பால் சக்கரியாவின் சிறு கதை Bar. Guilt தான் அதன் முக்கியக் கரு. ஆனால் மிகவும் வித்தியாசமான தளத்தில் எழுதப்பட்ட நல்ல கதை. இரண்டு நண்பர்கள் ஜோஸ், தாமோதரன் இருவரும் பாரில் அமர்ந்து மது அருந்துகிறார்கள். தங்களுக்குத் தோன்றிய மரண பயம் குறிக்கும் கனவுகளைப் பரிமாரிக் கொள்கின்றனர். பக்கத்து இருக்கையில் இருப்பவர் அறிமுகம் செய்து கொண்டு, அனுமதியுடன் தனது, சொந்தத், துயரமான வாழ்வை, குற்றவுணர்வைப் பகிர்ந்து கொள்கிறார்.
ஆப்பிரிக்க நாட்டில் ஆசிரியர் வேலைக்குப் போன இந்தியர் சூழ் நிலை வசத்தால் மனிதக் கொலை புரிகிறார். கொலைக் குற்றம் சாட்டப்பட்டு, நண்பர்கள் எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டு, தூக்குத் தண்டணையும் விதிக்கப்படுகிறது. தண்டணை நிறைவேற்றப் படும் நாளன்று, எதிர்பாராத விதமாக, தூக்குக் கயிறு அறுந்து விழ, இன்னொரு முறை தூக்கிலிட சட்டம் அனுமதிக்காததால், உயிர் தப்புகிறார். பழைய நண்பர்கள், அவரைப் பார்க்கக் கூட விரும்பாதவர்கள் விமானப் பயண டிக்கெட் வாங்கிக் கொடுத்து, இந்தியாவுக்கு அனுப்பி வைக்கின்றனர். மனைவி அவரைப் புறக்கணிக்கிறார். மகன் மட்டிலும் அன்பைப் பொழிகிறான் இருந்தாலும், மனைவி மகனோடு ரயிலின் முன் விழுந்து தற்கொலை செய்துகொள்கிறார்.
அவர் அனாதை உணர்வுடன் அலைந்து கொண்டிருக்கிறார். இது தான் கதை.
அவர் மனிதக் கொலை (culpable homicide amounting to murder) புரியும் சூழல் என்ன?
இதுவரை, சிறுகதையில், யாரும் இந்த சிக்கலைக் கையாண்டதில்லை என நினைக்கிறேன்.
நான் சட்டக் கல்லுரியில் மாலை நேர வகுப்பில் குற்றவியலும், இந்திய தண்டனைச் சட்டமும் படித்தபோது எனது பேராசிரியர் ஜெயமணி விஸ்தாரமாக விவாதித்த ஒரு வழக்கு-சரிதை (case-law) நினைவுக்கு வருகிறது. “R vs Dudly & Stephans” , எனும் மனித மனத்தின் சிடுக்குகளை நன்கு விளக்கும் கேஸ். 1884ஆம் ஆண்டு . சுருக்கமாகச் சொன்னால், ஒரு சிறிய கப்பலில் டாம் டூட்லி, ஸ்டீபன்ஸ், ப்ரூக்ஸ் மற்றும் 16 வயது இளைஞன் ரிச்சர்ட் பார்க்கர், நால்வரும் நீண்ட கடற் பயணம் செல்கின்றனர். கப்பல் விபத்துக்குள்ளாகிறது. ஒரு சிறிய லைஃப் போட்டில் ஏறி நால்வரும் தப்பிக்கின்றனர். கையில் உணவிருப்பு இரண்டே இரண்டு டின்கள் டர்னிப், கொஞ்சம் நல்ல நீர் குடிக்க. இரண்டு நாட்களில் ஒரு டின் டர்னிப் தீர்ந்து போக ஒரு கடல் ஆமை மாட்டுகிறது. அதைக் கொன்று நீருக்குப் பதிலாக அதன் ரத்தத்தைக் குடிக்கின்றனர். அதான் மாமிசம் ஒரு சில நாட்களுக்கு வருகிறது. அவர்கள் எல்லொரும் நீண்ட கடற் பயண அனுபவங்கள் உள்ளவர்கள். கடல் நீர் அருந்த லாயக்கற்றது. அப்பாயகரமானது. இருந்தாலும், ஆபத்துக்கு வேறு வழியின்றி, குடித்ததில் பார்க்கர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அபாயத்திலிருக்கிறான். ப்ரூக்ஸும் தொந்தரவுக்குள்ளாகிறான். கைவசம் உணவே இல்லை. டூட்லியும், ஸ்டீபன்ஸும் நிலைமையை விவாதிக்கின்றனர். பார்க்கர் எப்படியும் இறந்து விடுவான். அவன் இறப்பதற்குள் அவனை நான் கொன்றுவிடுகிறேன். அவனது மாமிசத்தை மூவரும் பகிர்ந்து கொள்ளலாம். ரத்தத்தையும் குடிக்கப் பயன் படுத்திக்கொள்வோம். வெற்று அறவுரைகளுக்கு இடமில்லை. மூவர் வாழ வேண்டும். கடல் பயண விதிகளுக்கு இது ஒன்றும் முரணானது இல்லை. நேர்மையோடும், உறுதியோடும் டூட்லி வாதிக்கிறான். ஸ்டீபன்ஸும் ஒப்புக்கொள்ள ப்ரூக்ஸையும் இணைத்துக் கொள்கின்றனர். தன், கை பேனாக் கத்தியால் பார்க்கரின் கழுத்து ஜூகுலார் சிரையை துண்டிக்கின்றான் டூட்லி. நிறைவேற்று முன் கடவுளிடம் பார்க்கருக்காகவும் தங்களுக்ககாவும் ப்ரார்த்திக்கின்றனர்.
ரத்தம்மும், நர மாமிசமும், அடுத்த கப்பல் வந்து அவர்கள் மூவரையும் காப்பாற்றும் வரை உதவி செய்கிறது. தரைக்கு வந்ததும், போலிஸ் கைது செய்து சிறையில் அடைக்கிறது. வழக்கு ஆரம்பிக்கிறது. அவர்கள் மூவரும் நடந்ததை ஒப்புக் கொள்கின்றனர். ப்ரூக்ஸ் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு, சாட்சியாக மாறுகிறான். வழக்கறிஞர் காலின்ஸ் (the great necessity) “”பெரும் தேவைக் கொள்கையை”” முன்வைத்து வாதிடுகிறார். நீதிபதி அக்கொள்கையை மனிதக் கொலையில் தற்காப்பு வாதமாக பொதுப்புத்தி சட்டத்தில்(common law) வில் ஏற்க இயலாது எனப் புறக்கணிக்கிரார். இருவருக்கும் தூக்குத் தண்டனை வழங்கப் படுகிறது.
இந்த உண்மைச் சம்பவமும், வழக்கும் நடைபறுவதற்கு பல பத்தாண்டுகளுக்கு முன்னரே, 1838ல்அமெரிக்க எழுத்தாளர் எட்கர் ஆலன் போ The Narrative of Arthur Gordon Pym of Nantucket எனும் நாவலை எழுதுகிறார். கடற்பயணம், கலகம், மனிதக் கொலை, நரமாமிசம் உண்ணுதல் ரத்தம் குடித்தும், தங்களின் சிறு நீரைக்குடித்தும் உயிர் தரித்தல், மற்றவர்கள் உயிர் வாழ, யார் முதலில் மரணிப்பது என்பதைத் தீர்மானிக்கக் குலுக்குச் சீட்டுப் போட்டுத் தெரிவு செய்வது எல்லாம் அதில் வருகிறது. பெயர்கள் மட்டிலும் வேறு. அவ்வளவே. இந்நாவலில் கொல்லப்படும் மாலுமி தான் குலுக்குச் சீட்டு முறையை பரிந்துரைக்கிறான், ஆனால், சீட்டு அவன் பெயருக்கே வருகிறது. அவன் கத்தியால் குத்திக் கொல்லப் படுகிறான். அவன் மாமிசம் புசிக்கப் படுகிறது. அவனது பெயர் நாவலில் ரிச்சர்ட் பார்க்கர். 48 வருடங்கள் கழித்து நடந்தேறிய R vs Dudly & stehans உண்மை வழக்கில் கொல்லப்படுபவனும் ரிச்சர்ட் பார்க்கர். பதினேழாம் நுற்றாண்டில் நடந்த செயிண்ட் க்ரிஸ்டோஃபர் கடற்பயணத் துயர சம்பவங்கள் படைப்பாளிகளின் கூட்டு நனவிலி மனதில் இருந்திருக்க வேண்டும். ஆலன் போ மிகச் சிறப்பான இலக்கிய முன்னோடியாய் இச் சம்பவங்களைப் பதிந்திருக்கிறார்.
இப்போது மீண்டும் பால் சக்கரியாவுக்கு வருவோம். கதை சொல்லி ஏன் மனிதக் கொலை புரிகிறான்.?
அந்த ஆப்பிரிக்காவில் வேலை செய்யும் இந்திய ஆசிரியர் மாணவர்களைக் கூட்டிக் கொண்டு ஒரு பாலைவனத்திற்குக் கல்விச் சுற்றுலா செல்கிறார். வழி தப்பிவிடுகிறது. வாகன ஓட்டியும், அவரின் உதவியாளரும் தொலைந்து போகின்றனர். பின்னால் அவர்களது பிணங்கள் மட்டுமே கிடைக்கின்றன. வயதில் மூத்த சில மாணவர்கள் வழி தேடிப் போய் அவர்களும் இறந்து போகின்றனர். எஞ்சியவர்கள் ஆசிரியரும் இன்னும் எட்டு மாணவர்களும் மட்டும்; உணவோ நீரோ இல்லை; எல்லோரும் இறக்கும் அபாயத்தில் இருக்கின்றனர். வேறு வழியில்லை. மரணத்தின் நுழைவாயிலில் முதலில் இருப்பவனை, பிரார்த்தனை செய்தபடியே ஆசிரியர் கொல்கிறார். அவனது ரத்தம் மற்றவர்களுக்குக் குடிக்கப் பயன்படுகிறது. நரமாமிசம் உண்கின்றனர். அவர்களுக்கு உயிர் கொஞ்சம் கொஞ்சமாய் துளிர்க்கிறது, சிறு நீர் சுரக்கிறது அதை அருந்தி உயிர் வாழ்கின்றனர். கொஞ்ச நாளில் ஒரு வாகனம் அவர்களக் கண்டெடுத்து சொந்த ஊர் திரும்புகின்றனர். ஊர் அந்நியப்பட்டு நிற்கிறது . ஆசிரியர் கொலைக் குற்றம் சாட்டப் படுகிறார். அவருக்கு வழக்கில் உதவி செய்ய யாரும் இல்லை. முகங்கொடுத்துப் பேசுவோரும் யாருமில்லை. மரண த/ண்டனை விதிக்கப்படுகிறது.
இச்சிறுகதையில் கடற்பயணத்திற்கு, பாலைவனம் ஒரு பதிலி. விபத்து, வழிதவறல், உணவுப் பற்றாக்குறை , பிரார்த்தனை செய்தபடியே கொல்லுதல் நரமாமிசம் உண்ணல், ரத்தம் குடித்தல் எல்லாம் நெய்யப்பட்டிருக்கிறது. ஜோஸும் தாமோதரனும், மாணவனைக் கொல்லுமுன் அவர் கடவுளிடம் சொன்ன பிரார்த்தனையால் சிந்தனை வயப்படுகின்றனர். இதெல்லாம் கடவுளுக்குத் தெரிந்துதான் நடக்கிறதா? என்ற அறம் சார்ந்த கேள்வியோடு கதை முடிகிறது.
வாசிக்கவும் யோசிக்கவும் நிறைய அறிவுத்தீனி தரும் பால் சக்கரியாவுக்கு நன்றி. தமிழில் மொழிபெயர்த்த சுரா வுக்குப் பாராட்டுக்கள்.

No comments:
Post a Comment