ஹோமியோபதி மருத்துவ அறிவியலின் உன்னதங்களைப் பொது மக்களிடம் பரப்புவதே எங்கள் நோக்கம் .
ஹானேமன் பதித்தத் தடத்தில் இதற்கு முன்னால் விரைவாகவும், வழி பிசகாமலும் , தெளிவான இலக்கும், திசை நோக்கும் கொண்டு பயணித்தவர் பலர். அவர்களது பட்டறிவே எமது கைவிளக்கு .
உலகளாவிய தளத்தில், கடந்த முப்பது ஆண்டுகளில் , ஹோமியோபதி அறிவியலில் பலப்பல வளர்ச்சி மாற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன .
ஜே .டி .கெண்டின் துயரர்
சரிதை கேட்கும் முறைமை பின்னகர்ந்துள்ளது. உளவியலின் பல்வேறு கூறுகளும் , புதுக் கருத்தாக்கங்களும் ஹோமியோ நாற்றங்காலில் பதியன் கண்டுள்ளன .
ஜார்ஜ் வித்தல்காசின் உளவியல் பகுப்பாய்வு முறைமை செழுமையாக, விழுதுகள் இறக்கியுள்ளது . அவரது மாணவர்கள் பலர் , திரை கடலோடியும் ,புதிய அப்போஸ்தலர்களாய் புதிய விழுமியங்களோடு அறிவுகொளுத்தியுள்ளனர் .
மருந்துகளின் செயல்பாட்டு எல்லைகள் குறித்தப் புரிதல் பல் மடங்கு அதிகரித்துள்ளது . புதுக் கருக்கள், துருவப்படுத்தல் கொள்கையினால் , சாத்தியப்பாடு கண்டு , ஆவணப்படுத்தப்பட்டுள்ளன .
தனிம அட்டவணை அடிப்படையில் , தொகுப்பாய்வு கணங்கள் தோறும முகிழ்க்கின்றன.. f பாரிங்க்டனில் தொடங்கிய தொகுப்பாய்வு, ஆட்டோலீசரில் செழித்து, ஸ்கால்டனில் மலர்ச்சிகண்டுள்ளது .
ஆண்டு தோறும் புதுப்புது மருந்துகள் மெய்ப்பிக்கப்பட்டுள்ளன .பறவையினத்தில்
மட்டும் இருபதுக்கும் மேல் ; விலங்கினத்தில் , பால் மருந்துகள் ,-ஒநாய்ப் பால்,சிங்கப்பால் , குதிரைப்பால், டால்பின்பால்,ஆப்பிரிக்க யானைப்பால் , பூனைப்பால்,கழுதைப்பால் என சொல்லிக்கொண்டேப்போகலாம்.
பூர ணமாய், தனிம அட்டவணையின் ஆக்டினைத் தொட ர் ,மற்றும் லாந்த்தனைத் தொடர் மெய்ப்பிக்கப்பட்டு, மெட்டிரியா-மெடிக்கா கட்டமைக்கப்பட்டிருக்கிறது .
நன்றி சொல்வோம் ஆனந்தா சரினுக்கு ! அவரது செய்நேர்த்த்தியான செயல்பாட்டால் மகப்பேறு மருத்துவம் ஹோ மியோபதியில் வசப்பட்டிருக்கிறது.
அமி லான்ஸ்கி மற்றும் டைனஸ் ஸ்மிட்ஸ் இருவரது முயற்ச்சியால் ,குழந்தைகளின் வளர்ச்சியைத் தாக்கும் ஆட்டிசம்நோயை வெல்ல முடியும் எனும் தகவல் பரப்பல் மேலோங்கியுள்ளது.
நவீன வாழ்வில் பெரிதும் வியாபகம் கொண்டுள்ள பதட்டம், அச்சம்,கடும் சினம்,அடையாளச்சிக்கல், மன அழுத்தம், உளச்சிதைவு, ஆகிய மனோநிலைகள் , சிகிச்சையில் குவிமையம் கண்டுள்ளன . , தொடரும் !

No comments:
Post a Comment