சங்கர பிள்ளையின் பரதவாக்கியம்
நாடகக் கலைஞன் சங்கர பிள்ளை
சென்னைக்கு வரும்வரை பார்த்த,படித்த, நடித்த நாடகங்கள் மிகவும் குறைவு. கட்டபொம்மன், சாம்ராட் அசோகன் போன்ற பள்ளிக்கூட நாடகங்களும், அறந்தை நாராயணன் சேரங்குளம் கிராமத்தில் நிகழ்த்திய ‘வரட்டுமே 67’ தேர்தல் நாடகமும் இன்றும் நினைவில் உள்ளது. தஞ்சை மாவட்ட தெருக்கூத்து அவ்வளவாக ஈர்க்கவில்லை. மன்னார்குடியில் இருந்த எனக்கு, மெலட்டுர் ஒன்றும் பெரிய தூரமில்லை; இருந்தாலும் பாகவத மேளா பற்றியெல்லாம் அப்போது கேள்விப்பட்டதில்லை.
சென்னையில், கசடதபற, ப்ரஞ்க்ஞை இதழ்கள் படிக்கும் வாய்ப்புக் கிடைத்த... போதுதான் திரு. ஜீ.சங்கர பிள்ளை பற்றி அறிந்துகொள்ள முடிந்தது. ‘காலஞ்சென்ற சிங்கமும் மூன்று பண்டிதர்களும்’ பிரதி படிக்கவும், நாடகம் பார்க்கவும் வாய்த்தது. என்றென்றைக்கும் ஜீவித நியாயம் உள்ள நாடகம். என்னை பெரிதும் பாதித்த முதல் நாடகம்.
வீதி, கூத்துப்பட்டறை, பரீக்ஷா, அறிமுகம் கிடைத்த சில ஆண்டுகளுக்குப் பின்னர், மாக்ஸ் முல்லர் பவன் ஏற்பாட்டில், ‘கருத்த தெய்வத்தைத்தேடி’ பார்த்தேன். அலுவலக மலையாளி நண்பன் பங்கஜாக்ஷன் உதவியில் பரத வாக்கியம் நாடகப் பிரதி ஆங்கிலத்தில் வாசித்தேன். ஆழமாக யோசிக்கவைத்த பிரதி; இன்று வரை நாடக நிகழ்வு அனுபவம் கிட்டவில்லை. ஒரு நடிகனின் பார்வை இழக்கும் வயதில் அவனது மனசாட்சியே, அவனைக் குறுக்கு விசாரணை செய்து வாழ்வின் சகல இயக்கங்களின் சிறுமைகளையும்,பெருமைகளையும், சரிவுகளையும், குரூரங்களையும் உணர்த்தும் யுக்தி நாடகமாய் விகசித்திருக்கிறது. புறப்பார்வை குறையும் வேளை, அகப்பார்வை சாத்தியப்படுகிறது. சங்கரபிள்ளை, - காலத்தை வென்ற கலைஞன்- அவரது மூன்றே பிரதிகளை அறிந்திருந்தாலும், இரண்டே நாடகங்கள் நிகழ்த்தப் பார்த்திருந்தாலும்,எனக்கு அதுவே பேரனுபவமாகும்.ஜீ. சங்கர பிள்ளை.See More

No comments:
Post a Comment