Friday, 16 October 2015

எனது வகுப்பறை.......சினா மாரிட்டிமா

இன்று எனது வகுப்பறை --2
சினா மாரிட்டிமா!
வழமையாக, வயிற்றுப்புழுக் கொல்லி மருந்தாகவே , பழைய மருத்துவத்தில் பயன்பட்டு வந்திருக்கிறது
...
ஹோமியோபதியிலும், சில மேதைகள், இப்பயன்பாடு குறித்து அதிகமாய் பதிகின்றனர்
எப்போதும் மூக்கை நோண்டுதல்
தூக்கத்தில் பற்களை நறநறவென்று கடித்தல்.
ஆசனவாய் அரிப்பு
சினா குழந்தைகளுக்கு இனிப்பு அதகம்பிடிக்கும்
மிகு பசி
நிறைவாய் சாப்பிட்டு முடித்த கையோடு, மீண்டும் உண்ணுதல்
ஆனாலும் ஐயோடியம் போலவே உடல் மெலியும்.
அதிகமாய் சாப்பட்டதும் வயிற்று உபாதைகள் ஆரம்பித்துவிடும்.

மண்,சாம்பல்,சாக் பீஸ், கரி எல்லாவற்றையும் வாயில் போட்டுக் குதப்பும்
Picca of infancy
குப்புறப்படுத்துத் தூங்கவே விரும்பும்
இரவில் தூக்கத்தில் அலறி அடித்துக் கொண்டு எழும், பேய் பிசாசு உருக்கண்டு உடல் நடுக்குறும்
என்பதும் ஒரு சிடுசிடுப்பு, அழுகை
தோளில் போட்டுக்கொள்ளக் கோரும்
போட்டுக்கொண்டாலும் சமனமடையாது.
சுற்றியுள்ளவர்களை அடிக்கும
பார்த்ததையெல்லாம் தனக்குவேண்டுமென அழும்.
கொடுத்தால் தூக்கி எறியும்
எப்போதும் என்னைக் கவனி!
கேட்ட மாத்திரத்தில் தா!
பால் பிடிக்காது
தாய்ப்பால் குடிக்காது.
கொட்டாவி விட்டுக் கொண்டே இருக்கும்.
தொட்டால்பிடிக்காது
தலை சீவிவிட முடியாது
பல் சுத்தம் செய்துவிட இயலாது
சலூனுக்கு அழைத்துச் சென்று முடிதிருத்துவதற்குள் போதும் போதுமென்றாகிவிடும்!
விட்டு விட்டு வரும் சுரம்.
சுரம் வருமுன் பசி மிகுந்து நிறைய உண்ணும்.
வறட்டு இருமல், விட்டு விட்டு, தும்மலோடு
காலையில் தொண்டையை அடைக்கும்
இபிகாக் போல நாக்கு படிவம்ஏதுமின்றி சுத்தமாய் இருக்கும
சிறுநீர் கலங்கலாய்க் காணப்படும்.
கொஞ்சநேரத்தில் வெள்ளையாய் நுரைத்துக் கொண்டு பால்போல் தோற்றம் தரும்.
சிஞாபகம் வந்தது குறித்த புரிதலில், ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்த்துள்ளார் தீதியர் க்ராண்ட் ஜார்ஜ்
க்ளோ, 8 வயது சிறுமி.இரண்டு வயதிலிருந்து கடுமையான ஆஸ்த்மா தொந்தரவு
பல முறை அல்லோபதி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சகிச்சை பெற வேண்டியிருந்த்து. பல ஹோமியோபதி மருந்துகள் கொடுத்தும் நலமாக்கல் நிகழவில்லை.
ஒருநாள்,அவள், ஆஸ்த்மாவில் மூச்சுத்திணறலில் அவஸ்தைப்படும்போது உடனிருந்து கவனித்தேன்.
சிணுங்கிக் கொண்டேயிருந்தாள் யாரும் கிட்ட வர அனுமதிக்கவில்லை.ஒரு ஆறுதலுக்காய் பக்கத்தில் செல்லவும் விடவில்லை.
எனக்கு சினா ஞாபகம் வந்த்து. விசாரித்ததில் , முறையாக புழுக்கொல்லி மருந்துகள் க்ளோ எடுத்துக்கொண்டிருப்பதாய் அவள் தாய் கூறினாள்.
சினா, லம்பார் பங்க்சரையொட்டி வரும் என்கெஃபலைட்டீஸ நோய்க்கான மருந்து என நான் கூறியதும், க்ளோவின் தாய் கூறினாள்
" நான் பிரசவத்தின் போது மயக்கமடைந்துவிட்டேன் எப்பிட்யூரல் ஊசி போட்டதும். . ஃபோர்ஸெப்ஸ் போட்டுத்தான் குழந்தையை எடுத்தார்கள்."
நீங்கள் எப்போதாவது லம்பார் பங்க்சர் செய்துகொண்டதுண்டா?
ஏழு வயதில் எனக்கு மெனிஞ்சைட்டீஸ் சுரம் கண்டது. அப்போது அல்லோபதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டேன்"
எனக்குப் பொறிதட்டியது போலிருந்த்து.
சினா 200 ,க்ளோவுக்குக் கொடுத்தேன்
அதற்குப்பின் அவளுக்கு ஆஸ்த்மா தாக்குதல் வரவேயில்லை!

No comments:

Post a Comment