Wednesday, 28 May 2014

பித்தப்பை கற்களைக் கரைப்பதெப்படி?

  1. திரு. பால சுப்ரமணியம்- எனது நண்பர் ஒருவர் அனுப்பிய துயரர். வயது 54 . மருத்துவ ஆலோசனைக்காக என்னிடம் வந்தார். ஃபைல் ஒன்றும் கொண்டு வந்தார். நீங்கள் உங்களுடைய உபாதையை சொல்லுங்கள் குறித்துக்கொள்கிறேன் பின்னர் ஃபைல் பார்க்கிறேன் என்றேன்
    அவருக்கு இரண்டு வாரத்திற்கு முன்னால் இரவு 10 மணிபோல் மேல் வயிற்றில் வலி கொஞ்சம் கடுமையான வலி. குமட்டிகொண்டே இருந்து அரை மணி நேரத்தில் இரு முரை மஞ்சளாய் வாந்தி .செரிமா...னம் ஆகாதது எல்லாம் வந்திருக்கிறது. வாந்தி எடுத்தும் வலி குறையவில்லை அருகிலிருந்த மருத்துவ மணையில் அனுமதிக்கப்பட்டார்.

    ஸைக்ளோபாம், பனாப்ரஸோல் மாத்திரை, ஊசியோடு பொழுது விடிந்தது. மாத்திரை சாப்பிட்டால் வலி குறைகிறது. ஊசி போட்டால் 3 அல்லது 4 மணி நேரம் வலி இல்லை. பின்னர் வரத்தான் செய்கிறது. வாந்தி நின்றுவிட்டது. மறு நாள் முறையாக அல்ட்ராசௌண்ட் ஸ்கான் படம் எடுத்திருக்கிறார்கள். பித்தப்பையில் இரு கற்கள் ஒன்று 5 எமெம் இன்னொன்று 7 எமெம்.

    மாத்திரை 2 வாரத்திற்கு எழுதிக்கொடுத்து சாப்பிட்டு வாருங்கள் வலி அதிகமாயிருந்தால் வந்து அட்மிட் ஆகிவிடுங்கள். வலி மட்டுப்பட்டால் மாத்திரை முடிந்ததும் மறு பரிசீலனைக்கு வாருங்கள் என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

    அவரது நண்பர் என்னைப் பார்க்கச் சொன்னாராம் ஃபைலோடு வந்துவிட்டார். கோப்பை வாங்கிப் பார்த்தேன். ரத்தப் பரிசோதனை அளவுகள் குறித்துக்கொண்டேன். அவருக்கு ரத்த அழுத்த நோய் இருக்கிறது அல்லோபதி மருந்து எடுக்கிறார். நல்ல வேளையாக சர்க்கரை நோய் இல்லை.அவ்வப்போது மேல் வயிற்றிலும் நேர் பின்னால் முதுகிலும் வலி வருவதும் போவதுமாக இருக்கிறது.
    அவரது, பசி, ருசி, தாகம், வேர்வை, மலச்சிக்கல் கேள்விகளுக்கு பதில் சேகரித்தேன்.

    இனிப்பில் நாட்டம் அதிகம் பால் பிடிக்காது
    பயந்த சுபாவம். கொஞ்சம் சுமாராய் பூசின மாதிரி உடலமைப்பு. வேர்வைப் பிசிபிசுப்பு எப்போதும். தலையில் ரொம்பவே ஜாஸ்தி. அடிக்கடி ஜலதோஷம். நெஞ்சில் இரங்கிக்கொண்டு ப்ராங்கைட்டீஸ் உபத்திரவம் அதிகம். வயிற்றில் எப்போதும் வாயுத்தொல்லை; உப்புசம்.

    இரண்டு மருந்துகள் எழுதிக் கொடுத்தேன். கல்காரியா கார்ப் 200 தினமும் முன்று வேளை 4 உருண்டைகள் சாப்பிடுமுன். 15 நாட்கள்.
    பின்னால் முதல் மருந்தை நிறுத்திவிட்டு இரண்டாம் மருந்தை ஆரம்பிக்கணும். கொலெஸ்டெரினம் 200 காலை , இரவு இரு வேளை 4 உருண்டைகள் 15 நாட்கள் 1 மாதம் கழித்து மறு பரிசீலனை. ஒரு வேளை வலி அதிகமாய் வந்தால் கல்காரியா கார்ப் 1 எம் 4 உருண்டைகள் 15 நிமிடத்திற்கு ஒருமுறை. 3 அல்லது 4 தடவை போட்டுக்கொள்ளுங்கள் என்று எஸ்.ஓ.எஸ் மருந்தும் சொல்லி அனுப்பி வைத்தேன்.

    ஒரு வாரம் கழித்து வந்தார் வலி உபத்திரவம் ஏதும் இல்லை. வாந்தி, குமட்டல் இல்லை. வாயுப்பொருமல். பிரிவது அதிகம் வாயில் புளிப்பு சுவை இருக்கிறது என்றார். லைக்கோபோடியம் 200 தினமும் இரண்டு வேளை 4 உருண்டைகள். 15 நாட்கள். பின்னர் கொலெஸ்டெரினம்200 மீண்டும் இருவேளை தினமும்.

    மீண்டும் 1 மாதம் கழித்து வந்தார். இந்த முறை கல்காரியா கார்ப் 1 எம் 4 டோஸஸ் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை ஒரு டோஸ் காலையில் மட்டிலும். அடுத்த மாதம் வரும்போது அல்ட்ரா சௌண்ட் ஸ்கான் எடுத்துக்கொண்டு வரச் சொன்னேன்.

    ஸ்கான் ரிசல்ட் வந்ததும் சந்தோஷத்தோடு வந்தார். அவர் சேர்த்து வைத்திருந்த இரண்டு புஷ்பராகங்களையும் காணவில்லை.
    செரிமானக் கோளாறுகள் இல்லை. வாயுத்தொந்தரவுகள் நன்கு குறைந்துவிட்டன. வலி இல்லை.

    மேற்கொண்டு மருந்து தேவையில்லை என்று அனுப்பி வைத்தேன் நன்றிப் பெருக்கோடு சென்றார்.

No comments:

Post a Comment