மன்னார்குடியில் இருவரோடு இலக்கிய உரையாடல்கள், சலிப்பின்றி நிகழ்த்த முடியும். முதலாமவர் – திரு. கரிச்சான் குஞ்சு. நேஷனல் உயர் நிலைப்பள்ளியின் தமிழாசிரியர்- நாராயனசாமி ஐயர். என் அப்பாவின் தோழர். சிறுகதையாசிரியர், நாவலாசிரியர். மானிடத்தின் பசிகளைத் தரிசித்தவர். எனது சகோதரியின் திருமணம் அவரது தலைமையில் நடந்தது. எங்கும், எப்போதும் இலக்கியப் பேச்சென்பது அவருக்கு வெல்லக்கட்டி.
இரண்டாமவர்- திரு எஸ்.மோஹன் அனந்த ராம். வாடகை அறை, சுற்றிலும் இலக்கிய இதழ்கள். அவரது சிறுகதைகள் தினமணிக்கதிரில் அதிகம் வெளிவந்தன. பாரதியின் சக்தி வழிபாட்டில் ஆரம்பித்து, கார்ல் மார்க்ஸ், பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்,அரிஸ்டாடில், விவேகானந்தர், கலை இலக்கியம், நாடகம் என எது குறித்தும் உரையாடலாம். ஒல்லியாய், உயரமாய்த் தோன்றினாலும், இலக்கியப் பேச்சில் அவர் கண்களில் ஒளி வந்து விடும். மணிக் கணக்கில் பேசுவோம். சில சமயங்களில், மன்னார்குடியின் பொது வெளிகளான, தேரடி, பந்தலடி, கோட்டூர் ரெங்கசாமி முதலியார் நூலகம், என பேசுமிடங்கள் அமையும்- நின்று கொண்டே. என் கல்லூரி படிப்பின் பின் நானும், எஸ்.எம்.ஏ. ராமும், கரிச்சான் குஞ்சுவின் மகள் விஜயாவும் ஒரு டுடோரியல் கல்லூரியில் சிலகாலம் வேலை செய்தோம்.
78க்குப்பின், சென்னையில் தொடர்பு கொண்டபோது, அவரது வெளிவட்டங்கள் நாவலைப் பதிப்பித்திருந்தார். இலக்கிய சிந்தனை அவரது சிறுகதையைத் தெரிவு செய்து பாராட்டியது. ஒருமுறை, எல்.எல்.ஏ ஹாலில், ராமின் ‘குப்பை’ நாடகம் நிகழ்த்தப்பட்டது.
சில ஆண்டுகள் கழித்து, ராம் , குரோம்பேட்டையில், என்.எஸ்.என் பள்ளியில் இயற்பியல் ஆசிரியர். அன்று ஆண்டு விழா. மாலையில், திறந்த வெளியில், ‘மூடிய அறை’ நாடகம். பதின்மர் வயது மாணவர்களால் நடிக்கப்பட்டது. ஒரு மிருதங்கமும் கையுமாக ராம் நாடகத்தை இயக்கிக் கொண்டிருந்தார். அன்று நானும், வெளி ரங்கராஜனும், வீராச்சாமியும் பார்வையாளர்களில் இருந்தோம். அபத்த நாடக வடிவம். பள்ளி மாணவர்கள் கனமான விஷயங்களை உள்வாங்கி நன்றாகவே நடித்திருந்தனர். தலைமுறை தலைமுறையாய், காலங்காலமாய், மேலே மூடிய அறையில், அவரவர்க்குத் தேவையான பொருள் பொதிந்து வைத்திருப்பதாய் நம்பிக்கை. மூத்த மகன் மூர்த்தி, அங்கே ஒன்றுமில்லை என்கிறான். குடும்பத்தில் மற்றவர்கள் ஏற்க மறுக்கின்றனர். யார் தடுத்தும் கேளாமல், மேலேறிச்சென்று, பூட்டை உடைத்து, உள்ளே சென்று பார்த்து வந்து, “ ஒன்றுமில்லை, அழுக்கும், நூலாம்படையும் தான் இருக்கிறது” என அறிவிக்கிறான். தங்கள் கனவுகளையும், நம்பிக்கைகளையும் தகர்த்ததற்காக அவன் தாக்கப்பட்டு, வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறான். அந்த நாடகத்தைப் பார்த்ததிலிருந்து, சென்னையின் மற்றைய நாடகக் குழுக்கள் மூடிய அறையை நிகழ்த்த வேண்டும் எனும் அவா என்னுள் மிகுந்திருந்தது.
பரீக்ஷா ஞாநியிடம் விவாதித்தேன் அவரால் ம்யூசியம் அரங்கத்தில் நாடக வாசிப்புத்தான் செய்ய முடிந்தது. ஆனால், யவனிகா நாடகக் குழுவினர் மூடிய அறையை அரங்கேற்றினர். பெருந்தேவி, சங்கர நாராயனன், வைத்தியனாதன் ஆகியோர் நடித்திருந்தனர். நாடகத்தின் மையக்கரு மிக நன்றாக பார்வையாளர்களை சென்றடைந்தது.
சில ஆண்டுகளுக்குப்பின், மீண்டும், கிருஷ்ண ஞான சபாவில் ராமின் ‘எப்போ வருவாரோ’ நாடகம் டெல்லி, யதார்த்தா பென்னேஸ்வரன் இயக்கத்தில் நிகழ்த்தப்பட்டது. சாமுவேல் பெக்கெட், யூஜின் அயனெஸ்கு இருவரது தாக்கத்தையும் இவ்விரு நாடகங்களிலும் காணலாம்.
அடுத்ததாக ஒரு தனது வளர்ச்சியில் ஒரு பாய்ச்சலை நிகத்தினார். ராம். 1998ல் ஆபுத்திரன் கதை நாடகத்தை வெளியிட்டார். பின்னால், திருப்பத்தூரில், தூய நெஞ்சக் கல்லூரியில், திறந்த வெளியில், ஒரு மாலை நேரத்தில், ஆபுத்திரன் கதை நாடகம், பார்த்திப ராஜாவின் இயக்கத்தில் , பெருங்காவிய நாடக வடிவில் நிகழ்த்தப்பட்டது. ஒரு Repertoire என்று சொல்லுமளவுக்கு, எண்ணற்ற கலைஞர்கள், இசையோடு பாடி நடித்திருந்தனர். மிகப் பெரும் நாடக அனுபவம்,, பார்வையாளர்களில், சென்னையிலிருந்து, ஆசிரியரும் நானும் இருந்தோம். இந்நாடகத்தின் நிகழ்வடிவம், ஆபுத்திரன் கதையையும், மிகச்சிறந்த இயக்குநராக பார்த்திப ராஜாவையும் அடையாளப்படுத்தியது.
30 வருடங்களாக எஸ்.எம்.ஏ ராமுடன் உரையாடிக்கொண்டிருக்கிறேன். செருக்கில்லாத இலக்கியவாதி. மன முற்சாய்வுகளும் கிடையாது. பழந்தமிழ் இலக்கியம், நவீன இலக்கியம், இந்திய இதிகாச வெளிகள், தத்துவ பின்புலங்கள், ஸமஸ்க்ருத இலக்கியங்கள், இயற்பியலின் நவீனப் போக்குகள் எதுவாயினும் அவரது மனம் தீவிரம் கொள்ளும். தளம் முதல் இதழில் அவர் எழுதிய ’கடவுள் துகள்கள்’ கட்டுரை, இந்திய தத்துவ வரலாற்றையும், மேலை நாட்டு இயற்பியல் வரலாற்றையும் இணைத்து எழுதப்பட்ட மிகச் சிறந்த ஒன்று.
தமிழ் கலை இலக்கிய வாசகர்கள், மெனக்கெட்டு, கவனம் கொள்ள வேண்டிய படைப்பாளி, எஸ்.எம்.ஏ. ராம்.

No comments:
Post a Comment