Saturday, 29 March 2014

முக்காலத்தும் முடிவிலா வழக்குகள்

இரை நிரப்பிக்கொண்டு
காத்திருக்கிறது பாம்பு
இப்பொழுதும் தன் வாலை
தான் சுவைக்க முஸ்தீபுகள்

 முன்னால் மண் சரியும்
குவியலில் ஈரம் கசிய
கால் விரித்தும் மடக்கியும்
பாய்ச்சலிடும் தவளை!

தப்பித்தலொன்றே இலக்காய்
யுகம் யுகமானப் போட்டி...

விழுங்குபனுக்கும் இரைக்கும்
இடைத்தூரம், வெளி, காலம்
எப்போதும் நிச்சயமற்றதாய்! பாம்பு
மெல்ல மண்ணூர்ந்து, கண் பிதுக்கி
தந்திர வேகமாய் நெருங்கும் இரையை

 சிறியவனின் சிக்கிக் கொள்ளல்
விழுங்குபவன் உரிமையென விதி!
தன் வாலைத் தான் சுவைக்கும் பாம்பும்
வீழ்ந்துபடல் விதிக்கப்பட்ட தவளை
சரியும் மண்ணும் வெளியும் இன்னபிறவும்
முக்காலத்தும் முடிவிலா வழக்குகள்

No comments:

Post a Comment