- கையால் தடவித்தடவி புலம் உணர்ந்து
குழந்தை போல் காற்றில் துழாவி
குறுக்கும் நெடுக்குமாய்
வயர் நுழைத்து இறுக்கி
நாற்காலிக்கு பீடம் போடும்
அவரது கைகள் கலையறியும்
பார்வை மட்டும் இல்லை
பின்னப்படாமல் தொழில்
சுத்தம் பாராட்டுக்கள் குவியும்
அரசுக்கு நஷ்டம் வராதிருக்க...
அறிவிக்கை அவருக்கு இனி
வேலையில்லை அலுவலகத்தில்- பட்ஜெட் பொறுப்பாய் அதிகாரிகள்
- ஏறி இறங்கினார் நீதி மன்றங்கள்
எங்கும் இல்லை அவருக்கு நீதி
அப்போதும் அவர் அமைதியாய்
பெருமூச்சோடு நின்றது எதிர்ப்பு
கொஞ்சம் வெகுண்டிருந்தால்
பொருத்தமாய் இருந்திருக்கும்
குடியரசு அவருக்கில்லை
பார்லிமெண்ட் அவருக்கில்லை
எந்த சிலையையும் பார்த்ததுமில்லை
காத்திருக்கிறார் பல காலம்
என்றாவது ஒரு நாள் காற்று வீசும்
அவருக்காக எனும் நம்பிக்கையில்
Wednesday, 14 May 2014
குடியரசு அவருக்கில்லை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment