- அவள் சூரிய வம்சம் இல்லைதான்
சுட்டெரிக்கும் சூரிய தகிப்பில்
தலை முக்காடின்றி
மொட்டை மாடியில்
ஒளியை, சூட்டை
சேமிக்கிறாள் கூழ் வடகத்தில்
வருஷ முழுமைக்கும்
ஆயத்தமாகிறது வடகம்
தரையில் ப்ளாஸ்டிக் தாள் பரப்பி
பறக்காமலிருக்க மூலைகளில் ...
கவனமாய் கனமாய் கல்வைத்து
தாளின் உடலெங்கும் அடர்த்தியாய்
வடகக் கோலம் போடுகிறாள்
சேமிப்புக் கணக்கில் புலி
எத்தனை மாதம் வருமென்று
அத்துப்படியான அனுபவக்கணக்கு
கூழாய் அழுத்திப் பிழிவதை
குழந்தைகள் பார்க்காவிட்டால் நல்லது
வடக வங்கி பழமையானதுதான்
ஊறுகாய், உப்புக்கண்டம் போலத்தான்
ஆனால் அதற்கும் போட்டியாய் வந்திறங்கும்
கன்கட்டு வித்தை செப்பிடு வித்தை காட்டும்
அயல் நாட்டுக் கம்பெனிகள் முதல்போட்டு
வண்ணங்கள் சேர்த்து புற்று நோய் பெருக்கி
வளர்ச்சி செழிக்குதாம்தேர்தல் உபதேசங்களில்
முதல் போட்டவன், மெஷின் தருவித்தவன்
சூரிய வம்சமாம்,ஆளப்பிறந்தவனாம்
குளிரூட்டிய அங்காடிகளில் இனி
வடக வியாபாரம் அமோகமாய் அபாரமாய்
நாம் வாங்கப் பிறந்தவர்கள் ,வரும் நாட்களில்
வடகம் வாங்குவோம் வால்மார்ட் கடைகளில்!
Saturday, 3 May 2014
அவள் சூரிய வம்சம் இல்லைதான்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment