Wednesday, 28 May 2014

அடர்வனத்தில் பலத்து வீசியது காற்று

  1. அடர்வனத்தில் பலத்து வீசியது காற்று
    இலைக்குள் நுழைந்தன பல நிறங்கள்
    உல்லாசத்தின் கனவில் மிதந்தது இலை
    வானவில்லைப் பின்னி ஒளிரவைப்பேன்!
    சோகைப் பூவே! நீ சிவப்பை பூசிக்கொள்!
    ஏ சிறகுதிர்த்த மயிலே! நீலம் எடுத்துக்கொள்!
    மரமல்லியே நீ ஏன் வெள்ளையாய் இருக்கனும்?
    குயிலே! காகத்தின் கறுப்பில் மஞ்சள் கலந்திடு!
    அலுப்பூட்டும் கறுப்பு உனக்கு வேண்டாம்!
    ஆணைக்கு யாரும் ஆமோதிக்கவில்லை...
    பாவம்,இலைக்கு நல்ல மனசென நம்பினர்
    நிறம் மருவி இலக்கற்று துள்ளித் திரிந்த
    வெட்டுக்கிளியின் கோபத்தில் மூளியானது இலை
    துளிர்க்காத இலைக் குறைக்காய் அழுது புலம்பி
    நிறக் குறை ஒரு குறையே இல்லை என்றது.இலை
    அதனதன் நிறத்தில் நிரந்தரம் கண்டனர் யாவரும் !

No comments:

Post a Comment