- கனவின் முகத்தில் அவன் காரி உமிழ்ந்தான்
நெடு நாளைய கனவு அது மீள மீள உபத்திரவம்
எப்போதும் இப்படித்தான் ஆரம்பிக்கும் அந்தக்
கனவின் காப்பிரைட் உரிமை யாருடையதோ?
பனி பொழியும் இரவில் காமிராவின் முன்
புகை மூட்டம் போல் கவிந்திருக்கும் நீர்த்திவலை
சிறுவன் ஒருவன் தலை கீழாய் நடக்கிறான்
யார் இவன் ? ஏன் இப்படி? எதைப் பகடி செய்ய?...
கால்கள் கோணலாய் விரிந்து நிற்க கைகளால்
மண்ணை அளைந்தபடி அசைகிறான் காற்றைக் கீறி
தன் வயது நாற்பதினாயிரம் என ஊளையிடுவான்
சிக்கி முக்கிக் கல்தோல் உரித்து உள்ளிருந்து
தீ பிசாசைக் கொணர்ந்தது நான் தான் என பிதற்றுவான்
ஆடும் மாடும் குதிரையும் மானும் புலியும் தன் அடிமைகள்
அனைத்தையும் எரித்துக் கரியாக்கி தன் வேக அசைவில்
அண்டத்தை ஆளும் திட்டம் உண்டாம் அவனிடாம் கைவசம்
எப்போதும் தலை கீழாய் பூமியில் சுமையாய் நிற்கும்
ப்ரக்ஞையற்று அலையும் அவன் கோணல் பார்வையால்
திசைகள் மறுக்கிறான், சென்றடையும் இலக்குமில்லையாம்
இப்படியொரு துர்க்கனா மீள மீள வர அவன் கிலி கொண்டு
எச்சிலைக் கூட்டி கனவின் முகத்தில் காரி உமிழ்ந்தான்
Saturday, 24 May 2014
கனவின் முகத்தில் அவன் காரி உமிழ்ந்தான்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment