Saturday 2 May 2015

களவாடப்பட்ட என் தொட்டில்

எப்போதும் நான் ஆட, துள்ள
உறங்க, கிறங்க,வீறிட்டழ
சிணுங்க எனக்கிருந்தது
தொட்டிலொன்று

இரு வேறு முணைகளுக்கு
இடையில் தொங்கியபடி
எந்நாளும் கிடக்க
தரையைத் தொடாமலே

 முன்னும் பின்னுமாய்
அளந்த வீச்சில் பயணம்
சில சமயம் குலுக்கலோடும்!

ஆடியதைவிட, துள்ளியதைவிட
முடங்கிக் கிடந்ததே சுகம்
கைகளை நெஞ்சில் கட்டி
காலை குறுக்கிச் சேர்த்து!

எப்போதும் காற்றில்
மிதந்தபடி தொட்டிலில்
கூரையைத் தாண்டிய
கனவுகளோடு

என் தொட்டிலை ஏனோ
யாரோ களவாடிப்போக
இன்று தரையில்
தொட்டிலின் நினைவோடு
MASSACRE OF THE INNOCENTS
மனித சிந்தனையில், அப்பாவி மக்களைக் கொல்லுதலுக்கெதிரான கலைஞர்களின் ஓவியப் பதிவுகள் பல நூற்றாண்டுகளாக எழுச்சி பெற்று வந்திருக்கிறது.
யேசு கிறிஸ்துவின் பிறப்போடு நடந்ததாகச் சொல்லப்படும் கொலைகளில் ஆரம்பித்து இக்கருத்தானது , வெவ்வேறு நூற்றாண்டுகளில் பல ஓவியர்களால் பதியப்பட்டிருக்கிறது.
...
நான் ஆறிந்தவரையில் ஜியாட்டோ டீ பாண்டன், பீடர் ப்ரூகல் தெ எல்டர் 1567, பீட்டர் பால் ரூபென்ஸ் 1608, கைடோ ரெனி 1611,குஸெப்பே மாரியா க்ரெஸ்பி, ஃப்ரான்காய்ஸ்ஜோசெஃப் நாவெஸ் 1817, என பலரது ஓவியங்கள் இணைய தளத்தில் காணக் கிடைக்கின்றன.
இவைகளை மட்டும் தெரிவு செய்து அப்பாவி மக்களைக் கொல்லுதலுக்கெதிரான கலைஞர்களின் கண்டனமாக உலகெங்கும் ஓவியக் கண்காட்சிகள் நடைபெறுவது அறச்செயல்பாடாக இருக்குமெனத் தோன்றுகிறது.
மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், மொழியின் பெயரால், அரசியல் காரணங்களால் நாளும் நடைபெறும் எண்ணற்ற படுகொலைகளுக்கு எதிரான முழக்கங்களின் ஆரம்பமாக இருக்கும்.
See More

எந்தப் பெயரும் இல்லையென்றால் எப்படி?

சின்ன வயசில் நீங்கள் குண்டாயிருந்தீர்கள்
விரைவாய் ஓட முடியாதபோதும்
மேல் மூச்சிரைக்க ஓட முஸ்தீபுகள்!
முந்நூறு ஓட்டு வீடுகளும்...
இருபது நாய்களும் இருக்கும் தெரு!
உங்களை செல்லமாய் விளித்தது
தொந்தியென! உங்கள் சம்மதம் இன்றியும்!

உண்டு தானே? உண்மையாய் சொல்லனும்
ஒருவேளை ஒப்புக்கொள்ள மறுத்தால்?
யார் விட்டார்கள் உங்களை?
நீங்கள் ஒல்லியாய் இருந்தீர்கள்!
உயரமாய் இருந்தீர்கள்! சரியா?
சோனியென்றோ நெட்டைக்கொக்கு என்றோ
தெருவே உங்களை அழைத்தது!
தெரு நாய்களும் கூப்பிட்டன
வாலாட்டிக்கொண்டே!
எந்தப் பெயரும் இல்லையென்றால் எப்படி?
அந்தத் தெருவில் நீங்கள் வாழவே இல்லை!
அல்லது முந்நூறு வீடுகளும் ப்ளஸ்
இருபது நாய்களும் இருந்திருக்க வில்லை!!!
அல்லது இப்படியும் யோசிக்கலாம்
ஜனித்தபோதே நீங்கள் பெரியவாளாய் இருந்தீர்கள்!
வாஸ்தவமா இல்லையா?
வாஸ்தவம்! வாஸ்தவம்!
என்ன உடனேயே ஒப்புக்கொண்டுவிட்டீர்கள்?
இப்படியா சின்னப்பிள்ளையாய் இருப்பது?
இந்த வயசிலும்?

Friday 1 May 2015

இருப்பின் சொட்டுக் கிள்ளலுக்காய்

தன் அலகின் நுனியைக்
காண இயலா தூரத்தில்...........
இருப்பதில் சிரமமில்லைதான்
வசதிதான் என்பதும் கற்பிதமே!
...
ஒருமுறை திருப்பி ஒப்பிக்க
ஒருசில வாய்ப்பாடுகள் எப்போதும்
நகர்ந்துகொண்டே இருக்கும் இலக்குகள்
ஈரம் சொட்டும் நாக்குத் தொங்கலில்
தூரம் கடப்பதும்,மறப்பதும்
இருப்பின் சொட்டுக் கிள்ளலுக்காய்!

இந்து மேனனின் சங்க பரிவார் வாசித்தல்

இன்று மாலை வாசிப்புக்கு திரு சுகுமாரன் மொழிபெயர்த்த இந்து மேனனின் ” சங்க பரிவார்” சிறு கதையை எடுத்துக்கொண்டோம். கவிஞர் சுகுமாரனுக்கு நன்றி சொல்ல வேண்டும்-இப்படியொரு அற்புதமான சிறுகதையை காண்பித்துக் கொடுத்ததற்கு.!
இந்தியப் பெருங்கண்டத்தையே ஆட்டிப் படைக்கிற வகுப்பு வாத வன்முறையைக் கருவாகக் கொண்டு துணிச்சலோடு சொல்லப்பட்டிருக்கிறது. கதை சொல்லப்பட்டிருக்கும் நேர்த்தி வெகு நேரம் யோசிக்கவைப்பதாகவும் பன்முக வாசிப்புக்கும் இடமளிக்கிறது.
பெரும்பான்மை வகுப்புவாத வன்முறைக்கு ஆளாக நேரிடு...மோவென எனும் அச்சத்திலேயே -எண்ண சுழற்சியில் சிக்கிக் கொண்டு உழலும் ஒரு சிறுபான்மை வகுப்பைச் சார்ந்த நாவிதர் ஒருவரின் மனப்பதிவாக கதை நகர்கிறது.
படைப்பாளியின் பெயர் மறந்து விட்டாலும், அந்த ருஷ்ய சிறுகதையின் தலைப்பும் மறந்துவிட்டாலும், அதன் பின்புலம் நன்கு நினைவில் இருக்கிறது. ஆக்கிரமிப்புப் படையின் கமாண்டர் உள்ளூர் சலூனில் முகச் சவரம் செய்து கொள்ள வரும் பின்புலம். கமாண்டரின் மனப்பிராந்தியும், எங்கே நாவிதன் இனத் துவேஷத்தில் கழுத்தை அறுத்துக் கொன்று விடுவானோ எனும் எண்ணச் சுழல் . நாவிதனின் ஒவ்வொரு அசைவும் அவனுக்குப் பயத்தை உண்டுபண்ணும்.
ஆக்கிரமிப்பும் இனத் துவேஷமும் அந்த ருஷ்யச் சிறுகதையில் உக்கிரம் கொள்ளும். இந்து மேனனின் சங்க பரிவாரில் வகுப்புவாதமே பிரதானம். சக மனிதனில் அவ நம்பிக்கை, வெறுப்பு, கொலை பயம், உளச் சிக்கல், எப்படியாவது தப்பித்து உயிர் பிழைத்துவிட முடியுமா எனும் ஏக்கம் எல்லாம் கதை முழுக்க. நாவிதனின் பின்புலம், அவன் கை கத்திரியின் மொழி, கேசங்களின் மொழி, மனிதத் தலைகளோடான மொழி என்று அற்புதமான பதிவு. இதுவரை படித்திராத எழுத்து.
இந்து மேனனின் இக்கதையைப் படிக்காமலிருந்தால் ஒரு மிகச் சிறந்த சிறு கதையை அறிந்துகொள்ளாமலேயே போயிருக்கும் வாய்ப்பிருக்கிறது.
கவிஞர் சுகுமாரனுக்கு மீண்டும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம் -இப்படியொரு தத்ரூபமான, பின்னப்படாத மொழிபெயர்ப்புக்காக.!

காலி கார்ப் ஏன் இப்படி நடந்து கொள்கிறது?

காலி கார்ப் ஏன் இப்படி நடந்து கொள்கிறது.? ஒன்றில் ஆர்வம் காட்டி சில கணங்கள் மட்டுமே அதில் லயிக்கிறது. உடனே வேறொன்றில் தாவுகிறது. இரண்டாமதில் பயணிக்கையில் மூன்றாவது பணியைத் துவக்கிக் கடைசியில் எதையும் முடித்தபாடில்லை எல்லாமே அரையும் குறையுமாய் நின்றுவிடுகிறது.
இத்தனைக்கும் குடும்பம், கடமை, பொறுப்பு, தலைமை எல்லாவற்றிற்கும் முதலிடம் தரும் காலி கார்பே இப்படியென்றால்?
தன்னால் எதையும் ஒழுங்காக நிர்வகிக்க முடியாமல் போவதால்தான் காலி கார்ப் மற்றவர்களிடம் அப்படி தன் கற்பித பிம்பத்தை நி...லை நாட்டிக்கொள்ள அப்படி கடுமையாக நடந்துகொள்கிறதோ?
காலிகார்பால் தனிமையில் இருக்க முடியாததால், பிறர் வேண்டும் அதற்கு. அவர்கள், தன் தலைமை, கடமை பிம்பத்தை ரட்சிப்பவர்களாகவும் இருக்க வேண்டும். மீறினால் கட்டாயம் கடிந்துகொள்ளப்படுவர். அது மட்டும் உண்மை.!
காலி கார்ப் ஏன் இப்படி?
காலி கார்ப் மட்டுமா இப்படி?
அவர்கள்? அந்த முன் வரிசைக்காரர்கள்?
நீங்கள்?
நான்?
நாம்?

வசப்படும் ஹோமியோ வானம் ஒரு ஞாயிறு மாலையில்

இன்று மதியம் சுமார் மூன்று மணி நேரம் கோல்ச்சிக்கம் ஆடம்னேல் ஹோமியோபதி மருந்து குறித்து சேர்ந்து வாசித்தோம் விவாதித்தோம்!
ஐந்தரை மணிக்கு துயரர்கள் வரத் தொடங்கி விட்டனர். விவாதத்தை முடித்துக் கொண்டு நானும் நண்பர் சந்த்ருவும் சேர்ந்து துயரர் சரிதை கேட்கத் தொடங்கினோம்
முதல் துயரர் பீ.எஸ்.என்.எல் ஊழியர். ருமட்டாய்ட் ஆர்த்ரைட்டீஸ் நோயால் அவதிப்படுபவர்..
...
அடுத்தவர் தணிக்கைத் துறையில் பணிபுரியும் தோழர். அவரது இரண்டு மகள்களுக்காக வந்திருந்தார். பீ.சி.ஓ.டி, மாத விலக்கு குறைபாடுகள், சூதக வலி, சைனஸைட்டீஸ் இத்தியாதி
மூன்றாமவர், சந்த்ருவின் நண்பர்-தன் மனைவியை அழைத்து வந்திருந்தார். மாதவிலக்கு பெரும்பாடு-கருப்பைக்கட்டி, இரண்டு சிறு நீரகங்களிலும் கற்கள், நான்கு, ஐந்து மி.மீ ஸைஸில். போதாக்குறையாக கருப்பைக் கழுத்துப் பகுதியில் அழற்சி.
இன்னொருவர். வித்தியாசமான நோய் ஹீமோஃபிலியா இரண்டு ஆண்டுகளாக ஹோமியோபதி மருந்துகள் எடுத்துக் கொள்கிறார். ஃபேக்டர் 8 ஊசி போட வேண்டிய அவசியமின்றி இருக்கிறார். மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது.
மற்றவர் நண்பர் சண்முகத்தின் உறவினர். மலக்குடல் புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை முடித்து இப்போது ஹோமியோபதி மருந்துகள் எடுத்துக் கொண்டிருக்கிறார். மலக்குடல் குறுக்கம் விலக, எளிதாக சிரமமின்றி மலம் கழிக்க சிகிச்சைக்கு வந்திருக்கிறார். இன்னொரு அறுவை சிகிச்சை தவிர்க்க வேண்டி என்னென்ன கோணங்களில் அலச முடியுமோ அதையெல்லாம் யோசித்து மருந்துகள் தேர்வு செய்கிறோம். முன்னேற்றம் இருப்பதை சந்தோஷத்தோடு தெரிவிக்கிறார்.
ருஅடுத்த பெண் துயரர் திருப்பத்தூரிலிருந்து அவருடைய கணவணோடு வந்திருக்கிறார். குழந்தையின்மை நீங்கி மகப்பேறு அடைய. இருவரது சரிதையும் கேட்டு மருந்து எழுதிக் கொடுக்கிறோம்.
கடைசியாக நண்பர் பாஸ்கர், அவரது மனைவி, குழந்தை ரோஷன். நண்பரின் கழுத்துத் தேய்மானத்தால் தோன்றும் வலிக்கும், அவரது மனைவியின் இதயப்படபடப்புக்கும் , அவரது மகனின் கால் சரும அரிப்புக்கும் மருந்து
மணி 9 ஆகிவிட்டிருக்கிறது. சந்த்ருவுக்குப் புறப்பட அவசரம். நண்பர் சேகர் புத்தக நிலையத்தில் துயரர் குறிப்பேடுகளை வைத்துவிட்டு புறப்படுகிறோம்.
ஹோமியோபதியராய் இருப்பதால்தான் இந்த மாலை இப்படி சாத்திய மாகி இருக்கிறது. விதவிதமான உயிரிகளின் ஆளுமைகளையும், அவர்களது நோய் ஏற்புத் திறனையும், துயரங்களையும் புரிந்துகொண்டு அவர்களோடு சேர்ந்து நிற்க முடிகிறது.
1994ல் பரீக்‌ஷா அரங்கேற்றிய சுந்தர ராமசாமியின் பல்லக்குத் தூக்கிகள் நாடகத்தில் பங்கேற்று நடித்ததோடு சரி. இந்த இருபத்து மூன்று வருடங்களில் எந்த நாடகத்திலும் பங்கேற்ரு நடிக்க இயலவில்லை.
தினசரிப் பொழுதுகள் இப்படிக் கழிவதால் வேறு எந்த இலக்கியக் கூட்டங்களுக்கும், நாடக ஆக்கங்களுக்கும் செல்ல இயலவில்லை.
இந்த வருத்தத்தையெல்லாம் இழப்புக்களையெல்லாம் தாண்டி ஏதோ நண்பர்களுக்கு உதவ முடிகிறது என்கிற மன அமைதியும் உண்டாகிறது. கொஞ்சம் ஆறுதல் சொல்லிக் கொள்ளவும் முடிகிறது.

கோல்ச்சிக்கம் ஆடம்னேல் குறித்த ஒரு விவாதம்

இந்தியப் பொது வெளியில் இரு முக்கிய தளங்களில் பாதுகாப்பின்மை நிலவி வருகிறது. 1. மதம். 2.உணவு
மதம் என்றாலே இணைந்துகொள்ளுதல் தான். சேர்ந்து வாழ்தல். இதன் எதிர் நிலை மதத்தை விட்டு வெளியேறுதல் அல்லது வெளியேற்றப் படுதல். விருப்பத்தின் அடிப்படையில் வேறொரு மதத்தில் இணைதல், மதமாற்றத்தை எதிர்த்தல்-- ஆக மதம் இங்கு ஒரு நிலையான நிறுவனம். இந்திய அரசியல் வெளியில் செயல்பட்ட பெரும் அறிவுஜீவிகள் எல்லோருமே மதத்தோடு இணக்கம் கண்டவர்கள்.தான்.(திரு ஈவேரா பெரியாரும் மற்றும் சில கம்யீனிஸ்டுகளும் வ...ிதிவிலக்கு)
மதம் சார்ந்த செயல்பாடுகளில் பிறரது ஒழுங்கின்மை இங்கு கவனக்குவிப்புக்கு உள்ளாகும் விஷயமாக இருக்கிறது.

மதம் என்பதும் மதத்தின் சடங்காச்சாரங்களோடு இணைந்து வாழ்தலும், மதப் பிரஷ்டப் பயமும் ஒழுங்கீனங்களை அனுமதிக்க முடியாத நிலைமைகளும் லில்லியேசியே தாவரக் குடும்பத்தின் பிரதான கருப்பொருளாகும்
கோல்ச்சிக்கம் ஆட்டம்னேல் ஆசியாமைனர், கருங்கடல் பிரதேச தாவரம். பழைய மருத்துவத்தில் கௌட் நோய்க்கு மிகவும் பரிந்துரைக்கப்பட்ட மருந்து
மாஸ்டர் ஹானெமனால் 1805ல் மெய்ப்பிக்கப்பட்ட மருந்து.
இதன் முக்கிய கருப்பொருள் உணவு . எல்லோருக்கும் தேவையான உணவு இங்கு எதிர் நிலையில் பேசப்படுகிறது. உணவைக் கண்டாலோ அல்லது சமையற்கட்டிலில் உணவு தயாரிக்கும் மணம் வீசினாலோ அடி வயிற்றிலிருந்து ஒரு குமட்டல்-வாந்தி. குறிப்பாக அதிகம் அவசியம் என்று சொல்லப்படுகிற மீன், முட்டை, இறைச்சி, கொழுப்பு உணவு தாங்கிக்கொள்ளமுடியாத ஒரு ப்ரச்சினையாகிவிடுகிறது. உணவு ஏற்பின்மை உணவு பாதுகாப்பின்மையாக கோல்ச்சிக்கத்தில் வெளிப்படுகிறது.
லில்லியேசி குடும்பத்தின் ப்ரதான கருப்பொருளான மதவுணர்வும்- விலகல்கள் ஒழுங்கினங்களின் சகிப்பின்மையும், உணவு-குமட்டல் -வாந்தி போன்ற கருப்பொருளையும் ஒருங்கே கொண்டிருப்பதால் கோல்ச்சிக்கம் இந்திய வெளியில் முக்கியம் தேவைப்படுகிற, புரிந்துகொள்ளப்படவேண்டிய மருந்தாகும்,
வெப்ப நாடுகளின் நோயான வயிற்றோட்டம், ரத்த சீதபேதி, குமட்டல் வாந்தி, காலரா, வயிற்றுப்புண், எரிச்சல் வலி, உப்புசம் எல்லம் கோல்ச்சிக்கத்தில் உண்டு.
முக்கியமாக, யூரிக் ஆசிட் ரத்தஓட்டத்தில் அதிகமாகி, மூட்டுக்களின் மெல்லிய சவ்வுகளில் சோடியம் மோனோயூரேட் படிவதால், கௌட் நோய் அதிகம் கானப்படுவதும், ருமாட்டிஸமும், அதன் பின்விளைவுகலான, தசை மூட்டுச் செயலிழப்பும் இருதய வால்வுகளின் கோளாறுகளும் கோல்ச்சிக்கத்தில் கவனம் பெறுகிறது.
வயிறு, மூட்டுக்கள் இருதயம் ஆகியன அதிகம் நோயேற்கும் இந்தியப் பெருவெளியில் கோல்ச்சிக்கம் முக்கியத்துவம் பெறும் ஒரு ஹோமியோபதி மருந்தாகும்

சுதந்திரமாய்ப் பறத்தல்

சுதந்திரமாய்ப் பறத்தல் இலக்கு மட்டுமே என வாளாயிருந்துவிடமுடியாது.
ஆரம்பம் எப்படியிருந்தாலும் இறக்கைகள் வீசிப் பறக்க வேண்டும்
இங்கே ஓவியத்தில் கலைஞனின் தரிசனத்தில் இலைகளுக்குக் கூட இலக்கை எய்துவிட முடிகிறது!
...
மரம் சுருங்கி தன் இருப்பை மூளியாக்கிக் கொண்டாலும் இலைகள் பறவைகளாய் இறக்கைகள் துளிர்க்க உயர உயரப் பறத்தல் கண்டு வெம்பவில்லை
பறவையாயிரு!
சுதந்திரமாயிரு!
சந்தோஷமாயிரு!
இலை வெளியிழந்து இடைவெளி காட்டி உருவிழந்து நிற்கும்
பின்னப்பட்ட மரம் கண்டு கலங்காதிரு!

Ravichandran Arumugam's photo.
 

என் மண் புழு

கடல் மணல் காலை அறுக்கவும்
காற்று புறந்தள்ளவும்
வெளி என்னை உமிழ்ந்த வேகமும்
ஒளி விரட்டுமென் நிழலும்
தூர விழுந்ததும், தாங்குவாரின்றி,...
மண்டியிட்டுத் தவழ்ந்து
மீண்டும் மண்ணுள் புக
நீண்டு சுருண்டு
நகர்கிறது
என் மண்புழு!

யானைப் பால்

அந்த யானை இருபது டன் எடையுடன் அசைந்து கொண்டு இருந்தது.
வலி, கண்களில் நீர் சுரந்துகொண்டிருக்க அதன் அசைவுகள் முன்னெப்போதுமில்லாதபடிக்கு இருந்ததை எல்லோரும் கவனிக்கத் தவறவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தார்கள்.
அதன் குட்டி இறந்து இரண்டு நாட்களாகிவிட்டது. அந்த ஆப்பிரிக்க யானை சோகத்தில் தளர்ந்து விட்டது. நிலை கொள்ளாமல் தவிக்கிறது. பால் காம்புகள் புடைத்து பால் வழிகிறது, பால் கட்டிக்கொண்டு காம்புகள் பிளந்து ரணம் வலி.
அசைவும் அலறலும் மட்டுமே அதன் மொழியாகியிருந்தது.
...
அந்த யானைக் காப்பகத்தின் க்யூரேட்டர் அதனிடம் மிகுந்த பிரியம் கொண்டவர். வாத்ஸல்யத்தோடு எப்போதும் அதோடு உரையாடும் மொழியறிந்தவர். இன்று வழி புரியாமல் தவிக்கிறார்.
இரு நூறு மைல்களுக்கப்பால் தாய் நோய்வாய்ப்பட்டு தன் குட்டிக்குப் பால் கொடுக்க முடியாமல் அல்லலுறும் செய்தி அவருக்கு சமயத்தில் அறிவிக்கப்பட்டதும் அவர் ஏதோ கண்டுபிடிப்பை நிகழ்த்தியதுபோல் குதூகலித்தார்.
எல்லாம் விரைவில் நொடிப்பொழுதில் நடந்தன. பெரும் பள்ளம் வெட்டப்பட்டது. ட்ரக்கில் வெளியூர்க் குட்டியானை கொணரப்பட்டது. பின் கேட்கவேண்டுமா?
பள்ளத்தில் ட்ரக் இறக்கப்பட்டு, கீழ் நின்றபடி பால் அருந்தியது. தாய் யானை அந்தக் குட்டியானைக்குப் பால் கொடுத்தது வாஞ்சையோடு. குட்டியும் அவசர அவசரமாய் உறிஞ்சுவதை காப்பகத்தார் மெய்சிலிர்க்கக் கண்டார்கள்.
எந்த அனிமேஷன் படத்திலும் காண்பிக்கப்படாத அற்புதக் காட்சி யதார்த்தமாய் தன்னிச்சையாய் நடந்தபொழுது பக்கத்து நகரிலிருந்த ஒரு ஹோமியோபதி வைத்தியர் அவ்விடம் விரைந்து சென்றார். அன்று, அவருடைய வெகு நாள் கனவு பலிக்கும்வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
க்யூரேட்டரிடம் தெரிவித்துக் கெஞ்சிக் கூத்தாடி வெகு நேரம் கழித்து சம்மதம் வாங்கி, பலத்த பாதுகாப்பாய் ஒரு சொட்டு யானைப் பால் சேகரித்தார்.
அந்த ஒரு சொட்டு யானைப்பால் வீரியப்படுத்தப்பட்டு. மெய்ப்பிக்கப்பட்டது.
மெய்ப்பித்து மெட்டீரியா மெடிக்கா தொகுத்தவர் ஹோமியோ மருத்துவர் நான்ஸி ஹெர்ரிக். உளவியல் நிபுணராயிருந்து பின் சுய தேர்வாய் ஹோமியோபதி மருத்துவரானவர்.
இன்று ஹோமியோ மருத்துவத்தில் யானைப்பால் ஒரு முக்கிய மருந்து!