Wednesday, 15 January 2014

இசபெல் அலெண்டேயின் “போர்டெய்ட் இன் செபியா” வை முன்வைத்து



இஷபெல் அல்லெண்டே தனது நாவல் ஒன்றுக்கு, “ போர்ட்ரெய்ட் இன் ஸெபியா” எனப் பெயரிட்டிருக்கிறார்.ஸெபியா என்றால் என்ன? இண்டியன் இன்க் ஸெபியா விலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது. ஸெபியா கணவாய் மீன். எதிரிகள் தன்னத்துரத்தும்போது, ஒருவித அடர் ஊதா நிறத்தை கடல் நீரில் தெளித்து விட்டுஅதன் மறைவில் தான் தப்பிக்கும்.

இண்டியன் இங்கில் ஒரு படம் என்று பொருள் கொள்ள வேண்டுமோ? அல்லது பூமிகா திரைப்படத்தில், ஸ்மிதா பாடிலும் அமல் பலேக்கரும் இணைந்து வரும் படப்பிடிப்ப்ய்க் காட்சிகள்மங்கலான பழுப்பு நிறத்தில் காணப்படுவது போல் இ ந் நாவலின் போர்ச்சம்பவங்களையும், வீர தீரப் பெண்டிர்களையும் கற்பனை செய்து கொள்ள வேண்டுமோ?

சரி ஸெபியாவுக்கு வருவோம்.
தமிழில் 70களில், ஸெபியாவை முன்னிறுத்திசிறுகதையை எழுதியவர் தீ. சா. ராஜு. அமெரிக்க எழுத்தாளர் வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் போன்று மருத்துவர் கதைகள் மற்றும் ரானுவக் கதைகள் என இரு வேறு திணைகளில் சிறுகதை தந்தவர். தில்லைஸ்தானம் சா ரா., ஸெபியாவின் சாராம்சத்தை மிக செய் நேர்த்தியோடு புணைவாக்கியவர்.

நெருக்கமான மனித உறவுகளில் திடீரென ஏற்படும் விலகல்; நெக்குவிட்டுப்போய்,இடைவெளியே மிஞ்சும் .ஒருவர், அடுத்தவரிடம், காரணமே அறியமுடியாதபடி, விட்டேத்தியாய் மாறிவிடுவார். இசைவின்றி, அசட்டைதான்,புலப்படும். விலகலும்,தனிமையும், விரும்பி ஏற்பர். ஸெபியா சிறுகதையில் தான் ஈந்த கன்றுக்குத், தாய்ப்பசு, திடீரென பால் கொடுக்காமல் ,விலகும், துரத்தும், உதைக்கும். மடி சுரந்து கனத்த போதும் ,மகவைத்திரும்பிப் பாராது. ஸெபியா விளக்கம் பெறும்.



இஷபெல் அல்லெண்டே தனது நாவல் ஒன்றுக்கு, “ போர்ட்ரெய்ட் இன் ஸெபியா” எனப் பெயரிட்டிருக்கிறார்.ஸெபியா என்றால் என்ன? இண்டியன் இன்க் ஸெபியா விலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது. ஸெபியா கணவாய் மீன். எதிரிகள் தன்னத்துரத்தும்போது, ஒருவித அடர் ஊதா நிறத்தை கடல் நீரில் தெளித்து விட்டுஅதன் மறைவில் தான் தப்பிக்கும். இண்டியன் இங்கில் ஒரு படம் என்று பொருள் கொள்ள வேண்டுமோ? அல்லது பூமிகா திரைப்படத்தில், ஸ்மிதா பாடிலும் அமல் பலேக்கரும் இணைந்து வரும் படப்பிடிப்ப்ய்க் காட்சிகள்மங்கலான பழுப்பு நிறத்தில் காணப்படுவது போல் இ ந் நாவலின் போர்ச்சம்பவங்களையும், வீர தீரப் பெண்டிர்களையும் கற்பனை செய்து கொள்ள வேண்டுமோ? சரி ஸெபியாவுக்கு வருவோம். தமிழில் 70களில், ஸெபியாவை முன்னிறுத்திசிறுகதையை எழுதியவர் தீ. சா. ராஜு. அமெரிக்க எழுத்தாளர் வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் போன்று மருத்துவர் கதைகள் மற்றும் ரானுவக் கதைகள் என இரு வேறு திணைகளில் சிறுகதை தந்தவர். தில்லைஸ்தானம் சா ரா., ஸெபியாவின் சாராம்சத்தை மிக செய் நேர்த்தியோடு புணைவாக்கியவர். நெருக்கமான மனித உறவுகளில் திடீரென ஏற்படும் விலகல்; நெக்குவிட்டுப்போய்,இடைவெளியே மிஞ்சும் .ஒருவர், அடுத்தவரிடம், காரணமே அறியமுடியாதபடி, விட்டேத்தியாய் மாறிவிடுவார். இசைவின்றி, அசட்டைதான்,புலப்படும். விலகலும்,தனிமையும், விரும்பி ஏற்பர். ஸெபியா சிறுகதையில் தான் ஈந்த கன்றுக்குத், தாய்ப்பசு, திடீரென பால் கொடுக்காமல் ,விலகும், துரத்தும், உதைக்கும். மடி சுரந்து கனத்த போதும் ,மகவைத்திரும்பிப் பாராது. ஸெபியா விளக்கம் பெறும்.

No comments:

Post a Comment