Wednesday, 28 May 2014

காணாமல் போன மண்டையோடு புடைப்பு

  1. எங்கள் அலுவலக சட்டப்பிரிவில் தகவல் உரிமைச் சட்ட வேலைகளைக் கவனித்து வரும் என் நண்பர் தனது மனைவியின் உடல் நலம் குறித்து ஆலோசனை பெற அழைத்து வந்தார்.

    நண்பரின் மனைவிக்கு நாற்பது வயது. ஒற்றை நாடி உடல் வாகு. ஒரே பெண் குழந்தை. அதிகக் களைப்புடன் காணப்பட்டார். மனதில் குழப்பமும் பயமும் மலர்ச்சியின்மையும் தென்பட்டது.

    துயரர் சரிதை பதிவு செய்தேன்.

    முக்கிய நலக் குறை:

    அவரது தலையில் சரியாகச் சொன்னால் இடது ...பரைட்டல் பகுதியில் துருத்திக்கொண்டு ஒரு நெல்லிக்காய் பருமனுக்கு மண்டையோடு புடைத்துக் காணப்பட்டது. அந்தப் பகுதியில் முடி அடர்த்தி மிகக் குறைவு. பார்த்தால் புடைப்பு தெரியும் அளவிற்கு. .சாதாரணமாக வலியில்லை. தலை சீவும் போது மட்டும் சீப்புப் பட்டால் வலி ரொம்ப நேரம் இருக்கும் லேசான எரிச்சலோடு.

    மாநில அரசில் உதவியாளராகப் பணி. ரத்த சோகை. வலது காலில் ஆணித் தொந்தரவும் இருந்தது. மண்டையோடு புடைப்புக்கு அல்லோபதி மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சையே பரிந்துரைத்தனர். என்ன மாதிரி கட்டியென்று சர்ஜரிக்குப் பிரகு திசு பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் என்று இன்னும் பயத்தைக் கூட்டிவிட்டது தான் மிச்சம்.

    கோபம் கணவரிடத்திலும், குழந்தையிடமும் வெளிப்படுத்துவார். பசிக் குரைவு. சீரண உபாதைகள் அடிக்கடி.சீக்கிரம் எரிச்சல் படுவார்.
    குளிர்ச்சியும் தாங்காது, வெப்பமும் ஒத்துக் கொள்ளாது மாதவிடாய் தள்ளிப்போகும். சீராக இல்லை. தோல் வறட்சி தென்பட்டது

    ஆண்டிமனி க்ரூடம் 6 தினமும் இருவேளை. சாப்பிடு முன். 1 மாதம் தினமும் பரிந்துரைத்தேன். மேலும் தூஜா 200 15 நாட்களுக்கு ஒரு முறை. மொத்தம் 4 டோஸ் எழுதிக் கொடுத்தேன்.

    15 நாட்களிலேயே நண்பரிடமிருந்து ஃபீட்பாக் வந்தது. நன்கு குனமடைந்து வருகிறது. அளவு சிறுத்து விட்டது ஒரு சிறு பட்டாணி சைஸ் தான் இப்போது இருக்கிறது. மருந்தை நிறுத்திவிட அறிவுறுத்தினேன்.
    இரண்டு மாதங்களுக்குப் பின் ஆலோசனைக்காக வந்தார். மருந்து எதுவும் இனி தேவைப்படவில்லை புடைப்பு முற்ரிலுமாகக் கரைந்து விட்டது. ஏதோ மாயம் செய்தது போல் கட்டியைக் கானவில்லை. அது இருந்த இடத்தில் கேசம் வளர ஆரம்பித்திருந்தது கால் ஆணியிலும் எவ்வித உபாதையும் இல்லை. நண்பருக்கு முழு திருப்தி. அலுவலகத் தோழமை சர்ஜரியை தவிர்த்துவிட்டது. அவர் பேசும் போது, பிறரிடம் சிகிச்சை பற்றிக் கூறும் போது கண்களில் நன்றிப் பெருக்கோடு ஒரு மலர்ச்சி தென்படுவதை நான் பார்த்திருக்கிறேன்
    .
    அடுத்தடுத்து, தனது தாயின் சர்க்கரை நோய், மகளுக்கு வருகிற பெரிய வேனல் கட்டிகள், சகோதரியின் தலைவலி, கழுத்துவலி என ஒவ்வொன்றாக ஆலோசனைக்கு அழைத்து வந்தார். இப்போதும் கூட வீட்டில் யாருக்கு என்ன சுகவீனம் என்றாலும் முதல் அழைப்பு ஹோமியோபதிக்காகவே இருக்கிறது.
    See More

No comments:

Post a Comment