கால் அண்டா ஆழத்தை
காலண்டர் துணைக்கொண்டு
அளக்கிறாயா
என்று கேட்டார்
கவிஞர் ந.பிச்சமூர்த்தி
மீள மீள இதே கேள்விதான்
எழுகிறது
அண்டம் சார் நகர்வுகளாயினும்
சரி
அரசியல் சார் முடிவுகளாயினும்
சரி
பெரிது சிறிது,
சரி,தவறு
அளவீடுகள் எப்படி?
ப்ரம்மாண்டம் தவிர்த்த
சிறிதே அழகு
கட்சிக்காரர்களுக்கும்
இதே ப்ரச்சினையே
எல்லா காலத்துக்குமான
நிரந்தர
அளவீடுகளும் இல்லை
மாற்றங்களே மதிப்பீடுகளை
காட்டித்தரும்
என்பது பழங்கணக்கானது
மாற்றங்களும் தரத்தைச்
சொல்லுவதில்லை
மண் மிதிக்கும்
எந்திரமென உருளும் காலம்
பெரிதும் சிறிதும்
விளக்கமற்று
நிரந்தர இயக்கம்
உண்மைதானோ?
No comments:
Post a Comment