- என் அலுவலகத் தோழி பேபியின் குழந்தைகள்: ஆண்கள்: இருவரும் இரட்டையர்கள். பதினொண்று அல்லது பன்னிரண்டு வயதிருக்கலாம் முதல் நாள் ஒருவருக்கு சளி பிடித்தால் மறு நாள் நிச்சயமாய் அடுத்தவருக்கு. இப்படியே இருமல்.ஜுரம் எல்லாம். சிறுவயதிலிருந்தே இதே மாதிரித் தாக்குதல். பெற்றோருக்கு பயமும் அலுப்பும் தரும் அளவுக்கு தடுப்பாற்றல் குறைவு.
திடீரென இருவருக்கும் முதன் முதலாக மூக்கில் ரத்தம் கசிய ஆரம்பித்தது. ரத்தம்... ஒழுக ஆரம்பித்ததும் பார்த்தாலே எல்லோருக்கும் பயம் வரும் உடனடியாக் ஐஸ் பாக் வைத்து நிறுத்தப் பார்ப்பார்கள் ஓராண்டுக்கு மேல் அல்லோபதி குழந்தை வைத்தியர்கள் தொடர்ச்சியாக சிகிச்சை அளித்தார்கள். பலனில்லை. இருவருக்கும் எபிஸ்டாக்ஸிஸ் உடல்வாகு என்று விளக்கிச் சொன்னார்கள் காயம் படாமல் பார்த்துக் கொள்லுங்கள் என்று எச்சரிக்கை தந்தார்கள். பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் பழக்கம் கைவிடப்பட்டது. தனியாக எங்கும் செல்லவோ அல்லது வீட்டுக்கு வெளியில் விளையாடவோ தடை.
தொண்டையில் இருவருக்கும் டான்ஸில் அழற்சி குறைபாடும் இருந்தது. ஆனால் என்னிடம் வரும்போது வீக்கமோ அழற்சியோ இல்லை. மூக்கில் ரத்தம் வரும்போது எரிச்சல் இருந்தது
. இருவருக்கும் குளிர்ச்சியான பானங்கள் அருந்துவதில் மிகவும் விருப்பம். ஆனால் ஒத்துக்கொள்ளாது. மூக்கில் எரிச்சலோடு ஜலதீஷம் ஆரம்பித்து ஓரிண்டு நாட்களிலேயே நெஞ்சுக்கு இறங்கிவிடும். பிறகு, தவிர்க்க இயலாமல் ஆண்டி-பையாடிக் கொடுத்துத்தான் உபத்திரவத்தைக் குறைப்பார்களாம்.
சாப்பாட்டு மேஜையில் வைக்கப்பட்டிருக்கும் உப்பை இருவரும் அம்மாவுக்குத் தெரியாமல் ரகசியமாய், போட்டி போட்டுக்கொண்டு ருசிப்பது வழக்கம். இருவரும் நல்ல உயரம் ஆனால் ஒல்லியான உடல்வாகு என்று சொல்வதற்கில்லை.
கேட்ட கேள்விக்கு உடனடியான பதில் சரளமான தங்கு தடையற்ற பேச்சு.
இனிப்பு புளிப்பு ருசிகளில் எது மிகவும் விருப்பம்?
இனிப்பு பிடிக்கும், இருந்தால் சாப்பிடுவோம் அனால் காரம் அதிகம் பிடிக்கும். அப்பா வெளியூர் போனால் வாங்கி வரச் சொல்வது காரம் தான்.
இருவரும் கீ போர்ட் வாசிப்பார்கள் பொழுது போக்காக ஓய்வு நேரத்தில்.
அப்பா வழித் தாத்தாவுக்கு நடுவயதில் காச நோய் இருந்ததாம்.
வீட்டிலிருப்பதைவிட வெளியில் பயணிப்பது ஊர் சுற்றுவது மிகவும் பிடிக்கும்.
பாஸ்பரஸ் 30 காலை, மாலை இருவேளை முதல் மூன்று நாட்கள்
பின் வாரம் ஒரு டோஸ்.
பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை ட்யூபர்குலினம் காலையில் ஒரு டோஸ்.
இன்று இருவரும் எஞ்ஞினீயர்கள். எபிஸ்டாக்ஸிஸ் இருவருக்கும் முற்றிலும் குணமாகிவிட்டது.
Saturday, 24 May 2014
இரட்டைச் சகோதரர்களின் எபிஸ்டாக்ஸிஸ் நோய்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment