விலாசினிக்கு வந்தது பாஸ்பரஸ் தலைவலி.
கரூரிலிருந்த எனது இடதுசாரி நண்பர் தனது பேத்தியின் சிகிச்சைக்காக சென்னை வருவதாக எனக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார். அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சாரதா நடு நிலைப்பள்ளியில் வழமையான ஹோமியோபதி விவாதங்கள் முடிந்ததும் சந்திப்பதாக ஒப்புக்கொண்டேன்.
அதேபோல் சரியாக 6 மணிக்கு துயரர் சரிதை கேட்க ஆரம்பித்தேன்.
பெயர் விலாசினி வயது14. 9ஆம் வகுப்பு படிக்கிறாள். மாதம் இரண்டு மூன்று தடவையாவது தலைவலி வருகிறது. தலைவலி வந்துவிட்டால் தலை உடைக்கிறாப்ல வலி கடுமையா. ஒன்னும் செய்யமுடியாது. படுத்தே கிடக்கனும் குமட்டிக்கிட்டே இருக்கும். தூக்கம் வராது. வாந்தின்னா வாந்தி குடம் குடமா. சில சமயத்துல ரெண்டு மூனு நாள் கூட நீடிக்கும்.சாப்பிட முடியாது பச்சத்தண்ணிதான் குடிப்பா; கொஞ்ச நேரத்துக்கெல்லாம் எல்லாம் வெளியில வந்துடும்.
என்ன பன்னுவீங்க அப்ப?
ரூம் கதவு, ஜன்னல் எல்லாத்தையும் சாத்திப்பிடுவேன். யாரும் டீவி போடக்கூடாது. செல்போன் சத்தம் கூட ஆகாது. வாசக்ரைன் மாத்திரை ரெண்டு போட்டால் தான் கேக்கும். கொஞ்சம் கண்ணை அழுத்துற மாரி இருக்கும். அப்படியே சோர்ந்துபோய் தூங்கிப் போய்டுவேன். தூங்கி எழுந்தா கொஞ்சம் சுமாரா இருக்கும். மறுபடியும் இன்னொரு மாத்திரை. ஒரு ரெண்டு மூனு மணி நேரத்தில வலி தெரியாது. நார்மல் ஆயிடும்
சரி பசியெல்லாம் எப்படி இருக்கு?
நல்லா பசிக்குது அடிக்கடி சாப்பிடுவேன்.
தாகம்?
நிறயக் குடிப்பேன். நல்ல தாகம் எடுக்குது.ஸ்கூலுக்கு எடுத்துக்கிட்டுப் போறது பத்தாது. அங்கேயும் ஃப்ரெண்ட்ஸ் கிட்டெ வாங்கிக்குடிப்பேன்.
தாத்தா இடை மறிக்கிறார். எப்பவும் அம்மாளுக்கு ஐஸ் வாட்டர் தான் வேனும். மழக்காலத்துல கூட ஃப்ரிட்ஜ்லேர்ந்து பாட்லெ எடுத்து ஒரே அன்னாத்து.
நல்லா ஜில்லுன்னு ஜூஸ் குடிப்பியா?
ரொம்ப இஷ்டம் எப்பவும் ஃப்ரிட்ஜ்ல மாஸா, ஸ்ப்ரைட் லெமன் ஜூஸ் எல்லாம் ரெடியா இருக்கனும்.
நான் வெஜ்ஜெல்லாம் இஷ்டமா? ஒத்துக்குமா?
மீன் ரொம்ப பிடிக்கும் ஃப்ரை பன்னாதான் பிடிக்கும்.
சிக்கன் ஃப்ரை வெறும் வாயிலே போட்டுக்கிட்டு மெல்லுவாங்க- தாத்தா போட்டுக்குடுக்காதீஙக தாத்தா. தாத்தாவைக் கிள்ளுகிறாள்
காரம்னா அம்மாளுக்கு நாக்கு நீட்டம்
இனிப்பு ருசி பிடிக்குமா? என்ன ருசி அதிகம் பிடிக்கும்?
இனிப்பவிட உப்புதான் அதிகம் கேட்கும். ஊறுகா வேனும். காட்டமா இருக்கனும் அப்பத்தான் இறங்கும்.
தாத்தா தகவல் சொல்லுகிறார்.
எல்லாவற்றையும் பதிவு செய்துகொண்டே வருகின்றேன்.இன்னும் என்னென்ன தகவல்கள் வேனும்னு நோட்ஸைப் பார்க்கிறேன்.
ஸ்கூல்ல கேம்ஸ், டான்ஸ், ட்ராமா பேச்சுப்போட்டி அது இதுன்னு ஏதாச்சும் உண்டா?
டான்ஸ், பேச்சுப்போட்டியில எல்லாம் கலந்துப்பேன். டிஸ்ட்ரிக்ட் லெவெல்ல ப்ரைஸ் கூட வாங்கியிருக்கேன். தாத்தா சொல்லுகிறார். அதெல்லாம் அம்மணி ரொம்ப சூட்டிங்க. நிறய ஃப்ரெண்ட்ஸ். எல்லாரும் வீட்டுக்கு வருவாங்க, எப்பவும் பரிட்சைன்னா கம்பைன்ட் ஸ்டடி தான். ஆக்கிப்போட்டே இவங்க தாயாருக்கு அலுத்துப் போயிடும் வீடு எப்பவும் கலகலப்பா இருக்கும்.
தல வலி அதிகம் வர்றது எந்த ஸைட்ல? லெஃப்டா? இல்ல ரைட்டா?
அடிக்கடி வர்றது லெஃப்ட்லதான் . எப்பொவாவது ரைட்ல வரும். அப்ப மட்டும் சீக்கிரமே போயிடும்.
சரி பீரியட்ஸ் பத்தி சொல்லுங்க.
டேட்டெல்லாம் கரெக்டா வந்துடும் கொஞ்சம் அதிகமா போகும். வயித்து வலியெல்லாம் இல்ல. குமட்டும் வாந்தி வர்ரதில்ல.
தகவல்கள் போதும் என்று தோன்றுகிறது. பேனாவை மூடிவிட்டு குறிப்புகளைப் பார்க்கிறேன்..
பாஸ்பரஸ் 200 6 டோஸஸ் எழுதுகிறேன். மூன்று நாளைக்கொருமுறை காலை வெறும் வயிற்றில் ஒரு டோஸ்.
வாஸாக்ரைன் போட்டுக்க கூடாது.
தலவலி வந்தா? கேள்வி உடனேயே வருகிறது.
வெற்றுருண்டைகள்- ரூப்ரம் நைக்ரம் 1எம் என்று என் ஆசான் ப்ரகாஷ் ராவ் பாணியில் எழுதித்தருகிறேன்.
ஒரு மாதம் கழித்து போனில் ரிவ்யூ.
க்யூர் ஆயிடும்ல நண்பர்? வினவுகிறார்.
கவலப்படாம போங்க. உழச்சிருக்கேன்ல. எனக்கு நம்பிக்கை இருக்கு. பத்து வருஷத் தலவலிஎல்லாம் க்யூராகுது. இதென்னா ரெண்டு வருஷம்தானெ எல்லாம் சரியாயிடும்.
ஒரு வாரம் கழித்து போன். விலாசினியே பேசுகிறாள். அங்கிள் நேத்து தலவலி லெஃப்ட்ல வந்துடுச்சு தாங்க முடியல் ரொம்ப ஜாஸ்தியா இருந்துச்சு. வழக்கம்போல வாஸாக்ரைன் போட்டப்புறம்தான் விட்டுது. இன்னொரு மருந்து குடுத்தீங்கள அதப்போட்டேன் கேக்கல. தலவலி நிக்காதா அங்கிள்?
இல்ல. தொடர்ந்து எல்லா டோஸையும் சாப்பிடு அப்புறம் சொல்லு.
6 டோஸுக்குப் பின்னாலும் தலவலி வரத்தான் செய்தது. ஆனால் நீண்ட இடைவெளிக்குப்பிறகு வந்தது. வலி பொருத்துக் கொள்ளுமளவுக்கு மட்டுப்பட்டிருந்தது.
ஆறு மாதத்துக்குப் பிறகு நண்பர் ஒரு நாள் போன் பண்ணினார். இந்த வாட்டி தலவலி ரொம்ப கடுமையா இருக்கு. பழயபடியே வாந்தியும். பாஸ்பரஸ் 1எம் 1 டோஸ் வாங்கிக் கொடுங்கள். என்றேன்.
அதற்குப்பின் தலைவலியே கிடையாது.
விலாசினிக்கு வந்தது பாஸ்பரஸ் தலைவலி. அல்லோபதி டாக்டர்கள் மைக்ரைன் என்கிறார்கள்.
No comments:
Post a Comment