Wednesday, 15 January 2014

சாக்ரடீஸும் கோனியமும்

பகுத்தறிவின் ஒளியில் மானிடத்தைக் காண விரும்பி, கிரேக்கத் தெருக்களில் அலைந்து கொண்டிருந்த ஒரு தத்துவ ஞானியை சரித்திரத்தின் பதிவுகளில் நாம் அறிவோம். சாக்ரடீஸுக்கு, ஜன நாயக அதிகாரத்துவத்தின் பேரில் தண்டணை வழங்கப்பட்டுஹெம்லாக் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார். அவரது இறுதி நேரங்களின் சிரமங்களை, அவஸ்தைகளை, ப்ளேட்டோ பதிந்திருக்கிறார். இக்குறிப்புகள் மருத்துவ முக்கியத்துவம் கொண்டவை. ஹெம்லாக் என அழைக்கப்பட்ட ”கோனியம் மேக்குலேட்டம்” எனும் தாவர மருந்தின் , எளிமையான ஆரம்பகால மெட்டீரியா மெடிக்கா தொகுப்பு என இக்குறிப்புகளை அவதானிக்கலாம். ஹோமியோ மருத்துவ அறிவியலில் கோனியம் மேக்குலேட்டம் ஒரு முக்கிய மருந்து. நன்கு மெய்ப்பிக்கப்பட்ட ஒன்று. கோனியத்தின் முக்கியமான ஆளுமைக்குணங்களில் குறிப்பிடப்படவேண்டியது அதன், எளிதில் மூட நம்பிக்கைக்கு ஆட்படும் குணம். தான் எப்போதும், இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியின் ஆளுகைக்குட்பட்டோ, அல்லது, அதோடு தொடந்து உரையாடிக்கொண்டிருப்பதோ, அச்சக்தி குறித்த லயிப்பில் , ஈடுபாட்டில் இயங்கிக்கொண்டிருபதோ சாத்தியம்.. இது சாக்ரடீஸின் பகுத்தறிவுக்கு நேர் எதிர் துருவ நிலை . ஹோமியோபதி அறிவியல் , ஆளுமை பகுப்பாய்வில், இவ்வெதிர் துருவ நிலைகளை எப்போதும் உள்ளடக்கியிருப்பது ஒரு சிறப்பான அம்சம்.. ”கறுப்பு- வெள்ளை” அடிப்படையில் ஆளுமைகளை விளக்குவதையும்,விளங்கிக்கொள்வதையும் தவிர்க்க முடியும். கோனியம் நரம்பியல் நோய்களிலும், புற்று நோய்களிலும், ரத்த அழுத்த நோயிலும் பயன்படும் முக்கிய மருந்து.

No comments:

Post a Comment