- ஐந்து வருடங்களுக்கு முன், ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை கரூரிலோ அல்லது திருச்சியிலோ நண்பரின் வீட்டில் தங்கி துயரர் சரிதைகள் கேட்டு ம்ருத்துவ ஆலோசனை வழங்குவது ஏற்பாடாகியிருந்தது. சனிக்கிழமை இரவு ரயிலில் திரும்பிவிடுவேன்.
ஒரு சமயம் எனது உயர் அதிகாரி- நண்பரின் உறவினர் திருச்சியில் சிகிச்சைக்காக வந்தார்
வயது 29 சட்ட ஆலோசகர். ஒருமுறை வாதாடிக் கொண்டிருக்கும்போது தலை சுற்றி இடர்பாடு ஏற்பட்டதாம...். அடிக்கடி தலை சுற்றல் வரவும் வக்கீல் தொழிலைத் தொடரும் அளவிற்கு நம்பிக்கையில்லை. சீ டீ ஸ்கான் உள் அவயவங்கள் நன்றாய் இருப்பதாகக் கூறியது. அலோபதி மருந்துகள் வெர்ட்டின் க்ரவால் எதுவும் பயனளிக்கவில்லை. திருமணம் இதனாலேயே தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தார்.
மெலிந்த தேகம். பயந்த சுபாவம்
.
அடிக்கடி சளித் தொந்தரவு. குளிர்ச்சி ஒத்துக்கொள்வதில்லை. வாயில் எப்போதும் உப்பு ருசி. குதிகாலில் வலி. திடீர் திடீரென்று தலை சுற்றல். வீடே சுற்றும்.
கொஞ்சம் எளிதாகச் சரிதை தோன்றியது. ஸைக்ளாமென் 30 மூன்று வேளை 4 உருண்டைகள் 15 நாட்கள் மருந்து எழுதிக் கொடுத்தேன்
15 நாட்கள் கழித்து பேசினார். ஒன்றும் மாற்றமில்லை இந்த இருவார காலத்தில் ஐந்து முறை தலை சுற்றல் வந்துவிட்டது.
சென்னை வரச் சொன்னேன் மீண்டும் துயரர் சரிதை கேட்டேன். காதைப் பரிசோதித்தேன் ஒரு குறையும் தென்படவில்லை.
தலை சுற்றலுக்கு நரம்பியல் ரீதியாக எவ்விதக் காரணமும் புலப்படவில்லை.
கொஞ்சம் ஆழமாக துயரர் சரிதை பதிவு செய்தேன். ஐந்து வருடங்களுக்கு முன் மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்திருக்கிறார். ஆனால் தலையில் அடிபடவில்லை. வெறும் தோல் சிராய்ப்புக்களோடு தப்பியிருக்கிறார்.
மீள் கேட்டலில் ஒரே ஒரு துப்பு கிடைத்தது. அவரது இடது தோள்பட்டைக்குக் கீழே ஸ்காபுலாவின் அடியில் சில சமயங்களில் வலி அதிகம் தெரிகிறது. ஆனால் அதற்காக அவர் மருதுவ உதவியை இதுவரை நாடியதில்லை. வெறும் வலி நிவாரணி தெளிப்பான்கள் தேவைப்படும்போது போட்டுக்கொள்வது வழக்கம். வலியும் குறைந்து விடும்.
இதை சென்ற முறை என்னிடம் குறிப்பிடாதது ஏன் எனக் கேட்டேன். அது அந்த அளவிற்கு முக்கியமாகப் படவில்லை என்று பதில் சொன்னார்
.
ஹோமியோபதி அறிவியல், முக்கிய நலக் குறைக்கு எவ்வித காரண காரியத் தொடர்புமின்றி, பிறிதொரு அவயத்தில் தென்படும் நலக்குறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. நலக் குறைவை பூரணத்துவமாகப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறது. இந்த உடன் நிகழ் குறிகள் கன்காமிட்டண்ட் என அழைக்கப்படும் இவை மருந்தை தெரிவு செய்ய மிகவும் உதவி செய்யும்
இரு நோய்களையும் ஒரு சேரப் பார்த்ததில் செனப்போடியம் ஒரே மருந்தாக வந்தது. 30 ஆவது வீரியத்தில் 10 நாட்கள் மூன்று வேளையும் சாப்பிடச் சொன்னேன்.
தலை சுற்றல் போன இடம் தெரியவில்லை. எல்லாம் மாயம் போல். இன்று மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவருக்கு தலை சுற்றலும் இல்லை. இடது ஸ்காப்புலா வலியும் இல்லை
ஹோமியோ ஆசான் கார்ல் வான் போயனிங்காசன் உடன் நிகழ் குறிகளுக்கு அதிக முக்கியத்துவம் தருபவர். எனக்குப் பட்டறிவாக இந்த துயரர் சரிதை அமைந்தது. See More
Wednesday, 28 May 2014
தலை சுற்றலின் வித்தியாசமானக் குறிமொழி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment