விட்டெறிந்த தவிட்டு ரொட்டியில்
காளான் வர்ணம் பூசும் தன் படத்தை
காற்று தன் போக்கில் நகர்த்தும்
வெடித்த கோழிப்பூப் பஞ்சை
மரக் கிளையில் ஊஞ்சலாடும்
வைக்கோல் போர்த்திய நஞ்சுக்கொடி
புறா மலம் இலவசமாய் வாங்க...
அணிவகுப்பர் கிராமத்து வைத்தியர்
இடுப்பில் அரைஞாண் கயிற்றில்
புங்கக் கொட்டை கோர்த்து திரியும்
காத்துக் கறுப்பு அண்டா சிறிசுகள்
நெருஞ்சி இலை நீரில் கரைத்து
கெட்டியாய் நீரை அள்ளியெடுத்து
மாயம் செய்வார் பள்ளி ஆசிரியர்
பராக்குப் பார்த்தே பொழுது போனது
நான் விட்டு வந்த செம்மண் பூமியில்
காசு பணம் கேளிக்கை வரி ஏதுமின்றி!
No comments:
Post a Comment