Monday, 19 May 2014

ஆள் மாறலாம் -மாறாது அதிகாரத் தங்கப்பல்

அதிகாரத்தில் வலம் வருகையில்
உள்ளிருந்து வெளியாய் எக்கணமும்
மின் பாய்ச்சல், தலையிடி, இறுக்கம்
கண் அழுத்தம், நெரிப்பு, எரிச்சல்
குழப்பம், கொள்கை, கொலை மிரட்டல்
அடிக்கடி கனவில் மீளத் தடைபடும்
விமானப் பயணம் காலம் துறந்த
அலைக்கழிப்பில் தாமத வருகையால்
இதயம் துள்ளும் முந்நூறு முறை
நிமிஷக் கணக்கில் அடுத்தடுத்து...
படபடக்கும் துரிதமாய் நிலை மறுத்து
உடைந்த பற்கள் வரிசை ஈசிஜீ வரைபடம்
மூன்று வார தாடி கோரையாய்முகம் மூட
குர்த்தா சால்வை போர்த்திய ரெட்டை நாடி
சந்தேகமில்லா சாசுவத அதிகார அமளி
சரீரம் இருக்கும் சாய்வு நாற்காலியில்
மோகிக்கும் பதவி ஆளாய் உருக்கொள்ள
உடல் துறந்து வெளிப்போந்து எளிதாய்
நடந்தே தூரம் கடந்து கண் இமைப்பில்
மீண்டும் உள் நுழையும் லகுவாய்

 இவனே எஜமானன் எனினும் இவனுக்குமுண்டு
எதிர்வரா உருவிலா அதிகாரத்துவ எஜமானன்
எல்லாம் ஒரே ரகம் ஒரே இனம் ஒரே ரத்தம்
ஆள் மாறலாம் மாறாது அதிகாரத் தங்கப்பல்

No comments:

Post a Comment