Wednesday, 15 January 2014

எர்னஸ்ட் ஹெமிங்வேயின் ஸ்னோஸ் ஆஃப் கிளிமாஞ்சரோவும், காங்கிரீன் நோயும்

நான் எப்போது முதன் முதல் காங்ரீன் குறித்துத் தெரிந்து கொண்டேன்?சுமார் இருபது வருடங்களுக்கு மேலாவது இருக்கும் என்று உறுதியாய் சொல்ல முடியும். அப்போது சதை தின்னும் புண்ணால் சிரமப்படும் ஒரு துயரரையும் நான் பார்த்ததில்லை. அப்படியொரு மருத்துவ அகராதியிலும் பொருள் தேடிப் படிக்க வாய்ப்பு ஏற்பட்டதில்லை. நம் உறவினர்களோ, நண்பர்களோ அல்லது அக்கம்பக்கத்திலோ யாராவது கஷ்ட்டப்பட்டால் தான் அப்படியொரு நோய் இருப்பது நம் புலனுக்குள் வரும்.

ஆனாலும் GANGRENE பற்றி நான் படித்திருந்தேன். அதுவும் அதிர்ஷ்டவசமாக என்று தான் சொல்ல வேண்டும். எனது அலுவலக நண்பர் ஒருவர்- குரு என்று சொன்னால் மிகையாகாது- அவர் இல்லத்தில் சுமார் 5000 நூல்களாவது, சேகரமாகியிருந்தது. மிக நல்ல முறையில் பராமரிக்கப் பட்டுமிருந்தது நான் எழுதத் திட்டமிட்டிருப்பதை ஒரு கதை போல் எழுத எனக்குள் திட்டமில்லை. எனவே மிக சுருக்கமாகவே எழுதுகிறேன்.அந்த குருதான் ஒருமுறை எனக்கு எர்னஸ்ட் ஹெமிங்வேயின் “THE SNOWS OF KILIMANJARO” நூலைக் கொடுத்து உதவினார். ஒரேயொரு நிபந்தணை. படித்து முடித்ததும் அவருடன் இக்கதையை இவருடன் விவாதிக்க வேண்டும். படித்து முடித்தேன். அது ஒரு சிறுகதை என்றுதான் ஞாபகம். நினைவிலிருந்து எழுதுகிறேன். கதையின் நாயகனும் அவன் மனைவியும் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுலா செல்கின்றனர். கதை ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே நாயகன் harry யின் வலது காலில் ஒரு காங்ரீன்; சதை அழுகி, உள்ளே புரையோடி அவன் சாகக் கிடக்கிறான். எந்த உதவியும் இன்றி.

கிளிமாஞ்சரோ வெள்ளிப்பனிமலை. கதையில், ஒரி உறைந்துபோன சிறுத்தையும், ஒரு ஹெய்னாவையும் தவிர, வேறு பாத்திரங்கள் இல்லை. கடைசியில் ஒரு விமான ஓட்டி வருகிறான் தன்னைக் காப்பாற்ற என்று நாயகன் நம்புகிறான். ஆனால் அவன் இறந்துவிடுவதாக, நாயகி உணர்த்துவதாக ஞாபகம். சரியாய் இன்றைய தேதியில் சொல்லமுடியவில்லை. போகட்டும்.

ஆக, காங்ரீன் வந்தவர்கள் கால் புண் ஆறவே ஆறாது. இறக்கவும் வாய்ப்புண்டு கால் கறுத்துவிடும், உள்ளே அழுகிப் புரையோடிப் போகும். உறுப்புக்களை வெட்டிப் போடு ஆளைக் காப்பாற்ற மருத்துவர்கள் முயற்சிப்பார்கள். இவ்வலவுக்கு அப்போது புரிந்தது. நன்றி சொல்ல வேண்டும் ஹெமிங்வேவுக்கு.
இன்று காங்ரீனை உள்ளுக்கு மருந்து கொடுத்து ஹோமியோபதியில் ,உறுப்புக்களை வெட்டிப்போடுவதைத் தவிர்க்க முடிகிறது.ஆளைக் காப்பாற்றவும் முடிகிறது. நலமாக்கவும் செய்கிறேன். .

ஒரு செவிவழிச் செய்தி இங்கே சொன்னால் மிகப் பொருத்தமாயிருக்கும். தமிழகத்து மடாதிபதியொருவருக்கு, டையபடிக் காங்ரீன் காலை அழுகச் செய்துவிட்டதாம். அல்லோபதி மருத்துவம் கனுக்காலுக்குக் கீழ் வெட்டிப் போடச் சொன்னதாம். கடைசியில் இந்திய ஜனாதிபதியின் ஹோமியோபதி மருத்துவர் சீகேல் கார்னூட்டம் 30 எனும் மருந்தைக் கொடுத்து அவரது காலையும் உயிரையும் காப்பாற்றினாராம்.

என் அனுபவத்தில் ஒரு ஐந்தாறு மருந்துகள் மிகவும் பயன்படுகின்றன. ஆர்ஸெனிக்கம் ஆல்பம், லாக்கெஸிஸ், ஸிக்கேல் கார், சைலீஷியா, மிரிஸ்டிக்கா செபிஃபெரா, நிச்சயமாய் நம்பிக்கை தரும் மருந்துகள். மொத்தத்தில் காலை வெட்ட வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமாகாது.

சரி கதை படித்து முடித்ததும் அன்று என் குருவுடன் விவாதித்தேனா என்று நீங்கள் கேட்கவில்லையே? அவர் அதிகம் பேசினார். எனக்குப் புரிந்தமாதிரியும் இருந்தது புரியாத மாதிரியும் தோன்றியது. நாயகன் இறந்து போய்விட்டானா இல்லையா என்று கேட்டேன். அப்படித்தான் வைத்துக்கொள் என்று சொல்லிவிட்டு இறப்பு குறித்து ஹெமிங்வேவுக்கு, ஒரு obsession எப்போதும் உண்டு. அவரே கடைசியில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்து போனார். என்று சொன்னார். இன்னும் நிறைய பேசினார். ஒற்றை முடியில் வகிடெடுப்பதாய்த்தான் அன்று எனக்குப் பட்டது. பேசாமல் அமைதி காத்தேன். —

No comments:

Post a Comment