- காத தூரம் மாயமான் வேட்டை
காதறுந்த ஊசியை கையகப்படுத்த
காவிக் கோஷம் காதைப் பிளக்குது
கடவுச் சீட்டு இல்லாமலே
கடல் தாண்டும் யோசனைகள்
பொரிஉருண்டைக் கொரிக்கும் பற்கள்
ப்ளாட்டின முலாம் பூசி நிற்கும்
கழுத்தில் தேக்கிய விஷமெடுத்து...
ஆயிரம் பேருக்கு பங்கு வைக்கும்
தேவ தர்மம் தலை தூக்கும் நாளில்........
தொட்டாற் சுருங்கியை நிமிர்த்திட
திகட்டாத விவாதம் தொடுவான் வரை
யானைக்குக் குடைக் கொசு வலை தைக்க
மான் கொம்புக்குத் தங்கக் காப்புப் பூட்ட
சகடையில் உருளும் கணப் பொழுதுகளுக்கு
வர்ணம் பூசி வாசனை திரவியம் சேர்க்க......
கொள்முதல் வேண்டி திருவோடு ஏந்தி
வாசல் குறட்டில் வழுக்கி விழுந்தவன்
உலக மயமாய் வலம் வருகிறான்......- நிலத்தையும் நீரையும் வைத்து சூதாடல்
- மரபு வழி மாற்றுதல் அரிது என்கிறான்.
குட்டைத் தண்ணீரில் முக அழகு பார்த்தே
வீனாய்க் கழியுது எங்கள் பொழுது.
Saturday, 26 April 2014
வாசல் குறட்டில் வழுக்கி விழுந்தவன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment