Wednesday, 14 May 2014

காய் நகர்த்தும் சதுரங்க வெளி




காய் நகர்த்தும்
 சதுரங்க வெளி
 விரல்களின் நீட்சி
 இழைகளாய் திரண்டு
 ராஜா, ராணி,கோட்டை
 மந்திரி,மத குருவென
அதிகார வலையை
 தன் கைப் பிடிக்குள்
 ஆட்டுவிக்கும் ஆணவம்

 கறுப்பு வெள்ளை
 சதுரங்கள் நீண்டு
 பியானோக் கட்டைகளாய்
 உருமாறும் அற்புதம்
 அதிகாரம் இசைவைக்
 கட்டமைக்கும் குறியீடோ
 அங்கும் மாயக் கை
 காட்சிப் புலத்தில்

 பீத்தோவன் தன்
 இசைக்கோர்வையை
 நெப்போலியனனுக்கு
 சமர்ப்பணம் செய்தது
 நினைவில் எழும்

 ஆணவம் கூடி
 சர்வாதிகாரம் முடி சூட
 இசைக்கோர்வையை
 திரும்பப் பெற்றதும்
 வரலாறு காட்டும்

 மாயக் கைகளை
 அடையாளம் கான்பது
 எங்ஙனம் நிகழும்?

மிஹைல் க்ரிஸ்டியின் ஓவியம்


No comments:

Post a Comment