- அம்மா டீ வடிகட்டுவதைப் பார்த்திருக்கிறேன்
சதுரமாய் வெட்டிய துணியே வடிகட்டி
சாரமிழந்த சக்கைத்தூள் அனைத்தையும்
சாமர்த்தியமாய் தேக்கி வைத்து ஒருசேர
வெளித்தள்ள அம்மாவுக்கு உதவி செய்யும்
புழக்கத்தில் அதிகம் கருப்பேறி அழகிழக்கும்
இருந்தாலும் அவள் அதை மாற்றுவதில்லை
பத்திரமாய் அடுக்களையில் உலர்த்தி
தனியிடம் தந்து பாதுகாப்பாய் வைத்திருப்பாள்...
விருந்தினர் வந்தால் ஒரே நாளில் பலமுறை
பயன்படும் வடிகட்டி குஷியாய் இருக்கும்
அம்மாவுக்கு மட்டும் தே நீரைவிட முக்கியம்
தினமும் புழங்கும் வடிகட்டியே எப்போதும்
சக்கைகளை வெளியேற்றக் கையாளும் தந்திரம்
அவளிடமிருந்து நாங்கள் கற்கவே இல்லை
எங்கும் வியாபித்து சேகரமாகி தொற்று வியாதியாய்
சக்கைகள் வலம் வர, வடிகட்டித் தேடல் தொடரும்
பொருத்தமான அளவில், வடிவில், கறைபடாமல்.
Saturday, 3 May 2014
அம்மாவின் வடிகட்டி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment