Wednesday, 15 January 2014

கத்தியின்றி ரத்தமின்றி



””கத்தியின்றி ரத்தமின்றி””........

குணசேகரன் என் அலுவலகத் தோழர்.

செங்கல்பட்டிலிருந்து தினமும் வந்து போகிறார். ஒரு நாள் மதியம் 4 மணியளவில் என்னைப் பார்க்க வந்தார். தடிமனான ஒரு ஃபைலும் கொண்டு வந்திருந்தார்.

”சார் நீங்க எனக்கு ஒரு உதவி செய்யனும், போன வாரம் முழுக்க ரொம்ப அவஸ்தை பட்டுட்டேன். ஸ்கான் எக்ஸ்ரே எல்லாம் எடுத்தாங்க. லெஃப்ட் சைட்ல 8 எம்எம் சிறு நீரகக் கல் இருக்குன்னு ரிஸல்ட் வந்திருக்கு. நீங்க தான் எப்படியாவது உதவி செய்யனும்.”

யூராலஜிஸ்டை பார்த்தீங்களா?

”ஆமாம் சார். கல்லை லித்தோட்ரிப்ஸி பன்னித்தான் உடைச்சு எடுக்கணும்னு சொல்லிட்டாரு. அடுத்த வாரம் வரச் சொன்னாரு.”

ஃபைலை வாங்கிப் பார்த்தேன். லெஃப்ட் யூரெட்டரில் ஒரு கல் அடைச்சிருக்கு. சிறு நீர் தேங்குகிறது. ஹைட்ரோ நெஃப்ரோஸிஸ். லெஃப்ட் ரீனாலிஸ் கால்குலஸ் ரிசல்ட்.

”இப்ப வலி இருக்கா?

“ இல்ல சார், பஸ்கோபன் இஞ்ஜெக்ஷன் குடுத்த பின்னாடி வலி கொறஞ்சிடுச்சி.”

யூரின் போகும்போது எரிச்சல்?

கடுமையான எரிச்சல். வலி அப்ப அதிகமா இருக்கு.

ரத்தம் போச்சா?

யூரின் வெளுர் சிகப்பா போகுது சார்.

ஜுரம், நடுக்கல்?

அதெல்லாம் இல்லை சார்.

உங்களுக்கு இதுக்கு முன்னாடி இந்த மாதிரி ஏதாவது கல் உண்டாச்சா?

இல்ல சார். இதான் ஃபர்ஸ்ட் டைம். ஆனால் வலி கடுமை துடி துடிச்சுப்போயிட்டேன். நிக்க முடியல, உட்கார முடியல, படுக்க முடியல. நில கொள்ளாம தவிச்சுப்போயிட்டேன். என் எதிரிக்குக் கூட இந்த மாரி வலியெடுக்கக் கூடாது சார்.

பாவம்! கல்லடைப்பு வலி கடுமையாத்தான் இருக்கும்.

சரி ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிப்பீங்க.?
தாகம் நல்லா எடுக்கும். 2 லிட்டர் குறையாம குடிப்பேன் சார்.

சார் சார் என்பது கொஞ்சம் உறுத்தலாய்த்தான் இருந்தது.

ரொம்ப நல்ல தோழர். எல்லோரிடமும் சிரிச்ச முகத்தோட பழகுவாரு. விவரமான ஆளு. அவரிடம் தகவல் அதிகம் உண்டு. தென்கச்சி சாமி நாதன் மாதிரி எப்பவும் புதுத் தகவல் விதம் விதமாய் சொல்லுவார். நல்ல படிப்பாளி. விவாதிக்க, சம்பாஷிக்க பிரியம் அதிகம்.

சரி தோழர். மருந்து எழுதித் தர்ரேன், விடாம 2 மாதம் சாப்பிடனும். அப்புறம் ஸ்கான் பண்ணிப் பாக்கலாம். கல்லு கறஞ்சிடும்; பயப்படறத்துக்கு ஒன்னுமில்ல, லித்தோட்ரிப்ஸி எல்லாம் வேண்டாம்.

அவருக்கு ரொம்ப சந்தோஷம்.

டெரிபெந்தினா 30 3 வேளை சாப்பிடு முன் 3 நாட்கள்

 அதன்பின் காந்தாரிஸ் 200 3 வேளை சாப்பிடுமுன் 1 வாரம்.
அதன்பின் பெரைரா ப்ரேவா தாய்த்திரவம் 10 சொட்டு தண்ணீரில் விட்டு 3 வேளையும் சாப்பிடுமுன் 1 மாதம்

 அதன்பின் ரிவ்யூ.

கோலோஸிந்த் 1எம் 1 டிராம் பில்ஸ்ம்
 எழுதிக்கொடுத்தேன். வலி வந்தால் ஊசி போட்டுக்கக் கூடாது. இந்த மருந்துல 10 நிமிசத்திற்கொரு முறை 4 உருண்டைகள் போட்டுக்குங்க. அரை மணியில் வலி போயிடும். எங்கே போனாலும் கையில இந்த மருந்த வைச்சிக்கனும். மனசு தைரியத்துக்குத்தான். வலி வராது

 சரி சார். அவர் கேட்க நனைத்ததை நானே சொல்லிவிட்டதில் அவருக்கு திருப்தி.

போகும்போது தி நகரில் பஹோளா ஃபார்மஸியில் வாங்கிக்கிறேன்.

ஆகட்டும் என்றேன்

 ரத்தம் போவது நின்றது. எரிச்சலும் வலியும் ஓரிரு நாட்களில் குறைந்து விட்டது.

அடுத்த மாதம் வந்தபோது எல்லா மருந்தையும் நிறுத்திவிட்டேன்., பெர்பரிஸ் வல்காரிஸ் தாய்த்திரவம் 30 எம் எல் 10 சொட்டுக்கள் தண்ணீரில் விட்டு. 3 வேளை. 1 மாதம். சாப்பிடுமுன்

 அடுத்த மாதம் எந்த மருந்தும் கிடையாது. 3 மாத இறுதியில் ஸ்கான் எடுத்தோம். கல் இல்லை. ஹைட்ரோ நெஃப்ரோஸிஸ் இல்லை. எந்த அவஸ்தையும் இல்லை. கை மேல் பலன்.

2 மாதங்கள் கழித்து ஒரு நாள் மீண்டும் வந்தார்.

என்ன ஆச்சு என்றேன்

 ஒன்னுமில்ல சார். அவருடய உறவினர் சான் ஃப்ரான்ஸிஸ்கோவிலிருந்து வாங்கி வந்ததாக ஹார்ரிஸ் கூல்ட்டரின் டிவைடெட் லெகஸி எனும் புத்தகம் 4 ஆவது வால்யூம் அன்பளிப்பாகக் கொடுத்தார். ஹோமியோபதியின் விஞ்ஞான வரலாறு. நல்ல புத்தகம். அவருக்குக் கை கொடுத்தேன். தேடிக் கண்டுபிடிச்சு வாங்கியிருக்கீங்க. எனக்குக் கட்டாயம் தேவை.

அவர் மிகுந்த மனத்திருப்தியோடு போனார். —

No comments:

Post a Comment