- முந்திரிப் பழம் வேணும்
சப்பாத்திக் கள்ளிப் பழம் வேணும்
கிராமத்து ருசியின் துணிகரம்
தேவையின் கழுத்து நெரிப்பில்
பீறிட்டெழும் சத்தம் கேட்குதா?
வெள்ளைச்சத்தமோ கறுப்புச்சத்தமோ
சிவப்புச்சத்தமோ நீலச்சத்தமோ
சத்தத்தின் அதிர்வுகள் எங்களுக்கு ஒவ்வாமை
எதிர்ப்பின் குரலொலிப்பை அடக்குவோம்...
முந்திரிப்பழம் அயலான் புசிப்பதற்கே
டாலர் தேவதையைத் தொழுவோம்
சட்டம் துப்பாகி ரவைகளை கவர்ச்சியாய்
கழுத்தில் அணிவோம் சிவனைப்போல
எதிர்த்தவனைக் கொன்றுபோடு! துணிச்!!சலோடு!!
எதிர்ப்பே இல்லையென்று கூச்சல்போடு!!
சத்தத்தின் நிறம் வெள்ளையா,சிவப்பா
நீலமா,பச்சையா என ஆராய்ச்சி நடக்கும்
கழுத்துப் பட்டைகட்டிய கங்காணிகள்
கண்டுபிடிப்பார்கள் கூச்சலின் அடர்த்தியை!
வண்ணங்களில் குழையும் சத்தம்
நேற்றைய நவீனத்துவம் கடந்தது என!
அவனுக்குப் பரிசு வேணும் டாலரில்
நம் சத்தம் நமக்கொவ்வாமை இல்லை
நத்தைகளின் அணிவகுப்பை ஆதரிக்கலாம்
அதிராமல் நீர் சிந்தாமல் செல்லட்டும்!!
Saturday, 3 May 2014
நத்தைகளின் அணிவகுப்பை ஆதரிக்கலாம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment