Wednesday, 7 August 2013

 
தோமஸ் பாப்லோ பாஸ்சிரோ, அர்ஜென்டீனிய ஹோமியோபதியர்.  50களில், மீண்டும் ஹோமியோபதியை புனர் நிர்மாணம் செய்தவர். சர்வதேச ஹோமியோ நிறுவனங்களைத் தலைமை தாங்கி வழி நடத்தியவர்.  துயரர் சரிதை கேட்டலில் மனக் குறிகளுக்கு உச்சபட்ச முக்கியத்துவம் கொடுத்தவர்.  அவரது ஒரு அற்புத சிகிச்சையை கீழே பதிவு செய்திருக்கிறேன்.  

 

அவர் ஒரு ரேடியோ டெக்னீஷியன். வலது விலாப் புறங்களில் கடுமையான வலி.  குறைந்தது 20 வருடங்களுக்கும் மேலாக.  என்ன காரணம் என கண்டுபிடிக்க முடியவில்லை.  கல்லீரல், பித்தப்பை, அமீபா தொற்று, குடல்வால் ஒவ்வாமை எல்லாவற்றுக்கும் சிகிச்சை செய்து விட்டார்கள். வேறு வழி இல்லாததால், நியூயார்க்கில் வைத்து லாபெரோடமி அறுவை செய்து பார்த்தார்கள். வலிக்கான காரணம், உறுதியாக எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.

துயரரது முக்கியமான குறிகள்:

பால் குடித்தால்< வலி

பழங்கள்<வலி

வெறும் வயிறு< வலி

அதிக தாகம்.  கழுத்தில் வேர்வை.  சிடுமூஞ்சித்தனம், பதட்டம் அதிகம். இக்குறிகளை மட்டும் வைத்துக்கொண்டு எளிதில் மருந்தைத் தேர்வு செய்ய இயலவில்லை.

அவரது ஆழ் மனதைத் தேடினால் அவருக்கு சமூகத்தின் மீது கடுமையான கோபமும் வன்மமும் இருந்தது. 5 மூத்த சகோதரர்களும் அவரும் சேர்த்து பெரிய குடும்பம். அவரது 15வது வயதில் தந்தை தவறி விட்டார். படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குக் கட்டாயம் போகவேண்டிய சூழல். எல்லோர் மேலும் எரிச்சல்..  அடிக்கடி தன் தலை
விதியை நொந்து கொள்வார். அவரது விரோதிகள் அவரை துரத்திப்பிடித்து, அவமானப்படுத்துவதாய்த் தோன்றியது. நாளுக்கு நாள் பிடிவாதக் காரனாகவும், யாருக்கும் பணிந்து போகாதவனாகவும் மாறிப்போனார். தனது மேலதிகாரியை பகைத்துக் கொண்டார். எல்லோரையும் தாக்கத் தொடங்கினார். ஒரு வேலையிலும் நீடிக்க முடியவில்லை.  அவரது ஆளுமை என்பது

அடுத்தவர்களைக் குறை கூறுவது.

கீழ்ப்படியாமை

அலட்சியப் படுத்தல்

தனித்திருக்க விருப்பம்.

ஆச்சரியம் தரும் வகையில், மருந்துகாண் பேரேட்டில் பார்த்தால் சின்கோனா(சைனா அஃபீசியனாலிஸ்) பொருத்தமான மருந்தாக வந்தது. சின்கோனா 1 எம் 1டோஸ்.  ஒரு மாதம் கழித்து 10 எம் 1 டோஸ். வலி ஒரே வாரத்தில் நின்று போய்விட்டது.  6 மாதங்களில் ஆளே மாறிப் போய்விட்டார். அவரால் எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள முடிந்தது. அடுத்தவர்களோடு சண்டை பிடிப்பதுமில்லை, தாக்குவதும் இல்லை.   

No comments:

Post a Comment