Wednesday, 28 May 2014

இரு வெவ்வேறு நோய்கள்-மருந்தொன்றுதான்

  1. திருவொற்றியூர்-கைலாஷ் செக்டார்-மனவளக்கலை-தவமையம், பிரதி மாதம் முதல் ஞாயிறு காலை 9.30க்கு திருமதி ஆனந்தி நந்தகுமார் சுறுசுறுப்பாக செயல் பட்டுக் கொண்டிருப்பார். அங்கே இருப்பில் இருக்கும் 300க்கும் மேலான ஹோமியோ மருந்துகளை அகர வரிசையில் அடுக்கி வைத்து, க்ளோப்யூல்ஸ் பாட்டில்களில் போட்டு ஸ்டிக்கரும் ஒட்டி தயாராக வைத்துவிடுவார். நானும் நண்பர் பாலாவும் 10 மணிக்கு சிகிச்சை முகாமை ஆரம்பிப்போம். குடும்பம் ...குடும்பமாக மருத்துவ ஆலோசனைக்காக துயரர்கள் வருவார்கள்.

    திருமதி லக்ஷ்மி வயது 36 ஒரு பெண் குழந்தை. மணலியிலிருந்து வருவார். கொஞ்சம் தெலுங்கு கொஞ்சம் ஆங்கிலம் எனக் கலந்துதான் உரையாடுவார், தமிழ் இன்னும் பேச வரவில்லை. ஆந்த்ராவிலிருந்து புலம் பெயர்ந்து சென்னை வந்து 3 மாதங்களே ஆகிறது. தனது மகளின் சைனஸ் தொந்தரவுகளுக்கு மருந்து கேட்டு முதல் மாதம் வந்தவர் , இந்தமுறை தனக்காக ஆலோசனை கேட்கிறார்.

    அவருக்கு 35 வயதைக் கடந்த நிலையில் , அடி நாக்கின் இரு பக்கங்களிலும் டான்ஸில் திசுக்கள் பெருத்து வீங்கிக் காணப்படுகின்றன. கடந்த 6 மாத காலமாக மாதம் ஒருமுறையாவது ஜுரம் வந்துவிடுகிறது. தொண்டை வலியோடு. தண்னீர் குடிக்க முடியவில்லை, உணவு மென்று விழுங்க முடிய வில்லை.தலையில் உச்சிக்கும் சற்று இடப்புறமாக ஒரு இரண்டு ரூபாய் நாணயம் அளவுக்கு சொட்டை. முடியே இல்லை பளபளவென்று மண்டைத்தோல் தெரிகிறது. வேர்க்கும்போது அரிப்பு. சொரிந்தால் லேசாக வெள்ளைப் பவுடராய் உதிர்கிறது. பரவுமோ எனக் கவலை.
    தமிழில் உரையாட முடியாதது ஒரு ப்ரச்சினையாக இருந்தாலும் அருகிலிருக்கும் நண்பர்களின் உதவியோடு அவரது சரிதையைப் பதிவு செய்துகொள்கிறேன்
    .
    குளிர் தாங்குவதில்லை. மிகுந்த கூச்ச சுபாவம். சிறுவயதிலிருந்தே இண்ட்ரோவெர்ட்; வெளிப் பழக்கம் கிடையாது, உறவினர்களிடம் கூட அதிகம் பேசிப் பழகியதில்லை. கேள்விகளுக்கு சொற்ப வார்த்தைகளிலேயே பதில்.

    இனிப்பு அதிகம் பிடிக்கும்

    சிறுவயதில் டான்ஸில் வீக்கம் இல்லை.

    குழந்தையாய் நடக்கக் கற்றுக் கொண்டது இரண்டரை வயது கடந்து தானாம்.

    பரீட்டா கார்ப் இரு உபாதைகளுக்கும் ஒரே மருந்தாய் அமைகிறது. 30 ஆவது வீரியம்; தினமும் இரு வேளை

    ஒரு வாரம் பிறகு மூன்று நாளைக்கொருமுறை காலையில் மட்டும் 4 உருண்டைகள். இரண்டு மாதங்கள்

    கோள வீக்கம் குறைந்து விட்டது அடுத்த மாதம் வரும் போது ,

    தலையில் சொட்டைக் காணப்பட்ட இடத்தில் கேசம் வளர ஆரம்பித்திருக்கிறது. இந்த முறை மருந்தை வாரம் ஒரு டோஸ் என்ற அளவில் பரிந்துரைக்கிறேன்.

    மருந்தை மாற்ற வேண்டிய அவசியமே இல்லை. வீரியத்தையும் கூட்டவில்லை

    இரண்டு மாதங்களில் முற்றிலுமாக நலம். மாதாந்திர சுரம் வரவில்லை. விழுங்கும்போது வலி இல்லை, அடைக்கவும் இல்லை. தொண்டையின் இருபுறமும் புடைப்பும் இல்லை. முடி சீராக வளர்ந்திருக்கிறது. சொட்டையைக் காணவில்லை. வெள்ளைப் பொடி உதிர்தலும் இல்லை

    அடுத்த மாதங்களில் தமிழ் சீராகப் பேச வராத தெலுங்கு மட்டுமே பேச முடிந்த துயரர்கள் மணலியிலிருந்து வர ஆரம்பித்தார்கள் திருமதி லக்ஷ்மியின் பரிந்துரையில்.

No comments:

Post a Comment