- யார்?யார்? யாரிவர் யாரோ?
இலைக்கொத்தின் நடுவில்
வன்ணப்பூக்களைச் செருகி
தினம் தினம் அலங்கரித்தவர் யார்?
புல்லின் நுனியில் ஈரம் காட்டி
பனிப்பொழிவெனச் சொன்னது யார்?
...
காட்டு மரங்களைக் காற்றால் உரசி
தீயொளி எழுப்பி தீ மிதித்தது யார்?
ஐஸ்க்ரீம் குளிர்ச்சியில் தன்னிலை மறக்க
அழகையும் ருசியையும் சேர்த்தது யார்?
யார் யாரெனக் கேட்கச் சொன்னது யார்?
அவர் இவரெனப் பதில் தந்ததும் யார்?
அரசு இலை நுனியை உற்றுப்பார்த்தேன்!
பரியையும் நரியையும் தொட்டுப் பார்த்தேன்!
அரளியின் விஷம் அறிந்து கொண்டேன்!
அடுக்களைப் பூனையாய் அடங்கியது மனம்!
பாம்பைக் கவ்வ துரத்தும் கீரியாய்
பதில்களைத் துரத்தும் கேள்விகள் சதா!
கண் இமைக்குள் உலக ஜாலம்!
ஜால வெளியில் நீந்துது காலம்!
கால வெளியில் முகம் மறையும் மாயம்
வரவேற்பறைச் சுவர் உருட்டும் தாயம்
புத்தனோ, க்றிஸ்துவோ காந்தியோ
அலங்காரச் சட்டகத்தில் ஒளியுமிழ்வர் மாறி மாறி!
கேள்வி கேட்பவர் ஒளி வேண்டுபவர்
பதில் கண்டவர் ஒளியுமிழ்பவர்!
Saturday, 29 March 2014
யார்? யார்? யாரிவர் யாரோ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment