Friday, 16 October 2015

ஆரம் மெட்டாலிக்கம் தலைமைப் பண்புகள் கொண்ட ஆளுமை. வித்தல்காஸ் சொல்லுவார். நேர்மைக்கும், கடின உழைப்புக்கும்,தலைமைப் பண்புக்கும், பொறுப்புணர்வுக்கும், கடமையுணர்வுக்கும் ஆரம் சாலச் சிறந்தது. பெரும் நிதி சார் பொறுப்புக்கள் கொண்ட வங்கி மேலாளர் போல என்பார்.
இலக்கு குறித்த கவனம் எப்போதும். அடுத்தவர் இல்லை. அடுத்தவர் விமர்சனம் சகிக்க முடியாதது. அப்படியே தன் இருதயத்துக்குக் கொண்டு போய் விடுவர், அதன் உண்மையான பொருளில்..
இலக்கு எய்த முடியாத பொழுது, தலைமைபீடத்தையும் இழந்து, தான் தொட்ட... காரியம் துலங்காது என்றாகி, மனமுடைந்து, தற்கொலைக்கு முயற்சிப்பார்.
எல்லாம் முடிந்து போய்விட்டது , எப்போதும் துக்கம், சோகம்” என்று ஒற்றைப் பரிமாணத்தை மட்டுமே காட்டிஉள்ளதாகக் கூற்கிறார், ஜேன் ஸ்கால்ட்டன்
இதன் எதிர் நிலையான, தலைமை, கடமை, பொறுப்புகள் ஆகியவற்றை ஆரம் மெட்டில் காட்டியவர் மரு. ராஜன் சங்கரன் ஸ்கால்ட்டன்.
ஸ்கால்ட்டனின் அரசியலையும், குறுக்கல் வாதத்தையும் விட்டுவிடுவோம்.
ஹோமியோபதியில் போலாரிட்டிக் கருத்தாக்கம் பற்றிக் கொஞம் பேசுவோம்.
ஒரு உண்மை அல்லது னிலைபாடு , இரு துருவ எதிர்னிலைகளில் வெளிப்படலாம்
நேட்ரம் மூரில் உப்பை அதீதமாய் விரும்பும் நிலையும் உண்மை
உப்பே பிடிக்காத நிலையும் உண்மை.
மெய்ப்பித்தலில்போது, இரண்டு குணங்களும் வெளிப்பட்டிருக்கும்.
இரு துருவ நிலைகளும் ரெப்பர்டரியில் இடம்பெறும்
என்ன, மதிப்பெண் வழங்கலில் மட்டும் வேறுபடும்.(grading of rubrics)
இந்த இரு எதிர் துருவ நிலைகளையும் ஆரம் மெட்டில் ஸ்கால்ட்டன் விள்க்குவார்
தலைமை, கடமை உணர்வுகள் ஒரு புறம்,
இதன் எதிர் நிலை, மனம் உடைந்து சோகத்தில் மூழ்கு, உயரத்திலிருந்து ஒரே குதி எல்லாம் முடிந்து விடும்… தற்கொலை உணர்வு.
இறுதியாய் சொல்வார். மொத்தத்தில் ஆரம் மெட் தன் குழாமில் செயல்படுபவர்களையும், தன்னிடம் விடப்பட்ட பொறுப்புக்களையும் எப்போதும் கைவிடமாட்டார். கடைசிவரை, தன் இழப்புக்களை பொருட்படுத்தாமல் காப்பாற்றுவார்..
ஸ்கால்ட்டனின் அரசியலைவிட, ஸ்கால்ட்டன் ஆரம் மெட்டில் காட்டும் எதிர் துருவ நிலைகள் அருமையான விளக்கம்.
ஒருவேளை, அப்படி போலாரிட்டியை விலக்குவதற்காகக் கூட வித்தல்காஸில் ஒரு பகுதியைக் குறுக்கியிருக்கலாம்.
கருத்தாக்கம் நன்றாக விளக்கப்பட்டிருக்கிறது 1.
பாராட்டுவோம்.

1 comment: