதானிக்க இயலாமல் போயிற்று.
பெண்ணியவாதிகளுக்குக்கூட உன் சகோதரியின் பிம்ப மயக்கத்தில் ஆழ்ந்துபோனதால், உன்னை கவனம் கொள்ளவில்லை.உன் கடைசிச் சகோதரி ஸெபியாவை அவர்கள் தீவிரமாய்க் காதலித்ததால் உன்னைப் புறக்கணித்துவிட்டனர். எல்லாம் பிம்ப மயக்கம்...அவளயும் உன் மூத்தவள் ப்ளாட்டினா இருவரை மட்டுமே உலக மேடைகளெங்கும் அரங்கேற்றினர் உன்னைக் கண்டுகொள்ளவே இல்லை.
ரத்த புஷ்டியாய், உன் பொய்த்தோற்றம். இந்த இரு நூறு வருடங்களில், நீ பருவமடைந்த காலத்திலிருந்து, பசலை நோயும்,பொருத்தப்பாடற்ற மாதவிடாயும், குருதித் தேக்கமும், ரணமும் வலியும், உன் ஆளுமையை ஒரு புறம் சிதைத்துக் கொண்டேயிருந்தாலும் உன்னில் ஆதிக்க உணர்வுகளும், வன்முறையும் கிஞ்சித்தும் இறங்கவேயில்லை. மூன்று சகோதரிகளுக்கிடையில் உன் அன்பின் வீச்சம் எப்போதும் உன்னை விட்டுக்கொடுத்தே போகச் செய்திருக்கிறது. முடிவெடுக்கும் சுதந்திரங்களை மற்றவர்களுக்காக துறந்திருக்கிறாய். சாம்ராஜ்ஜியக் கனவுகள் உன்னிடம் இல்லை. அன்பை மட்டுமே பிறரிடம் எக்கணமும் யாசித்திருக்கிறாய். எதிர்கொண்ட காயங்களில் ஊண் நீர் வடியும்போதும் கூட எப்படி உன்னால், மனதில் எரிச்சலைத் தேக்கிக் கொண்டே மிதியடிபோல் எல்லோரும் நடந்துபோகக் கிடந்துவிட முடிகிறது.?
நானே பயந்திருக்கிறேன் – எங்கே, இனம் கண்டுகொள்ள முடியாமல் தளுக்குப் பேச்சுக்காரர்களின் வலையில் எளிதாய் விழுந்துவிடுவாயோயென்று? மெல்லிய காற்று வீசலைக்கூட தாங்க முடியாமல் வளைந்துவிடும் சுபாவம் உனது. ஆண்களை உன்னால் எதிர்கொள்ளவே இயலவில்லை. இந்தக்காலத்தில் கூட உனக்கு ஆண்கள் என்றாலே பயம்.
யாசிக்கும் அன்பு கிட்டாத தருணம் , எல்லோராலும் கைவிடப்பட்டு வெண்ணிலையாக நிற்பதாய் உணர்வாய். தனிமையை உன்னால் தாங்க இயலாது. இதமான வருடலுக்காகவும், இரக்கம் தோய்ந்த சொற்களுக்காகவும், வெப்பமான ஆரத் தழுவலுக்காகவும் தவமிருப்பதே உனக்கு சாத்தியம்.
எப்போதும் எளிதாக உன்னை உப்புமூட்டை சுமக்கும் விளையாட்டையே குழந்தைப்பருவத்தில் அதிகம் விரும்பினாய். அடிக்கடி , உடலின் வலி ஒவ்வொரு இடமாகத் தாவுவதாக துன்புறுவாய். உன் மன நிலை மாற்றம் போல் உன் உடல் உபாதைகளும் மாறிக்கொண்டேயிருக்கும்.
பார்க்க வேடிக்கையாயிருக்கும்! நீ தூங்கும்போது! தலைக்குக்கீழாய் கயை சும்மாடு கொடுத்தோ அல்லது நெற்றிமேல் கிடத்தியோ ஒயிலாகத் துயில்வாய்! ரொம்பப் படுத்துவாய் வீட்டிலுள்ளவர்களை. நீயாக சாப்பிட மாட்டாய்- யாராவது வற்புறுத்த வேண்டும்- ஒரு தடவைக்கு ரெண்டு தடவை சொன்னால் சாப்பிடவாவது செய்வாய். ஆனால் தண்னீர் மட்டும் குடிப்பதே இல்லை. ஆமாம் உனக்கு மட்டும் தாகமே எடுக்காதா என்ன? எப்படி இருக்க முடிகிறது உன்னால்?
சாயங்கால வேளைகளில் ”வாசற்படியில் பூதம் வந்து நிற்கிறது பயமாயிருக்கு” என்று சொன்ன நாட்கள் அதிகம். எளிதில் பதட்டப் படுவாய். கைகள் உதறும். உடலின் வலப்புறம் மட்டும் உனக்கு வேர்ப்பதைப் பார்த்திருக்கிறேன். ரகசியமாய் பொறாமைகளை உனக்குள் புதைத்து வைத்திருப்பாய்.
உன் விநோதமான எண்ணங்களை என்னிடம் சொல்லியிருக்கிறாய். கண்ணை முடினால் போதும் ஏதேதோ உருவங்கள் என் முன் வந்து போகிறது என்பாய். ஒரு சமயம்- உன் இரவு உடைகளை அணிந்துகொண்டு யாரோ ஒருவன் –அந்நியன்- உன்படுக்கையில் கிடப்பதாய் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஓவென்று அழுதுவிட்டாய். எப்பவும் பயம். என்ன ஜென்மம் நீ தோழி?
உன் கைகளைப் பிடித்துக்கொண்டு யாராவது தெரிந்தவர் ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தால் நீ சிறகடிக்க ஆரம்பித்துவிடுவாய்! கொஞ்ச நேரமாவது!.இல்லையென்றால் பயத்தில் ஜெபிக்க ஆரம்பிதுவிடுவாய். நெட்டுருப்பண்னி வைத்திருக்கும் மந்திரங்களை வாய் தானாக முனுமுக்கும் நான் உன்னைப் பார்த்துக் கொண்டே இருப்பேன்!
உன் கனவுகளை நடுங்கிக்கொண்டே சொல்லியிருக்கிறாய் என்னிடம்- ஒரு நாள் ஒர் கறுப்பு நாய் கன்னங்கரேலென்று உன்னைத்துரத்துகிறது. ஓடுகிறாய் சிலசமயம் அது கறுத்த பூனையாகவும் இருக்கலாம். தேனீக்கள் சூழ்ந்துகொண்டு உன்னைத் துரத்துகிறது. பயத்தில் உனக்கு உடல் வெடவெடக்கும்- தலை சுற்றும். வாந்தி!அழுகை கண்ணில் நீர் முட்டிக்கொண்டு நிற்கிறது.
என் அன்புத்தோழி! உன்னைப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்- உன்னைப்பற்றி சிந்தனைகள் மனத்தில்!
என் குடும்பத்தாரும் சுற்றமும் நட்பு வட்டமும் ஆச்சரிய மிகுதியில் உன் பெயரைக் கேட்டுத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகின்றனர். என்னில் நீங்காத இடம்பெற்றுவிட்ட உன்னைப் பார்க்கவேண்டுமாம் அவர்களுக்கு!
சொல்லவா? உன் பெயரைச் சொல்லிவிடவா? உன்னை ஒருமுறைப் பார்த்துவிட்டால் அவர்களுக்குக் குதூகலம் வந்துவிடும். நீ எங்கிருந்தாலும் உன்னை எளிதில் அடையாளம் கண்டுகொள்வார்கள். நிச்சயம் உன்னைப் பிடித்துவிடும். உன் உதவி அவர்களுக்கு அதிகம் தேவைப்படலாம்.
ஒருவேளை என் அதிகப்பிரசங்கி ஓவிய நண்பன் உன்னை வரைந்து பக்கத்தில் இரண்டு அன்னப்பறவைகளையோ அல்லது அவனுக்கு அதிகம் எளிதில் வரையவரும் இரண்டு யானைகளையோ மலர் தூவச்செய்து சித்திரம் வரையலாம். ஸர்ரியலிஸம் அறிந்தவன் உன்னைச் சுற்றி காற்றை குறிப்பாய் உணர்த்தி உன்னில் ஒரு சூரியனையும் வரையலாம்.
ஒரு கவிஞன் கவிதை எழுதி பாலக்ருஷ்ணனாய் உன் வாய் பிளக்கச் செய்து வெள்ளை படிந்த உன் நாவை வெண்ணையுண்டத்ற்கு குறிய்யிடு சொல்லலாம் போகட்டும் அவரவர்க்குத்தெரிந்ததை அவரவர் சொல்லட்டும்.
சரி! மெத்தச் சரி! கடைசியாக தோழி உன் பெயரை உன் அனுமதியுடன் சொல்லப்போகிறேன்.
எல்லோரும் கேட்கும்படி உரத்துச் சொல்கிறேன். என் இரு நூறு வருடத் தோழி வேறு யாருமல்ல.
பல்சட்டில்லா! அதுதான் அந்த ஆளுமையின் பெயர். இப்போது தெரிகிறதா யாரென்று?
அலாஸ்கா என்ன? வ்ளாடிவாஸ்டக் என்ன? க்வீன்ஸ்லாந்தாய் இருந்தாலும் சரி! கூப்பாச்சிக்கோடையாய் இருந்தாலும் சரி ! எங்கெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் என் தோழி பல்சட்டில்லா இருப்பாள். அவர்கள் எளிதாக அடையாளம் கண்டுகொள்வார்கள். ஜெர்மனியில் என் ஆகப் பழைய நண்பன் - தாவரவியல் நிபுணன் அம்மாநிலத்தின் தலைமை நீதிபதியுங்கூட அவன் ஷயரோகம் கண்டு இருமி இருமி ரத்தம் துப்பிக்கொண்டு கோழையோடும் சுரத்தோடும் படுக்கையில் சுருண்டு கிடந்தபோது இவளே- என் அன்புத் தோழியே- அவனுக்கு உறுதுனையாய், ஒற்றத்தேவதையாய் உதவிசெய்து, அற்புதமென எல்லோரும் ஆர்ப்பரிக்கும்படி அவனை- என் ஆகப் பழைய ஆருயிர் நண்பன் கார்ல் வானை நலமாக்கினாள்.
இரவு வெகு நேரம் ஆகிவிட்டது. ஓய்வெடுக்கவேண்டும். ஒரு சில மணித்துளிகளாவது என் தோழிபோல் என் கையை தலைக்கு அண்டக்கொடுத்து ஒய்யாரமாய், விஷ்ராந்தியாய் படுக்கப்போகிறேன். அவளை எந்த விஷயத்திலும் போலி செய்ய இயலாது. சும்மா ஒரு பாவனைதான்.

Monday 18 August 2014

அறிவுக்கோணல்

அறிவுக் கோணல்……..

வளைந்தும் நெளிந்தும்
ஒரே இம்மியைச்
சுற்றி சுற்றியும்
சுழல் ஏணியில் மேலேறி
திருகின் புரியில் சிக்கியும்
மொத்தைக் கண்டு நூலும்
சிடுக்கு விழுந்தும்………
...
தினமும் புழங்கிய
சமன்பாடுகள் குலைகையில்
அறிவுக் கோடல் லட்சியம்
அறிவுக் கோணல் நிதர்சனம்
என்னளவில் மட்டுமென
பாசாங்கு விலக்கி
புறத்தே சொல்ல
விழையும் மனது!

உலகத்தையும் நாடகத்தையும்

உலகத்தையும் நாடகத்தையும்
மேதைகள் ஒப்பிட்டப் போய்
வேஷங்கள் முக்கியமாயின!
ஒரே கணத்தில் பல வேஷம்!
இறைவனுக்குப் பிடித்த
நான்கு முகங்களாய்!...

சாவி கொடுத்து
சுருள் வில் முடுக்கியதும்
கேசம் அடர்ந்த பொம்மை
தத்தித் தத்தி நடக்கும் வேஷம்
சகலருக்கும் பிடித்த ஒன்று!

திகட்டும் வேஷங்களாய்
மருத்துவர், காவலர், போராளி
நீதியரசர், படிப்பாளி எல்லாம்!

உம்ம் போடு! உம்ம் போடு!
எல்லா முடிவுக்கும் உம்ம் போடும்
பொம்மையாயிரு!
பொம்மையாய் நட!
வேடிக்கை காட்டு!
பல்லிளிக்கும் தொழில் நுட்பகாலம்
இதையும் விட நல்ல வேஷம்
இனி என்றைக்கும் கிடக்காது

விதம் விதமாய் பொம்மைகள்
முடுக்கிவிடப்பட்டு உம் போட்டபடி
நடந்து போகட்டும், நாடக உலகில்!
Ravichandran Arumugam's photo.

சோளக்கொல்லை பொம்மைக்கு

சோளக் கொல்லை பொம்மைக்கு
கோட்டும் சூட்டும் மாட்டிவிட்டு
அதிகாரி முன் கொண்டு நிறுத்து
அத்தாட்சி தரும் அதிகாரி!

அது பேச, விவாதிக்க, நிரூபிக்க
காகித நிரூபணம் சமர்த்தென!
கொம்புள்ள அதிகாரி கையெழுத்திட்டு!

நாமகரணம் ஆயாச்சு!...
இனி நீ பொம்மையில்லை!

ஒல்லியும் உயரமாய்
சரியும் தோள்களோடு
வயிறு எப்போதும் காலியாய்
தலையும் அப்படித்தான்!
ஐஸ்க்ரீம் சாப்பிட்டபடி
கொஞ்சம் நாட்டியம், நாடகம்
கொஞ்சம் க்ரிக்கெட் ஆட்டம்
சமூக மனிதன் இரக்கத்தோடு
பரவி வியாபிக்கும் நட்போடு!

அத்தாட்சி பெற அதிகாரிக்குக்
கொடுத்த விலை மீட்க
வழியொன்று உண்டு
எல்லாரும் நம்பிட!
உன்னைக் கும்பிட!

நீ சொன்னால் நடந்துவிடுமென
சொல்லி பிழைத்துக்கொள்!!
குறி சொல்! எல்லாம் நன்றாய் நடக்குதென!
காவல் அதிகாரியாய் சொல்!
நீதி அரசராய் சொல்!
நடப்பதெல்லாம் நன்மைக்கேயென!
குறையொன்றும் இல்லையென!

தானாய் மலரும் புல்லையும் பூவையும்
மாதிரியாய் சொல்லிக்காட்டு! நம்புவர்!

வயிற்றுள் திணித்த
வைக்கோல் தீர்ந்து போகுமுன்!
தலைக்குக் கவிழ்த்த சட்டி உடையுமுன்!
கறுப்புக்கோட்டில் வைத்த
வெள்ளைப் புள்ளிகள்
அடுத்த மழையில்
அழிந்து போகுமுன்!

Tuesday 22 July 2014

மறதி

  1. ஞாபக மறதி கடுமையாம்
    முனகினார் வந்தவர் கவலையோடு
    எதையெல்லாம் மறந்தாய் ?
    நாக்கை நீட்டிக் கேட்டார் மற்றவர்

    வீட்டிலக்கம் சொல்ல இயலாதா?
    சம்பள பில்லில் ஸ்டாம்ப் ஒட்டுமிடம்?
    வங்கிக் கணக்கு, பாஸ் புக் மீதம்?காதலியின் பழைய வாழ்விடம்?...

    எல்லாம் சுவற்றில் விறட்டி ஒட்டி
    பசுமையாய் ஞாபகத்தில் பதிவோடு
    மூப்பு உண்மைதான் ஆனாலும்
    நினைக்க விரும்பியது இருக்கிறது
    அல்லது மறக்கிறது முழுசாய்

    நேற்றுக் காலை தூங்கி எழுகையில்
    யார் முகத்தில் விழித்தேன்?
    நேற்று இரவு படித்ததின் சாராம்சம்
    காலை உண்ட உணவின் ருசி
    எப்போதோ நண்பனுக்கிட்ட ஷ்யூரிட்டி
    மின்வாரிய அட்டை வைத்த இடம்

    ஆச்சரியம் என்ன? மறத்தல் இயல்பே
    என்றார் மீளவும் தெளிவாய் அடுத்தவர்!
    எல்லோரும் கலைந்தனர் விரைவாய்
    சின்னத்திரை தொடர் நேரம் நெருங்கியதால்!

டார்வினும் எம்மை மன்னிக்கவும்

  1. நெடுகிலும் விதவை மரங்கள்
    மனிதக் கோடரியின் கூர் நாவில்
    வெட்டுண்டு வீழ்ந்து கிடந்தன
    ஊரெங்கும் பாலையாய் பசுமையற!

    அனுமன் மன்னிக்கவும் என்னை
    நீயே உன் எஜமானனைக் காக்க
    அவர்தம் பெண்டாட்டியைக் காக்க
    வேரோடு மலையையும் பெயர்த்தாய்
    அசோக வனமும் கொளுத்தினாய்!...

    நீ குரங்கென்றே வைத்துக்கொள்வோம்!
    கதை மாற்றம் அறிந்திலையோ?
    மனிதன் குல்லாயைக் கழற்றி வீச
    குரங்குகளும் வீசினது நேற்றையது
    நீ பெயர்த்துப் போட்டதும் வனத்தை
    வெட்டி வெட்டி சாய்க்கிறான் மனிதன்

    அனுமனுக்கும் நமக்கும் உறவு சொன்ன
    டார்வினும் எம்மை மன்னிக்கவும்!

தொட்டிலில் உறங்கும் குழந்தை

தொட்டிலில் உறங்கும் குழந்தை
 கனாக்கண்டு சிரிக்கும் தானாய்
 பாம்பில்லை அதன் கனவில்
 பஞ்சு மிட்டாயும் வந்ததில்லை
 என்னவென்று புரியாமல் சிரிக்கும்
 எப்படியும் எதாவது கிடைத்துவிடும்
 தொட்டிலில் உறங்கிச் சிரிக்க
 கருப்பைப் புறவெளி வியாபகம்
 பிஞ்சுக்கை முறித்துத் திமிறும்
 கால் நீட்டித் துழாவும் ஆனாலும்
காதில் இரைச்சல்கள் இல்லை
 புறச்சத்தம் ஏதும் பாதிப்பில்லை
 அகச்சத்தம் இல்லவே இல்லை
 ஊமைப்படமாய் எல்லாக் காட்சியும்
 ஒருவேளை தொட்டில் மொழி
 சத்தமற்ற, சலனமற்ற காட்சியோ?
திரிசங்கு நிலையில் ஊஞ்சல்
 மேலே மட்டிலும் இணைப்பு
 கீழென்று ஏதுமற்ற வெளி
 மேன்மை நோக்கிய பயணம்போல்!

குறுந்தகடுகள்

  1. குறுந்தகடுகள் வந்தது வசதி தான்
    இடம் ஆக்கிரமிப்புக் குறைவு
    ஒரு தண்டில் நூறு அடுக்கலாம்
    லாவகமாய்க் கையாளலாம்

    கிராம்போன் ரெக்கார்டுகள்
    நிரம்ப சேகரம் பரிபாலித்தல் கடினம்
    தூக்கிக் கொடுத்துவிட மனமில்லை
    கறுப்பு ரெக்கார்டைக் கண்டாலே
    குடும்பத்தில் அனைவரும் சீற்றம்...

    சிறு பிராயம் தொட்டுக் கூடவே வளர்ந்த
    கிரம்போன் நட்பு பிரிவது எளிதல்ல

    பதினாறு சுற்று முப்பத்து மூன்று சுற்று
    குறுந்தகடு அளவிலே நாற்பத்தைந்து சுற்று
    முன்று ரகமும் தட்டில் வைத்து சொடுக்கினால்
    நளினமாய் அசைந்து நர்த்தனம் புரியும்

    மேடு பள்ளம் ஏறி இறங்கி ஊசி தொட
    கறுப்பு மறைந்து கானம் பிறக்கும்

    குனிந்து உட்கார்ந்து உற்றுக் கேட்கும்
    அந்த ஹெச் எம் வீ நாய் நண்பனுக்கும்
    என்னைப்போலவே அகவை அறுபது.

பள்ளிக் கூடம் வெகு தூரம்

  1. பள்ளிக்கூடம் வெகு தூரம்
    ஐந்து மைல் குறையாது
    நடந்தே போகனும்
    ஒருகையில் புத்தகப்பை
    மற்றதில் பித்தளைத் தூக்கு
    கொஞ்சம் பழையது மோரூற்றி

    புதாற்றுக் கரை நெடுக
    விண்ணுயர தேக்கு மரம்
    ஐந்து கண்ணுப் பாலம் தாண்டி...
    ஆறு வளைந்து போக்குக் காட்டும்
    தினமும் துணைக்கு வருவது ஆறு
    போகும் வழியெங்கும் தீனி தரும்

    சடை சடையாய் கொடுக்காய்ப்புளி
    ஒரு கல் விட்டால் நூறு விழும்
    ஈச்சம்பழம் முந்திரிப் பழம் ,மூக்குசளிப் பழம்
    யத்தனிப்பு இல்லாமல் கைக்கு வரும்
    மைனா சிட்டு பழந்தின்னி வௌவால்
    எல்லாம் அன்போடு பங்கு கேட்டு
    பரிபாஷை பேசும் கலகலப்பாய்

    அரக்கு நிறத்தில் பட்டுப்பூச்சிக்கு
    நெருப்பெட்டி கூடாரம் வளையவர
    மூச்சிரைக்க ஓடினாலும்
    பிடிபாடாமல் தப்பும் வெட்டுக்கிளி

    தாவரவியல் விலங்கியல் தானாய் விளங்க
    தமிழாசிரியர் ஐந்துவகைப் பா கேட்பார்
    கலிப்பா, வெண்பா ஆசிரியப்பா அடுத்தது
    சொல்ல திக்கித் திணற நக்கலாய்ச் சொல்லுவார்
    நீ இனிமேல் தூங்கப்பா வென. !

அந்தக் கிராமத்தில் அந்தக் காலத்தில்

  1. அந்தக் கிராமத்தில்
    அந்தக் காலத்தில்
    மாடுகள் வசித்தன

    முகர்ந்து பார்த்தே
    தெரிவு செய்து
    தாய் மாடு தின்னும்
    கன்றுகளும் அப்படியே

    இது ஆகாது...
    தின்றால் கழிச்சல்
    சடுதியில் வருமென
    தாயறியும் கன்றுக்கும்
    ஞானம் கடத்தும்
    கல்லூரிக்குப் போனதில்லை
    கல்வி கற்க கால் நடைகள்

    என்றைக்கோ அடாவடியாய்
    தின்று கழிந்தால்
    பெத்தய்யா வைத்தியர்
    முண்டாசுக் கட்டி
    கழுத்தில் வஸ்திரம் தரித்து
    பச்சிலை மருந்து தர
    பறந்து போகும் கழிச்சல்

    கொம்புக்கு வர்ணம் பூசி
    கழுத்தில் நெட்டிமாலை சகிதம்
    மாட்டுப் பொங்கலன்று
    மாடவிழ்க்கும் நேரம்
    முதல் மரியாதை
    பெத்தய்யா வைத்தியருக்கே!

    இந்தக் காலத்தில்
    இந்தக் கிராமத்தில்
    மாடும் இல்லை
    வைக்கோலும் இல்லை
    வைத்தியர் பெத்தய்யன்
    வருவதும் இல்லை!

அவளே கைனக் அவளே டையட்டீஷியன்

  1. கூட்டுக் குடும்ப முன்னறையில்
    செவ்வகமாய் போர்வைத்தடுப்பு
    அதுவே பிரசவவெளி!
    பெரியப்பாவின் மூத்த மகள்
    பெண் குழந்தை பெற்றிருந்தாள்!

    ஒரு பிராந்தி பாட்டிலில்
    சுகப்பிரசவம் நடத்தினாள் முசுடு ஆயா
    ஊரில் எல்லார் தொப்புள் அறுத்த
    கத்தியும் அவளிடம் தானாம்!...
    முகமெங்கும் சுருக்கம்
    சிறுபிள்ளை சாக்பீஸ் கிறுக்கலாய்
    அவளே கைனக் அவளே டையட்டீஷியன்!

    ப்ரசவத்தின் மூன்றாம் நாள்
    பத்தியக் குழம்பு செய்கிறாள் முசுடு
    சாயந்தரம் பிடித்த கொறவை மீன்கள்
    அன்னக்கூடையில் வளைய வரும்
    தேங்காய்ப்பால் சாறெடுத்து சேர்ப்பாள்
    காலையில் மீன்கள் மயக்கத்தில்

    பூண்டுரிக்க ரெண்டுபேர் மிளகிடிக்க ரெண்டுபேர்
    அவள் அதட்டல் உருட்டல் அட்டகாசம்
    ஒரு பிள்ளைத்தாய்ச்சிப் பத்தியக் குழம்பு
    ஊரெல்லாம் மணக்கும் முசுடின் கைராசி
    எல்லோரும் நினைப்பர் தம் வீட்டுப்
    பிரசவக் கொறவைப் பத்தியக் குழம்பை!

    குலதெய்வ பூஜையில் என்னைக் கண்டதும்
    எரவானத்தில் தேடுகிறாள் என் தொப்புள்
    அறுத்த கத்தியை மறதியாய் வைத்தவள் போல்!
    கதை சொல்லிகள் ஊரில் அதிகம்
    என் பிறப்பின் கதை சொல்ல
    ஆயாவால் மட்டும் முடிகிறது
    ஊருக்கே ப்ரசவம் பார்த்த அவள் கதையை
    முக நூலில் பதியலாம் பகிரலாமென்றால்
    யார் வீட்டிலும் இல்லை அந்த தெய்வத்தின் படம்.!

என்ன செய்யலாம் இந்த மிச்சப் பொழுதை?

  1. பொய்யாவணம் தவிர்த்த எள்ளலோடு!

    அகவை அறுபது
    மூத்த குடிமகனென
    அரசு சொல்லிற்று!
    இனி வேலை இல்லை!

    வங்கிக் கணக்கில்
    ஓய்வூதியம் சேமிப்பில்!
    ...
    ஆரமும் அட்டிகையும்
    மனைவி கேட்கிறாள்
    மகளுக்கு சீதனமாய் கார்
    தானப் பத்திரம் மகனுக்கு
    வீட்டை மாற்றி அவன் பெயரில்!

    பேரன் பேத்திக்கு ஆளுக்கு
    அரை க்ரௌண்ட் மனை
    புதுச்சேரி போகும் வழியிலாவது!

    என்செய்வது?
    நேர்மையாய் சம்பாத்யம்!
    லஞ்சம் லாவண்யம் கை சுத்தம்!

    ஈ.சீ.ஜீ யில் எழும்பி வாய் பிளந்து
    எகிறுது எஸ்.டீ வேவ்!
    இடது வெண்ட்ரிக்கிள் டிஸ்ஃபன்க்ஷன்!

    நெஞ்சை அழுத்தும் வலி
    நாக்கடி மருந்து நாலு நிமிஷமே தாங்குது!
    சின்ன வயசில் பலூன் ஆசை
    என் நெஞ்சுக்குள் பலூன் விடனுமாம்!

    இன்ஷ்யூரன்ஸ் கார்ட் தேய்க்கலாம்
    கார்ப்பரேட் ரேட்டுக்குக் காணாது
    சேமிப்பும் தேயும் முழுசாய்!

    மனசுக்குள் வெம்பி
    மற்றவர் முன் புன்முறுவல்
    மனம் மறை பொருள் சொல்ல
    அக்ரிமனி போல் அலையலாம்!

    உயிலும் இல்லை! தானமும் இல்லை!
    டீ-மாட் கணக்கு,ஷேர் தகவல்
    யாருக்கும் இல்லை!

    என்னாகுமோ? ஏதாகுமோ?
    மரண பயம் துரத்த
    ஒரு மாதமோ? ரெண்டு மாதமோ?
    இறுதித் தீர்ப்பு வந்தே தீரும்!
    ஆர்ஸெனிக் பதட்டம் அனு தினமும்!

    தன்னைச் சுற்றி சுவரெழுப்பி
    தனிமையைப் போர்த்திய உடலாய்
    தாளிட்ட கதவின் பின் ஓவெனெ
    அழலாம் இக்னேஷியாவாய்!

    சட்டி சுட்டதடா! கை விட்டதடா!
    விட்டேத்தியாய் ஸெபியாபோல்
    பாட்டும் பாடலாம்!
    பாட்டும் கேட்கலாம்!

    ஒரு மாத தாடி வளர்ந்தபின்
    புல், பூ, புள் , உதிரும் இறகெழுதி
    முக நூலில் லைக்ஸ் வாங்கலாம்!

    சொத்து, சொந்தம், சுமை, சுகவீனம் இல்லா
    சுதந்திரம் தேட
    என்ன செய்யலாம் இந்த மிச்சப் பொழுதை?

பொய்யாவணம் தவிர்த்த எள்ளலோடு

பொய்யாவணம் தவிர்த்த எள்ளலோடு!

அகவை அறுபது
 மூத்த குடிமகனென
 அரசு சொல்லிற்று!
இனி வேலை இல்லை!

வங்கிக் கணக்கில்
 ஓய்வூதியம் சேமிப்பில்!

ஆரமும் அட்டிகையும்
 மனைவி கேட்கிறாள்
 மகளுக்கு சீதனமாய் கார்
 தானப் பத்திரம் மகனுக்கு
 வீட்டை மாற்றி அவன் பெயரில்!

பேரன் பேத்திக்கு ஆளுக்கு
 அரை க்ரௌண்ட் மனை
 புதுச்சேரி போகும் வழியிலாவது!

என்செய்வது?
நேர்மையாய் சம்பாத்யம்!
லஞ்சம் லாவண்யம் கை சுத்தம்!

ஈ.சீ.ஜீ யில் எழும்பி வாய் பிளந்து
 எகிறுது எஸ்.டீ வேவ்!
இடது வெண்ட்ரிக்கிள் டிஸ்ஃபன்க்ஷன்!

நெஞ்சை அழுத்தும் வலி
 நாக்கடி மருந்து நாலு நிமிஷமே தாங்குது!
சின்ன வயசில் பலூன் ஆசை
 என் நெஞ்சுக்குள் பலூன் விடனுமாம்!

இன்ஷ்யூரன்ஸ் கார்ட் தேய்க்கலாம்
 கார்ப்பரேட் ரேட்டுக்குக் காணாது
 சேமிப்பும் தேயும் முழுசாய்!

மனசுக்குள் வெம்பி
 மற்றவர் முன் புன்முறுவல்
 மனம் மறை பொருள் சொல்ல
 அக்ரிமனி போல் அலையலாம்!

உயிலும் இல்லை! தானமும் இல்லை!
டீ-மாட் கணக்கு,ஷேர் தகவல்
 யாருக்கும் இல்லை!

என்னாகுமோ? ஏதாகுமோ?
மரண பயம் துரத்த
 ஒரு மாதமோ? ரெண்டு மாதமோ?
இறுதித் தீர்ப்பு வந்தே தீரும்!
ஆர்ஸெனிக் பதட்டம் அனு தினமும்!

தன்னைச் சுற்றி சுவரெழுப்பி
 தனிமையைப் போர்த்திய உடலாய்
 தாளிட்ட கதவின் பின் ஓவெனெ
 அழலாம் இக்னேஷியாவாய்!

சட்டி சுட்டதடா! கை விட்டதடா!
விட்டேத்தியாய் ஸெபியாபோல்
 பாட்டும் பாடலாம்!
பாட்டும் கேட்கலாம்!

ஒரு மாத தாடி வளர்ந்தபின்
 புல், பூ, புள் , உதிரும் இறகெழுதி
 முக நூலில் லைக்ஸ் வாங்கலாம்!

சொத்து, சொந்தம், சுமை, சுகவீனம் இல்லா
 சுதந்திரம் தேட
 என்ன செய்யலாம் இந்த மிச்சப் பொழுதை?

பிரியு நண்பா

  1. பிரிய நண்பா!
    நீ பறந்திருக்கிறாயா
    ஒரு நாளாவது?
    இதயம் கழற்றி வைத்து
    முதலை மேல் போனதுண்டா அக்கரைக்கு
    பதினோறாம் வாய்ப்பாடு நடுவில் மறந்து
    மூச்சு வாங்கியது நினைவில் வருகிறதா?
    தீபாவளி ஓலை வெடி தெரு நாய் மேல் வீசி
    கரவம் கட்டும் மிருகத்திடம் சிக்கினாயா?
    பாட்டியின் சுருக்குப்பை சேமிப்பில்...
    கைவைத்திருக்கிறாயா?
    குடை ராட்டினம் சுற்றும் நீ
    தொட்டி ராட்டினம் மேலேற அலறல் ஏன்?
    என்னதான் செய்தாய் இத்தனை நாட்கள்?
    உன் கவிதையை நீதான் சொல்லேன்!
    நான் இழந்ததை நான் அறிய!

துரிதமாய்ப் போகனும்

  1. துரிதமாய்ப்
    போகனும்
    எல்லைக்கல்
    தாண்டி
    எல்லைக்கப்பால்
    அப்பாலுக்கப்பால்
    கற்பித சொர்க்கம்

    வண்டி இழுப்பது
    சண்டி மாடுகள்...
    தார்க்குச்சி
    கூடாதாம்
    ஜன நாயகத்தில்
    வால் திருகல்
    ஆகாது
    ம்ருக வதை!

    கீழிறங்கி
    சக்கரம் தாங்கி
    ஓடலாம்
    இலக்கு நோக்கி

    ஓட ஒட
    நகரும்
    எல்லைக்கல்

    வண்டிவேகம்
    மிஞ்சிய வேகத்தில்

சுய முகம்-சுய மோகம்

  1. சுய முகம்-சுய மோகம்

    கூப்பிட்ட சத்தம்
    காதில் கேட்டது
    திரும்பினால் ஆளில்லை

    தெரு முக்கில் மறுபடி
    திரும்பினால் ஆளில்லை
    என்னைத் தவிர
    ...
    அந்தத் தெருவில்
    அந்த நேரம்
    பிறிதொருவன் இல்லை

    எப்போதும்
    எங்கும் நானெ தான்
    மருந்துக்குக் கூட
    பிறத்தியான் இல்லை

    தேனீக்களாய்
    கூட்டமுண்டு
    சந்தை போல்
    பல முகங்கள்
    எனினும்
    எதிலும்
    என் முகமே

    பல்லாங்குழி ஆடி
    துடைத்து எடுத்தது
    தாயம் போட்டது
    ஸிக்ஸர் அடித்தது
    எல்லாம் நானெ

    அடுத்தவன்
    இல்லவே இல்லை

    கூப்பிடும் சத்தம்
    பெயர் சொல்லி
    திரும்பினேன்

    என் முகம் அணிந்த
    வேற்றாள் எதிர் பட

    என் பெயர் சொல்லி
    அழைத்தேன்
    என் முகம் திரும்பி
    என்னைப் பாக்க…………….

    அடுத்தவன் இல்லாமல்
    அன்பே இல்லாமல்...............

நல்ல ரத்தம் நான்கு வகை

    1. முதன் முதலாய்
      மூக்கில் வழிந்த
      தன் ரத்தத்தைத்
      தன் கையில்
      பார்க்கையில்
      அவனுக்கு
      வயது எட்டு!

      ரத்தத்தின் மணம் என்ன?
      சுவை எதுவோ?...
      சிவப்பில் எந்த நிறம்?

      ரத்தம் சிந்தும் மனிதன்
      காயம் உணர்ந்தவன்
      வலி அறிந்தவன்

      அட்டைகளைக் கண்டால்
      அருவருப்பு வரும்
      அவனுக்கு
      அடுத்தவர் ரத்தம்
      அதன் ருசி
      நல்ல வேளை
      அவை மனிதனல்ல!

      மனித ரத்தம்
      எந்த வகை?
      பேரனின் நோட்புக் குறிப்பு:

      நல்ல ரத்தம்
      நான்கு வகை:
      யேசு ரத்தம்
      காந்தி ரத்தம்
      லிங்கன் ரத்தம்
      மார்க்ஸ் ரத்தம்

      கெட்ட ரத்தம்”
      ஹிட்லர் ரத்தம்
      கம்ப்யூட்டர் வைரஸ் ரத்தம்
      ஸ்பைடர் மேன் ரத்தம்
      ட்யூஷன் வாத்தியார் ரத்தம்

      ரத்தம் அதிகமானால்
      ஹாலிவுட் வால்ட் டிஸ்னி
      படங்களில் நடிக்கலாம்
      ரத்த சோகையென்றால்
      அடுத்தவன் ரத்தம் உறிஞ்ச
      அரசியலில் நடிக்கலாம்

விழி பிதுங்கும் காலம்

  1. பழையது
    நீராகாரம்
    கலப்பை
    எருது
    வரப்பு
    பித்தளைத் தூக்கு
    எருக்குழி
    களம்
    உரல்
    உலக்கை...
    கைகுத்தல்
    குத்தகை
    சாட்டையடி
    சாணிப்பால்
    ஐந்தாம் நமூனா
    ரெண்ட் கோர்ட்

    அகராதிகள் நீக்கிய
    அடையாளங்கள்

    யூரியா
    ட்ராக்டர்
    ஃபுட் மார்ட்
    பீடீ ப்ரிஞ்சால்
    தற்கொலை
    கோக்
    பெப்ஸி
    இத்யாதிகள்
    நவீன பீடிப்புகள்
    பேய்கள்

    விழி பிதுங்கும்
    காலம்

Are we sane?


நவீன வாழ்வு நம் எல்லோரையுமே துயரராக்கியிருக்கிறது. உடல் சார்ந்த குறிகளோ அல்லது மனம் சார்ந்த குறிகளோ எல்லோரையும் வதைக்கிறது. சந்தையும் விளம்பரங்கள் கட்டமைக்கும் நுகர்வுகளும் ஒவ்வொருவரையும் உபாதைக்குள்ளாக்குகிறது.
ஹோமியோபதி உடல் மனம் எனப் பிரித்துப் பார்க்க இயலாத தொடர்மமாகவேக் கருதுகிறது. ஒருவரது நலம் தோராயமான ஒன்றாகவே இருந்து வருகிறது. இதுவரை விளக்கப்பட்ட” சந்தோஷம்” கருத்தாக்கத்தின் போதாமை நன்கு புரிகிறது.

நவீன ஹோமியோபதி உளவியலிலிருந்து பெற்றுக்கொண்ட அறிவுக்கூர்மை அதிகம்.

Are we sane? எனும் கேள்வியை நம்முள் ஆழ்ந்து எழுப்பிய உளவியலாளர் திரு எரிக் ஃப்ராம் மீண்டும் மீண்டும் வாசிக்கப்பட வேண்டியவர். Art of loving எனும் நூலின் மூலம் அவர் தொடங்கி வைத்திருக்கிற விவாதங்கள் நேசம் குறித்த ஒரு தனிமனிதப் புரிதலையோ அல்லது சமூகம் கட்டமைத்துள்ள அர்த்தத்தையோ அறிவார்ந்த தளத்தில் மடை மாற்றும் தன்மை கொண்டவை.

மார்க்ஸ் மனிதனை தன் இனத்துக்காக வாழ்பவன் எனும் பொருளில் விளக்க முற்படுவார். எரிக் ஃப்ராமின் நேசம் குறித்த விளக்கம் மார்க்ஸின் விளக்கத்தோடு இயைந்து செல்லக்கூடியதாகவே இருக்கிறது.

மனிதன் தன் இனத்தையே நேசிப்பவன் அதற்காகவே வாழ்பவன் அவனது உழைப்பும் படைப்பும் சமூக முழுமைக்குமானது. நேசம் என்பது, Respect, Regard,Attention, Care towards all என்பதாகவே சாராம்சத்தில் பொருள் கொள்ளும். ஏனைய விளக்கங்கள் எல்லாம் குறைபாடுடையன; குறுக்கல் வாதத் தன்மை கொண்டவை.

ஹோமியோபதி அறிவியலைக் கற்றவர்கள்/ கற்பவர்கள் எரிக் ஃப்ராமின் நூல்களைக் கற்பது மிகவும் அவசியம்.
ஏவுகணைத் தாக்குதல்களும் இனப்படுகொலைகளும் சர்வ சாதானண நிகழ்வுகளாகிவிட்ட இன்றைய சூழலில் Are we sane ? எனும் விவாதம் எல்லாத் தளங்களிலும் தொடங்கப் படவேண்டியதே!








சந்தேகப் பேய்

சந்தேகம் ஒரு பேய் போல என்று சொல்வார்கள். ஒருவரைப் பற்றிக்கொண்டால் அவ்வளவு சீக்கிரம் விலகாது. யாருக்கு சந்தேகமோ அவர்களை வாட்டி வதைக்கும். மன நிம்மதியைக் கெடுக்கும், கற்பனைக்கெட்டியவரை, கதைப்பின்னல்களை உருவாக்கி உண்மையை மூளியாக்கும். இது ஒரு பீடிப்பு. மன நோய் முற்றிய நிலையில் காதில் தன்னோடு யாரோ உரையாடுவது போல் சத்தங்கள் கேட்பதாகச் சொல்வார்கள்
 நல்ல வேளையாக ஹோமியோபதியில் சந்தேகம் ஒரு மனக்குறி. ரெபர்டரியில் இரண்டு முக்கிய மருந்துகள் சந்தேகப்படுபவர்களின் அவஸ்தைக்குப் பயன்படும். ஒன்று ஹையோஸியாமஸ், மற்றொன்று லாக்கெஸிஸ். உயர்ந்த வீரியம் தேவைப்படும்
 யாரோ தன்னைப் பின் தொடர்வதுபோல் தோன்றுவது, எல்லோரும் தன்னைப் பற்றியே பேசுவது போல் எண்ணுவது காதில் ரகசியமான உரையாடல் கேட்பது, தன் வீட்டு மனிதர் தனக்கெதிராய் செயல்படுவது, போலிஸ் தன்னைக் கைது செய்ய வீட்டுக்கு வந்துவிட்டதாக நினைப்பது ஆகிய குறிகள் சந்தேகமும் பிறழ் காட்சிகளும் இணைந்து செயல்படுவதைக் குறிக்கும். காலி ப்ரொமாட்டம் மிகச் சிறந்த மருந்து.
சந்தேகம், பொறாமை, வெறுப்பு, அடிக்கடி சபித்தல், வக்கிர எண்ணங்கள் எல்லாம் ஒரு அடுக்கு வரிசை போல. நோய்மையின் தீவிர வெளிப்பாடு.
அடிக்கடி சபித்தலுக்கு அனகார்டியம் நன்றாக வேலை செய்யும் மருந்து.
வக்கிர எண்ணங்கள் மெர்க் சால் உயர்ந்த வீரியத்தில் பரிந்துரைக்கப் படுகிறது.
சந்தேகப் படுபவர்கள் அதிகார அடுக்குக்குகளில் உயர்ந்த நிலைகளில் இருப்பவரானால் அவர்களிடமிருந்து நோய் விலகுவதில்லை. சாதாரண மனிதர்கள் என்றால் மருந்துகள் செயல்பாடும், வாழ்க்கைச் சூழல் மாற்றமும் மிகவும் அவசியம்.

மில்லிஃபோலியம்


மில்லிஃபோலியம் என்றால்” ஆயிரம் இலைகள்” என்று பொருள்..

கிரேக்க புராணத்தில் போரின்போது தளகர்த்தன் ஏகில்ஸ் தனது சேனை வீரர்களின் விழுப்பு ண்களிலிருந்து ரத்தப் பெருக்கைக் கட்டுப்படுத்த இந்த இலைகளையே பயன்படுத்தியதாக ஐதீகம் அதன்படியே இதன் தாவரப்பெயர் ஏகில்ஸ் மில்லிஃபோலியம் என்று அழைக்கப்படுகிறது.

பளீரென்ற சிவப்பு ரத்தப் பெருக்கு உடலின் எந்த துவாரத்தினின்று வெளிப்பட்டாலும் இந்த இலைகளை மென்றால் ரத்தப்போக்கு நிற்கும்.

இதையே ஹோமியோபதியில் மருந்தாக மெய்ப்பித்திருக்கிறார்கள். தாய்த் திரவமாகவும் வீரியப்படுத்தப்பட்ட மருந்தாகவும் உபயோகப்படுத்தப்படுகிறது.

சிறார்களின் மூக்கிலிருந்து ரத்தம் வடியும் ”எபிஸ்டாக்ஸிஸ்” நோயை உடனடியாக நலப்படுத்தும். பொது வழக்கில் இத்தாவரத்தை “யாரோ” என அழைக்கிறார்கள். வயலெட் நிற நட்சத்திரங்களாய் இதன் மலர்க்கொத்துக்கள் மனம் கவரும்.
 

காற்றின் கலகம்

  1. காற்றின் கலகம்
    இலையை அசைத்துப் போடும்

    இழை ஊஞ்சலாடித்
    தரையிறங்கும் புழு
    இலக்கு மாறிட
    சபித்தபடி நெளியும்
    வழிப் போக்கன் தோளில்

    சதா அலையும் காற்று...
    போக்கிடம் மறந்து!

    உள்ளிழுக்கும் சிறைக்குள்
    நெஞ்சின் முஸ்தீபுகள்
    தோற்றுப் போகும்
    போன வேகம்
    திரும்பும் வளி
    குகை வாயில் கடந்து
    விடுதலை தேடி!

    ஒழுங்கின் எதிரி
    ஒற்றைக் கண அமளி
    காட்சிப்படும் சுளுவாய்
மனிதர்களின் தேவைகள் குறித்த விவாதம் 1920 களிலிருந்து
தொடர்கிறது.சமூகவியலாளர்களும் உளவியலாளர்களும் அதிக
பங்களிப்பு செய்திருக்கிறார்கள். குடும்ப வருமானம் கூடக்கூட, உணவுக்கென்று
செலவழிக்கும் தொகை அதே விகிதத்தில் கூடுவதில்லை என கோட்பாடு தந்த
எர்னஸ்ட் எங்கெல்ஸ் தொடங்கி தேவைகளின் படி நிலை தயாரித்தளித்த ஆபிரஹாம் மாஸ்லோ
வரை ஆரம்ப நிலை புரிதல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இக் கருத்துக்களின் மீதான விவாதங்களும் விமர்சனங்களும் பின்னாட்களில் கூடினாலும் முழுமை பெறாமலே இருக்கிறது. 
மார்க்ஸியரல்லாத பொருளாதார நிபுணர் தார்ன்ஸ்டன் வெப்ளனின் ஓய்வு விரும்பிகளின் வர்க்கம் மற்றும்
பகட்டு நுகர்வு ஆகிய இரண்டு கருத்தாக்கங்களும்  காலத்தில் முந்தியதால், தேவைகளின் படி நிலைக் கோட்பாட்டின் மீது ஒரு பொருத்தமான எதிர்வினையை விதைக்காமலே இருந்துவிட்டது.
50 களில்  முதலாளித்துவமும் தொழில் நுட்பமும் இணைந்து நுகர்வுக் கலாச்சாரம் கட்டமைக்கப் படுகிற போது தனது தேவையை உணராத தலைமுறை உருவாவதையும், சந்தையின் பலிகடாக்களாக மனிதர்கள் விழிப்புணர்வற்று மரத்துப் போனதையும் கோட்பாடாக ஹெர்பர்ட் மார்க்யூஸ் முன்மொழிந்தும், இன்றுவரை, தேவைகளின் படி நிலையில் மேலிரண்டு அடுக்குகளான, சுய மதிப்புத் தேவைகளும், சுய மேம்பாட்டுத் தேவைகளும் இன்னும் சரியான தளத்தில் விவாதிக்கப் படாமலேயே இருக்கிறது. ஏறக்குறைய இப்படி நிலைகள் வெப்ளனின் பகட்டு நுகர்வாகவே உருவாக்கப்பட்டுள்ளது.  மார்க்யூஸும், வெப்ளனும் இணையும் தளம் மாஸ்லோவ் மற்றும் ஆல்டர்ஃபெரால் சுருக்கியளிக்கப்பட்ட  பிழைப்பின் தேவைகள், சார்ந்திருத்தலின் தேவைகள், வளர்ச்சியின் தேவைகள் மீதான விமர்சனமாகவே அமையும் .
சந்தையின் ஆக்கிரமிப்புக்கு உள்ளான தலை முறையின் வாழ்வியல் தேவைகள் மீதான சரியான கணிப்பு மிகவும் அவசியம்.

தேவைகள் –பகட்டு நுகர்வு கட்டமைக்கும்-வேட்கை தொடர்மம் குறித்த அவதானிப்பும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

Wednesday 4 June 2014

அசல் தேடும் நகலின் பிலாக்கணம்

  1. அசல் தேடும் நகலின் பிலாக்கணம்

    அரை ஜீபீ போறாத வாழ்க்கை
    கூட்டுப் புழுவாய் தொங்கி தூங்கி
    ஊர்ந்து, அந்தர் அடித்து,சிறகு விரியப்
    பறந்திடும் ஆசையில் பல நாள்!
    வாங்கி வந்த வரத்தை யோசிக்கையில்
    சிறகுகள் வருமுன் சீவனற்றுப்போகும்!
    சூறாவளிகள் நகர்த்தி தூர வீசியெறிந்தும்
    மீள தொடக்கப் புள்ளி தேடி புழு ஊர்வலம்...
    காலியான பெர்ஃயூம் குப்பிகள் அணிவகுப்பில்
    இருத்தலின் மணம் பூரிதமாகும் நம்பிக்கை
    கையெழுத்துப் போட ஒட்டிய ஸ்டாம்புகள்
    விளம்பிய முகவரி விரைவாய் தொலைய
    ஒலிபெருக்கி முன் நின்று கணைத்தலில்
    வாங்கிய ஆராய்ச்சிப் பட்டம் எல்லாம்
    ஊசித்துளையில் ஒட்டகம் நுழைய
    வழி சொல்லிக் கடந்து போயின!
    காத்திருக்கலாம் இனி அடுத்த சூறாவளிக்காய்!
    அதுவும் இல்லையேல் அரைக்கால் ஜீபி தான்.
    எருக்குழி சாணம் நிரப்பிய நிம்மதி மட்டிலும்