க. நா சு வின் பித்தப் பூ
க. நா. சு பித்தப்பூ
எழுதியிருக்கிறார். மனிதர்களில் எந்தனைப் பேருக்குப்
பைத்தியம்.? பைத்தியம், பைத்தியக் காரர்கள்,
பைத்தியக்காரத்தனம் என்று விவரமாய் வித்தியாசப்பாடுத்துகிறார்.
சாத்தனூர், கும்பகோனம்,
டெல்லி, யுகோஸ்லேவியா, பெல்கிரேட் மீண்டும் சாத்தனூர்
சாத்தனூர் சர்வமான்ய
தெரு பத்மனாப ஐயர்-ஆடம்பரப் பைத்தியம், எக்ஸெண்ட்ரிக் என்றும் சொல்லலாம்
அவர் சகோதரி, முன்
அறையில் அடைத்து வைக்க வேண்டும், இல்லாவிட்டால் துணிகளைக் கழற்றிப்போட்டுவிட்டு தெருவில்
அம்மணமாய் , தீப்பிடிக்குது என்று சொல்லிக்கொண்டு ஓடுவாள் ஹையோஸியாமஸ் பைத்தியம்
தபாலாபீஸில் வேலை
செய்யும், கிருஷ்னமூர்த்தி அய்யர், செத்த வீட்டிற்கு கல்யாணத்தந்தி அடித்த பைத்தியம்
ராமச்சந்திர சாஸ்திரிகள் சாத்தனூர்,
சர்வமானியத்தெரு பிள்ளையார் கோயிலுக்கு கும்பாபிஷேக வசூல் செய்யும் வரை பைத்தியம்
மட்டுப் பட்டிருந்தது பின்னால் முத்திப்போனப் பைத்தியம், அமாவாசை வருகிறதென்றால் சேஷ்டைகள்
அதிகமாகிவிடும் சைலீஷியாப் பைத்தியம்
பத்மனாப ஐயரின்
மூத்தபிள்ளை. ராஜா ஆங்கிலப் பேராசிரியர், எக்ஸெண்ட்ரிக், இலக்கியப் பைத்தியம்
இளைய பையன் தியாகராஜன். சிறு வயதிலிருந்தே படிப்பில் சுட்டி. ஐ ஏ எஸ் பாஸாகி ஐரோப்பவில் பல நாடுகளில் வாசம். யுகோஸ்லேவியாவில் டூஷான்யாவைக் காதலித்துத் திருமணத்தைக்
கொண்டாட, காரில் அழைத்துச் செல்லும்போது விபத்தில் மரணம் அடைகிறாள். தியாகு மண்டையில் அடிபட்டு, ரத்தப்க் கசிவு. எட்டு
மாதம் படுக்கையில் நினைவின்றி ஆர்னிக்கா, நேட்ரம் சல்ஃப்
பின்னால் லீலா
அவனைக் காதலித்துத் திருமணம் புரிகிறாள். உடல்
தேறினாள் மனமும் தேறிவிடும் எனும் நம்பிக்கை. குழந்தையைத் தன்னீர் தொட்டியில் போட்டுவிட்ட
தியாகு, மறதி
சங்கராச்சாரியார்,
அறிவுரையை மதிக்கும் தியாகு, குறிகேட்கப் போகும்
தியாகு.ஐ ஏ எஸ். உடுக்கை சத்தம் ஒத்துக் கொள்ளாத
தியாகு
லீலா, எம் டீ முடித்து,
குழந்தையை அழைத்துக் கொண்டு நைஜீரியாவிற்கு
வேலை நிமித்தம் பயணம்
தியாகு 45 ஆவது
பிறந்த நாள் கொண்டாடுகிறான், ஷேக்ஸ்பியர் குறித்த
விவாதம் யார் சொன்னது சரியென்று? கைகலப்பு
வரை, பைத்தியம் முற்றுகிறது
தியாகு இறந்து
போவதை க. நா. சு விற்கு ஃபோனில் யாரோ தெரிவிக்கிறார்கள். அதீத எலெக்ட்ரிக் ஷாக் ட்ரீட்மெண்ட் . உயிர் போய்விடுகிறது
நடு நடுவே, இலக்கியம்,
இலக்கியப் பத்திரிகை நடத்தும் பைத்தியங்கள்.
ஃப்ராய்ட் கொஞ்சம்
க. நா சு. மனைவி,
மகள் பாப்பா, கணவர் மணி எல்லோரும் அவ்வப்போது
வந்து போகின்றனர். கதை சொல்லி க. நா. சு. சுய
சரிதைக் கதை போல் கட்டுமாணம்.
சாத்தனூருக்கென்ன
சாபமோ. இவ்வளவு பைத்தியங்கள்.. சிபிலிஸ் பரங்கிப் புண் வந்து முற்றிப் போகும் பைத்தியங்கள்
வரை நிறைய தகவல்களைச் செருகி ஒரு குறு நாவல்.
க. நா. சு வுக்கும்,
தியாகுவுக்கும் ஒரு உரையாடல்
குறி கேட்கப் புறப்படும்
தியாகுவிடம்.
”உனக்கு எலெக்ட்ரிக்
ஷாக் ட்ரீட்ம்ர்ண்ட் கொடுத்து எவ்வளவு நாளாச்சு?
”ஒரு மாசம் இருக்கும்.
அதையெல்லாம் இப்போது நினைவு படுத்தாதீர்கள்”
:”உடுக்கடிப்பதும்,
சாமியாடுவதும்,பூஜைபோடுவதும் அந்த மாதிரி ஒரு ட்ரீட்மெண்ட் என்று உனக்குத் தோன்றுகிறதா?
”இதில் டென்ஷன்
ஏறுமே தவிர வலி இருக்காது, முறுக்கு ஏற ஏற,அதற்கேற்ற மாதிரி அமைதி தொடரும்.”
”ஏதோ ஹோமியோபதி
கொள்கை மாதிரி இருக்கிறது, எனக்கு பூராவும் புரியவில்லை”
நாவல் கலை மட்டுமல்ல,
ஸ்டீஃபன் ஸ்பெண்டர், டீ எஸ் எலியட் மட்டுமல்ல க. நா. சு விற்கு ஹோமியோபதியும் தெரிந்திருக்கிறது.
No comments:
Post a Comment