- கறிவேப்பிலையை வேப்பிலை முகஸ்துதி
செய்த நாளிலிருந்து மழை பெய்யாதொழிந்ததாய்
கிராமத்துப் பூனைகள் வரலாறு பாடம் படித்தன
கறுப்புப் பூனைகள் குறுக்காய் எதிர்பட்டதால்தான்
சாகுபடி பொய்த்ததென கிளிப்பிள்ளைபோல்
கணக்குச் சொன்னார் அரசுக்கு மணியக்காரர்
கிளிப்பிள்ளை பாடத்திட்டம் அறிவித்து
ட்யூஷன் நடத்தினார்கள் ஆசிரியக் குமாஸ்தாக்கள்
ட்யூஷனே ப்ளேட்டோவின் அகடெமியாச்ச்சாம்
இந்த நாள் அரிஸ்டாட்டிலின் லைஸியமாச்சாம்...
பல்கலைக் கழக மூடுவிழாவும் அமைச்சர் தலைமையில்
அகடெமிக்கள் திறப்பு விழாவும் அமைச்சர் தலைமையில்
ட்யூஷன் படித்தால் தான் மடிக்கணிணி இலவசமென
அவசர அவசரமாய் அறிவிக்கை செய்தார் மந்திரி
வேப்பிலை கறிவேப்பிலைக்கு முகஸ்துதி
கறிவேப்பிலை வேப்பிலைக்கு முகஸ்துதி
கிளிப்பிள்ளைகள் பாடத்திட்டம் செழித்தோங்க
வலிப்பு கூடி சொன்னதையே திருப்பிச் சொல்ல
கறுப்புப் பூனைகள் அடைந்து கிடந்தன எதிர்படாமல்
நல்ல மகசூலுக்காய் வீட்டிலேயே பூனைகள் தவம்
பூனைகள் வாழ்கவென அமைச்சர் சொன்னார்
விண்ணதிர எக்காளமிட்டன கிளிப்பிள்ளைகள்
அமைச்சர் கிளிப்பிள்ளைகள் பரஸ்பரம் முகஸ்துதி
அசல் அரிஸ்டாட்டில் ப்ளேட்டோ நாடுகடத்தல்
நல்லது நடந்ததால் நாடே சுபிட்ஷம் கிளிகள் நாட்டில்
Saturday, 24 May 2014
வேப்பிலை கறிவேப்பிலைக்கு முகஸ்துதி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment