Wednesday, 28 May 2014

அதிர்ச்சிக்கும் ஹோமியோ சிகிச்சை

  1. எனது நெருங்கிய நண்பர் ராஜாஜி. க்ரிக்கெட்டர். அலுவலகம் சேர்ந்த நாளிலிருந்து இன்று வரை நான் எடுக்கும் எனது குடும்ப சம்பந்தப்பட்ட அனைத்து முடிவுகளிலும் அவரது ஆலோசனை இருக்கும். அவ்வளவு நெருக்கமானவர். 80 களில் அடூரின் எலிப்பத்தாயம் திரைப்படம் பார்த்துவிட்டு டீக்கடையில் உட்கார்ந்து கொண்டு கார சாரமாக விமர்சித்ததும் விவாதித்ததும் பசுமையாக நினைவிலிருக்கிறது. நான் பரீக்ஷாவில் பங்கேற்றபோது அவரும் மற்ற நண்பர...்களும் நவீன நாடகம் பார்ப்பார்கள் விமர்சிப்பார்கள் கூத்துப் பட்டரையின் எல்லா தயாரிப்புக்களுக்கும் அவர்கள் ஆதரவு உண்டு. அலுவலகத்தில் நான் நாடகம் போட்டால் ராஜாஜி தான் முன்னனி நடிகர் .

    1996 ல் நான் ஹோமியோபதி சிகிச்சை செய்ய ஆரம்பிக்க வேண்டும் என விரும்பிய போது, ராயப் பேட்டையில் எங்கள் இருவரது பொது நண்பரான கோபியின் வீட்டின் முன்னறை எனக்காகத் தத்தம் செய்யப்பட்டது. ஒரு நல்ல நாள் பார்த்துத் துவங்கினோம். வெற்றிவேலும், சந்திர சேகரும் (பழைய பரீக்ஷா நடிகர்) நான் பரிந்துரைக்கும் மருந்துகளை முறைப்படி தயார் செய்து வினியோகிப்பார்கள் .கோபியின் அப்பா, அம்மா, மனைவி, மகன்கள் இருவர் என எல்லோரது பங்களிப்போடும் சிகிச்சை துவங்கியது.

    ராஜாஜி தான் முதல் துயரர். அவரது இடப்புற இடுப்புப் பகுதியில் வலி. மருந்து தரப் பட்டதும் தட்சினை வைத்து ஆசீர்வாதம். இரண்டாவது துயரர் ஷண்முகம்; அவரும் பரீக்ஷா நடிகர். அவரது ஆசீர்வாதம். இப்படியாக நாங்கள் நமக்கு நாமே என வளர்வதற்கு ஹோமியோபதியைப் பயன் படுத்திக் கொண்டோம்.

    ஒருமுறை ராஜாஜி தனது, மாமனார் வீட்டிற்குக் குடும்ப சகிதம் சென்றார். அவர் பஹூ குடும்பி. அண்ணண் குடும்பம் எல்லாம் சேர்த்து பெரிய யூனிட். கும்பகோணத்திற்கு வேனில் போனார்கள். மறு நாள் காலையில் 8 மணிக்கு ராஜாஜியிடமிருந்து போன். ஒரே பதட்டம் “காலை 4 மணி வாக்கில் வான் அணைக்கரைப் பாலம் கடந்தபோது இருட்டில் பாலச் சுவற்றில் முட்டி மோதியது எல்லோரும் தூக்கக் கலக்கம் நல்ல வேளையாக வேன் நின்றுவிட்டது; கரணம் தப்பினால் கொள்ளிடத்திற்குள் விழுந்திருக்கும். எல்லோருக்கும் அடி காயம், குறைந்த பட்சம் சிராய்ப்பு. எப்படியோ சமாளித்துக்கொண்டு வேறு வாகனம் பிடித்துக் கும்பகோணம் போய் அரசு மருத்துவமனையில் முதலுதவி. ஓரிருவருக்குத் தையல் போட வேண்டியிருந்தது. எதோ ஒருவழியாய் எல்லா இடர்பாடுகளையும் சமாளித்துவிட்டேன். ஆனால் என் மனைவி இதுவரை வாய் திறந்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை இங்கே மருத்துவர் ஏகப்பட்ட டெஸ்ட் எழுதிக் கொடுக்கிறார் ஒருவர் ஸ்கான் சொன்னால் இன்னொருவர் எம் ஆர் ஐ என்கிறார். நான் என்ன செய்யனும் இப்போ? ” இதுதான் ராஜாஜியின் பதட்டம்.

    “எல்லோரையும் கூட்டிக்கொண்டு சென்னைக்கு வந்து சேர். நான் பார்த்துக் கொள்கிறேன். உன் மனைவிக்கு அதிர்ச்சிதான். அவர்களைப் பேச வைப்பது எனது பொறுப்பு” என்றும் உறுதி சொன்னேன்.

    அடுத்த நாள் மாலை குடும்பம் சென்னை வந்தது. தாம்பரம் சானடோரியத்திலுள்ள ராஜாஜியின் வீட்டுக்குப் போய், சரிதைப் பதிவை ஆரம்பித்தேன். நரம்பியல் சம்பந்தப்பட்ட குறிகள் எல்லாவற்றையும் பரிசோதனை செய்து ஸ்கான் எம் ஆர் ஐ அவசியமில்லை என்பதையும் உறுதி செய்து கொண்டேன்.
    ஓபியம் 200 9 டோஸஸ் எழுதிக்கொடுத்தேன் 2மணிக்கொரு முறை ஒரு பொட்டலம் அப்படியே வாயில் போட்டு சுவைத்துச் சாப்பிடச் சொன்னேன்.

    மறு நாள் மாலை போனில் ராஜாஜியிடமிருந்து அழைப்பு வந்தது. அவர் மனைவியே பேசினார். குரலில் பிசிறு இல்லை பயம் போய்விட்டது. ஷாக்கிலிருந்து விடுபட ஓபியம் உதவி செய்து அவரது குரல் நாண்களை பழுது பார்த்துச் சரி செய்திருக்கிறது.

    பாப்பாவரேசியே தாவரக் குடும்பத்தைச் சார்ந்த ஒபியத்திற்கு இந்த அற்புதக் குணம் உண்டு எனப் படித்திருக்கிறோம். ஆனால் நேரில் அற்புதம் நிகழ்வதைக் காண என் நண்பர் ராஜாஜியே துணை புரிந்தார்.

    மே மாத இறுதியில் அக்கௌண்டண்ட் ஜெனரல் தணிக்கை அலுவலகப் பணியிலிருந்து ராஜாஜி ஓய்வு பெறுகிறார். அவரும் அவரது குடும்பத்தாரும், உடல் நலத்தோடும், உல்லாசத்தோடும் வாழ வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment