Wednesday, 15 January 2014

அமி லான்ஸ்கியின் “ இம்பாஸிபிள் க்யூர்” நூலிலிருந்து.....

அமெரிக்க ஹோமியோபதியர்அமி லான்ஸ்கியின் ”இம்பாஸிபிள் க்யூர்” நூலிலிருந்து:

எனது மகன் மாக்ஸ் ஆட்டிஸம் நோயால் நலிவடைந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருந்த்தது. மாக்ஸின் உலகம் மிகவும் விலகிய ஒன்றாகவே இருந்தது. எல்லா மருத்துவ அறிவியல் சிகிச்சை முறைகளையும் முயற்சித்தோம். பலனின்றீ போகவே, நண்பர்களின் பரிந்துரையின் பேரில் வீட்டிற்கு அருகிலிருந்த ஹோமியோபதியர் ஜான் அவர்களிடம் எனது மகனை அழைத்துச் சென்றோம்.

மாக்ஸிடம் காணப்பட்ட சில விசேஷமான நிலைமைகளை அவர்கணக்கிலெடுத்துக்கொண்டார்.
மாக்ஸுக்குப் பாலின் மீதான விருப்பம் ஒரு ஒப்பீட்டளவில் ரொம்பவும் அதிகம்
 ஆனால் அவனுக்கு ப்பால் ஒத்துக்கொள்ளாமல் தொந்தரவுகள் அதிகரித்தன.
இசையும் நாட்டியமும் எப்போதும் விரும்பினான்.
உறங்கும்போது தலையில் வேர்வை வழிந்து எப்போதும் ஈரம் சொதசொதவென இருக்கும்.
மல்லாக்கப்படுத்தபடியே உறங்குவான்; கைகள் தலைமீதிருக்கும்.
அடிக்கடி ஒரு நிலைகொள்ளாமை
 அவனது தந்தைவழியில், புற்று நோயும் சர்க்கரை நோயும் இருந்தது.
எனது பெற்றோர்கள் குடும்ப சரித்திரத்தில் ஷிஸோஃப்ரினியா கேள்விப்பட்டிருக்கிறேன்.
அவனிடம் பிடிவாதம் ஜாஸ்தி என்றாலும், எதையும் திருத்தமாகச் செய்யவே விரும்புவான்.
உண்மயைச் சொல்லப்போனல், முதல் பரிசோதனயின்போது அவனால் அம்மா என்ற வார்த்தையை எழுத்துக்கூட்டி எழுதவே இயலவில்லை. வருத்தத்துடன் காணப்பட்டான்.
அவனது சாமர்த்தியங்களையெல்லம் சொல்லி, மிகவும் திறமைசாலியான குழந்தை என்பதை மருத்துவர் ஜானிடம் புரிய வைத்தேன்.

இறுதியாக, தனது, தடிமனான ரெபெர்டரி நூலிலிருந்து, ஒரு நோய்க் குறியைத் தெரிவு செய்தார்.

talented, very: Carsinosin"

 1958 ல் மருத்துவர் ஃபௌபிஸ்டரால் மிகவும் பிரபலமடைந்த ஹோமியோபதி மருந்து கார்சினோஸின். அதன் பிற குறிகளும், மாக்ஸுக்கு ப் பொருந்திவந்தது.
ஜான் கார்சினோசின் மருந்தை ஒரு சில சொட்டுக்கள் நீரில் விட்டுத் தினமும் கொடுத்து வந்தார். காலையில் ஒரு டீஸ்பூன்.
இரண்டு நாட்களில் அவனது பேச்சில் மாற்றங்கள் காணப்பட்டன ஒரு வாரம் கழித்து அவனது தெரபிஸ்ட் டோன்னா வியப்புடன் கேட்டார், என்ன மாயம் செய்தீர்கள் ?என்று. நாளாக நாளாக, முன்னேற்றம் நன்கு புலப்பட்டது. அவனது பேச்சும், புதிய சொற்றொடர்களும், சூழலைக்கவனித்தலும் மகிழ்ச்சியைத்தந்தது.
ஜான் கார்சினோஸினின் வீரியத்தைக்க்ட்டிக்கொண்டே வந்தார். சிலசமயங்களில் அவனிடம் ஓரிரு நாட்களுக்கு அதீத இயக்கம் காணப்பட்டாலும் மீண்டும் முன்னேற்றம் தெரிந்தது. அவனது நலமாக்கல். படிப்படியாகவும், சீராகவும் இருந்தது ஓரிரு ஆண்டுகளில், ஆட்டிஸ நிலயிலிருந்து வெளியேறி வளர்ச்சி பெற்றான்.





No comments:

Post a Comment