Wednesday, 14 May 2014

கார்ப்பரேட் க்ருஷ்னா தோழமை அறியார்

கணுக்காலில் கொலுசு பூட்டியது
 குழி விழும் அமிழும் தசை வீக்கம்
 மூத்திரம் பிரிய முக்கால் மணி
 கனத்துக் கிடக்குது கண் இமைகள்

 மனம் மட்டிலும் சோர்வற்று
 பற்றுக்கம்பிகள் நீட்டிப் படரும்
 உதயத்தில் நாலு அஜெண்டா நச்சென
 மாலைக்குள் பூக்க வேணும் நாலும்

மகிழம்பூ விருப்பத்தில் மரமல்லி ஒவ்வாது
 மூச்சிரைக்கஓடி கோட்டைத்தொடனும்
 முந்திரியும் மாம்பழமும் ஒரே இனம்
 கருத்தரங்கு கூட்டி காட்சிப் படுத்தனும்

 எல்லாம் உதய அஸ்தமன தொடருக்குள்
 குருதி முடுக்கம் தலைவலி இடிக்கும்
 அபிமன்யூ சாகவும் அஸ்வத்தாமன் அலையவும்
 அனைத்தும் முன்னமே அறிந்திடும் பரமன்

 கருடனாய்ப் பறந்து இரை குவிமையம் தேடி
 காலில் இடுக்கி காத தூரம் ஏகும் கழுகு
 அன்பு நட்பு உறவுகள் சாத்தியம் கடந்த
 கார்ப்பரேட் கிருஷ்ணா தோழமை அறியார்

No comments:

Post a Comment