Saturday, 2 May 2015

களவாடப்பட்ட என் தொட்டில்

எப்போதும் நான் ஆட, துள்ள
உறங்க, கிறங்க,வீறிட்டழ
சிணுங்க எனக்கிருந்தது
தொட்டிலொன்று

இரு வேறு முணைகளுக்கு
இடையில் தொங்கியபடி
எந்நாளும் கிடக்க
தரையைத் தொடாமலே

 முன்னும் பின்னுமாய்
அளந்த வீச்சில் பயணம்
சில சமயம் குலுக்கலோடும்!

ஆடியதைவிட, துள்ளியதைவிட
முடங்கிக் கிடந்ததே சுகம்
கைகளை நெஞ்சில் கட்டி
காலை குறுக்கிச் சேர்த்து!

எப்போதும் காற்றில்
மிதந்தபடி தொட்டிலில்
கூரையைத் தாண்டிய
கனவுகளோடு

என் தொட்டிலை ஏனோ
யாரோ களவாடிப்போக
இன்று தரையில்
தொட்டிலின் நினைவோடு

No comments:

Post a Comment