- இறுகிய சொர சொரக்கும் மனப்பாறை
அதனடியில் புதையுண்டு யுகங்களாய்
பதுங்கிக் கிடக்குது அழுக்குத் தேரை
அருவருப்பை அசை போட்டபடி
சரும ரேகையில் எல்லோர் முகமும்
நசுங்கிப் பிதுங்கி நரம்புகள் புடைத்து
சார்பியல் கொம்புகள் பக்கவாட்டில்
மரபியல் தாடி சிலந்தி வலைபின்னி
ஃப்ராய்டிசக்குறி ப்ரியாபிஸத்தில்
ஷோக்காய் பின் நவீனத்துவ கண்ணாடி...
தேரை எதன் குறி? பாறை எதன் குறி
அதிர்வு கேட்டால் ஜந்து விஷ நீர் பீச்சும்
இதுவரை ஜந்து ஜந்து தான் உருவில்
நம் பரினாமப் பூரான் கால்கள் அதில் அடக்கம்.
No comments:
Post a Comment