உயிராற்றல் என்றால்
என்ன?
ஆர்கனான் மணிமொழி
9,15ல் ஹானெமன் விளக்குவது:
உயிராற்றல் ஒரு
உயிரியில் எங்கும் நீக்கமற வியாபித்து, சக்தி ரூபமாய் இயக்கங்களை ஒருங்கிணைப்பது,
நலத்தைப் பேணுவது---
உடலின் உணர்வையும்,பணியையும்
செழுமைப்படுத்துவது.
பகுத்தறியும் மனம்
மற்றும் உடல் இரண்டையும், வாழ்வின் உயர் குறிக்கோளை
அடையப் பயன்படுத்துவது.
ஆர்கனானின் முன்னுரையில்
இன்னும் ஆழமாய்:
உயிராற்றல் தன்னிச்சையானது,
தானியங்கி
உயிரியில் எங்கும்
வியாபித்திருப்பது
நுண்ணறிவற்றது,
உள்ளுணர்வு பூர்வமானது
உருவமற்றது.
மியாஸங்களின் தாக்கத்தால்
உயிராற்றல் மிக எளிதில் பலவீனப்படுகிறது-எனவே நோய்கள் தோன்றுகின்றன
ஹோமியோ மருந்துகள்
உயிராற்றலைப் பெருக்குகின்றன.
தூண்டுகின்றன,
நோய் ஏற்புத்திறன் குறைகிறது
நோய்க்குறிகள்
முற்றிலுமாய் மறைகின்றன.
மனமும் உடலும்
நலமடைகின்றன.
உயிராற்றல் இந்தியக்
கருத்தாக்கமான ஆத்மாவோ அல்லது மேலை நாடுகளில் செல்ஃப் என்று அழைக்கப்பட்ட கருதுகோளோ
அல்ல. ஹானெமன் உயிராற்றலை வேறுபட்ட தளத்தில்
விளக்கினார். மதவாதக் கருத்துக்களில் பொருள் கூறவில்லை.
1790 களில் ஹானெமன்
எழுதிவந்த ஹ்யூஃப்லேண்ட் ஜர்னலில் பார்த்தெஸும் உயிராற்றல் குறித்து எழுதிவந்தார். அவரே உயிராற்றலுக்கு ஒரு செக்குலார் விளக்கம் தந்தவர். ஆர்கனான் மூன்றாம் பதிப்பு வரை ஹானெமன் ஒரு விமரிசனக்
கண்ணோட்டத்துடனே உயிராற்றல் கொள்கையை அணுகி வந்தார். நான்காவது பதிப்பின் முன்னுரையில்
தான் முதன் முதலாக தனதுபார்வையில் உயிராற்றலை விளக்குகிறார். ஐந்தாம் பதிப்பில் உயிராற்றல்
ஆர்கனானில் தனி மணிமொழிலள் விளக்கம் பெறுகிறது.
அதுவரை வைட்டலிஸ்டுகள் சொல்லிவந்த உயிராற்றலுக்கும், ஹானெமனின் உயிராற்றலுக்கும்
பொருள்பொதிந்த வேறுபாடுகள் தெளிவு பெறுகின்றன.
உயிராற்றலை பலவீனப்படுத்தும் சிகிச்சை முறைகளான, ரத்தம் வெளியேற்றுதல், அட்டையை ஒட்டி ரத்தம் உறிஞ்சச் செய்தல், வாந்தியுண்டாக்குதல், மலமிளக்கிகள் கொடுத்தல் போன்றவற்றை ஹானெமன் கடுமையாகச் சாடினார். ,
No comments:
Post a Comment