பெருமாள் முருகனின் சிறுகதை: ’”குமரேசனின் அதிர்ஷ்டங்கள் நான்கு.’”
குமரேசனுக்கு இருபது வயதிலேயே அரசாங்க ஆசிரியர் வேலை கிடைத்தது மிகப் பெரிய அதிர்ஷ்டம், ஆணை பெறுவதற்கு முன்னர் இருந்த குமரேசன் வேறு, ஆணை பெற்ற பின்னர் இருந்தவர் வேறு.. பெற்று வந்தபின் முகம் கடுகடுப்பாக மாறிவிட்டது. வீட்டை முழுவதுமாகச் சுற்றிப் பார்த்தான். இரண்டே அறைகள் தான் , எதுவும் ஒழுங்காக இல்லை.
விட்டை ஒழுங்குபடுத்த ஒரே விதிகொண்ட சட்டத்தையே அமுல் படுத்தினான். அது: எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்க வேண்டும். எப்போதும் ஏதாவது ஒரு பொருள் இடம் மாறிவிடும். அவன் கண்களுக்கு மட்டும் அது தெளிவாகத் தெரியும். யார் இந்த வேலையைச் செய்தது என்று பெரிதாக ஒரு விசாரணையே நடத்துவான். அதற்கு ஒத்துழைத்தாலும் யாரும் குற்றத்தை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். யாராவது ஒருவர் பொறுப்பேற்கும் வரை விடமாட்டான்.
தலை சீவியதும் சீப்பைக் கண்ணாடிமேல் வைக்காமல் புத்தகத்தின் மேல் வைத்துவிட்டதைப்பற்றி நடந்த விசாரணையின் போது “முட்டாள்கள், முட்டாள்கள்” என்று திட்டினான். அவனுக்குச் சாப்பாடு போடும்போது ஒரு பருக்கைக் கூட இரையக் கூடாது. பாத்திரத்தில் இருந்து எடுக்கும்போது குழம்போ ரசமோ சிறிது சிந்திவிட்டாலும் அவனது முகம் பொரியும்.
சமயலறை மின்விளக்கு ஆள் இல்லாதபோது எரிந்து கொண்டிருப்பது அவனுக்குப் பெரிய ப்ரச்சினையாக இருந்தது. வெளியே வரும்போது அணைத்துவிடுவதும், உள்ளே போகும்போது போட்டுக்கொள்வதும் என்னும் ஒழுங்கு கூட இல்லையென்றால் இத்தனை வருசம் அம்மா என்னத்தைக் கற்றுக் கொண்டாள்? இரவில் கழிப்பறைக்குப் போனால் விளக்கை நிறுத்துவதில்லை. சில நாள் வெளிவிளக்கு விடிய விடிய எரிந்து கொண்டே இருக்கிறது. வீட்டைத் தன்னால் ஒரு ஒழுங்குக்குக் கொண்டுவர முடியவில்லயே என நினத்து வருந்துவான்.
பள்ளிப் பிள்ளைகள் எப்போதும் வரிசையாகத்தான் போகவேண்டும். வரிசை குலைந்தால் ஆக்ரோஷம் கொண்டுவிடுவான். அவன் பேச மாட்டான்; பிரம்பு தான் பேசும்.
அவனுக்குச் சீக்கிரம் கல்யாணம் செய்துவிடுவதில் அம்மா ஆர்வமாக இருந்தாள். நிறையப் பெண்களைப் போய்ப் பார்த்து வந்தான். ஒருவரையும் பிடிக்கவில்லை. ஒரு பெண்ணின் ரவிக்கையின் கைஒரு பக்கம் நீளமாகவும், இன்னொரு பக்கம் குட்டையாகவும் இருந்தது; ரவிக்கையில் கூட நேர்த்தியில்லாத பெண்ணோடு எப்படி வாழ்வது?
ஒருமுறை ஒரு பெண்ணின் நகங்கள் கறுப்பாய் இருந்தது தான் அவளை வேண்டாம் என்று ஒதுக்கியதற்குக் காரணம்.
திருமணமும் ஆகிறது. அப்போதும் குமரேசன் மாற்றமில்லாமலே ஒழுங்கைக் கடைப்பிடிப்பதில் பிடிவாதமாயிருக்கிறான். அழகான பெண் குழந்தைப் பிறக்கிறது. ’”ரிதிஷ்னா’” எனப் பெயர் வைக்கிறான். ஒழுங்கைக் கடைபிடிப்பவள் என்று பொருள். கடைசியில் குழந்தையின் பாசத்தில் மன மாற்றம் கொள்வதாகக் கதையை முடிக்கார் பெருமாள் முருகன்.
சரி . ஹோமியோ அறிவியலில் “’FASTIDIOUS”’ என்று ஒரு குறிமொழி இருக்கிறது. எல்லாம் ஒழுங்காய் அதனதன் இடத்தில் இருக்க வேண்டும் கொஞ்சமும் மாறிவிடக்கூடாது. மாறினால் மோசம் போச்சு. இதுவே வாழ்வின் எல்லா தளங்களிலும். இக்குணத்தை ஒரு ஆளுமையாகவே ஹோமியோ அறிவியல் அவதானிக்கிறது. இதன் மிகச் சிறந்த உதாராணமாகப் குமரேசனைப் படைத்திருக்கிறார் பெருமாள் முருகன். விழுமியமாய்ப் படைத்ததோடு மட்டுமல்லாமல் கதை முழுக்க குமரேசனோடு , அவனுடைய ஒவ்வொரு அசைவிலும் வாழ்ந்திருக்கிறார்.
மனிதனைப் படித்திருப்பதாலேயே, இப்படி ஒரு அபூர்வப் படைப்பை நிகழ்த்த முடிந்திருக்கிறது பெருமாள் முருகனால்.!
FASTIDIOUS ஆளுமைக் குறிமொழிக்கு, ஹோமியோ அறிவியல் ஆர்செனிக்கம் ஆல்பம், நக்ஸ் வாமிக்கா. நேட்ரம் மூர் என சிறப்பான, தனித்த ஆளுமைக் குணங்கள் கொண்ட மருந்துகளைப் பரிந்துரைக்கிறது.!

No comments:
Post a Comment