பைசாச தந்திரம்
அடுத்தவன் வீட்டு ஜன்னலை
பந்தடித்து சேதப்படுத்தி
கண்டதும் மறையும்
க்ரிக்கெட் பாலக்ருஷ்ணன்
வங்கி லாக்கர் அரிதாய்ப் போகவும்
குண்டுமணி மிச்சமின்றி அத்தனை
நகையையும் வங்கியில் அடகுவைத்து...
பத்திரப் படுத்திய சமர்த்து சிங்காரம்
நாலு பேரை சேர்த்து சீட்டுப்பிடித்து
தன் பங்கைக் கட்டாமல் சேமிக்கும்
உன் பங்கு எவ்வளவு எனக்கேட்டால்
நமுட்டுச் சிரிப்பே நமச்சிவாய உபாயம்
தான் நடக்க தன்முன் மோப்பம் பிடிக்க
வீட்டு பைரவரை காண்ட்ராக்ட் போட்ட
பன்னாட்டு நிறுவன பகாசுர அதிகாரி
பைசாச தந்திரம் பதஞ்சலி சூத்திரம்.
No comments:
Post a Comment