Friday 9 August 2013

POST 70 REKNOWN WOMEN HOMEOPATHS


அறிவியலாய் ஹோமியோபதி மருத்துவக்கலையை உலகுக்கு அறிவிக்க உழைத்த நிபுணர்கள் பலர். அதிலும் குறிப்பாக பெண் சாதனையாளர்கள் செய்த பரப்புரை பாராட்டத்தக்கது. சிறப்புக் கவனக் குவிப்பு ஒரு சிலர் மேல் விழ தமிழில் கூட ஆவணப்படுத்தல் ஹோமியோ இதழியலில் நடந்திருக்கிறது. நினைவு கூர்ந்தால்,ஜூலியா எம். க்ரீன், மேசிமண்ட்.பீ .பனோஸ், எலிஸபெத் ஹப்பார்ட், மேஜரி ப்ளாக்கி, எம்.எல்.டெய்லர் ஆகியோரைச் சொல்லலாம்.  ஆனால், 70களுக்குப் பின் பெரும் பங்காற்றிய பெண் ஹோமியோ நிபுணர்கள் யாரும் இன்னும் தமிழில் பேசப்படவில்லை.  இவர்கள் குறித்த கூறல் இன்னும் ஒரு கன்னி முயற்சியாய் கூட நடைபெறவில்லை.

70களுக்குப் பிந்திய ஹோமியோ வரைபடம் என்பது பன்னாட்டு அளவில் பரந்து விரிந்த ஒன்று. எனவே, பெண் ஹோமியோ அறிஞர்கள் பட்டியல் மிகவும் அவசியம்.  அடுத்ததாக இவர்களுடைய பங்களிப்பை அவதானிக்க வேண்டும். மூன்று தளங்களில், இத் தரவுகள் திரட்டல் நிகழ வேண்டும்.  1. அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள நூல்கள்; 2. பன்னாட்டு ஹோமியோ கருத்தரங்கங்களில் ஆற்றிய உரைகள்.3. இதழ்களில் வெளியிட்டுள்ள துயரர் சரிதைகள். மேலும், இவர்களால்  மெய்ப்பிக்கப்பட்ட புதிய மருந்துகளின் ஆவணங்கள் தொகுக்கப்பட வேண்டும்.

நாம் இதுவரை அறிந்திருக்கிற நிபுணர்களின் பட்டியலைப் பதிவு செய்யலாம்.

ஆனந்தா ஸரீன்

ஸர்ளா சோனாவாலா

நான்சி ஹெர்ரிக்

ஆலிஸ் டிம்மெர்மான்

லிஸ் லேலர்

திவ்யா சாப்ரா

விஷ்பாலா பார்த்தசாரதி

அமி லான்ஸ்கி

ஹென்னி ஹ்யூடன்ஸ் மாஸ்ட்

ஜேன் சிக்கெட்டி

மாடி எச் ஃபுல்லர்

அமி ரோதன்பெர்க்

குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு இவர்களது நூல்களும், பதிவுகளும் கிடைக்கின்றன.  எல்லாமும் ஆங்கிலத்தில் கிடைக்கின்றன.  இவர்களது தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்த்தால் அதுவே இம் மேதைகள் குறித்த பெரும் ஆவணப் படுத்தலின் முதல் முயற்சியாக அமையும்.  கூட்டு முயற்சிக்கான களம் என்றே தோன்றுகிறது.       

Wednesday 7 August 2013

தீ தியர்  கிராண்ட் ஜார்ஜின் - துயரர் சரிதை

பத்து வயது சிறுவன் . ஆளுமைக் கோளாறு காரணமாக பள்ளியிலும் , வீட்டிலும் ஒரே  பிரச்சினை.. எல்லோருக்கும் அவனைக் கையாள்வது மிகவும் கடினம். கடும்  பொறாமை . எல்லாரோடும் வம்பு, சண்டை.  தாய் தந்தையரைக் காட்டு மிராண்டிகள் எனத் தாக்குகிறான்.

முதலில் பல மருந்துகள் மாற்றி மாற்றிக் கொடுத்தும்  பலனில்லை.
அவனுக்கு சொத்தைப்பல் இருந்தது.  அதை வைத்து  கிரியோசோட்டம்  15 சி  கொடுத்தேன்.
அதற்குப் பின் தன் தாயும், தந்தையும் கலவியில்  இருப்பதாய்க் கனவுகள் அடிக்கடி வருவதாகவும்  தான் குழ்ந்தையாய் படுக்கைக்கு மேல் கிடப்பதாகவும், பிறக்கவே விரும்பவில்லை என்றும்  சொன்னான். அவனுடைய தாயை விசாரித்தேன்   அவனுக்கு 5 வயது நடக்கும் போது ஒருமுறை  அவர்களின் படுக்கை அறைக் குள்  வந்துவிட்டதாகவும், அப்போது அவர்கள் கலவியில் இருந்ததாகவும் கூறினார்கள்.  அதிலிருந்தே அவனது கடும் சினமும்  வம்பு தும்புகளும் அதிகரித்தன என்றார்கள். 
பிறப்பதா வேண்டாமா  எனும் இருமன நிலைக்கு அனகார்டியம்  15 சி கொடுத்தேன் ;  ஒரு பயனும் இல்லை தோல்வி தான்.

கடைசியில், ஒரு நீண்ட யோசனைக்குப்பின்,    சென்ச்ரிக்ஸ்  கண்டார்ற்றிக்ஸ்  15 சி கொடுத்தபின் தான் அவனுடைய ஆளுமைக் கோளாறுகள் படிப் படியாய்க் குறைந்தன .

சென்ச்ரிக்சில் ஒரு கற்பழிப்பைக் காண்பதாய்க் கனவுகள் வரும்.  அதன் அடிப்படையில் இம்மருந்தைத் தெரிவு செய்ய முடிந்தது.  அந்த   சிறுவனின் ஓடிபஸ் சிக்கலே அவனது கோளாறுகளுக்குக் காரணம்.

  
falcon  பறவையின் மருத்துவக் குணங்கள்.  தொகுத்தளித்தவர்  பீட்டர் சாப்பல் .

ஸ்ட்ரெஸ் : சமையலறைத் தொட்டியை சுத்தம் செய்யும் அளவிற்கு வேலை செய்வார்.  தனிமை விரும்பி.

ஆளுமை : எப்போதும் பெரிய விஷயங்களில்  மட்டும் கவனக் குவிப்பு.  சாதனை மனிதர்கள் , சாதனைகள் மட்டும் முக்கியமாய்த் தெரிகிறது. ஒரு சர்வ தேச வணிக நிறுவனத்தின் தலைமை மேளாளர் படிமம்.  திருமணம்,  குடும்பம் , உறவுகள் ,அக்கறை,நேசம் என்பதெல்லாம் சிரமம்.  தனி மனிதர்களிடம் ஏற்படும் ஒருவருக்கொருவர் உறவில் உராய்வுகள் அதிகம்.  ஆழமான உறவின் மேம்பட்ட நிலை அங்கு கிடையாது. குழந்தைப் பருவத்தை முற்றிலுமாக இழந்துவிட்டு நேரடியாக பன்னாட்டு வணிகத்தில்  குதித்தது போல் பாவனை.

அவர்களது,துறை சார்ந்த வல்லமையும், புரிதலும் மேம்பட்ட ஒன்று.  ஆழமற்ற, எல்லா விஷயங்கள் குறித்த பறவைப்பார்வை மட்டிலும் சாத்தியம்.

மனம் தெளிவானது. சிறிய  பேச்சுக்கள் , சிறு, சிறு உறவுகளுக்கு இடமில்லை. தனித்தே வேலை  செய்வார்.  பலரோடு இணைந்து செயல்பட  இயலாது.

முக்கியக் குறி : அசைவுகள் . கை விரல்கள் விரித்துக் காணப்படும். பறக்கும் கனவுகள் .  எப்போதும் விமானப் பயணம் பரவசம். பறந்துகொண்டே  இருக்க வேண்டும்       



ஜேன்  சிக்கெட்டியின் ஒரு நலமாக்கல் .


 லிண்டா  46 வயது  உளவியல் நிபுணர் .ஹோமியோ  சிகிச்சைக்காக  வந்தார் . தலை முழுக்க சொட்டையாய் இருந்தது. இரண்டு வருடங்களுக்கும்  மேல்  அவர் இந் நோயால் கஷ்டப் படுகிறார் .  பாதி தலை வழுக்கை . முடியே  இல்லை.     ஸ்டீராய்ட்ஸ்  சிகிச்சை எடுத்துக்கொண்டும் முன்னேற்றம் இல்லை. இரண்டு வருடங்களுக்கு முன் தம்பி இறந்து போனான் அப்போது ஆரம்பித்த தொல்லை.   அவர் சொல்கிறார் .

""என் குடும்பத்தில் எட்டு குழந்தைகள்.  நான் பார்க்க அழகாக இருப்பேன் . எப்போதும் நன்றாக வேலை செய்வேன் .யாருக்கும் சுமையாய் இருந்து எனக்குப் பழக்கம் இல்லை. அம்மாவை அவ்வளவாக நான் உணரவில்லை.  எங்களுக்குள் இடைவெளி எப்போதும் அதிகம் உண்டு.

சிறுமியாக இருந்த போது ஒரு தகாப் புணர்ச்சிக்கு உட்படுத்தப் பட்டேன் . அது  அறியாத வயதில் நடந்தது என்றாலும் குற்ற உணர்வு என்னை அரித்துத் தின்கிறது,  எப்போதும் மனத்தில் ஒரு குழப்பம்.  எனக்கென்று உறவுகள் இல்லை.  வீடென்றும் ஒன்றுமில்லை.   வேலைப் பளு கூடினால்  இக்குழப்பமும் அதிகரிக்கிறது. மற்றவர்களிடமிருந்து  தனித்தே இருக்கிறேன். யாருடனும் சேர முடியவில்லை. எப்போதும் வேளையில் மும்முரமாய் இருக்கிறேன். என்னைக் குறித்த எனது புரிதல் இதுதான்.

குழப்பம்
குற்ற உணர்வு
அடையாளச் சிக்கல்
தனிமை
அலுமினா  சீ எம் 1 டோஸ்

2 மாதத்திற்குப்பின்
 அவரது தலையில் கேசம் வளர ஆரம்பித்தது.
சொட்டைகள் மறைந்தன.
வழுக்கைத் தலை என்று யாரும் சொல்ல இனி முடியாது.

ஒரு வருட இடைவெளிக்குப்பின்  மீண்டும் வந்தார். குழப்பம் எதுவும் இல்லை.  நல்ல தன்னம்பிக்கை.

மீண்டும் கிளினிக்கை ஆரம்பித்து உளவியல் சிகிச்சை தருகிறார்.
தனக்கு நேர்ந்தது   ஈகோ -ஸெல்ப் அச்சில் இணைவுக் கோளாறு  என அவரால் நன்கு விளக்க முடிந்தது.  
 
 
தோமஸ் பாப்லோ பாஸ்சிரோ, அர்ஜென்டீனிய ஹோமியோபதியர்.  50களில், மீண்டும் ஹோமியோபதியை புனர் நிர்மாணம் செய்தவர். சர்வதேச ஹோமியோ நிறுவனங்களைத் தலைமை தாங்கி வழி நடத்தியவர்.  துயரர் சரிதை கேட்டலில் மனக் குறிகளுக்கு உச்சபட்ச முக்கியத்துவம் கொடுத்தவர்.  அவரது ஒரு அற்புத சிகிச்சையை கீழே பதிவு செய்திருக்கிறேன்.  

 

அவர் ஒரு ரேடியோ டெக்னீஷியன். வலது விலாப் புறங்களில் கடுமையான வலி.  குறைந்தது 20 வருடங்களுக்கும் மேலாக.  என்ன காரணம் என கண்டுபிடிக்க முடியவில்லை.  கல்லீரல், பித்தப்பை, அமீபா தொற்று, குடல்வால் ஒவ்வாமை எல்லாவற்றுக்கும் சிகிச்சை செய்து விட்டார்கள். வேறு வழி இல்லாததால், நியூயார்க்கில் வைத்து லாபெரோடமி அறுவை செய்து பார்த்தார்கள். வலிக்கான காரணம், உறுதியாக எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.

துயரரது முக்கியமான குறிகள்:

பால் குடித்தால்< வலி

பழங்கள்<வலி

வெறும் வயிறு< வலி

அதிக தாகம்.  கழுத்தில் வேர்வை.  சிடுமூஞ்சித்தனம், பதட்டம் அதிகம். இக்குறிகளை மட்டும் வைத்துக்கொண்டு எளிதில் மருந்தைத் தேர்வு செய்ய இயலவில்லை.

அவரது ஆழ் மனதைத் தேடினால் அவருக்கு சமூகத்தின் மீது கடுமையான கோபமும் வன்மமும் இருந்தது. 5 மூத்த சகோதரர்களும் அவரும் சேர்த்து பெரிய குடும்பம். அவரது 15வது வயதில் தந்தை தவறி விட்டார். படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குக் கட்டாயம் போகவேண்டிய சூழல். எல்லோர் மேலும் எரிச்சல்..  அடிக்கடி தன் தலை
விதியை நொந்து கொள்வார். அவரது விரோதிகள் அவரை துரத்திப்பிடித்து, அவமானப்படுத்துவதாய்த் தோன்றியது. நாளுக்கு நாள் பிடிவாதக் காரனாகவும், யாருக்கும் பணிந்து போகாதவனாகவும் மாறிப்போனார். தனது மேலதிகாரியை பகைத்துக் கொண்டார். எல்லோரையும் தாக்கத் தொடங்கினார். ஒரு வேலையிலும் நீடிக்க முடியவில்லை.  அவரது ஆளுமை என்பது

அடுத்தவர்களைக் குறை கூறுவது.

கீழ்ப்படியாமை

அலட்சியப் படுத்தல்

தனித்திருக்க விருப்பம்.

ஆச்சரியம் தரும் வகையில், மருந்துகாண் பேரேட்டில் பார்த்தால் சின்கோனா(சைனா அஃபீசியனாலிஸ்) பொருத்தமான மருந்தாக வந்தது. சின்கோனா 1 எம் 1டோஸ்.  ஒரு மாதம் கழித்து 10 எம் 1 டோஸ். வலி ஒரே வாரத்தில் நின்று போய்விட்டது.  6 மாதங்களில் ஆளே மாறிப் போய்விட்டார். அவரால் எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள முடிந்தது. அடுத்தவர்களோடு சண்டை பிடிப்பதுமில்லை, தாக்குவதும் இல்லை.