எனது அலுவலக ஆசான்களில் மிக முக்கியமானவர் திரு நரேந்த்ர நாத் ஜோஷி. ஒல்லியான உடல் வாகு, ஒரே சீராய். பஞ்ச கச்சம்-,மேலே வெள்ளை ஜிப்பா. தடித்த ஃப்ரேம் சோடா புட்டி கண்ணாடி. தூக்கி வாரிய கேசம். எப்போதும் கலகலப்பு, கிண்டல், கேலி. எந்தக் கூட்டத்திலும் பளிச்சென தனது கருத்தை வெளியிடும் தைரியம். யாராவது அது குறித்து அதிருப்தி தெரிவித்தால் அதற்கும் ஒரு எள்ளல் தயாராய் வைத்திருப்பார்
தொழிற்சங்கக் கூட்டங்களில் நன்றாக வீரா வேசமாக முக்கியப்புள்ளி பேசி முடித்ததும், அடுத்துப் பேசுவதற்கு ஜோஷியைத்தான் அழைப்பார்கள். அப்படியே நிலைமை மாறிவிடும். வீராவேசம் சமனப்படுத்தப்பட்டு எல்லோரும் சாதாரண நிலையை அடைவார்கள். அவர் பேச்சு விகடம் தான். ஆனால் நிர்வாகம் வெட்கித் தலை குனிய வேண்டி இருக்கும். அடுத்து பேசுபவரும் தப்பித்தார். அவர் அவ்வளவு வீராவேசம் பேச்சில் வெளிப் படுத்த வேண்டியிராது. கூட்டம் முடிந்ததும், தோழர்கள் சூழ்ந்து கொள்ள, கேலி இன்னும் அரை மணி நேரம் நீடிக்கும்.
ஜோஷிக்கு ஒரே பிள்ளை. மனைவி இறந்துவிட்டார். மறுமணம் செய்து கொள்ளவில்லை. வயதான தாயார் பிள்ளையை வளர்த்தார். ஜோஷி புலம் பெயர்ந்த குஜராத்தி பிராமணர். தஞ்சாவூரில் மானோம்புச்சாவடியிலிருந்து மெடெஆஸுக்கு வேலைக்காக வந்தவர். கல்விமான் பாலகிருஷ்ண ஜோஷியின் ஒன்று விட்ட சகோதரர்.
ஜோஷு பூணூல் அணிய மாட்டார். ஆனால் பத்திரமாக ஒரு ஆணியில் கழற்றி மாட்டியிருப்பார். 90 வயதை தாண்டிய அவரது தாய் தஞ்சையிலிருந்து வரும்போது மட்டும் அதை எடுத்து மாட்டிக்கொள்வார். ”தெரிஞ்சுது தொலைச்சுப்பிடுவா தொலச்சி” என்று பயந்த பிள்ளையாய் கண்ணைச் சிமிட்டுவார். தன் மனைவி குறித்துத் தெரிந்தவர்களிடம் பேச நேரிட்டால், அவர் உயிரோடு இருப்பது போலவே பேச்சின் தொனி இருக்கும். .
79-80ல் மெட்ராஸ் ஃப்லிம் ஸொசட்டியில் என்னை அறிமுகப்படுத்தினார். நிமாய் கோஷுடன் பரிச்சயப் படுத்தினார். எங்கு போனாலும் சைக்கிள் தான். தனது கெடிலாக் என்று பெருமையுடன் சொல்லுவார். தத்துவப் பேரறிஞர் ஜே.கே சென்னை வரும்போது, தவறாமல் அவரது மாலை நேரக் கூட்டத்திற்கு ஜோஷியும்,தோழர் ஏ.வீ.வெங்கட்ராமனும் நானும் போவோம். அவர்கள் இருவரும் பேசும்போது தானாகவே நான் அடங்கிய தொனியில் இருப்பேன்.
ஜோஷி கோவில் சார்ந்த மனிதரில்லை. ஆனால் வீட்டில் ராமக்ருஷ்னர் படம் மட்டும் சுவற்றில் தொங்கும். ”குச் கரோ” என்ற வார்த்தையை அவர்தான் எனக்குப் பரிச்சயப் படுத்தினார். ஜோஷி சொல்லுவார்: வாழ்க்கைக்குப் பெரிதாக ஒன்றும் பொருளில்லை, நாமாக ஏதும் அர்த்தப்படுத்திகொண்டால் தான் . ஆக, தொடர்ந்து ஏதாவது செய்..”
1988- ஜுன் மாதம் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அலுவலக நண்பர்கள் தங்கள் பிள்ளைகளை எஞ்சினியர், மருத்துவர் என்று படிக்க வைக்கும் போது, தன் பையனை ஜோஷி, ப்ராஸ்தெடிக்ஸ் & ஆர்த்தாட்டிக்ஸ் டிப்ளமா படிக்க வைத்தார். ஏன் இந்த படிப்பு என்று யாராவது கேட்டால். ””ஒரே வேலை இல்லாத் திண்டாட்டம், படிச்சுட்டு வேலை கிடைக்கலைன்னா. ரோட்டோரம் பொட்டியை வைச்சுக்கிட்டு. மாட்டுக்கு, மனுசனுக்கு லாடம் கட்னாப்போச்சு”” என்று அதற்கும் கிண்டலாய் பதில் வரும்.
சினிமா, நாடகம் எல்லா சிந்தனைப் பள்ளிகளும் அத்துப்படி அவருக்கு. ரித்விக் கடக். ரே. சென், அரவிந்தன், குரோசோவா. பொலான்ஸ்கி எல்லாரும் தாராளமாய்ப் பேச்சில் புரளுவார்கள். எல்லாரும் அவரோட பங்காளிகள் என்று சொல்லுவார். கே. பாலச்சந்தர் அவரோட எங்கள் அலுவலகத்தில் வேலை பார்த்தவர். நாடகத்தின் புதுமைகளை அலுவலகத்தில், அறிமுகப்படுத்தியவர். ஜோஷி எங்களோடு கூத்துப்பட்டறை, பரீக்ஷா நாடகங்கள் பார்க்க வருவார். வெகுவாகப் பாராட்டிப் பேசுவார். வெளியிலிருந்து பெற்ற தாக்கத்தினால், எங்கள் அலுவலக நாடகப் போட்டிகளில் நாங்கள் கட்டாயம் பங்கேற்போம். அபத்த நாடக வகை எங்கள் தேவைகளுக்கு ஏதுவாய் இருந்தது. பஷீரின் சிறுகதையை நீள மூக்காயணம் என்று ஓரங்க நாடகமாக்கினோம். அரசியல் அங்கதம் ; ஜோஷி நடிக்கவும் செய்தார். இன்னும், ”ஹிரண்யாய நமஹ அலயஸ் மக்கள்= பாவ்லோவின் நாய்கள்” ”சக்திவதை என்றுமாய்,” ”மனிதச்சங்கிலி” எல்லாவற்றுக்கும் ஜோஷியின் ஆதரவு உண்டு, பங்கேற்பும் உண்டு. ஒத்திகை நடக்கும்போது கூடவே இருந்து தவறுகளைச் சுட்டிக்காட்டுவார். மற்றவர்களிடம் பேசும்போது அவருடைய நாடகங்களாகவே அவை மாறிவிடும்.
அண்டன் செகாவின் பச்சோந்திகள் நாடகத்தைத் தமிழில் 88ல் எங்கள் அலுவலகத் திறந்தவெளியில் நடத்தினோம். பல்லவபுரத்தின் பாடல்கள் இரண்டை நாடகத்தில் சேர்த்திருந்தோம். ’”நெட்டமரம், தொப்பை சரிஞ்ச மரம்”’ ””கொக்கு கொம்பு குடல் பாஞ்சு குள்ள நரி செத்துப்போச்சு””-இரண்டும். தோழர் சண்முகம் டேப் அடித்துக்கொண்டு பாடுவார். ஜோஷி எழுந்து நின்று ஆர்ப்பரித்து ஊக்கப் படுத்தியது எங்களுக்குப் பெரும் பலம்.
தனக்கு. தன் மருமகளுக்கு, பேரன் பரிட்சை பயத்துக்கு, பேத்திக்கு என்று ஹோமியோபதி சிகிச்சைக்காக அடிக்கடி கூப்பிடுவார். வெள்ளை உருண்டைகளில் நம்பிக்கை உள்ள மனிதர் ஜோஷி.
ஜோஷி 70களின் பிரதிநிதி. அவரைப் பார்க்கும் போதெல்லாம், தாமோதர ஆசான் பாத்திரம் எனக்கு ஞாபகம் வரும்.அவர் உரையாடல்கள் அப்படியே இருக்கும். எங்கள் அலுவலக வெளியின் அற்புத மனிதர்களில், எங்களை இளைஞர்களாக அடையாளம் கண்டு, தொடர்ந்து ஆற்றுப்படுத்தியவர் நண்பர் ஜோஷி.
மகன், பேரன் இருவரும் அதே படிப்பு, அதே வேலை. அசோக் நகரில் க்ளினிக் வீட்டிலேயே. மாற்றுத்திறனாளிகளின் தேவைக்கேற்ப கேலிப்பர்ஸ் செய்து கொடுப்பார்கள் ஜோஷி சொல்லுவார் ”” யாராவது ஏழை மாற்றூத்திறனாளீயாய் இருந்தால் என்னிடம் அனுப்பு. இலவசமாய் செலவு இல்லாமல் சுரேஷ் ஜோஷி செய்து கொடுப்பான்”” அவரது குணம் அடுத்த தலைமுறைகளில் அப்படியே படிந்திருக்கிறது. ஜோஷி பெரும் மனிதாபிமானி. அவரது ரசனைகள்-அவர் ஆகிவந்த முறைமைகள், இந்த 85 வயதிலும் அவரை இளைஞராகவே வைத்திருக்கிறது.

No comments:
Post a Comment