Wednesday, 28 May 2014

கருப்பைக் கட்டி-ஹோமியோபதி சிகிச்சை

  1. எனக்கு மனவளக்கலை தவ மையங்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தவர் திரு நந்தகுமார். அனேகமாக, சென்னை நகரில் செயல்படும் 6 அல்லது 7 செண்டர்களில் ஹோமியோபதி வகுப்புகள் எடுத்திருக்கிறேன். சைதாப்பேட்டை செண்டரில் வகுப்பு எடுக்கும்போது நிறைய துயரர்கள் என்னிடம் மருத்துவ ஆலோசனைக்கு வந்தார்கள்.

    திருமதி ராஜேஸ்வரி வயது 45. தன் உபாதைகளை எனக்கு ஒவ்வொன்றாகக் கூறினார். வீட்டு வேலைகளில் நாட்டமில்லை. இரண்டு பெண் குழந்...தைகள். மூத்தவர் எம்பீபீஎஸ் படிக்கிறார். அடுத்தவர் பள்ளிப் படிப்பின் இறுதிக் கட்டம் அவரும் அல்லோபதி மருத்துவக் கல்வி கற்பதிலே நாட்டம். குழந்தைகளைக், கணவரை சரியாகக் கவனிக்க முடியவில்லை. விட்டேத்தியாக இருக்கத் தோன்றுகிறது. தன் கணவரின் சகோதர் குடும்பமும் சேர்ந்து ஜாகை. பெரிய வீடு. மாமனார் மாமியார் எல்லோரும் ஒன்றாக.. தன்னால் சுறுசுறுப்பாய் வேலை செய்ய முடிவதில்லை. கெட்ட பெயர்தான் மிச்சம்.

    கைகளைக் காண்பிக்கிறார். விரல்கள் எங்கும் வெடிப்பு. பாளம் பாளமாக. கால்களிலும் வெடிப்பு. பாதம் முழுதும். காலை ஊன்றவே சிரமம். அதும் காலையில் எழுந்ததும் நடக்கவே முடியாதபடிக்குக் குதிகால் வலி. ஃபைலைக் கொடுக்கிறார். மாத விடாய் மூன்று அல்லது நான்கு மாதத்திற்கு ஒரு தடவை தான் ரத்தப் பெருக்கு பெரும்பாடு. வலியும் அதிகம். அல்ட்ரா சௌண்ட் ஸ்கான் ரிப்போர்ட் கருப்பைக் கட்டி 4 செ.மீ அளவு, பல்க்கீ யூடிரஸ். நல்ல வேளையாகக் கருப்பையின் கழுத்துப் பகுதியில் seedling fibroid இரண்டு. ஆனால் புண்ணோ, அடைபடும் அளவுக்கோ இல்லை. இருந்தாலும், கைனக்காலஜிஸ்ட் கருப்பையை அகற்றிவிடலாம் எனப் பரிந்துரைக்கின்றனர். எளிமையான ஆலோசனை. முதல் மகள் எம்பீபீஎஸ் படிக்கிறவர். மருத்துவ விழிப்புணர்வு உள்ளவர். கருப்பை அகற்றும் முடிவுக்கு அவர் ஒத்துக் கொள்ளவில்லை.
    கருப்பைக் கட்டியைக் கரைக்க முடியுமா? ரொம்ப ஸிம்பிளாகக் கேட்கிறார்? முயற்சிப்போம். அறுவை சிகிச்சைக் கடைசி ஆப்ஷன்.
    துயரர் சரிதையைப் பதிவு செய்தேன். ஸெபியா 30 4 உருண்டைகள் இரண்டு வேளை தினமும் முதல் வாரம் பின்னர் மூன்று நாளைக்கொருமுறை.

    ஆறு வாரங்கள் கழித்து வந்தார். கை கால் விரல் வெடிப்புகள் கணிசமாகக் குறைந்திருந்தன. மாத விலக்கும் வந்திருக்கிறது அவ்வளவாக பெரும்பாடு இல்லை வலி சுத்தமாக இல்லை
    இம்முறை ஆரம் ம்யூரியாட்டிக்கம் நேட்ரோனேட்டம் 6x வீரியத்தில் மாத்திரைகள். மூன்று வேளை. தினமும் 2 மாதங்கள்
    தூஜா 1எம் மாதம் ஒரு டோஸ்.

    நல்ல முன்னேற்றம். இன்னும் இரண்டு மாதங்கள் செபியா 200. 15 நாளைக்கொருமுறை ஒரு டோஸ்
    6 மாதங்கள் கழித்து ஸ்கான் மீண்டும். ரிப்போர்ட் முன்னேற்றத்தைக் காட்டுகிறது, seedling fibroids கரைந்துவிட்டன. பெரிய ஸைஸ் கட்டி ஒரு செ.மீ அளவிற்கு சுருங்கிவிட்டது. பல்க்கி யூட்ரஸ் அப்படியே இருக்கிறது.

    ஃராக்ஸீனஸ் அமெரிக்கானா தாய்த் திரவம் இரு வேளை 10 சொட்டுக்கள் தினமும். இரண்டு மாதம் எடுக்கச் சொல்லி அறிவுறுத்தினேன்.

    அதன் பின் அவருக்குப் ப்ரச்சினைகள் இல்லை. மனக் குறிகளில் நல்ல முன்னேற்றம், சுறுசுறுப்பாகக் குடும்ப வேலைகளில் ஈடுபட முடிகிறது. விரல் வெடிப்புக்கள் போய்விட்டன. குதிகால் வலி இல்லை செபியா ஆளுமையே மாற்றும் பலம் கொண்டது. ஆழ்ந்து வேலை செய்யும். சர்ஜரி தேவையற்றும் போனது

    இரண்டாவது மகளும் எம்பீபீஎஸ் படிக்கிறார் இப்போது. இந்த ஐந்து வருடங்களில் குடும்ப நண்பர்களாகி விட்டனர். புது வீடு கட்டி, ஜூன் 2 ஆம் தேதி காலை கிரகப் பிரவேசம். அழைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள் தம்பதி சமேதராக வந்து.
    மனதில் நிறைவு புலப்படுகிறது.

1 comment: