அப்பா ஊர் அறிந்த மனிதர்; வீட்டின் பெயரோ தோழர் வீடு. அப்பா வசித்த தெருவில் எதிர் எதிர் சாரியில் நூற்றுக்கணக்கான வீடுகள். பெரும்பாலும் ஒட்டு வீடுகளே. உஷ்ணக்காலங்களில், இரவு நேரங்களில் பொத் பொத்தென்று தேள் விழும்.பெரியவர்கள் ,குழந்த்தைகள் என வஞ்சனை இல்லாமல் கொட்டிவிடும். இரவில், கொட்டுவலி தாங்காமல் அலறும் சத்தம் கேட்பது உண்டு.
வீட்டிலிருந்து மூன்று மைல் தொலைவில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு துயரர்களைக் கொண்டு போனால் பச்சிலை மருந்து கொடுப்பார்கள். மென்று, சாறைவிழுங்கினால் ஒரு மணி நேரத்தில் வலி குறைந்து விடும் . அப்போதெல்லாம் மிக விரைவாகச் செல்லும் வாகனங்கள் மாட்டு வண்டியும்,சைக்கிள்களுமே. தேள் கொட்டியவர்களைக்கொண்டு போவதற்குள், வலிப்பு வந்துவிடும்.. சில சமயங்களில் இறந்து போனவர்களும் உண்டு.
அப்பா ஒரு கண்ணாடி ஜார் வைத்திருந்தார். பஞ்சு மிட்டாய் விற்பவர்கள் வைத்திருப்பது போல. அதன் கழுத்து வரை ஸ்பிரிட் நிரப்பப்பட்டிருக்கும். யார் வீட்டில் தேள் விழுந்தாலும், அல்லது கொட்டினாலும்,ஒரு இடுக்கியால் தேளைப்பிடித்து வந்து ஜாருக்குள்போட்டு விடுவார்கள். அது அப்படியே மக்கி செத்தும் போய்விடும். ஒரு சமயத்தில் நூறுக்கும் மேலான தேள்கள் ஜாருக்குள் கிடக்கும். தேள் கொட்டினால், தோழர் வீட்டுக்குப் போய், கொட்டுவாயில், இரண்டு சொட்டு, தேள்-ஸ்பிரிட் விட்டுக்கொள்வார்கள். அதிசயம்போல்,அரைமணி நேரத்திற்குள் வலி போயே போய்விடும். தேள் கடிக்கு மருந்து ஸ்பிரிட்டில் ரைந்திருக்கும் தேள் விஷமே.
இந்து-முஸ்லிம் படுகொலையின்போது, கோரக்பூருக்கு ட்ரெய்ன் ஒ ட்ட, நேருஜீயின்,அழைப்பை ஏற்று, மெட்ராஸ்-சதர்ன்-மராட்டா ரெயில்வேயிலிந்து சென்ற 52 தோழர்களில் அப்பாவும் ஒருவர். அங்குதான், தேள் கடி வத்தியத்தை அப்ப கற்றுக்கொண்டாராம்.
கிட்டத்தட்ட, நாற்பது வருடங்களுக்குப்பின், ஹோமியோபதியில் தேள் ஒரு மருந்தாக நிரூபணம் செய்யப்பட்டிருக்கிறது. நான் கற்றுக்கொள்கிறேன். தேள் ஆமைக்குழந்தைகளுக்கு, மனசாட்சியே இல்லை. மற்றவர்களுக்கு நேரிடும் துன்பம் குறித்த கவலையும் கிடையாது. விளையாட்டய் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென்று கோபம் வரும்; பெரும் விபரீதம் விளைவித்து விடுவர். தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள்தான். எவ்வித வருத்தமோ, தயக்கமோ இல்லாமல் அடுத்தவர்களை க்காயப்படுத்துவர். சிறார் சிறையில் அடைபடும் அளவிற்குக் குற்றம் புரிவர். பிறருடைய அபிப்பிராயத்திற்கு எந்த முக்கியத்துவமும் தருவதில்லை. தனியாகவே இருக்க விரும்புவர்; தானே ராஜா; தானே மந்திரி. சேகரமான வெறுப்பைச்சுமந்தபடி திரிவர்
அப்பா ஊர் அறிந்த மனிதர்; வீட்டின் பெயரோ தோழர் வீடு. அப்பா வசித்த தெருவில் எதிர் எதிர் சாரியில் நூற்றுக்கணக்கான வீடுகள். பெரும்பாலும் ஒட்டு வீடுகளே. உஷ்ணக்காலங்களில், இரவு நேரங்களில் பொத் பொத்தென்று தேள் விழும்.பெரியவர்கள் ,குழந்த்தைகள் என வஞ்சனை இல்லாமல் கொட்டிவிடும். இரவில், கொட்டுவலி தாங்காமல் அலறும் சத்தம் கேட்பது உண்டு. வீட்டிலிருந்து மூன்று மைல் தொலைவில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு துயரர்களைக் கொண்டு போனால் பச்சிலை மருந்து கொடுப்பார்கள். மென்று, சாறைவிழுங்கினால் ஒரு மணி நேரத்தில் வலி குறைந்து விடும் . அப்போதெல்லாம் மிக விரைவாகச் செல்லும் வாகனங்கள் மாட்டு வண்டியும்,சைக்கிள்களுமே. தேள் கொட்டியவர்களைக்கொண்டு போவதற்குள், வலிப்பு வந்துவிடும்.. சில சமயங்களில் இறந்து போனவர்களும் உண்டு. அப்பா ஒரு கண்ணாடி ஜார் வைத்திருந்தார். பஞ்சு மிட்டாய் விற்பவர்கள் வைத்திருப்பது போல. அதன் கழுத்து வரை ஸ்பிரிட் நிரப்பப்பட்டிருக்கும். யார் வீட்டில் தேள் விழுந்தாலும், அல்லது கொட்டினாலும்,ஒரு இடுக்கியால் தேளைப்பிடித்து வந்து ஜாருக்குள்போட்டு விடுவார்கள். அது அப்படியே மக்கி செத்தும் போய்விடும். ஒரு சமயத்தில் நூறுக்கும் மேலான தேள்கள் ஜாருக்குள் கிடக்கும். தேள் கொட்டினால், தோழர் வீட்டுக்குப் போய், கொட்டுவாயில், இரண்டு சொட்டு, தேள்-ஸ்பிரிட் விட்டுக்கொள்வார்கள். அதிசயம்போல்,அரைமணி நேரத்திற்குள் வலி போயே போய்விடும். தேள் கடிக்கு மருந்து ஸ்பிரிட்டில் ரைந்திருக்கும் தேள் விஷமே. இந்து-முஸ்லிம் படுகொலையின்போது, கோரக்பூருக்கு ட்ரெய்ன் ஒ ட்ட, நேருஜீயின்,அழைப்பை ஏற்று, மெட்ராஸ்-சதர்ன்-மராட்டா ரெயில்வேயிலிந்து சென்ற 52 தோழர்களில் அப்பாவும் ஒருவர். அங்குதான், தேள் கடி வத்தியத்தை அப்ப கற்றுக்கொண்டாராம். கிட்டத்தட்ட, நாற்பது வருடங்களுக்குப்பின், ஹோமியோபதியில் தேள் ஒரு மருந்தாக நிரூபணம் செய்யப்பட்டிருக்கிறது. நான் கற்றுக்கொள்கிறேன். தேள் ஆமைக்குழந்தைகளுக்கு, மனசாட்சியே இல்லை. மற்றவர்களுக்கு நேரிடும் துன்பம் குறித்த கவலையும் கிடையாது. விளையாட்டய் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென்று கோபம் வரும்; பெரும் விபரீதம் விளைவித்து விடுவர். தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள்தான். எவ்வித வருத்தமோ, தயக்கமோ இல்லாமல் அடுத்தவர்களை க்காயப்படுத்துவர். சிறார் சிறையில் அடைபடும் அளவிற்குக் குற்றம் புரிவர். பிறருடைய அபிப்பிராயத்திற்கு எந்த முக்கியத்துவமும் தருவதில்லை. தனியாகவே இருக்க விரும்புவர்; தானே ராஜா; தானே மந்திரி. சேகரமான வெறுப்பைச்சுமந்தபடி திரிவர்
No comments:
Post a Comment